என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of drugs"

    அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், பான்மசாலா, போதை சிகரெட் உள்ளிட்ட ரூ.7 ஆயிரம் மதிப்பிலான 70 பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப்பொருட்களை விற்கப்ப டுவதாக, காரைக்கால் நகர காவல்நிலையத்திற்கு ரகசியத்தகவல் வந்தது.

    அதன்பேரில், சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, குறிப்பிட்ட பெட்டி க்கடையில் சோதனை செய்தனர். , பெட்டிக்க டையின் உள்ளே இருந்த கம்யூட்டர் யு.பிஎஸ் பெட்டி உள்ளே, அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், பான்மசாலா, போதை சிகரெட் உள்ளிட்ட ரூ.7 ஆயிரம் மதிப்பிலான 70 பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். . தொடர்ந்து, அக்டையை நடத்திய, காரைக்கோவில்பத்து அக்ரஹாரத்தைச்சேர்ந்த ராஜ்குமார்(வயது30) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ×