என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், 2சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வருகை தந்து , பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். காலை 9மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.

    • பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே தனது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • பல இடங்களில் கடந்த சில நாட்களாக தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பச்சூரைச்சேர்ந்தவர் தியாகு. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் இவர், கடந்த 12-ந் தேதி, பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே தனது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார். சிறிது நேரம் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள் இல்லை. பல இடங்களில் கடந்த சில நாட்களாக தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிசென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் நிலைய போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு ஒரு சிலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், காரைக்கால் சமத்துவபுரம் பகுதியில், இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சமத்துவபுரம் பகுதிக்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும், இளைஞர்கள் தப்பியோடினர். தொ டர்ந்து, அங்குள்ளோரிடம் விசாரணை நடத்தி தப்பிசென்ற தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவைச்சேர்ந்த ரவிராஜ்(வயது19), வில்பர்ராஜ்(23), ரஞ்சித்(23) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில், கூலி அதே இடத்தில் தலை நசுங்கி பலியானார்.
    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதே இடத்தில் அவர் பஸ்சின் இடதுபுற பின்புற சக்கரத்தில் தலை நசுங்கி பலியானார்.

    புதுச்சேரி:

    காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில், கூலி அதே இடத்தில் தலை நசுங்கி பலியானார்.     காரைக்காலை அடுத்த நிரவி கீழமனை கிராமத்தைச்சேர்ந்தவர் தண்டாயுதபாணி(வயது36). இவர் கட்டிடவேலையில் சித்தாளாக வேலை செய்து வந்தார். இவருக்கு சந்தனமேரி என்ற மனைவியும், தஷ்வந்த் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். தண்டாயுதபாணி நேற்று முன்தினம் வழக்கம் போல், நிரவி அம்மாள் சத்திரம் அருகே கட்டும் கட்டிடத்தில் வேலை செய்துவிட்டு, சம்பளம் வாங்குவதற்காக, காரைக்காலுக்கு மோட்டார் சைக்கிளில் இரவு 8 மணி வந்தார்.காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், அம்பாள் சத்திரம் தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது, இவருக்கு பின்னால், அதிவேகமாக வந்த தனியார் பஸ் தண்டாயுதபாணி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதே இடத்தில் அவர் பஸ்சின் இடதுபுற பின்புற சக்கரத்தில் தலை நசுங்கி பலியானார்.

    இது குறித்து, தண்டாயுதபாணியின் மனைவி சந்தனமேரி, திருபட்டினம் போக்குவரத்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில், பஸ் டிரைவர் நாகை மாவட்டம் நாகூரைச்சேர்ந்த ஷேக்தாவூது(44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.
    • ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் போற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "சின்னையா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளை மரியாதையோடு நினைவு கூர்கிறேன்.

    விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்ததிலும், ஊடகத்துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கை அளித்ததிலும், ஆன்மிகத் துறையில் சேவையாற்றியதிலும் நிகரற்றவராக அவர் போற்றப்பட்டார்.

    அவரது பெருமைகளை இன்றைய நாளில் நாம் நினைவு கூருவோம். அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது
    • போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவுஇதுகுறித்து சிறுமியின் தந்தை நெருங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புசெல்வனை தேடி வந்தனர்.      இந்நிலையில், கடந்த 13-ந்தேதி அன்புசெல்வன் வீட்டில் பதுங்கி இருப்பதாக நெடுங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தானநிலையில் இருந்த அன்பு செல்வனை போலீசார் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 4 நாட்கள் சிகிச்சையில் இருந்த அன்பு செல்வன் உடல்நிலை சரியானதை அடுத்து போலீசார் போக்சோ வழக்கில் அன்புசெல்வனை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
    • விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவர் மற்றொருவரின் மனைவி சங்கீதா(24)வை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    பழங்குடி நாடோடிகளான குமரேசன் தம்பதி சமீபத்தில் புதுவையை அடுத்த கிருமாம்பாக்கம் புதுக்குப்பத்துக்கு வந்தனர். புதுக்குப்பம் குளக்கரையில் இவர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    நேற்று முன்தினம் இரவு குழந்தையோடு சங்கீதா அங்கு படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினர்.

    அப்போது புதுக்குப்பம் சுடுகாடு அருகே கடற்கரையில் பெண் சிசு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அங்கு வந்த விசாரித்தபோது, அது சங்கீதாவின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை கண்டு சங்கீதா, குமரேசன் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த மர்ம ஆசாமிகள் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசில் தெரிவித்தனர்.

    சங்கீதாவின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியே அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.

    இதுகுறித்து சங்கீதா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    குழந்தை பிறந்த பிறகு என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு, அடித்து துன்புறுத்தினார். குழந்தை எனக்கு பிறந்ததா? எனக்கேட்டு தகராறு செய்தார். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததால் வளர்ப்பதற்கு சிரமப்பட்டேன். கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.

    நேற்று அதிகாலை எல்லோரும் அசந்து தூங்கும்நேரத்தில் குழந்தையை புதுக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுசென்றேன். அங்கு மணலில் குழந்தை தலையை அழுத்தி கொலை செய்து புதைத்துவிட்டு வந்துவிட்டேன். காலையில் ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என குமரேசன் தெரிவித்துள்ளார்.
    • பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது32). நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர் சென்னை, புதுவை பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்தார்.

