search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜம்முவில் புதியதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்
    X

    ஜம்முவில் புதியதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்

    • ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.
    • ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நடந்துள்ளது.

    திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.

    ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.

    இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.

    இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது.

    Next Story
    ×