என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- தோடா மாவட்டத்தில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
- இன்று அதிகாலை முதல் நான்கு முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மலைப்பகுதி மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்த்வாரில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இரண்டு பள்ளிக் குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதிகளில் மீண்டும் அடுத்தடுத்து நான்கு முறை நில அதிர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நிலஅதிர்வு ஏற்பட்ட இடங்கள்
1. இன்று காலை 8.29 மணியளவில் கிஷ்த்வாரில் 3.3 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது
2. தோடாவில் 7.56 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக நிலஅதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
3. 2.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் தோடா மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது
4. ரியாசி மாவட்டம் கிழக்கு கத்ராவில் இருநது 74 கி.மீட்டர் தொலைவில் 2.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேற்று 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இன்று அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுபோன்று சிறிய சிறய அதிர்வுகள் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
- சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல்.
- இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இரண்டு உள்ளூர் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பஞ்சாபைச் சேர்ந்த மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. அவர்கள் தர்ன் தரனைச் சேர்ந்த ஜக்தீப் சிங் (21), சதீந்தர்பால் சிங் மற்றும் அமிர்தசரஸைச் சேர்ந்த சன்னி குமார் (22) என அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையின்போது இரண்டு இளைஞர்கள் மீது மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக சம்பா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பெனம் தோஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர், ரங்கனூர் பேருந்து நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராம்கர் செக்டரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கடத்தல்காரர்களில் ஒருவரும் காயமடைந்தனர்.
இவர்களுக்கு உள்ளூர் மருத்துவ வசதியில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் இருந்து, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோகிராம் ஹெராயின், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ரவுண்டுகள், ₹ 93,200 மதிப்புள்ள பணம் மற்றும் நான்கு விலையுயர்ந்த மொபைல் போன்கள் பறிமுதுல் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.
- ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.
இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.
ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.
இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.
இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மாலை இந்த கோவிலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது.
- ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.
- ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நடந்துள்ளது.
திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.
இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.
ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.
இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.
இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது.
- பல ஆண்டுகளாக மோசமாக இருந்த சாலைகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
- தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால்தான் ஜனநாயகம் வாழும்.
ஸ்ரீநகர் :
சமீபத்தில், காஷ்மீரில் ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில், நேற்று ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ஜி-20 நிகழ்ச்சி, காஷ்மீருக்கு பலன் அளித்துள்ளதா? என்று கேட்டதற்கு பரூக் அப்துல்லா கூறியதாவது:-
ஆமாம். பல ஆண்டுகளாக மோசமாக இருந்த சாலைகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. சுவருக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் எரிகின்றன. எனவே, பலன் கிடைத்துள்ளது.
ஜி-20 நிகழ்ச்சியில் பங்கேற்ற நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்களா என்பது கேள்விக்குறி. காஷ்மீர் நிலைமை மேம்படும் வரை இது நடக்கப்போவதில்லை.
காஷ்மீர் நிலைமை மேம்பட வேண்டுமென்றால், இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீரின் எதிர்காலத்துக்கு தீர்வுகாண வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளால்தான் ஜனநாயகம் வாழும். ஒரு கவர்னரும், ஆலோசகரும் சேர்ந்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் நிர்வகிக்க முடியாது.
எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் அவரவர் தொகுதியை கவனித்துக்கொள்வார்கள்.
5 ஆண்டுகளுக்கு ஒருதடவை அவர்கள் மக்களை சந்திக்க வேண்டி இருப்பதால், அவர்கள் நல்லது செய்யாவிட்டால் ஓட்டு கிடைக்காது. எனவே, தேர்தல் நடத்துவது அவசியம். எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஒடிசா ரெயில் விபத்து, உலகின் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாகும். அது எப்படி நடந்தது, அதற்கு பொறுப்பு யார் என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம்.
- என்கவுன்டரை அடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர், பாதுகாபு்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர்.
இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், தீபுவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர்.
- கொலையாளிகளை விரைவில் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்து மாறு போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபு. இவர் அனந்த்நாக் மாவட்டம் ஜங்லாத் மண்டி பகுதியில் நடந்த சர்க்கசில் வேலை பார்த்து வந்தார். அங்கு சர்க்கஸ்காரர்கள் முகாம் அமைத்து தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் தீபு நேற்று இரவு பால் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், தீபுவை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர்.
தீபு உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்தது. அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலைக்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கொலையாளிகளை விரைவில் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்து மாறு போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, "தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக மற்றொரு இலக்கு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியால் வேதனை அடைந்தேன். நேர்மையாக சம்பாதித்து சர்க்கசில் பணியாற்றிய தீபு கொல்லப்பட்டது அருவருப்பானது. இந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஜாகர் கோட்லி அருகில் விபத்தில் சிக்கியது.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜம்முவின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்களில் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அம்ரித்சரில் இருந்து கிளம்பிய பேருந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜாகர் கோட்லி எனும் இடத்தில் விபத்தில் சிக்கியது. இங்கிருந்து வைஷ்ணவ தேவி கோவில் இருக்கும் காத்ரா 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. வைஷ்ணவ தேவி பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கான ஆரம்ப பகுதி ஆகும்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, காவல் துறை மற்றும் இதர மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதோடு விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
"பத்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். பேருந்து அம்ரித்சரில் இருந்து கிளம்பி காத்ராவுக்கு சென்று கொண்டிருந்த போது காஜர் கோட்லி அருகே பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். 12 பேர் உள்ளூர் பொது சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," என்று ஜம்முவின் துணை ஆணையர் அவ்னி லவசா தெரிவித்துள்ளார்.
- அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் சர்க்கஸ் கலைஞர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்க்கஸ் கலைஞர் தீபு என்பவர் அனந்த்நாக்கில் உள்ள கேளிக்கை பூங்காவில் தனியார் சர்க்கஸ் மேளாவில் வேலை பார்த்து வந்தார்.
உதம்பூரை சேர்ந்த தீபு நேற்று மாலை அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.
இதையடுத்து, தீபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
- இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ஸ்வார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டியது. இந்த மழைக்கு அஜனாபுத்தூர் என்ற கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த பப்பு குமார், சாஜன்குமார், ராஜேஸ்குமார் ஆகிய 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் 3 பேருக்கும் பிறவியிலேயே கண் பார்வை தெரியாது.
இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி 3 சகோதரர்களின் உடல்களை மீட்டனர். அவர்களது குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.
- பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு காஷ்மீரை சேர்ந்த சிலர் நிதி உதவி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.
- சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில் சீன கையெறி குண்டு இருந்தது தெரிய வந்தது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு காஷ்மீரை சேர்ந்த சிலர் நிதி உதவி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் அத்து மீறி நுழையாமல் இருக்க எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கிஷ்ஸ்வார் மாவட்டம் சிரஜ் பகுதியில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில் சீன கையெறி குண்டு இருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவனது பெயர் முகமது யூசுப் சவுகான் என்பதும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தங்கள் பகுதியில் யாராவது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பற்றி உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது.
- மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பலத்த காற்று வீசியதால் தால் ஏரியில் பயணத்தில் இருந்த ஷிகாரா எனப்படும் மரக்கட்டையால் ஆன படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்தானது. இதில் பயணம் செய்த பயணிகளும் ஏரியில் கவிழ்ந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், ஏரியில் தத்தளித்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி மன்ஷா சிங் கூறுகையில், "ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது. மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றார்.
மேலும், மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






