என் மலர்
புதுச்சேரி
- செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
- போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே அம்பகரத்தூரிலிருந்து, தனியார் பஸ் ஒன்று காரைக்கால் நோக்கி சென்றது. இந்த பஸ்சை அய்யப்பன்(வயது40) என்பவர் ஓட்டி வந்தார். செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, பின்னர், பூட்டி இருந்த கடையில் மோதி நின்றது.
இதில் டிரைவர் அய் யப்பன், கண்டக்டர் மகேஸ்வரன்(41) மற்றும் 17 பயணிகள் என மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை, அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அனை வரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் இது குறித்து, காரை க்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- காரைக்காலில் கல்லூரி மாணவி மாயமானார்.
- 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறு மாரியம்மன் கோவில் தெருவை ச்சேர்ந்தவர் ஆரவமுதன். இவரது மகள் ஈஸ்வரி தெய்வநாயகி(வயது19). இவர் கடந்த 21-ந் தேதி, வழக்கம் போல், வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று இரவு வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக உறவினர்கள், தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்கா ததால், தந்தை ஆரவமுதன், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில், மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். மேலும், ஈஸ்வரி தெய்வநாயகி கல்லூரி சென்ற அன்று, கருநீலம் மற்றும் வெள்ளை கலரில் சுடிதார் அணிந்தி ருந்ததாகவும், இடது கை மணிகட்டில் ஏ.இ.எஸ்எச்யு. என பச்சை குத்தியிருப்பார்., இவரை பற்றி தகவல் தெரிந்தால், காரைக்கால் நகர காவல்நிலையம அல்லது, 04368228007, 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மதுபானக்கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில், பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் இயங்கி வரும் தனியார் மதுபானக்கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வழக்கம் போல் கடை மூடப்பட்டது. இந்த கடையில் நெடுங்காடு பொன்பற்றி கிராமத்தைச்சேர்ந்த பாஸ்கர் (வயது60). காவலாளியாக இருந்தார். நள்ளிரவு திடீரென கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், கடையை திறக்குமாறு வற்புதியுள்ளனர். காவலாளி மறுக்கவே, மர்ம நபர்கள் காவலாளியை தாக்கி, கடையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபானங்களை திருடிகொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து, பாஸ்கர், கடை உரிமையாளர் மற்றும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடை வாசலில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், திருநள்ளாறு அருகேவுள்ள விழிதியூரைச் சேர்ந்த ஜெகன் (23), நளன் குளம் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர், அவர்களிமிமிருந்து, ரூ.1 லட்சத்து 43 பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். (சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. திருட்டு நடந்த ஒரு சில மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த திருநள்ளாறு போலீசாரை, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பாராட்டினார்.
- காரைக்காலில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு நல்லாத்தூர் கடைவீதி அருகே, பொது இடத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் ஆபாச மாக பேசி ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 பேர் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது, போலீசார் அந்த 5 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்க ளில் 4 பேர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச்சேர்ந்த சத்தியராஜ்(வயது30), சிலம்ப ரசன்(32), சசிகுமார் (28), மதன்ராஜ்(30) மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த சுரேஷ்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பொது மக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய ரகளை யில் ஈடுபட்ட குற்றத்தி ற்காக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல், காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மேலவாஞ்சூர் ஆசாரிதெரு அருகே பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய கலையரசன்(20) சூரியா(22) ஆகிய 2 பேரை திரு.பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
- காரைக்காலில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
- ஒரு சிலர் அதிகாலை முதலே பட்டாசு வெடிக்க துவங்கிவிட்டனர்.
புதுச்சேரி
தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டா டப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்க ப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில், தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தீபாவளி அன்று ஒரு சிலர் அதிகாலை முதலே பட்டாசு வெடிக்க துவங்கிவிட்டனர். இரவு வரை அரசின் நேரக்கட்டுபாட்டை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. அசம்பா விதங்கள் இல்லாமல் மக்கள் சந்தோசமாக பட்டாசு வெடித்தனர்.
