என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனவுடன் நிலைமை மாறிவிட்டது.
- வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் மரியாதை அதிகரித்துள்ளது.
ஜம்மு :
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் உள்ள ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:-
முன்பெல்லாம் சர்வதேச அமைப்புகளில் இந்தியா ஏதாவது சொன்னால், அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. ஆனால், 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனவுடன் நிலைமை மாறிவிட்டது.
இப்போது, சர்வதேச அமைப்புகளில் இந்தியா பேசுவதை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையால் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவமும், அந்தஸ்தும் உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அப்படி இல்லை.
வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் மரியாதை அதிகரித்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமர், மோடியை 'பாஸ்' என்று சொல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடியிடம் 'ஆட்டோகிராப்' கேட்கும் அளவுக்கு அவர் அவ்வளவு பிரபலமானவர் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காஷ்மீரை 3 குடும்பங்கள் சேர்ந்து பல்லாண்டுகள் ஆட்சி செய்தன.
- மோடி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் மீதான பிடி இறுகியது.
ஜம்மு :
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் பாகவதி நகர் பகுதியில், பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி நினைவுதினத்தையொட்டி, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
பாட்னாவில் 'புகைப்பட படப்பிடிப்பு' நடந்து வருகிறது. பிரதமர் மோடியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து வருகின்றன. நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். உங்களால் ஒற்றுமையாக இருக்க முடியாது. அப்படியே ஒற்றுமையாக இருந்தாலும், மோடியை தோற்கடிக்க முடியாது.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், பா.ஜனதா 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராவார்.
காஷ்மீரை 3 குடும்பங்கள் சேர்ந்து பல்லாண்டுகள் ஆட்சி செய்தன. அப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு இருந்ததால், எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை.
பயங்கரவாதத்தால் 42 ஆயிரம் பேர் பலியானார்கள். இருப்பினும், அந்த குடும்பத்தினர் 370-வது பிரிவை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவையும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபாவையும் கேட்கிறேன். பயங்கரவாதத்தால் 42 ஆயிரம் பேர் பலியானதற்கு யார் பொறுப்பேற்பது?
காஷ்மீரில் ஜி-20 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக கவர்னர் மனோஜ் சின்கா மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். அதில் பங்கேற்றவர்கள், தங்கள் நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.
அனுமதி பெறாமல் காஷ்மீரில் நுழைந்ததாக சியாம பிரசாத் முகர்ஜி, 1953-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் கொலை செய்யப்பட்டார். 370-வது பிரிவு நீக்கத்தால் அவரது லட்சியம் நிறைவேறிவிட்டது. 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிந்தைய 47 மாத காலத்தில், காஷ்மீரில் 32 தாக்குதல் சம்பவங்கள்தான் நடந்தன. கல்வீச்சு சம்பவங்கள் 90 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு, முதல் முறையாக 1 கோடியே 88 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் மீதான பிடி இறுகியது. ஊழலற்ற இந்தியாவுக்கு மோடி வலிமையான அடித்தளம் அமைத்துள்ளார்.
அவரது 9 ஆண்டுகால ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது. மோடி ஒரு திறந்த புத்தகம்.
பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு காஷ்மீர் மக்கள் ஆதரவு தர வேண்டும். மோடியையும், ராகுல்காந்தியையும் ஒப்பிடவே முடியாது. ராகுல்காந்தி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சல் செக்டரின் காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீஸ் உதவியுடன் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் சோதனை நடத்தியபோது அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் போதை மருந்து பண்டல்கள், வரைபடங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடந்த 16-ம் தேதி 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவம் நடவடிக்கை
- ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நுழைய முயன்றபோது சண்டை
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சல் செக்டாரில் உள்ள காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸ் உதவியுடன் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தத் தகவலை ஜம்மு- காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16-ந்தேதி ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகவும், அங்கு வீசிய சூறைகாற்றில் ஸ்கூட்டர் மின் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
- பயனர்கள் பலரும் வீடியோ தொடர்பான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில், கடையை ஒட்டிய உயர்அழுத்த மின் கம்பிகளுக்குள் ஸ்கூட்டர் ஒன்று சிக்கியிருப்பதை காண முடிகிறது. அந்த ஸ்கூட்டர் எப்படி அவ்வளவு உயர மின் கம்பிகளுக்குள் புகுந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதனை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வீடியோ ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகவும், அங்கு வீசிய சூறைகாற்றில் ஸ்கூட்டர் மின் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் பயனர்கள் பலரும் இது தொடர்பான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர், இது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கலாம், நேரடியாக சார்ஜ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருக்கலாம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
- லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை 2.16 மணிக்கு 4.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.
- 3.50 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் நேற்று மதியம் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் லடாக் மற்றும் தோடா மாவட்டத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அடுத்த 10 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பின்னர், லடாக்கின் லே பகுதியில் இன்று காலை 8.28 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, லேயில் இருந்து 270 கி.மீ, வடகிழக்கே 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது.
