என் மலர்
கேரளா
- 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அச்சுதானந்தன் கேரள மாநில முதல்வராக இருந்தார்.
- அச்சுதானந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் ஜூலை 21 அன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.
மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
- அச்சுதானந்தன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- பல ஆண்டுகளை பொது சேவைக்காகவும், கேரளத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தார்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் தனது வாழ்நாளில் பல ஆண்டுகளை பொது சேவைக்காகவும், கேரளத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தார்.
நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தபோது எங்கள் தொடர்புகளை நான் நினைவு கூர்கிறேன். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர்.
- 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர்.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.
- மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி மனைவி அதுல்யாவுடன் தகராறு செய்துள்ளார்.
- சதீஷ், சந்தேகத்தின் பேரில் அதுல்யாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் கொல்லத்தை சேர்ந்த விபஞ்சிகா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷார்ஜாவில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கேரள இளம்பெண் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
குடும்ப வன்முறை காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கொல்லம் கோழிவிலா பகுதியை சேர்ந்தவர் அதுல்யா (வயது 30). இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துபாயில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக சதீஷ் பணியாற்றியதால், மனைவியுடன் ஷார்ஜாவில் வசித்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி மனைவி அதுல்யாவுடன் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் தான் அதுல்யா, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர், தனது கணவரின் உடல் ரீதியான தாக்குதல்கள் குறித்து தனது சகோதரிக்கு போட்டோ மற்றும் வீடியோ அனுப்பி உள்ளார்.
இதனை வைத்து அதுல்யாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் திருமணமான 6 மாதத்தில் இருந்தே அதுல்யா பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளனர். சதீஷ், சந்தேகத்தின் பேரில் அதுல்யாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கொடுத்துள்ள வீடியோ ஆதாரத்தில் சதீஷ், நாற்காலியை தூக்கி அடிப்பது போன்ற காட்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகள் உள்ளன. அதன் அடிப்படையில் கொல்லம் சவர தேக்கும்பாகம் போலீசார், சதீஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சதீஷ்-அதுல்யா தம்பதியரின் மகள் ஆராதிகா (10) தற்போது கொல்லத்தில் உள்ள தனது தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மலப்புரம் மாவட்டத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கேரளாவின் தெற்கு பகுதிகளுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு பரவ வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வைரஸ் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் சமீப காலமாக நிபா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு பிளஸ்-2 மாணவி உள்ளிட்ட 2 பேர் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பலியானதை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது. இதில் பாலக்காடு, மலப்புரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தான் நிபா பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது.
பாலக்காடு மாவட்டத்தில் 420 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 96 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 63 பேரும், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என 581 பேர் நிபா தொடர்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 29 பேர் அதிக ஆபத்திலும், 78 பேர் ஆபத்தான நிலையிலும் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்த மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், தகுந்த சிகிச்சை அளிக்கவும், கட்டுப்பாடு மண்டலங்கள் அறிவிப்பது குறித்து முடிவு செய்ய மருத்துவ வாரியத்திற்கு அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் கேரளாவின் தெற்கு பகுதிகளுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு பரவ வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வவ்வால்கள் மூலமே இந்த நோய் பரவுவதாக கூறப்படும் நிலையில், நோய் தொற்றின் மூலத்தை கண்டறிவது மிகவும் சவலாலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசியலில் நான் கண்ட மிகப்பெரிய மனிதாபிமானி உம்மன்சாண்டி.
- உம்மன்சாண்டி எனது குரு. குரு என்றால் செயலின் மூலம் வழி காட்டுபவர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி இயற்கை எய்தினார். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்துகொண்டார்.
அவர் உம்மன்சாண்டியின் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் ராகுல்காந்தி பேசியதாவது:-
அரசியலில் நான் கண்ட மிகப்பெரிய மனிதாபிமானி உம்மன்சாண்டி. ஜோடா யாத்திரையின் போது மருத்துவர்கள் உம்மன் சாண்டியிடம் நடக்க வேண்டாம் என்று கூறியிருந்தனர். ஆனால் அதை கேட்காமல் அவர் பயணத்தை தொடர்ந்தார்.
உம்மன்சாண்டி வெறும் ஒரு நபர் மட்டுமல்ல. அவர் கேரள அரசியலின் உருவகம். கேரளாவில் இது போன்ற தனி நபர்களின் பாரம்பரியம் உள்ளது. உம்மன்சாண்டி போன்ற பலரை வளர்ப்பதே என்னுடைய முயற்சி. உம்மன்சாண்டி மீது ஒரு குற்றவியல் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்திலும் அவர் யாரையும் குறை கூறவில்லை.
