என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • ஐதராபாத் வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி
    • தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளை அழைத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், இது ரத்தம் இல்லை என்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இத்தகைய ரசாயனக் கழிவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொழிற்சாலைகள் ரசாயனங்கள் வெளியேற்றப்படுவதை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர்.

    • 2 பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.
    • 2 பெண்களும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஷாம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் 2 பெண் பயணிகள் வித்தியாசமான பெரிய கூடை ஒன்றை வைத்திருந்தனர்.

    அதனை கண்ட சுங்க அதிகாரிகள் அந்த கூடைகளை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் கவர்ச்சியான 2 பாம்புகள் இருந்தன. இதனைக் கண்டு சுங்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் பாம்புகளுடன் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்துள்ளனர்.

    இந்த பாம்புகள், அதிக விஷம் கொண்டவை. 2 பெண்களும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர். பாம்புகள் மீட்கப்பட்டன.

    பாம்பு கடத்தலில் இந்த பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்டுள்ளார்களா அல்லது யாரேனும் அறிவுறுத்தல்களின்படி செயல்படுகிறார்களா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாங்கள் யாரிடமும் கூட ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை.
    • நன்கொடையை ஏற்கவில்லை என்பதை அதானி குழுமத்துக்கு நேற்று கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம் என தெரிவித்தார்.

    ஐதராபாத்:

    யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமம் ரூ,100 கோடியை வழங்கி இருந்தது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த தொகையை தெலுங்கானா அரசு நிராகரித்துவிட்டதாக அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரேவந்த் ரெட்டி,

    யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்துக்காக பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. அந்த வகையில், அதானி குழுமமும் ரூ.100 கோடி கொடுத்தது. ஆனால், அந்த நன்கொடையை ஏற்க வேண்டாம் என மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

    தெலுங்கானாவின் கவுரவம் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கவும் எனக்கும் எனது அமைச்சரவை சகாக்களுக்கு உள்ள தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும் அதானியின் நன்கொடையை நிராகரிக்க நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் யாரிடமும் கூட ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. நாங்கள் நன்கொடையை ஏற்கவில்லை என்பதை அதானி குழுமத்துக்கு நேற்று கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம் என தெரிவித்தார். மேலும், கடிதத்தின் நகலையும் செய்தியாளர்களுக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வழங்கினார்.

    அதானி குழுமத்திடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய அந்நிறுவனம் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து அந்நிறுவனம் நிதி திரட்டி உள்ளதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    தெலுங்கு சினிமா காமெடி நடிகர் அலி. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள எக்மாமிடி கிராமத்தில் பண்ணை வீடு கட்டி வருகிறார்.

    இந்த வீடு எந்தவித அனுமதி இன்றி கட்டப்படுவதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சார்பில் அலிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீஸ் கட்டிட பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கட்டுமானத்திற்கான அனுமதியை பெற வேண்டும். இதனை மீறினால் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அலி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சேர்ந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் ராஜமுந்திரி அல்லது விஜயவாடாவில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு சீட் வழங்கப்பட வில்லை.

    இந்த நிலையில் அவர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். விரைவில் அவர் ஜனசேனா கட்சியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கை நிறைய சம்பாதித்தாலும் மனதிற்கு ஆறுதல் தரும் துணையில்லாத பற்றாக்குறை அவர்களை வாட்டி வதைக்கிறது.
    • சிலர் பிள்ளைகளின் வாழ்க்கையை வடிவமைக்கும் பொறுப்பினால் வேறு திருமணத்தை நினைக்காமல் இருந்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புதிய வகை கலாச்சாரம் பரவி வருகிறது. வயது முதிர்ந்த தாத்தா பாட்டிகள் மீண்டும் திருமணம் செய்து வருகின்றனர்.

    தங்கள் பிள்ளைகள் இருந்தாலும், கை நிறைய சம்பாதித்தாலும் மனதிற்கு ஆறுதல் தரும் துணையில்லாத பற்றாக்குறை அவர்களை வாட்டி வதைக்கிறது.

    தங்கள் இதயத்துடன் பின்னிப்பிணைந்த உறவை அவர்கள் தேடி வருகிறார்கள். இதனால் தடைகளை தாண்டி வாழ்க்கையில் பயணிக்க தயாராகி வருகின்றனர். திருமணத்துடன் புதிய துணையை தேர்ந்தெடுக்கின்றனர். இதன் மூலம் முதியவர்கள் தனிமையில் படும் வேதனையை அடையாளம் காண முடிகிறது.

