என் மலர்
ராம் சரண்- இயக்குநர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் "சிகிரி" பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 'பெத்தி' திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், பெத்தி படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ராம் சரம் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் தாக்குதல் காரணமாக துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு அருகில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளது. அந்நாட்டில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை முழுமையாக அழித்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிையில், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் X தளப் பதிவில், "விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்கு முன்பு மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்ட கடைசி விமானம் எனது கத்தார் விமானமாக இருக்கலாம். நான் அமெரிக்காவிற்கு பறக்கும்போது ஸ்டார்லிங்க் வழியாக இணைக்கப்பட்டேன். பிராந்தியத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கத்தாரில் இருந்து புறப்பட்ட சந்தோஷ் நாராயணன் பத்திரமாக அமெரிக்கா சென்றடைந்ததாக மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
- புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி.
- பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும்.
இயக்குநர் கேந்திரன்.வி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வடம். மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்காஸ்ரீ, முனீஸ்காந்த், பாலசரவணன், ஆடுகளம் நரேன், மதுசூதராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். 'வடமஞ்சு விரட்டு' என்ற கிராம வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த படம் வருகிற 6-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் நடிகை சனஸ்காஸ்ரீ பேசும் போது, ''நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.
புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார். நான் சின்ன வயதில் ஸ்கூலுக்கு செல்லும் போது இமானின் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதை கொடுத்த இமானுக்கு நன்றி. ரொம்ப வருசத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு தனி பாடல் வருகிறது' என்றார்.
ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக "மகரம்" உருவாகியுள்ளது.
ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இந்தப் படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை இஷிதா பேசிய போது, "இந்தப் படத்தில் 'நாவிஸ்' என்ற கதாபாத்திரத்தில், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். மொழி வேறுபாடு இருந்தாலும், படக்குழுவினர் என்னை மிகவும் அன்பாக ஏற்றுக்கொண்டார்கள். உண்மையாக வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைத்தது. இந்தப் படத்தின் இயக்குநர் அகஸ்டின் பிரபு பற்றி கூறியே ஆகவேண்டும்.
இந்தப் படத்தின் 80% காட்சிகளில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சிறிய மேக்கப் வைக்க நினைத்தாலும், "ப்ராசஸ்ஸை நம்புங்கள்" என்று அவர் சொல்வார். டீசரை பார்த்தபோது அது எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று உணர்ந்தேன். மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு செய்தோம். அது சுலபமான பயணம் இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம், என்றார்.
- புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
- விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. திருமண புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தள பக்கங்களில் பல மில்லியன்களை தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில் மேலும் பல படங்கள் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.
திருமண விழாவிற்கு ராஷ்மிகா மந்தனா டோலியில் வரும் காட்சிகளும், விஜய் தேவரகொண்டா வாள் ஏந்திய படியும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
இதனிடையே, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு இருவரும் இனிப்பு வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அப்புகைப்படங்களில் ராஷ்மிகா பாரம்பரிய காஞ்சிபுரம் புடவை அணிந்து தேவதை போல் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
- யோகிபாபு அடிக்கடி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருகிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படுவதால் இங்கு கிரிவலம் சுற்றுவது, தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தருகிறது. சமீபகாலமாக திருவண்ணாமலை திரை உலக நட்சத்திரங்களின் முக்கிய ஆன்மீக மையமாக மாறி வருகிறது.
சமீபத்தில் முன்னணி பிரபலங்கள் பலர் குடும்பத்தினருடன் நேரில் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். திரை உலகமும், ஆன்மீகமும் வேறு பாதைகள் போல தோன்றினாலும் மனநிம்மதி, நம்பிக்கை, வெற்றி போன்ற உணர்வுகளில் திரை உலகம் ஆன்மீகத்தின் பாதையில் தான் செல்கிறது.
ரஜினி: திருவண்ணாமலை கோவிலின் தீவிர பக்தர் ஆவார். ஆரம்பத்தில் திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு விளக்கு போட்டு தந்தவர் என்ற பெருமையும் ரஜினிக்கு உண்டு.
சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 17-ந்தேதி தனது பிறந்தநாளையொட்டி மனைவி ஆர்த்தியுடன் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
ரவிமோகன்: நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் கடந்த ஜனவரி மாதம் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தனர்.
யோகிபாபு: யோகிபாபு அடிக்கடி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருகிறார்.
சரத்குமார்: சரத்குமார் சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து தொடர்ந்து கிரிவல பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தேவயானி: தேவயானி கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தார்.
ஸ்ரீலீலா: நடிகை ஸ்ரீலீலா கடந்த ஆண்டு இறுதியில் தரிசனம் செய்தார்.
திவ்யாபாரதி: பேச்சிலர் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வரும் திவ்யா பாரதி திருவண்ணாமலை கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரிசனம் செய்தார்.
இது போன்று தனுஷ், விக்ரம்பிரபு, ரோஜா, சசிகுமார், பாபிசிம்கா உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் திருவண்ணாமலை கோவிலில் சமீபத்தில் தரிசனம் செய்துள்ளனர்.
படம் ரிலீசுக்கு முன்பு வருவது, புதிய படம் தொடங்குவதற்கு முன்பு வருவது தடைகள் நீங்கி மனநிம்மதி பெற்று வேண்டுதல்கள் நிறைவேறச் செய்யும் தலமாக திரை உலக பிரபலங்களுக்கு திருவண்ணாமலை அமைந்துள்ளது.
- விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
- கடந்த 2 நாட்களாக இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் விஜய். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஹா என்ற மகளும் உள்ளனர். சினிமாத்துறையில் விஜய் பயணித்த காலத்திலேயே அவர் குடும்பத்தினருடன் விலகி இருந்ததாக தகவல் வெளியாகி வந்தன. இதற்கு இருதரப்பினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இதனிடையே விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி கடந்த 27-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இம்மனு மீது ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. மனுவில் விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 2 நாட்களாக இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.
இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இன்ஸ்டாவில் தனது தந்தை விஜயைப் பின்தொடர்வதை ஜேசன் நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
விவகாரத்து குறித்த தகவல் வெளியான பிறகே Unfollow செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிலர் ஜேசன், விஜயின் இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் அதிகாரப்பூர்வமாக ெவளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "சூர்யா 46" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (மார்ச் 2) காலை 10.18 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.
2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்றே சூர்யா 46 படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்து இருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் வெளியாகும் என்று தெரிகிறது.
- இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.
ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் 'அன்பே டயானா'. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து 'அன்பே டயானா' படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டீசரில் பெரம்பூரில் வசிக்கும் கதாநாயகனின் குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனுக்கு பெற்றோராக சேத்தன் மற்றும் ரோஜா நடித்துள்ளனர். மேலும் கோபி அரவிந்த், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பொழுதுபோக்கு குடும்ப படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- யஷ் - கியாரா அத்வானி ரொமான்ஸில் இப்பாடல் உருவாகியுள்ளது.
- தமிழில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
டாக்சிக் படத்தின் தபாஹி பாடல் மார்ச் 2 அம தேதி வெளியாகவுள்ளது. யஷ் - கியாரா அத்வானி ரொமான்ஸில் உருவாகியுள்ள இப்பாடலின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
டிராகன் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருந்தார். அந்த படத்தை ஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசன் படத்தில் சிம்பு நடிக்க தொடங்கினார்.
இதனால் அஸ்வத் மாரிமுத்து படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் சிம்பு படம் விரைவில் தொடங்கும் என்று அஸ்வத் மாரிமுத்து அப்டேட் கொடுத்துள்ளார்.
- ‘மீசைய முறுக்கு-2’ படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.
இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரின்படி படம் 1980-களில் நடக்கும் ஒரு இசைக் கலைஞனின் கதை மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலக்கட்டங்களில் பயணிக்கிறது. இதில் மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் மார்ச் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.