போலீசாருக்கு வந்த புகாரின் பேரில், தீபாவளி அன்று, காரைக்கால் நெடுங்காட்டில் 5 பேரும், கோட்டுச்சேரியில் 6 பேரும், நிரவி மற்றும் திரு.பட்டின்பத்தில் தலா 4 பேரும், காரைக்கால் நகரில் 5 பேரும், திருநள்ளாறில் 6 பேரும் என 29 பேர் மீது அரசு அனுமதித்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்ய ப்பட்டு விசாரித்து வருகின்றனர். மேலும் தீபாவளிக்கு முதல் நாள் அனைத்து பகுதிகளிலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப ட்டது. மொத்தம் 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி அன்று, வெடித்த பட்டாசுகளில் சில, திருநள்ளாறு தேனூர் பகுதியில் வசிக்கும் மீனா என்பவர் கூரை வீட்டில் பட்டதில் வீடு தீக்கிறையானது. இந்த தீ விபத்தில், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து, திருநல்லாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புதுவை காலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க கல் கொட்டப்படுகிறது.
- கிழக்கு கடற்கரை சாலையில் 30 நிமிடத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க கல் கொட்டப்படுகிறது.
இந்த 2 மீனவ கிராமங்களுக்கு இடையில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு பிள்ளைச்சாவடி என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்துக்குள் கடல் நீர் உள் புகுந்து வருகிறது.
இங்கும் கல் கொட்ட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு மீனவர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று கடல் சீற்றம் காரணமாக 3 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
ஏற்கனவே இந்த பகுதியில் கடல் சீற்றம், கனமழை போன்ற காரணத்தினால் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இவற்றைத் தடுக்க கல் கொட்ட மீனவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததை கண்டித்து இன்று பிள்ளைச்சாவடி மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மாணவர்களும் பொதுமக்களும் தங்களது இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனிடையே கோட்டக்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 30 நிமிடத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
- புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது.
- மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
சூரிய கிரகணம் இன்று பிற்பகல் 2.28-க்கு தொடங்கி மாலை 6.30-க்கு முடிவடைகிறது. இதனால் நாடு முழுவதும் கோவில்கள் நடை மூடப்பட்டது.
புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது. கோவிலுக்குள் இருந்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற பக்தர்களை மாலையில் வருமாறு அறிவுறுத்தி கோவில் பாதுகாவலர்கள் அனுப்பினர்.
மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுவையில் உள்ள கோவில்களின் நடை மதியம் 12 மணிக்குள் மூடப்பட்டது.
- கப்பல் படையினர், படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
- 9 மீனவர்களை இந்திய கப்பல் படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில், வழக்கம் போல், கடந்த சில தினங்களுக்கு முன், 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இந்திய கப்பல் படையினர், படகை நிறுத்துமாறு எச் சரிக்கை விடுத்ததாகவும், நிறுத்தாத காரணத்தால், கப்பலில் இருந்த வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரவேல் என்கின்ற மீனவர் குண்டு காய ங்களுடன் மதுரை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படகில் இருந்த 9 மீனவர்களை இந்திய கப்பல் படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்து நாகை மருத்துவகல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கப்பல் படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சார்பில், காரைக்கால் துறைமுகம், காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவர்கள் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
- தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர-சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும், வரிந்துகட்டி வரும் துன்பங்கள் வரிசையாக நாம் வைக்கும் ஒளியில் மறைந்து ஓடவும்.
2 ஆண்டுகளுக்குப்பிறகு ஊசி பட்டாசு கொளுத்தி உவகையுடன் கொண்டாட வைத்து கொரோனா எனும் கொடிய நோயை ஒழித்த தடுப்பூசியை நம் நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்கு அர்பணித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நாம் வாங்கும் விளக்குகள், புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் பரிசுப்பொருள்கள் அனைத்தும் நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பாரதப் பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து நாம் வாங்கும் பொருட்கள் எளிமையான எளியோரின் கொண்டாட்டங்களாகவும் மாறி அனைவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்றும் தீபாவளியாக மலரட்டும்.
