என் மலர்
பீகார்
- லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.
- லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.
குரானி :
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு வருகிற 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக அவரது மகனும், மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி, நேற்று குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 'லாலு ஜி இங்கு உங்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு அவருக்கு 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவை தோற்கடிக்க உங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்' என்று கூறினார்.
தனது உடல் நலக்குறைவுக்கு பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியல்தான் காரணம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூறுமாறும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக தேஜஸ்வி மேலும் குறிப்பிட்டார்.
- விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் சிலர் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று இறுதி சடங்கு ஊர்வலம் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென இறுதி சடங்கு ஊர்வலத்திற்குள் வேகமாக புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கார் ஓட்டுனர் போதையில் இருந்ததாக குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
- ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது
பாட்னா:
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் இருந்து ஏராளமான இரும்பு பொருள்கள் திருடப்பட்டது.
இது பற்றி ஆக்கர் கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கும்பல் ரெயில் என்ஜினையே திருடிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
பூர்ணியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள யார்டில் பழுதான ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யார்டுக்கு திருட்டு கும்பல் சுரங்க பாதை அமைத்து உள்ளது. அந்த பாதை வழியாக யார்டுக்கு வரும் ரெயில்களில் உள்ள இரும்பு பொருள்களை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளனர்.
பல மாதங்களாக நடந்து வந்த இத்திருட்டை அதிகாரிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் உச்சக்கட்டமாக ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
பூர்ணியா மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக டீசல் ரெயில் என்ஜின் ஒன்று காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்றுள்ளது.
இதுபோல ரெயில் பாலத்தில் உள்ள இரும்பு போல்டு மற்றும் நட்டுக்களையும் இக்கும்பல் திருடி விற்றுள்ளனர்.
இவை அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார் இவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு
- வீடியோவை பார்த்த பலரும் `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்' என விமர்சித்துவருகின்றனர்.
பாட்னா:
பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கிராம பஞ்சாயத்தில் வழங்கிய வினோதமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
5 வயது சிறுமியை ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது வெளியில் தெரியவரவே, உள்ளூர்வாசிகள் சிலர் அந்த நபரை, கிராம பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் சிலர் அந்த நபர் மீதான குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தாங்களாகவே ஒரு முடிவெடுத்தனர்.
அதாவது சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றது தவறு என கூறி அந்த நபரை 5 தோப்புக்கரணம் போடுமாறு தீர்ப்பளித்திருக்கின்றனர். அந்த நபரும் அவ்வாறே தோப்புக்கரணம் போட்டிருக்கின்றார். அப்போது அங்கிருந்தவர்களில் யாரோ இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். வீடியோ வைரலாகி, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வீடியோவை பார்த்த பலரும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்' எனப் பலரும் விமர்சித்துவருகின்றனர். முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சிலர் குறிப்பிட்டு, இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் இருக்க மாநில அரசு அனுமதிக்கப்போகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. கவுரவ் மங்ளா கூறி உள்ளார்.
- பீகாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர்.
- விசாரணையில் வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என தெரிந்தது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தில் இன்று சாலையோரம் சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் பலியாகினர்.
விசாரணையில் வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலியானோர் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்.
- என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன்.
பாட்னா:
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 74), கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் உள்ள இவர் தற்போது உடல் உபாதைகளால் அவதிப்படுகிறார்.
டெல்லியில் மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கியுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் மறு வாழ்வு தரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தனக்கு உயிர் தந்த தந்தைக்கு மற்றொரு மகளான ரோகிணி ஆச்சார்யா சிறுநீரகம் தந்து மறு வாழ்வு தர மனமுவந்து முன்வந்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனைகள் முடித்து வந்தார்.
அவருக்கு தனது இரு சிறுநீரகங்களில் ஒன்றை வழங்க முன்வந்துள்ள மகள் ரோகிணி ஆச்சார்யா, ஒரு டாக்டர் ஆவார். இவரது கணவர் சாம்ஷெர் சிங், சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் தற்போது சிங்கப்பூரில்தான் வசித்து வருகின்றனர்.
தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்தான் என்று ரோகிணி ஆச்சார்யா உருகுகிறார்.
தந்தைக்கு சிறுநீரகம் அளிப்பது குறித்து ரோகிணி ஆச்சார்யா உருக்கமுடன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன். எல்லாம் நல்ல விதமாக நடந்தேற வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் குரல் கொடுக்க அப்பா தகுதியானவராக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அரசியல் களத்தில் இருந்து வெளியே உள்ள இவர், தனது தந்தை லாலுவின் மடியில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட 2 புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். (அதில் ஒன்றை இங்கே காணலாம்.)
