search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் கீழகாசாக்குடியில்  வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன்  நகை, பணம் கொள்ளை
    X

    காரைக்கால் கீழகாசாக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, பணம் கொள்ளை

    • மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார்.
    • மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வருபவர் முத்துசின்னசாமி(வயது75). இவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். காரைக்காலில் உள்ள தனது வீட்டில், மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார். மருத்துவமனையில் மனைவிக்கான சிகிச்சை முடிந்தநிலையில், வீடு திரும்பிய முத்துசின்னசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    பின்னர், முத்துசின்னசாமி கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் அர்ஜுனை வரவழைத்து ஓடவிட்டனர். நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வீடு, தெரு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் மேற்பார்வையில், மர்ம நபர் குறித்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×