search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு-விக்கிரமராஜா வலியுறுத்தல்
    X

    பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு-விக்கிரமராஜா வலியுறுத்தல்

    • பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தினார்
    • மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது என்றார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வியாபாரிகள் சங்க மாவட்ட கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக இணை செயலாளர் இப்ராஹிம் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு செயலாளார் கார்மல்ராஜ் துணைத் தலைவர் தேவா, பொருளாளர் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக அரியலூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையிலான மருந்து வணிகர் சங்கத்தினர், மாநில தலைவர் விக்ரமராஜாவுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்தனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் ராஜா ஜெயராமன், மாவட்ட பொருளாளர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.துணைத் தலைவர்கள் நடராஜ், செல்வராஜ் பி ஜி ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,பொங்கல் தொகுப்பில் மளிகைப்பொருட்களை தமிழக முதல்வர் வழங்காததை மாநில வணிகர் சங்க பேரமைப்பு வரவேற்கிறது. மேலும், மக்களுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக வழங்கும் ரூ.1000 பணத்தை கொண்டு எங்களை போல சாமானிய வியாபாரிகளிடம் மக்கள் பொருட்களை வாங்க முதல்வர் வழிவகுத்துள்ளார். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.ஆன்லைன் விற்பனை மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இழப்பு கணக்கை அரசுக்கு காட்டுவதுடன், பணியாளர்கள் 10,000 பேரை திடீர் என வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் வேலை.சந்தையில் விற்கப்படும் எண்ணெயை ஆய்வு செய்யும் அதிகாரிகள், தரமற்ற எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடத்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது என்றார். முடிவில் துணைச் செயலாளர் வியாகுலம் நன்றி கூறினார்.

    Next Story
    ×