    கொரோனா காலத்தில் பலர் கணவன், மனைவியை இழந்துள்ளனர். சாலை விபத்து நோய்வாய் படுதலால் தங்கள் துணையை இழந்தவர்களும் உள்ளனர்.

    மேலும் சிலர் பிள்ளைகளின் வாழ்க்கையை வடிவமைக்கும் பொறுப்பினால் வேறு திருமணத்தை நினைக்காமல் இருந்துள்ளனர். அவர்கள் தற்போது திருமண உறவை நாடுகின்றனர்.

    இதேபோல இளமையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருப்பவர்களும் முதுமை காலத்தில் தங்களுக்கு ஒரு துணை வேண்டும் என எண்ணுகின்றனர்.

    விவாகரத்து போன்றவற்றால் கணவன் மனைவியை பிரிந்தவர்களும் தற்போது திருமண ஏற்பாடுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

    இப்படி வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று சுயம்வரம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    வயதான காலத்தில் திருமணம் செய்ய சில தாத்தா, பாட்டிகள் ஆர்வமாக கலந்து கொள்கிறார்கள் .சில குடும்பங்களில் பிள்ளைகளே தானாக முன்வந்து தங்களுடைய பெற்றோருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

    இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ளும் முதியோர்கள் தனியாக சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இரு வீட்டாரும் விரும்பினால் திருமணம் நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.

    இதுபோன்ற வயது முதிர்ந்த திருமணத்தில் சாதி பாகுபாட்டை பலர் பார்ப்பது இல்லை. தனியார் நிறுவனத்தின் இந்த சுயம்வர நிகழ்ச்சியில் ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.

    இது குறித்து அந்த நிறுவனத்தினர் கூறுகையில்:-

    வயதான காலத்தில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அவள் இல்லையே என்ற குறை பல முதியோர்களுக்கு ஏற்படுகிறது.

    தனிமையில் இருப்பவர்கள் மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை மன அழுத்தத்தால் மாரடைப்பால் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதுபோன்ற பிரச்சனைகளை உணர்ந்து. தனிமையில் இருக்கும் முதியோர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாதமும் 3-வது ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் உள்ள தோமலகுடாவில் உள்ள ஏவி கல்லூரியில் முதியவர்களுக்கான சுயம்வரம் நடத்துகிறோம்.

    கடந்த 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3,000 முதியவர்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தியுள்ளனர். திருமணங்களை இலவசமாக நடத்துகிறோம்.

    முன்னதாக சட்ட ஒப்பந்தம் செய்து கொள்கிறோம். அதில் இருவரின் அசையா சொத்து, சொத்துக்கள், கடன்கள், யாருக்கு என்ன என்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நமது ஒற்றுமையை குலைக்கும் வகையில் வேறுபாடுகளை உருவாக்கினர்.
    • இதனால் நம் மக்களிடையே அடிமை மனநிலை ஏற்பட்டது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் லோக்மந்தன்-2024 தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த தேசிய ஒற்றுமை உணர்வு அனைத்து சவால்களையும் மீறி நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது.

    நமது சமூகத்தைப் பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் பல நூற்றாண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பல நூற்றாண்டுகளாக ஏகாதிபத்தியமும், காலனித்துவ சக்திகளும் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சுரண்டியதுடன், நமது சமூக கட்டமைப்பையும் அழிக்க முயன்றன.

    நமது வளமான அறிவார்ந்த பாரம்பரியத்தை இழிவாகப் பார்த்த ஆட்சியாளர்கள் மக்களிடையே கலாசாரத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர்.

    நமது ஒற்றுமையை குலைக்கும் வகையில் வேறுபாடுகளை உருவாக்கினர். இதனால் நம் மக்களிடையே அடிமை மனநிலை ஏற்பட்டது.

    நாம் நமது விலைமதிப்பற்ற மரபுகளை மீண்டும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மக்களிடையே 'தேசம் முதலில்' என்ற உணர்வை ஏற்படுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

    • இரவில் நீல நிற விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • பெரிய ராட்சத மீன் நீந்தி செல்வதை போல காட்சியளிக்கும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய கட்டிடம் ராட்சத மீன் வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இரவில் நீல நிற விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் மீன் கண் போன்ற ராட்சத விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தை பார்க்கும்போது நகரத்தின் நடுவில் பெரிய ராட்சத மீன் ஒன்று நீந்தி செல்வதை போல பிரமிப்பாக காட்சியளிக்கும்.