    இவருக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2-வதாக திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமானார்.

    இந்நிலையில் குமரேசன் சங்கீதாவை அழைத்துக்கொண்டு புதுவை கிருமாம்பாக்கத்துக்கு வந்தனர். அங்குள்ள சமுதாய கூடம் அருகே உள்ள காலி இடத்தில் வசித்தனர்.

    பின்னர் புதுக்குப்பம் குளக்கரை அருகே தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

    நேற்று இரவு குளக்கரையில் குமரேசன், சங்கீதா இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு தூங்கினர். இன்று காலை கண்விழித்த போது குழந்தையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பகுதியில் குழந்தையை தேடினர்.

    இதற்கிடையே புதுக்குப்பம் கடற்கரையில் இன்று காலை ஒரு குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது.

    அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன், ஏட்டு பிரீமியர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த குமரேசன் சங்கீதா தம்பதியினர் அங்கு வந்தனர். அப்போது மணலில் புதைக்கப்பட்டு இருந்தது அவர்களது குழந்தைதான் என்பது தெரியவந்தது. அவர்கள் அழுது துடித்தனர். போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    நேற்று இரவு குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    அப்பகுதியில் மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என குமரேசன் தெரிவித்துள்ளார்.

    பச்சிளம் குழந்தையை கடற்கரை மணலில் உயிரோடு புதைத்து கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் குமரேசன், சங்கீதா தம்பதியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
    • பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் உள்ள 2-ம் கட்ட நகர துறைமுகங்களில் சரக்கு கப்பல் சேவை மற்றும் பயணிகள் கப்பல் சேவையை அதிகப்படுத்தி துறைமுகங்களின் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை உப்பளம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 300 பயணிகள் பயணிக்கும் ஏ.சி. வசதியுடன் கூடிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக உப்பளம் துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் இதற்கான அலுவலகம் செயல்பட கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு சுங்கத்துறை அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது.

    புதுவையில் இருந்து செல்லும் கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதனால் தமிழக பகுதியை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.

    இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் சேவையால் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு அதிகளவு வருவாயும், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.

    • காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது
    • கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தருமபுரத்தில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆண்டுத்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியை, ஆலய பங்குத்தந்தை மந்திரித்தார். தொடர்ந்து, கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடை ந்தவுடன், பெங்களுரு புனித பேதுரு பாப்பிறை குருமடம் பேராசிரியர் அலெக்சாண்டர் தலை மையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  விழா முடியும் வரை, தினசரி மாலை சிறிய தேர்பவனியும், திருப்பலியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்சியாக, ஏப்ரல் 21-ந் தேதி இரவு, காரைக்கால் குரும்பகரம் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் 3 பெரிய தேர்பவனியும், ஏப்ரல் 22-ந் தேதி இரவு, நீலகிரியைச்சேர்ந்த பங்குகுரு செபஸ்தியான் தலைமையில், சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு 5 தேர்பவனியும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 23-ந் தேதி காலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    • நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது.
    • சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சண்முகாநகர் ராமசிங் வீதியில் அரசு கழிவறை கட்டிடம் உள்ளது.

    இதன் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று ஏராளமான தெரு நாய்கள் உருண்டையான பொருள் ஒன்றை கடித்து குதறி தின்றன.

    அப்போது நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு ஒன்றுக்கொன்று குரைத்தன.

    இதனை அப்பகுதியில் மருந்து கடை வைத்துள்ள விக்கி என்பவர் பார்த்தார். நாய்கள் கடித்து கொண்டிருந்தது குழந்தையின் தலை போல இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் நாய்களை விரட்டி அடித்தனர்.

    அப்போதுதான் நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் தலையை மீட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் உள்ளதா? என தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தலை அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

    அந்த பகுதியில் குழந்தை ஏதாவது கொலை செய்து வீசப்பட்டதா? அல்லது சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வருகிற 16-ந் தேதி வரை சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • சித்திரை கடற்கரை திருவிழாவின் தொடக்கவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை மாநிலத்தில் பல்வேறு கடற்கரைகள், இடங்களை தேர்வு செய்து சுற்றுலா தலங்களாக அழகுபடுத்தி உள்ளது.

    கோடை விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா யணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களின் வருகையை அதிகரிக்கவும் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட்டது.

    இதேபோல இந்த ஆண்டும் வருகிற 16-ந் தேதி வரை சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் சித்திரை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி திடல், பாண்டி மெரீனா, அரியாங்குப்பம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, சீகல்ஸ், பாரதி பூங்கா, ஊசுடு படகு குழாம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், பீச் வாலிபால் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    சித்திரை கடற்கரை திருவிழாவின் தொடக்கவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சித்திரை திருவிழாவில் முதல் நாளான இன்று புதுவை கடற்கரைகளில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடந்தது. இசையுடன் கூடிய நடனம், இசைக்கச்சேரிகள், பீச் வாலிபால், பேஸ் பெயிண்டிங், ரெயின் நடனம், குழு விளையாட்டுகள், நீர் விளையாட்டுக்கள், நீச்சல் போன்றவை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடற்கரைகளில் கைவினை பொருட்கள் அதிக அளவில் விறபனைக்கு வைத்திருந்தனர். தொடர் விடுமுறையால் புதுவையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ×