என் மலர்
மேற்கு வங்காளம்
- மக்களவைக் குழுத் தலைவராக சுதீப் பந்த்யோபாத்யாய் தேர்வு.
- மாநிலங்களவை கொறடா நதிமுல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், மக்களவைக் குழுத் தலைவராக சுதீப் பந்த்யோபாத்யாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை துணைத் தலைவராக ககோலி கோஸ் தஸ்திதார் மக்களவை கொறடா - கல்யாண் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவைக் குழுத் தலைவராக டெரெக் ஓ பிரையன், மாநிலங்களவை துணைத்தலைவராக சகரிகா கோஸ், மாநிலங்களவை கொறடா நதிமுல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- மம்தா பானர்ஜி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு சில துணிச்சலான பெண்களை தேர்ந்தெடுத்தார்.
- 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இந்தியாவில் தற்போது உள்ள ஒரே பெண் முதலமைச்சர் ஆவார். இவர் 18வது மக்களவையில் தனது கட்சியில் இருந்து 38 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை முன்வைத்துள்ளார்.
மம்தா பானர்ஜி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு சில துணிச்சலான பெண்களை தேர்ந்தெடுத்தார். பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 29 வேட்பாளர்களில் 11 பேர் பெண்களாவர்.
மஹூவா மொய்த்ரா, சஜ்டா அஹ்மத், மலா ராய், ககோலி கோஷ், ஷர்மிளா சர்கார், ஜூன் மாலியா, ரச்சா பானர்ஜி, சடாப்தி ராய் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.
அந்த வகையில், 18-வது பாராளுமன்றத்திற்கு ஒரு மாநிலத்தில் இருந்து அதிக பெண் எம்.பி.க்கள் செல்லும் மாநிலமாக மேற்கு வங்கம் உருவெடுத்து இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இருந்து மட்டும் இந்த முறை 11 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்ல உள்ளனர்.
இதே போன்று தமிழகத்தில் இருந்தும் ஐந்து உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளில் வென்றுள்ளது.
- அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் பாஜக 12 இடங்களிலும் வென்றுள்ளது
இந்நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார்.
பாஜக வேட்பாளர் சுரேந்திரஜீத் சிங் அலுவாலியாவை எதிர்த்து போட்டியிட்ட சத்ருகன் சின்ஹா 59,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சத்ருகன் சின்ஹாவின் மகளான பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்து அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.
- அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி சுமார் 230 தொகுதிகளிலா் முன்னிலை வகிக்கிறது.
400 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக்கூறிய பிரதமர் மோடிக்கு இது தோல்வி என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பிரதமருக்கு ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த முறையை பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனக் கூறினார்.
மிகப்பெரிய அளவில் கொடுமைகள் செய்த பிறகும், பணம் செலவழித்த பிறகும் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆணவத்தை இந்தியா கூட்டணி வென்றது. மோடி தோல்வியடைந்துள்ளார். அயோத்தியாவில் கூட தோல்வியடைந்துள்ளார்.
மோடியை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும், இந்தியா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருதற்கான முயற்சியை மேற்கொள்வேன். பிரதமர் மோடி ஏராளமான கட்சிகளை உடைத்துள்ளார். மக்கள் அவரின் உறுதியை உடைத்துள்ளனர்" என்றார்.
- யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார்.
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டன.
பஹரம்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிறுத்தப்பட்டார். இவர் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். இவரை எதிர்த்து மம்தா பானர்ஜி முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதானை நிறுத்தினார்.
இதில் யூசுப் பதான் வெற்றிபெறும் நிலையில் உள்ளார். யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார். யூசுப் பதான் 85 ஆயிரத்து 766 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் வெற்றி அருகில் உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தாவுக்கும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையில் வார்த்தை போர் நடைபெற்றது. மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.
தன்னை கடுமையாக விமர்சித்த மூத்த அரசியல்வாதியை ஒரு கிரிக்கெட் வீரரை நிறுத்தி மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார் என கூறப்படுகிறது.
- கருத்துக் கணிப்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
- ஆனால், மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு பா.ஜனதாவை தனியாக எதிர்த்து நின்றார் மம்தா பானர்ஜி. சந்தேஷ்காளி உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கையில் எடுத்து பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட பார்த்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 22 இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியானது. அப்போது மம்தா பானர்ஜி கருத்து கணிப்பு பொய்யாகும் என உறுதியாக கூறினார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் முன்னணி வகித்தது. நேரம் செல்ல செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.
தற்போது 29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த முறை 18 இடங்களை பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மம்தாவின் 29 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
- நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
- கருத்துக்கணிப்புகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.
கொல்கத்தா:
7 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதன்பிறகு நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதில் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றி பெறும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை விட பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தன. இந்த கருத்துக்கணிப்புகளை மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிராகரித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை கடந்த 2016, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நாங்கள் பார்த்தோம். எந்த கணிப்பும் இதுவரை சரியாக இருக்கவில்லை.
இந்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் 2½ மாதங்களுக்கு முன்னரே வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.
தேர்தல் களத்தில் பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க. முயற்சித்த விதம் மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கிறார்கள் என்று தவறான தகவலை பரப்பியது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியிருக்கும் என நினைக்கிறேன். இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலையிடாதவரை அந்த அரசில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இருக்காது. எங்களை அழைத்தால் செல்வோம். ஆனால் முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.
- நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
- ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பராசத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும், மதுராபூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் இன்று (ஜூன் 3) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து பாஜக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இந்த மறு வாக்குப்பதிவானது இன்று நடத்தப்படுகிறது.
- வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
- வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் (4-ந்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
543 தொகுதிகளை கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2½ மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் (4-ந்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான அனைத்த ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2 மாநிலங்களில் தேர்தல் தொடர்பான வன்முறை ஏற்பட்டதால் வாக்குகள் எண்ணப்பட்டு 15 நாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- 960 கம்பெனி துணை ராணுவத்தினருடன், உள்ளூர் போலீசார் 33 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலின் 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
இதில் மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 960 கம்பெனி துணை ராணுவத்தினருடன், உள்ளூர் போலீசார் 33 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
வன்முறையில் EVM, VVPAT இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டுக் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி வருகிறார்.
- தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக தியானத்தில் ஈடுபட இருப்பதால் எதிர்க்கட்சிகள் கேள்வி.
மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.
தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
பிதரமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். அவரால் தியானம் செய்ய முடியும். ஆனால், அது டிவில் ஒளிபரப்ப முடியாது. ஒளிபரப்பப்பட்டால் அது தேர்தல் விதியை மீறுவாகும். தியானம் செய்யும் யாருக்கும் கேமரா தேவையா?. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக 48 மணி நேர அமைதியான காலத்தில் வாக்கு சேகரிப்பதற்கான வழியாகும்.
இந்த முறை பாஜக அதிகாரத்திற்க வந்தால் எந்த அரசியல் கட்சியோ, தேர்தலோ, சுதந்திரமோ, மதமோ, மனிதாபிமானமோ அல்லது கலாசாரமோ இருக்காது.
மேற்கு வங்காளத்தில் சிறந்த முடிவை எட்டுவோம் என பிரதமர் மோடி கூறுகிறார். இதன் அர்த்தம் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதுதான். மேற்கு வங்காளத்தில் அவர்கள் ஜீரோதான் பெறுவார்கள்.
நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்காமல் இருந்திருந்தால், இன்று கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்திருக்க முடியாது.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- ஆயிரக்கணக்கான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
- கனமழையும் பெய்ததால் கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
மத்திய வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து ரீமல் என பெயரிடப்பட்ட இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும், வங்காள தேசத்தின் கேபு பாராவுக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது தரைக்காற்று மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது.
சூறாவளி காற்றுடன் மிக கனமழையும் பெய்தது. இதனால் மேற்கு வங்காளத்தில் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்நாபூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
ஏராளமான இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. கனமழையும் பெய்ததால் கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
புயலால் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் சுந்தரவன காடுகளில் கோசாபா பகுதியில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். இதுதவிர மேலும் ஒருவர் என மொத்தம் 2 பேர் புயலுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
#WATCH | West Bengal CM Mamata Banerjee conducted an aerial survey of the cyclone-affected areas in South 24 Parganas.
— ANI (@ANI) May 29, 2024
(Source: All India Trinamool Congress) pic.twitter.com/sQVmO5O3K8