இவர் அவ்வப்போது லாலு பிரசாத்தின் ஆதரவாளர்களை, தனது தந்தையின் ரசிகர்களாக கருதி அவர்களுடன் டுவிட்டர் வழியாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருவரையும் இரும்பு திருடர்கள் என்று அடையாளம் கண்டதாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் கூறினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் முசாபர்பூரில் இரும்பு திருடியதாகக் கூறி இரண்டு நபர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முசாபர்பூர் நகரத்தில் உள்ள ஒரு பாலத்தின் அருகே இரும்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கம்பிகள் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு குவிண்டால் இரும்பு திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டு நபர்கள் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் இருவரையும் இரும்பு திருடர்கள் என்று அடையாளம் கண்டதாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் கூறினர். உடனே அப்பகுதியினர் ஒன்றுதிரண்டு, அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் இரண்டு நபர்களும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். அவர்கள் இருவரும் கம்பி திருடியதாக குற்றம்சாட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இரும்பு திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முசாபர்பூரில் வசிப்பவர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
- 2 அல்லது 3 பெண்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது.
- ராம்நகர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள மருத்துவமனையில் 7 கர்ப்பிணிகளின் கருப்பை அகற்றப்பட்டு உள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் ராம் நகர் பஞ்சாயத்திற்குட்பட்ட தனியார் நர்சிங் மையத்தில் உரிய சம்மதம் இல்லாமல் 7 கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மேற்குசாம்பரண் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேந்திர குமார் சவுத்ரி கூறுகையில், ராம்நகர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் இதில் 7 கர்ப்பிணிகளின் கருப்பை அகற்றப்பட்டு உள்ளது. மேலும் 2 அல்லது 3 பெண்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது.
எனவே அவர்களுக்கு இடையூறு இல்லாமல் விசாரணை நடந்து வருகிறது. ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளையும் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றி விட்டோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார். மேலும் இதுகுறித்து ராம்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு போதுமான அளவு நியாயமானதுதான்.
- தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது.
பாட்னா :
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.
இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவரும், பீகார் மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், பாட்னாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் 50 சதவீதம் என்ற இட ஒதுக்கீடு உச்ச வரம்பினை நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு போதுமான அளவு நியாயமானதுதான். நாங்கள் எப்போதுமே இட ஒதுக்கீடுக்கு ஆதரவானவர்கள். ஆனால் 50 சதவீத இட ஒதுக்கீடு என்னும் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இந்த உச்ச வரம்பானது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் வாய்ப்புகளை இழக்கச்செய்கிறது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) அவ்வாறு அவர்களுடைய மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
இவ்விரு வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வசதி கிடைப்பதற்கு ஏதுவாக 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பினை உயர்த்தினால் நல்லது.
பல்வேறு சமூகக்குழுக்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பை புதிதாக மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு பிரச்சினையை பிரதமர் மோடியிடம் எடுத்துச்சென்றோம்.
ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. நாங்கள் அந்த கணக்கெடுப்பை நடத்தி இருக்கிறோம். ஆனால் இதை தேசிய அளவிலும் செய்ய வேண்டியது அவசியம். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது பற்றி சிந்திக்க வேண்டும்.
இவவாறு அவர் கூறினார்.
இதுபற்றி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அரவிந்த் குமார் சிங் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், " ஏழைகளான உயர்சாதியினர் இட ஒதுக்கீடு பெறுவதில் மரியாதைக்குரிய முதல்-மந்திரி மகிழ்ச்சியாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர், அவர்களின் தற்போதைய கூட்டணிக்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளத்தின் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார். 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு அகற்றப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அரசியல் சாசன வரம்புக்குட்பட்டு பீகாரில் அதைச்செய்யுங்கள். நாங்கள் வரவேற்கிறோம்" என கூறினார்.
50 சதவீத இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பினை அகற்ற வேண்டும் என்ற குரலை முதலில் எழுப்பியவர் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
- பலமுறை நினைவூட்டியும் மருத்துவ மையங்களை சரி செய்யாததால் வாரியம் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
- சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.
பீகார் மாநிலத்தில் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்களை மூட அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அசோக் குமார் கோஷ் கூறியதாவது:-
விதிகளை பின்பற்றி மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 1800 சுகாதார மையங்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மையங்கள் அகற்றுவதற்கு அமைக்கப்பட்ட விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீண்டும் பின்பற்றாதபட்சத்தில் சுகாதார மையங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும்.
மேலும் இந்த சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.
இதுகுறித்து பலமுறை நினைவூட்டியும் மருத்துவ மையங்களை சரி செய்யாததால் வாரியம் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் இன்று சத் பூஜை நடைபெற இருந்தது. இதற்காக இன்று அதிகாலை 2.30 மணியளவில் சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து, தீ காயங்களுடன் இருந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பாதிக்கப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீசாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது.
- சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம்.
பாட்னா :
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதா அணியில் சேருவார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் பேட்டியளித்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜனதா அணியில் சேரமாட்டார். எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது. பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றி, வலிமையான அரசை நடத்தி வருகிறோம். சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம். அடுத்த வாரம் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