    இதனை தி பிஷ் பில்டிங் என அழைத்து வருகின்றனர். தனித்துவமான கட்டிடக்கலைக்கு ஒரு அடையாளமாக இந்த ராட்சத மீன் கட்டிடம் மாறி உள்ளது.

    மேலும் உலகம் முழுவதும் உள்ள வித்தியாசமான கட்டிடங்கள் பட்டியலில் இந்த ராட்சத மீன் கட்டிடம் தற்போது இடம்பெற்றுள்ளது. 

    • ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சார பிரிவு சார்பில் பிரஜ்னா பிரவாக் என்ற பெயரில் 4 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐதராபாத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஐதராபாத்துக்கு நாளை ஜனாதிபதி திஇந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை காலை டெல்லியில் இருந்து விமான மூலம் ஐதராபாத் வருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சார பிரிவு சார்பில் பிரஜ்னா பிரவாக் என்ற பெயரில் 4 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.

    ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் மாநாட்டை திரவுபதி முர்மூ தொடங்கி வைத்து பேசுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐதராபாத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ரவுபதி முர்மு வருகை

    • ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கருத்து பதிவிட்டதாக போலீசார் கைது செய்தனர்.
    • சிறையில் அடைக்கக்கோரி போலீசார் மனுதாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் நிராகரிப்பு.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ரேவந்த் ரெட்டி முதல்வராக இருந்து வருகிறார். சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் சமூக ஊடக செயற்பாட்டாளர் கோனதம் திலீப். சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் இவர் தெலுங்கானா டிஜிட்டல் டைரக்டராக இருந்தவர்.

    இவர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராகவும், அவரது ஆட்சிக்கும் எதிராகவும் சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்டதாக போலீசார் கைது செய்தனர். கைது செய்த போலீசார் அவரை நீதித்துறை காவலில் (சிறையில் அடைக்க) உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தனர்.

    ஆனால் நீதிமன்றம் போலீசாரின் மனுவை நிராகரித்து, சிறையில் அடைக்க உத்தரவிட மறுத்துவிட்டது. இதனால் திலீப் விடுதலை செய்யப்பட்டார்.

    திலீப் கைது செய்யப்பட்டதற்கான முழு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணைக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்த வழக்கறிஞர், கீழ் நீதிமன்றத்தில் சிறையில் அடைக்கும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

    முன்னதாக போலீசார் காவிலில் எடுத்தபோது, நான் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என திலீப் கூறியிருந்தார். நான் அரசை எதிர்த்து கேள்வி கேட்டதால் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முதலும் கடைசியும் அல்ல. எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் தொடர்ந்து போராடுவேன் என திலீப் தெரிவித்துள்ளார்.

    போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பி.ஆர்.எஸ். கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    • 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து
    • டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

    மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மக்களிடேயே ஊக்குவிக்கும் முயற்சியாக தெலங்கானா அரசின் புதிய அறிவிப்பு இன்று முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. மின்சார வாகனங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் விதமாக 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வர்த்தக பயன்பாட்டு பயணிகள் வாகனங்கள், மின்சார ஆட்டோ ரிக்சா, மின்சாரத்தில் இயங்கும் இலக ரக சரக்கு வாகனங்கள், டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

    2026-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தெலங்கானாவில் வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இந்த 100 சதவீத விலக்கு பொருந்தும். தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு மட்டும் வாழ்நாள் வரி, கட்டண விலக்கு அமலில்  இருக்கும்.

    • தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.
    • சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் விமர்சனத்தை எழுப்பியது. அத்துடன் பல்வேறு காவல்நிலையங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

    புகார் அடிப்படையில் சென்ன எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கஸ்தூரி தலைமறைவானார். தவைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முன்ஜாமினை நீதிமன்றம் நிராகரித்தது.

    இதற்கிடையே தலைமறைவானதால் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தேடிவந்தனர். தனிப்படை போலீசாருக்கு கஸ்தூரி ஐதராபாத்தில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஐதரபாத்திற்கு சென்று கஸ்தூரியை கைது செய்தனர்.

    ஐதராபாத்தில் ககைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிறுமி பள்ளி செல்வதற்காக குளித்துவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு இருந்தார்.
    • 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல், சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி (வயது 12).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சிறுமி பள்ளி செல்வதற்காக குளித்துவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென சிறுமி மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×