உம்மன்சாண்டி எனது குரு. குரு என்றால் செயலின் மூலம் வழி காட்டுபவர். எனக்கு மட்டுமல்ல, கேரளாவில் பலருக்கும் அவர் தான் குரு. அவர் தனது செயலின் மூலம் வழிகாட்டினார். உம்மன்சாண்டியின் பாதையை பின்பற்று பவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
- வீட்டுக்கு திரும்பிவந்த அந்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
- சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அந்த சிறுமியை சம்பவத்தன்று 2 வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
பின்பு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்பு அந்த வாலிபர்கள் இருவரும் சிறுமியை அந்த இடத்திலேயே தவிக்க விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
இதையடுத்து தனது வீட்டுக்கு திரும்பிவந்த அந்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மானந்தவாடி பகுதியை சேர்ந்த ஆஷிக் மற்றும் ஜெயராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மது கொடுத்து பள்ளி மாணவியை சீரழித்த 2 பேரின் மீதும் போக்சோ மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பழங்குடியின சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வயநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
- பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (புதன் கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.
நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.
நாளை (வியாழக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.
- தங்களுக்கு விவாகரத்தான காரணம் பற்றி மற்ற பெண் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
அசாம் மாநிலத்தில் விவாகரத்து பெற்ற ஆண் ஒருவர் பாலில் குளித்து, கொண்டாடும் வீடியோ வைரலான அதே சமயத்தில், கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்கள், குழுவாக சேர்ந்து சுற்றுலா சென்று விவாகரத்தை கொண்டாடி உள்ளனர்.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அபி, விவாகரத்து பெற்ற பெண்களுக்கான குழு ஒன்றை உருவாக்கி, சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். மாநிலம் முழுவதிலும் இருந்து பல இளம்பெண்கள், இதற்கு சம்மதம் தெரிவித்து சுற்றுலாவில் பங்கு பெற்றனர்.
அவர்கள் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். தங்களுக்கு விவாகரத்தான காரணம் பற்றி மற்ற பெண் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
விவாகரத்தான பெண்களுக்கு வேடிக்கை பயணமாகவும் மற்றும் புதிய நம்பிக்கை, உறவுகளை உருவாக்கும் பயணமாகவும் இது அமைந்ததாக அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அவர்கள் கொண்டாடும் வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
- 38 பேர் அதிக ஆபத்துள்ள கண்காணிப்பிலும், 133 பேர் அதிக ஆபத்துள்ளவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நண்பர்கள், உறவினர்களை பார்ப்பதை குறைக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் கடந்த சில மாதங்களாக அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்ததில் 609 பேர் நிபா தொடர்பு பட்டியலில் இருப்பது தெரியவந்தது. இதில் 38 பேர் அதிக ஆபத்துள்ள கண்காணிப்பிலும், 133 பேர் அதிக ஆபத்துள்ளவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மலப்புரத்தில் 207 பேரும், பாலக்காட்டில் 286 பேரும், கோழிக்கோட்டில் 114 பேரும், எர்ணாகுளத்தில் 2 பேரும் நிபா தொடர்பு பட்டியலில் அடங்குவார்கள். இந்த பகுதிகளில் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் அவர்கள், தேவையற்ற மருத்துவமனை வருகைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நண்பர்கள், உறவினர்களை பார்ப்பதை குறைக்க வேண்டும், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், நோயாளிகள் அவர்களது உறவினர்கள் எல்லா நேரங்களிலும் முககவசம் அணியவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- 15 மற்றும் 16-ந் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18-ந் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (14-ந் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 16-ந் தேதி வரை கேரள கடற்கரை முழுவதும் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் இந்த காலத்தில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது
- கேரளா உயர்கல்வி அமைச்சர் பிந்து முன்னிலையில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
கேரளாவில் அரசு நடத்தும் முதியோர் நல காப்பகத்தில் வசித்து வரும் விஜயராகவன் (79), சுலோச்சனா (75) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலரவே. கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்களின் திருமணக் கனவும் நிறைவேறியது
கேரளா உயர்கல்வி அமைச்சர் பிந்து, நகர மேயர் எம்.கே. வர்கீஸ் முன்னிலையில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த அழகான தருணத்திற்கு சாட்சியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று அமைச்சர் பிந்து தெரிவித்தார்.






