என் மலர்
புதுச்சேரி
- இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார்..
- அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.,
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் சுனாமி நகரைச்சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018-ல் நாகப்பட்டினம் வெள்ளப்பள்ளத்தைச்சேர்ந்த ஜெயபால் மகள் அபிநயாவை (28) இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளது. அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நாகப்பட்டினம் செல்வதாக கூறி, 2 குழந்தைகளோடு வெளியில் சென்ற அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து, சவுந்தரராஜ் அபிநயா வீட்டில் கேட்டபோது இங்கு வரவில்லையென கூறியுள்ளனர். கடந்த 2 வாரமாக பல்வேறு உறவினர்கள் வீட்டில் தேடியும் அபிநயா கிடைக்காதததால், சவுந்தரராஜ், காரைக்கால் கோட்டுச்சேரி செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிநயா மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.
- அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
- மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:
செயற்கைக்கோளின் செயல்பாடு மற்றும் அதை விண்ணில் ஏவுவது குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்க பயிற்சியை அப்துல்கலாம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.
புதுவை அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கணினி மற்றும் எல்.இ.டி. ஸ்கிரீன் மூலம் மாணவர்களுக்கு விளக்கம் செய்யப்பட்டு கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆசிரியர்களும் மாணவியரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மின் கசிவு, தீ விபத்தையும் தடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. மின்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன், அதிகாரிகள் நேரில் வந்து மின் இணைப்பை சரி செய்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது.
- கலால்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதிய மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
புதுவை சாமிபிள்ளை தோட்டத்தில் புதிதாக மதுக்கடை திறக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டால் தினமும் மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பதால் புதிதாக மதுக்கடை திறக்ககூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் அரசு இதில் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் இன்று கலால்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
கலால்துறை அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- கவர்னர் உத்தரவின்படி, புதுவை மின்துறை பொது சேவை நிறுவனமாக தொடர்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழுவை அமைத்து போராட்டம் நடத்தினர். புதுவை மின்துறையை தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
மின்துறை முன்பு போராட்டத்தை தடுக்கும் வகையில் மின்துறை பொது சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு மின்துறை முன்பு போராட்டம் நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தடை உத்தரவு மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை கவர்னர் உத்தரவின்படி, புதுவை மின்துறை பொது சேவை நிறுவனமாக தொடர்கிறது. இந்த அறிவிப்பு 19.1.23 முதல் 18.7.2023 வரை அமலில் இருக்கும் என மின்துறை சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ளார். இதனால் புதுவை மின்துறை முன்பு போராட்டம் நடத்த 6 மாதத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
- விதவை பெண் தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படி கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை மாதத்தின் முதல்நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து அலுவலகம் வர வேண்டும்.
மாதந்தோறும் 15-ந் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அதில் உயரதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இம்மாதம் 15-ந் தேதியான இன்று புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கவர்னர் மாளிகையில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கல்மேடுபட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி அஞ்சலை(67). கவர்னரிடம் மனு அளித்தார். அதில், தனது வீட்டையும், சுற்றியுள்ள நிலத்தையும் 2-வது மகள் அபகரித்துவிட்டதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதேபோல கோர்க்காடை சேர்ந்த விதவை பெண், தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைப்பதாகவும், கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டதால், அரசு பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும். தனக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை வாங்கித்தரும்படியும் கோரிக்கை வைத்தார்.
இதேபோல் பெரியவர் ஒருவர் தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் மிரட்டுவதாக பென்டிரைவ்வில் ஆதாரத்துடன் புகார் செய்தார்.
கவர்னர் மாளிகையில் சந்தித்த பலர் நிலமோசடி தொடர்பாகவே புகார் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைத்தார்.
புதுவை தலைமை செயலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர்.
- அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இதன் மூலம் வரும் வருமானம் மற்றும் கோவில் உண்டியல்கள் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கோவில் தணிக்கை பிரிவு செயல்பட்டு வருகிறது.
