என் மலர்tooltip icon

    அரியலூர்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தினர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அய்யப்பன் வரவேற்று பேசினார்.சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷர்மிளா, வருவாய் துறை அலுவலர் சங்கம் மனோகரன், கிராம உதவியாளர் சங்கம் பன்னீர்செல்வம், வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டி.ஏ. சரண்டரை உடனே வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115, 152ஐ ரத்து செய்ய வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் 41 மாதத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, சத்துணவு துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்டனர்.முடிவில் வி.ஏ.ஓ. முன்னேற்ற சங்கம் சரவணன் நன்றி கூறினார். இதேபோல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக நகராட்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் எஸ்தர் ஷோபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சசிகுமார் வரவேற்று பேசினார். முடிவில் மகளிர் அணி தலைவி தங்க சரஸ்வதி நன்றி கூறினார்.


    • வீடுகளில் மானியத்துடன் மூலிகை தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • நபர் ஒருவருக்கு ரூ.750 பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும்.

    அரியலூர்:

    வீடுகளில் மானியத்துடன் மூலிகை தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அரியலுார் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு 300 வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க ரூ.2.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மூலிகை தோட்டம் அமைக்க ரூ.1,500 மதிப்பில் துளசி, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, ஆடாதொடை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா, பிரண்டை, கற்றாழை, கீழாநெல்லி போன்ற 10 வகையான மூலிகை செடிகள் அடங்கிய பைகள், 20 கிலோ தென்னை நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம் அடங்கிய தொகுப்பு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. நபர் ஒருவருக்கு ரூ.750 பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளோர் உரிய ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் உடையார்பாளையத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.
    • மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் இந்த மாத்திற்கான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலவலகத்தில் நடைபெறவுள்ளது. உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் சோதனை செய்தனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னவளையம்- பெரியவளையம் பிரிவு சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது போலீசார் அவரை துரத்திப் பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துருவிதுருவி விசாரணை நடத்தினர். இதில், அவர் கஞ்சா விற்பனை செய்வதற்காக கையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் மாலிகா நகரை சேர்ந்த குத்புதீன் மகன் அன்சாரி(வயது28) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தினார்
    • மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது என்றார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வியாபாரிகள் சங்க மாவட்ட கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக இணை செயலாளர் இப்ராஹிம் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு செயலாளார் கார்மல்ராஜ் துணைத் தலைவர் தேவா, பொருளாளர் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக அரியலூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையிலான மருந்து வணிகர் சங்கத்தினர், மாநில தலைவர் விக்ரமராஜாவுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்தனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் ராஜா ஜெயராமன், மாவட்ட பொருளாளர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.துணைத் தலைவர்கள் நடராஜ், செல்வராஜ் பி ஜி ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,பொங்கல் தொகுப்பில் மளிகைப்பொருட்களை தமிழக முதல்வர் வழங்காததை மாநில வணிகர் சங்க பேரமைப்பு வரவேற்கிறது. மேலும், மக்களுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக வழங்கும் ரூ.1000 பணத்தை கொண்டு எங்களை போல சாமானிய வியாபாரிகளிடம் மக்கள் பொருட்களை வாங்க முதல்வர் வழிவகுத்துள்ளார். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.ஆன்லைன் விற்பனை மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இழப்பு கணக்கை அரசுக்கு காட்டுவதுடன், பணியாளர்கள் 10,000 பேரை திடீர் என வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் வேலை.சந்தையில் விற்கப்படும் எண்ணெயை ஆய்வு செய்யும் அதிகாரிகள், தரமற்ற எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடத்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது என்றார். முடிவில் துணைச் செயலாளர் வியாகுலம் நன்றி கூறினார்.

    • 3 பவுன் சங்கிலி மற்றும் ெவள்ளி பொருட்கள் திருட்டு
    • திருட்டில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடாரம் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. (வயது 66). இவரது மகள் விஜய சரஸ்வதி. இவர் அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் தனது மகளை பார்ப்பதற்காக தங்கமணி வீட்டை பூட்டிவிட்டு அரியலூர் சென்றிருந்தார். அப்போது தங்கமணியின் வீடு திறந்து கிடந்ததை பார்த்த உறவினர், அவருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து கடாரங்கொண்டான் கிராமத்திற்கு வந்த தங்கமணி, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ெவள்ளி பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் தங்கமணி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கூடுதலாக அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானம் நிறைவேற்றபட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவேல், மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்தும் பேசினர். கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் கரும்பாயிரம் மற்றும் விவசாய சங்கத்தினர் வினோத்குமார், பொன்னிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலர் வரப்பிரசாதம் வரவேற்றார்.கூட்டத்தில் விலைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். உரம் தட்டுப்பான்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரக்கடைகளில் உர விலையை முறைபடுத்தி, கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமானூர் ஒன்றியத்தில் கூடுதலாக அரசு நெல்கொள்முதல் நலையம் அமைக்க வேண்டும். கீழப்பழுவூர், கரைவெட்டி, வெங்கனூர், கோக்குடி கண்டராதித்தம் போன்ற கிராமங்களிலுள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நிர்வாகி வைத்திலிங்கம் நன்றி கூறினார்.


    • பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சிரங்காட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி செல்லும் 4 வழிச்சாலை உள்ளது. இதில் கோசு குறிச்சி, ஒத்தக்கடை பாலப் பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் அறிவிப்பு பலகை உள்ளது.

    இதில் இன்று காலை வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அறிவிப்புப் பலகை போர்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தரையில் கால் தொட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சிரங்காட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவரது புகாரின் பேரில் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் தொங்கிய நபர் வைத்திருந்த ஆதார் அட்டையை எடுத்து பார்த்தனர். அதில் இறந்தவர் ராகேஷ் (வயது 31) என்பதும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வந்தது.

    இதனையடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து இறந்தவர் எங்கு வேலை செய்தார். எதற்காக இங்கு வந்தார். தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து இங்கு வந்து அவரது உடலை தொங்க விட்டுச் சென்றுள்ளனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கைகாட்டி அருகே உள்ளது கீழ விளாங்குடி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48). கூலித்தொழிலாளியான இவர் மரம் வெட்டும் வேலைக்கு செல்வார்.

    இவர் தினமும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது வழியில் மது அருந்தி விட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    பக்கத்து ஊரான ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (50). இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவரும் அறிவழகன் மது அருந்தும் டாஸ்மாக் கடைக்கு வருவது வழக்கம்.

    அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர். அப்போது முதல் இருவரும் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு அறிவழகன், வெங்கடாசலம் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவரின் குடும்ப விஷயங்களை பகிர்ந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் மது போதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டனர். மணல் மேடான பகுதிக்கு சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடாசலத்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அவரது உடலை அப்பகுதியில் உள்ள கருப்பு கோவில் அருகே குழி தோண்டி புதைத்த அறிவழகன் மண்ணால் மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    ஆனாலும் மதுபோதை குறையாத அறிவழகன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை உளறிக் கொட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில், விரைந்து சென்ற கயர்லாபாத் போலீசார் தாசில்தார் கண்ணன், வி.ஏ.ஓ. ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து நடக்கிறது.
    • வளைவுபகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் உள்ள மண்ணுழி கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலைக்கு தென்புறத்தில் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது. இந்த வளைப்பகுதியில் சாலையோரத்தில் தினமும் கனரக லாரிகள் ஏராளமானவை நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. மேலும் அந்த இடத்தில் எந்த வேகத்தடையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வளைவுபகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.
    • அரியலூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஏலக்குறிச்சி, வரதராசன்பேட்டை,தென்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன. இயேசு பிறப்பை கொண்டாடும் விதமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களையும், குடில்களையும் அமைத்திருந்தனர். கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ தேவாலயம், அலங்கார அன்னை தேவாலயம், தென்னூர் புனித லூர்து அன்னை தேவாலயம், கூவத்தூர் புனித அந்தோனியார் ஆலயம், பட்டிணங்குறிச்சி புனித லூர்து அன்னை ஆலயம், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூர் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குதந்தைகள் வழங்கினர். கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


    • திருமானூர் ஒன்றியத்தில் கூடுதலாக அரசு நெல்கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது
    • கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவேல், மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்தும் பேசினர். கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் கரும்பாயிரம் மற்றும் விவசாய சங்கத்தினர் வினோத்குமார், பொன்னிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலர் வரப்பிரசாதம் வரவேற்றார்.கூட்டத்தில் விலைப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். உரம் தட்டுப்பான்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரக்கடைகளில் உர விலையை முறைபடுத்தி, கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமானூர் ஒன்றியத்தில் கூடுதலாக அரசு நெல்கொள்முதல் நலையம் அமைக்க வேண்டும். கீழப்பழுவூர், கரைவெட்டி, வெங்கனூர், கோக்குடி கண்டராதித்தம் போன்ற கிராமங்களிலுள்ள ஏரிகளில் ஆ க்கிரமி ப்பு களை  அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் நிர்வாகி வைத்திலிங்கம் நன்றி கூறினார்.


    ×