முன்னதாக இன்று அதிகாலை 2.16 மணிக்கு லடாக்கின் லே பகுதியில் 4.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, 3.50 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- லடாக் பகுதியின் லே அருகே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.
- ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், லடாக்கின் லே மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 2.16 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான விவரங்கள் வெளியாகவில்லை.
லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- யூனியன் பிரதேசமான லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
லடாக்:
யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று இரவு 9.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இது லடாக்கில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், இரவு 9.55 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
- முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.
- சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர் என தெரிய வில்லை.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களை ஒழிக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேச எல்லையான குப்வாராஜுமகுந்த் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் அவர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஏன் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர் என தெரிய வில்லை.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் நாசவேலைக்காக பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்பகுதியில் பயங்கரவாதிகள் வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
- முதல் மற்றும் கடைசி முயற்சி என்ற நோக்கத்தில் படித்து வெற்றி பெற்றோம்- அர்பிஷ்
- 11-ம் வகுப்பு படிக்கும்போதே, நீட் தேர்வுக்கு தயாரானோம்- ருதாஃபா பாஷீர்
மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காவிடில் மருத்துவ படிப்பில் சேர்வது கடினம். மேலும், நன்றாக பயிற்சி பெற்றால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் சூழ்நிலை உள்ளதால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களால் மருத்துவம் படிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுவதாக விமர்சனமும் எழுந்து வருகிறது.
ஆனால், திறமையான மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனைப் படைக்கிறார்கள்.
அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரை மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்ஷேரா பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் (உறவினர்கள்) நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருக்கிறார்கள்.
தேர்ச்சி பெற்ற சகோதரிகளில் ஒருவர் துபா பாஷிர் கூறுகையில் ''நாங்கள் மூன்று பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதை சிறப்பானதாக உணர்கிறேன். ஏனென்றால், நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக பள்ளிக்கு சென்றோம். பயிற்சி வகுப்பிற்கு சென்றோம். எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவராவோம். நாங்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டோம். அதன் விளைவாக இந்த ரிசல்ட் கிடைத்ததுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.
மற்றொரு மாணவி ருதாஃபா பாஷீர் கூறுகையில் ''நாங்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளோம். 11-ம் வகுப்பு படிக்கும்போது, நாங்களாகவே நீட் தேர்வுக்கு தயாரானோம். மிகப்பெரிய அளவில் பயிற்சி மேற்கொண்டோம். இந்த பெருமை எல்லாம் சிறு வயதில் இருந்தே எங்களுக்கு ஆதரவாக இருந்த பெற்றோர்களுக்குத்தான்'' என்றார்.
மற்றொரு மாணவி அர்பிஷ் ''எங்கள் குடும்பத்தில் யாரும் டாக்டர் கிடையாது. இதனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன். டாக்டராக வர வேண்டும் என்பது என்னுடைய சொந்த முடிவு. தொடக்கத்தில் இருந்தே பெற்றோர்கள் ஆதரவாக இருந்தனர். இதுதான் முதல் மற்றும் கடைசி முயற்சி என்ற நோக்கத்தில் படித்து வெற்றி பெற்றோம்'' என்றார்.
- அமர்நாத் பனிலிங்கத்தை ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்கிறார்கள்.
- இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை அடுத்த மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது. இதில் அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கு செல்லும்போது தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவுப் பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புலாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், பரோட்டா, தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள் மற்றும் துரித உணவுப் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாத்ரீகர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான பொருட்களையும், சில அரிசி உணவுகளையும் எடுத்துச்செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் யாத்ரீகர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 5 கிலோமீட்டர் நடைபயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரிய குழு வெளியிட்ட சுகாதார ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
- ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது.
- எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு.
ஸ்ரீநகர் :
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத், பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தங்களது சொந்த மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களில் ஒன்றுமே இல்லை. மாநிலங்களில் 2, 3 கட்சிகள் கூட்டணி அரசு அமைத்திருந்தால் அது பலன் தந்திருக்கும். எனவே தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் பலன் ஏற்படாது.
மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. இப்படி இருக்கிறபோது, இவ்விரு கட்சிகளுடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால், அதற்கு என்ன பலன்? மம்தா பானர்ஜி எதற்காக கூட்டணி அமைக்க வேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது?
இதேபோன்றுதான் ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. எனவே இந்த மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கு காங்கிரஸ் என்ன கொடுக்கும்? ஒன்றும் இல்லை.
அப்படியே ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது. அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு பிற மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. காங்கிரஸ் அவருக்கு என்ன கொடுக்கும்?
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கும் இடையே வித்தியாசம் இல்லை. தேர்தலுக்கு பின்பு கூட்டணி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் பார்க்கிறேன்.
எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியால் 300 இடங்களில் வெற்றி பெற்றால், கூட்டணி இல்லாமல் கூட அதே எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற முடியும், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி கண்டது, ஆனால் மாநிலங்களில் அல்ல என்று சொல்லி இருக்கிறேன். மாநிலங்களில் எங்கெங்கு வலிமையான தலைமை இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி மீண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