கோவில்கள் தணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பித்து தகவல் கேட்டபோது 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இதுதொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர். மணக்குள விநாயகர் கோவில் தங்க பொருட்கள், வெள்ளி பொருட்கள், கோவில் சிலைகள், வருவாய் உள்ளிட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
- அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் சந்தை புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாவாடை ராயன் (வயது 27). இவரது நண்பர் வேல்முருகன் (30). இவர் வானூர் பகுதியை சேர்ந்தவர்.இவர்கள் 2 பேரும் நேற்று இரவு திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். வானூர் அருகே தென்கோடிபாக்கம் மெயின்ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 ேபரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடைராயன் இறந்தார். வேல்முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.
- மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பவுன்டேஷன், யூனிட்டி கட்டிடத்தில் இன்று சர்வதேச ஆன்மிக மாநாடு தொடக்க விழா நடந்தது.
ஆரோவில் செயலர் ஜெயந்திரவி வரவேற்றார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுவை கவர்னர் தமிழிசை, ஆரோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆரோவில் வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் இளைஞர்கள் அதிகம். இது மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்று. இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி சொல்ல வேண்டும். தியானம் செய்வதால் மனது அமைதி பெறுகிறது. நம்முடைய உணர்வுகள் பண்படுகிறது. அதிக ஆற்றலோடு, ஆக்கப் பூர்வமாக செயல்பட உதவுகிறது. நம்முடைய நினைவாற்றலை, கவனத் திறனை பலப்படுத்துகிறது. இந்த உண்மையை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில், தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். புதுவைக்கு வேதபுரி என்று பெயர் உண்டு. இது ஆன்மீக பூமி.
இங்கு 30 முதல் 40 சித்தர் பீடங்கள் இருக்கின்றன. ஆரோவில் நகரமும் இந்த பகுதியில்தான் இருக்கிறது. இங்கிருந்து, மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வை, ஆன்மீக செய்தியை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்றார்
- அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் தலத்தெருவைச்சேர்ந்த விஸ்னுபிரியன் (வயது21),. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்றார். இதுகுறித்து நிரவி போலீசார் விஸ்னுபிரியனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டுக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். உடனே போலீசாரை கண்டவுடன் வேனில் வந்தவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர்.
உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து வாகனத்தில் சோதனை செய்தனர். சோதனையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதுவை மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக புதுவை மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார்.
- நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச்சேர்ந்தவர் லட்சுமணன். இவர், கோட்டுச்சேரி ஆர்த்தி நகரில் வசிக்கும் தனது தம்பி முருகராஜை, வீட்டு வாசலில் சந்தித்து பேசிகொண்டிருந்தார்.அப்போது , எதிர்வீட்டில் வசிக்கும் வாலிபர் தட்சிணாமூர்த்தி என்பவர், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என இருவரும் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன் என கூறினார்.. பின்னர். அண்ணன், தம்பி இருவர் வீட்டினுள் சென்றபிறகு, தட்சிணாமூர்த்தி முருகராஜ் வீட்டின் மீது கற்களை வீசினார்
இதனை வெளியே வந்த அண்ணன், தம்பி இருவரும் ஏன் வீட்டு மீது கல்லை வீசினாய் என கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.இது குறித்து, லட்சுமணன், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.
- இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.
- அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதி, ஆயிஷா காலணியை சேர்ந்தவர் தஸ்லிமா. இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.தஸ்லிமா ஏற்கெனவே குடியிருந்த பைபாஸ் சாலை தீன்ஸ்பார்க்கில் வசிக்கும் உசேன்(வயது21) என்பவர், அடிக்கடி மது அருந்திவிட்டு, ஆயிஷா காலணி அருகே வந்து, தஸ்லிமாவிடம், உங்கள் மூத்த மகளை காதலிப்பதாக கூறி ஆபசமாக திட்டிவந்துள்ளார். இதனால் பயந்த தஸ்லிமா, தனது மூத்த மகளை, மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.மேலும் ஆயிஷா காலணியில் இருந்தால் உசேன்தொடர்ந்து சண்டை போடுவார் என பயந்து, மெய்தீன்பள்ளிவாசலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தஸ்லிமா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உசேன், நேற்று முன்தினம் தஸ்லிமா செல்போனுக்கு போன் செய்துள்ளார். அதை தஸ்லீமா எடுக்க மறுத்ததால், அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தஸ்லீமா உஷேனிடம் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். மீறி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, தஸ்லிமா காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலிசார் வழக்கு பதிவுசெய்து, உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