சுய சார்பான இந்தியாவை படைக்க ஒளி தரும் தீபாவளியாக இந்த தீபாவளி அமையட்டும். பட்டாசுகளை எப்போதும் போல் வெடித்து நம் பராம்பரிய தீபாவளி திருநாளை கொண்டாடி சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
தீபாவளி திருநாளன்று நம் பராம்பரிய தன்வந்திரி பிரசாதமாம் "தீபாவளி மருந்தான" திரிகடுகு சுக்கு, மிளகு, திப்பிலி உண்டு நம் உடல் நலம் காப்போம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
- காரைக்கால் திருநள்ளாறில் வங்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பதிவான மர்ம நபரின் அடையாளத்தை வைத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பச்சூர் சௌதா நகரில் வசித்து வருபவர் ஞானசேகரன் (வயது64). இவர் காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தொடர்ந்து, அதே வங்கியில் ஏ.டி.எம் மெஷின்களுக்கு சேனல் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்-ல் சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றார். பல முறை முயற்சித்தும் ஏ.டி.எம் மெஷினை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. வங்கி ஏ.டி.எம். மெஷினை உடைக்க முயன்றதும், ஹைதராபாத்தில் உள்ள ஏ.டி.எம். தலைமையகம், ஞானசேகரனின் மொபைலுக்கு ஏ.டி.எம். மெஷின்களின் உடைப்பு முயற்சி குறித்து தகவல் சென்றது. தொடர்ந்து ஞானசேகரன் ஏ.டி.எம். க்கு சென்று பார்த்த போது, மர்ம நபர் மெஷினை உடைத்து பணம் திருட முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஞானசேகரன் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். மிஷினை ஆயுதம் கொண்டு உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் ஏ.டி.எம்.மில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மர்ம நபரின் அடையாளத்தை வைத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திடமாக காரைக்கால் நகர் பகுதியில் சுற்றித் திறந்த வாலிபரை பிடித்து விசாரித்த பொழுது, அவர் பீகார் மாநிலத்தில் சேர்ந்த ராம்லால் முஸ்தா (வயது 26) என்பதும், பீகாரிலிருந்து கட்டுமான தொழிலுக்காக காரைக்கால் வந்து, வேலை சரியாக கிடைக்காததால், ஏ.டி.எம். மிஷினை உடைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பெயரில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- காரைக்காலில் 17 ஏ.டி.எம் மெஷி ன்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து வருகிறார்.
- ஞானசேகரன் காரைக்கால் நகர டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் பச்சூர் சவுதா நகரில் வசித்து வருபவர் ஞான சேகரன்(வயது64).இவர் காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தொடர்ந்து, அதே வங்கியில் ஏ.டி.எம் மெஷின்களுக்கு சேனல் மேலாளராக இருந்தது. காரைக்காலில் 17 ஏ.டி.எம் மெஷின்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து வருகிறார். இந்நிலையில், காரை க்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்-ல் மர்ம நபர் ஒருவர் கையில் இரும்பு ஆயுதம் கொண்டு உடைத்து பணம் திருட முயன்றுள்ளார். பல முறை முயற்சித்தும் ஏ.டி.எம் மெஷினை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வங்கி ஏ.டி.எம் மெஷினை உடைக்க முயன்றதும் ஞானசே கரனின் மொபைலுக்கு ஏ.டி.எம் மெஷின்களின் கண்காணிப்பு காமிரா காட்சிகள் வந்தது. அதன் அடிப்படையில் ஹைதராபாத் தலைமையகத்துக்கு ஞானசேகர் தகவல் அளித்தார். அதனை தொடர்ந்துஞானசேகரன் ஏ.டி.எம் க்கு சென்று பார்த்த பொழுது, எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசேகரன் காரைக்கால் நகர டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை ஆயுதம் கொண்டு உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- காரைக்காலில் நேரு மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகளுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்துவந்தது.
புதுச்சேரி:
காரைக்காலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நேரு மார்க்கெட், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அடுத்தடுத்து இடிந்து விழுந்ததால், வியாபாரிகளை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அதே இடத்தில், பழமை மாறாமல், புதிய நேரு மார்க்கெட் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட நேரு மார்க்கெட் திறப்பு விழா கண்டும், சுமார் ஓர் ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகளுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருந்துவந்தது. வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்த மாதம் புதிய நேரு மார்க்கெட் திறக்கப்பட்டு, 117 கடைகளில் 78 கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்படாத கடைகள் சிலவற்றை அக்கடைகளின் அருகில் உள்ள வியாபாரிகள் சிலர் பயன்படுத்தி வருவதாக, நகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் நேற்று நேரு மார்கெட்டுக்கு சென்று, வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.






