என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மதுரை ஐகோர்ட் வழங்கியுள்ள நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.
- மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியபோதே தமிழக அரசு தீபம் ஏற்றி இருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். மேலும் அங்கிருந்த போலீசார் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் அவர்கள் இனிப்புகள் வழங்கினர். ஐகோர்ட் உத்தரவிற்கு திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருக பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
லீலாவதி: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தற்போது மேல்முறையீட்டு வழக்கில் மதுரை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில் மகிழ்ச்சியளிக்கிறது. இது நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த நீதிமன்ற தீர்ப்பை உடனே செயல்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து: மதுரை ஐகோர்ட் வழங்கியுள்ள நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். தமிழக அரசும், கோவில் நிர்வாகமும் இந்த தீர்ப்பை மதித்து மலைமேல் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் தீபம் ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்று மலை அடிவார நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு மூதாட்டி ஒருவர் இனிப்பு வழங்கிய காட்சி.
கிருஷ்ண மூர்த்தி: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மறுப்பதற்கு முக்கிய காரணம் ஓட்டு வங்கி தான். ஏற்கனவே மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியபோதே தமிழக அரசு தீபம் ஏற்றி இருக்க வேண்டும். தற்போது 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இதனையும் தமிழக அரசு நிறைவேற்றப் போவதில்லை. மீண்டும் மேல்முறையீடு செய்வார்களே தவிர தீபம் ஏற்ற மாட்டார்கள்.
தேன்மொழி: முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகாதீபம் மலை மேல் உள்ள தூணில் ஏற்றுவது தொடர்பான ஏற்பட்ட பிரச்சனை மிகுந்து வருத்தமளித்து வந்தது. தற்போது மேல்முறையீட்டு வழக்கில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சாதகமான தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
- அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றே உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
- திருப்பரங்குன்றம் தீப வழக்கு அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை.
* பொது அமைதி பாதிக்கும் என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
* மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதமும் தவறானது.
* அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றே உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
* பொது அமைதி பாதிக்கப்படும் என அரசு கூறுவது யூகத்தின் அடிப்படையிலானது.
* கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது.
* பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம்.
* திருப்பரங்குன்றம் தீப வழக்கு அரசியல் நோக்கில் பார்க்கப்பட்டுள்ளது.
* தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும். சண்டை போடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
- தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
- தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது. திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.
பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.
இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்தரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர். எனவே தமிழக அரசு சுமார் 6½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
- முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டததில் ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
இந்தாண்டின் முதல் கூட்டம் 20-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
மேலும் புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
- ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும்
- தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும்.
* மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் மலை உச்சியில் உள்ள தூணில் கோவில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும்.
* ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும்
* தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.
* தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம்.
* மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் தனி நீதிபதி அளித்த உத்தரவை உறுதி செய்தனர்.
- எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
- தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.திமு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
தமிழக அமைச்சரவை கூட்டம் மற்றும் தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்.
இதில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி, தர்கா மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனையானது. நேற்று காலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12 ஆயிரத்து 680-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1 லட்சத்து 1,440-க்கும் விற்பனை ஆனது. மாலையில் மீண்டும் தங்கம் விலை உச்சத்தை அடைந்தது. மறுபடியும் ரூ.80 உயர்ந்து கிராம் ரூ.12 ஆயிரத்து 760-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 271 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.102,080
4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640
1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
5-1-2026- ஒரு கிராம் ரூ.266
4-1-2026- ஒரு கிராம் ரூ.257
3-1-2026- ஒரு கிராம் ரூ.257
2-1-2026- ஒரு கிராம் ரூ.260
1-1-2026- ஒரு கிராம் ரூ.256
- ஜனவரி 30-ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.
- கூட்டணி ஆட்சி என்ற டி.டி.வி. தினகரனின் கருத்தை வரவேற்கிறேன்.
விருதுநகர்:
விருதுநகர் வி.வி.எஸ் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்து வருகிற 11-ந் தேதி விருதுநகர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதில் நானும், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள மக்களை சந்தித்து விளக்க கூட்டங்கள் நடைபெறும்.
ஜனவரி 30-ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். பிப்ரவரி 7-ந் தேதி மேல் 15-ந் தேதி வரை மாநில அளவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெறும்.
தமிழகத்திற்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் சீட்டுகள் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை மிரட்டி வருகிறார். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ் குழந்தைகள். அமித் ஷா அலை பட்டிதொட்டி எல்லாம் பரவுவதாக அண்ணாமலை கூறுவது அவருக்கே நியாயமாக உள்ளதா? அமித் ஷா அலை தமிழகத்தில் எப்போதும் வீசாது.
கூட்டணி ஆட்சி என்ற டி.டி.வி. தினகரனின் கருத்தை வரவேற்கிறேன். தேசிய அளவில் கூட்டணி ஆட்சி இருப்பது போல மாநில அளவிலும் கூட்டணி ஆட்சி அவசியம். ஆர்.எஸ்.எஸ்.-ஐ. நேருக்கு நேராக எதிர்ப்பது காங்கிரஸ் தான்.
முடிந்துபோன ஆர்.எஸ்.எஸ். குரலை எதிரொலிக்கிறார் என என்னை பற்றி தி.மு.க., முன்னாள் எம்.பி. அப்துல்லா கூறியது கண்டிக்கத்தக்கது. அவர் மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்.
கூட்டணி கட்சிகள் இணைந்து தான் தமிழகத்தில் ஒரு கட்சியை வெற்றி பெறச் செய்யும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சி டில்லியில் அதிகாரத்தில் பங்கு தர தயாராக உள்ளது. தமிழ கத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சிக்கு அதிகார பகிர்வு வேண்டும் என காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடேங்கர் கூறியது போல் கூட்டணி ஆட்சி அவசியம். இதை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையும் ஆமோதிக்கிறார். வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஓட்டு தேவையாக உள்ள போது, எப்படி கூட்டணியில் பங்கு தராமல் இருக்கலாம்.
இந்தியா கூட்டணியில் சி.பி.எம்.க்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என கூறினால் அது அவர்களது விருப்பம். ஆனால் எங்களுக்கு ஆட்சியில் அதிகாரம் வேண்டும். கருத்துக் கணிப்பு கூட்டணி ஆட்சியின் திசையை காட்டி உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார்.
கூட்டணி பற்றி கார்கே அமைத்த குழுவினர், தி.மு.க.வுடன் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு பெற்றுள்ளது. ராகுல் ஒரு போதும் ஆர்.எஸ்.எஸ்., உடன் சமாதானம் ஆகமாட்டார். அதனால் தான் எல்லோரும் எங்களுடன் கூட்டணி விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகம்-தமிழகம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைகிறது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் நீர் நிரம்பும்போது தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போது இந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 130 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 125 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 100.40 அடியாகவும், நீர் இருப்பு 65.36 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 8,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
- இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலையொட்டிய பகுதிகளில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று அதிகாலை வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடன் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.
சந்திப்பின்போது, அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார்.






