என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
- ரூ.10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா?
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
* எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
* ரூ.10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா?
* 39 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொறுப்பேற்க வேண்டும்.
* 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தொண்டர்கள் தண்ணீர் கூட இல்லாமல் தவித்துள்ளனர்.
* கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.
- காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.
சென்னை :
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.
- த.வெ.க. தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
- விஜயின் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் கைதாவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயின் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
- 39 பேர் உயிரிழந்த துயரத்தை முதலமைச்சரால் தாங்க முடியவில்லை.
- கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,
* முதலமைச்சர் உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* 39 பேர் உயிரிழந்த துயரத்தை முதலமைச்சரால் தாங்க முடியவில்லை.
* கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
* கரூர் மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
* ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
* மருத்துவர்களிடமும் தனித்தனியாக கேட்டு தெரிந்து கொண்டுள்ளேன்.
* அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
* 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
* பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்.
* இதுபோன்ற விபத்துகள் இனிமேலும் நடக்க கூடாது.
* விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட்டம் நடத்தியுள்ளார்.
* கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை.
* கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் என்றார்.
- இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- 4 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாவ தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் சோகமான நிலையை நிலவுகிறது.
இந்த நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
- விஜய் பிரசாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையுமே இல்லையே.
- எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு அ.திமு.க. ஆட்சியில் முழு பாதுகாப்பு அளித்தோம்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தவர்களின் உடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* விஜய் பிரசாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையுமே இல்லையே.
* 4 மாவட்டத்தில் த.வெ.க. பிரசாரம் செய்துள்ளது. ஏற்கனவே நடந்த கூட்டத்தை பார்த்து தமிழக அரசும், காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
* விஜய் பேசும் போது மின் விளக்கு அணைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
* எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு தி.மு.க. அரசு முறையான பாதுகாப்பு அளித்து நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டும்.
* கூட்டத்திற்கு ஏற்றவாறு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
* நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் பலனின்லை.
* இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு தரப்பட்டதாக தெரியவில்லை.
* எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு அ.திமு.க. ஆட்சியில் முழு பாதுகாப்பு அளித்தோம்.
* அ.தி.மு.க. கூட்டத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு இல்லை.
* எப்படிப்பட்ட நிலை இருந்தது என ஆய்வு செய்ய வேண்டும்.
* ஒரு நபர் கமிஷன் அமைத்ததன் நோக்கம் என்ன என தெரியவில்லை.
* கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் கட்சிகளுக்கு அனுபவம் உண்டு.
* அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது.
* ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி எனும் வகையில் காவல்துறை தனது கடமையிலிருந்து தவறிவிட்டது.
* அரசியல் கட்சி கூட்டங்களில் இதுவரை இப்படி உயிர் பலி நிகழ்ந்ததில்லை.
* மக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை
* கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதில் கட்சிகளுக்கு அனுபவம் உண்டு.
* ஒரு கட்சி தலைவர், இன்னொரு தலைவருக்கு அறிவுரை கூறகூடாது என்றார்.
- தி.நகர் மேம்பால திறப்பு நிகழ்ச்சி, நாளை ராமநாதபுரம் செல்லும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கரூருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இன்றைய தி.நகர் மேம்பால திறப்பு நிகழ்ச்சி, நாளை ராமநாதபுரம் செல்லும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க. நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை...
- பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கரூருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.
கரூர் சம்பவம் குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தாங்க முடியவில்லை;
இரவு என்னால்
தூங்க முடியவில்லை
மரணத்தின் படையெடுப்பால்
கரூர் கருப்பூர் ஆகிவிட்டது
அந்த மரணங்களுக்கு
முன்னும் பின்னுமான
மனிதத் துயரங்கள்
கற்பனையில் வந்து வந்து
கலங்க வைக்கின்றன
பாமரத் தமிழர்களுக்கு
இப்படி ஒரு பயங்கரமா?
இந்த வகையில்
இதுவே கடைசித் துயரமாக
இருக்கட்டும்
ஒவ்வோர் உயிருக்கும்
என் அஞ்சலி
ஒவ்வொரு குடும்பத்துக்கும்
ஆழ்ந்த இரங்கல்
இனி இப்படி நிகழாமல்
பார்த்துக் கொள்வதே
இந்த நீண்ட துயரத்துக்கு
நிரந்தர நிவாரணம்
ஆடும் உடம்பு
அடங்குவதற்கு நாளாகும்
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
- ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உயிரிழந்தவர்களில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த ஒருவரின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசல் குறித்து விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரூர்:
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
* கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது.
* கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
* த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
* கூட்ட நெரிசல் குறித்து ஆணைய விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






