search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமெரிக்காவில்  உள்ள  பெருமாள் சிலைகளை  மீட்க கோரி  இந்து அறநிலைத்துறை போலீசில் புகார்
    X

    அமெரிக்காவில் உள்ள பெருமாள் சிலைகளை மீட்க கோரி இந்து அறநிலைத்துறை போலீசில் புகார்

    • விலை உயர்ந்த நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
    • வழக்கு பதிந்து திருடப்பட்ட சிலைகளை போலீசார் தேடிவந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே மேலகா சாக்குடி கிரா மத்தில், புதுச்சேரி இந்து அறநிலை த்துறைக்கு சொந்த மான நாகநா தசுவாமி தேவஸ்தானத்தைச்சேர்ந்த வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இந்த பெருமாள் கோவிலில், கடந்த 1963-ம் ஆண்டு நடைபெற்ற திருட்டின் போது, விலை உயர்ந்த நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து திருடப்பட்ட சிலைகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள 2 சிலைகளையும் மீட்டுதருமாறு, கோவில் நிர்வாகத்தினர், புதுச்சேரி இந்து அறநிலைத்துறை மற்றும் காவல்துறை தலைமை யகத்திற்கு புகார் அளித்தனர். தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி, காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் லெனி ன்பாரதி, செந்தில்குமார், பிரவீன்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம், சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை, இந்து அறநிலை யத்துறைக்கும், காவல்துறை தலைமை யகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×