என் மலர்
பீகார்
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.
லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.
- ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்தது.
- மக்களை தேர்தலுக்கு இந்த மாநிலத் தேர்தல்கள் முன்னோட்டமாக கருதப்பட்டது.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு முன்னோட்டம் என அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தலில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.
இதனால் மக்களவை தேர்தல் பா.ஜனதா சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கிடையே பா.ஜனதாவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், அரசியல் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் ஐந்து மாநில தேர்தல் அடுத்த மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதலாமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு லாலு பிரசாத் யாதவ் "அவர்கள் (பா.ஜனதா) எப்படி வெற்றி பெற முடியும். மக்களவை தேர்தல் எங்களுடையதாக இருக்கும. அது மிகவும் பரந்த நிலையாக இருக்கும்" என்றார்.
மேலும், பாராளுமன்றத்தில் அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசும்போது, "ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. ஒட்டுமொத்த காஷ்மீரையும் கட்டுக்குள் கொண்டு வராமல், போர் நிறுத்தம் அறிவித்தது நேருவின் தவறு" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து லாலுவிடம் கேட்டதற்கு "அமித் ஷாவிற்கு என்ன தெரியும்? அவருக்கு எதுவுமே தெரியாது" என்றார்.
- திருமண முன்மொழிவை ஏற்க மறுத்த குமார், உடல் ரீதியான வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாட்னா:
கௌதம் குமார் என்ற வாலிபர் சமீபத்தில் பீகாரில் அரசு பணியாளர் ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக இருந்தார். கடந்த புதன்கிழமை அன்று மூன்று அல்லது நான்கு பேர் பள்ளிக்கு வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள், துப்பாக்கி முனையில் கடத்தல்காரர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் கௌதம் குமாருக்கு ஏற்பட்டது.
கௌதம் குமார் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது, காணாமல் போன ஆசிரியரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையை காவல்துறையினர் தொடங்குவதற்கு முன், குமாரின் குடும்பத்தினர் புதன்கிழமை இரவே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கௌதம் குமாரின் குடும்பத்தினர் ராஜேஷ் ராய் என்ற நபர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். ராயின் குடும்பத்தினர் குமாரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவரின் மகள் சாந்தினிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருமண முன்மொழிவை ஏற்க மறுத்த குமார், உடல் ரீதியான வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேலையில் உள்ள வாலிபர்களை கடத்தி சட்டவிரோதமாக கட்டாய திருமணம் செய்யும் 'பகட்வா விவாஹா' என்ற சம்பவங்கள் பீகாரில் அவ்வப்போது நடைபெறுகிறது.
- பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் அதிகரிப்பு.
- விடுமுறை நாட்கள் ஒரு சமூகத்திற்கு மட்டும் ஆதாரவாக உள்ளது.
பீகார் மாநில அரசு சார்பில் 2024 ஆண்டுக்கான பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் விரிவாக இடம்பெற்று இருக்கின்றன.
அரசு வெளியிட்ட பட்டியலின் படி இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் பள்ளி விடுமுறை நாட்கள் பட்டியல் முஸ்லீம் சமூகத்திற்கு மட்டும் ஆதாரவான ஒன்றாக இருக்கிறது என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ஏன் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கும் மத்திய மந்திரி அஸ்வினி சௌபே, இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவற்றை முஸ்லீம் பண்டிகைக்கான விடுமுறையில் பீகார் அரசு ஈடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
"ஒருபக்கம், முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன. இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் நீக்கப்பட்டுள்ளன," என்று இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீகார் அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் 2024 விடுமுறை நாட்களுக்கான பட்டியலில் இந்து பண்டிகைகளான மகா சிவராத்திரி, ஜன்மாஷ்டமி, ரக்ஷா பந்தன் மற்றும் தீஜ் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு தீஜ் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- சிறப்பு அந்தஸ்து கேட்டு பீகார் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
சமீபத்தில் அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஏழைகள் அதிகம் வசிப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அரசு கூறியது. எனவே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், பீகார் அமைச்சரவையில் நேற்று சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதை முதல் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் மாநிலத்தில் உள்ளன. அவர்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை. இது மிகப்பெரிய நிதி என்றாலும், மத்திய அரசு உதவினால் இந்தப் பணிகளை செய்துமுடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
- பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும் என முதல் மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தினார்.
- சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உயர் சாதியினர் முதல் ஏழைகள் வரை அனைவரின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைத்து வருகிறோம். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து தர வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கினால், பீகாரை வளர்ந்த மாநிலமாக மாற்ற சிறிது காலம் போதும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, லாலு பிரசாத் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பிரதமர் மோடி அரசை அகற்றுவோம் என ஆவேசமாக குறிப்பிட்டார்.
- ஜித்தன் ராம் மஞ்சியை முதல் மந்திரியாக ஆக்கியது என் தவறு.
- எனது முட்டாள்தனத்தால் அவர் முதல் மந்திரி ஆனார் என நிதிஷ்குமார் தெரிவித்தார்.
பீகார்:
பீகார் மாநில சட்டசபையில் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி நிதிஷ்குமார், ஜித்தன் ராம் மஞ்சியை முதல் மந்திரியாக ஆக்கியது என் தவறு. என்னுடைய முட்டாள்தனத்தால் அவர் முதல் மந்திரி ஆனார் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சி, முதல்வர் மீது புகார் அளித்து அவரை பதவி நீக்கம் செய்யக் கோருவேன் என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜித்தன் ராம் மஞ்சி, முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது கவர்னர் மற்றும் மத்திய உள்துறை மந்திரியிடம் புகார் செய்வேன். அவரை பதவி நீக்கம் செய்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோருவேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபையில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பேசியது தொடர்பாக, முன்னாள் முதல் மந்திரியும், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி மவுன விரத போராட்டம் இருந்தார்.
இதுதொடர்பாக ஜித்தன் ராம் மஞ்சி கூறுகையில், இன்று பாபா பீம் ராவ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அனுமதிக்கவில்லை. நிதிஷ்குமாருக்கு நல்ல புத்தி வரவேண்டும் என காந்திஜியிடம் பிரார்த்தனை செய்ய டெல்லி ராஜ்காட் செல்ல உள்ளேன். பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சட்டசபையில் என்னை அவமானப்படுத்தினார். இது எனது அவமானம் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து தலித் மக்களுக்குமான அவமானம் என தெரிவித்துள்ளார்.
- பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சமீபத்தில் வெளியிட்டார்.
பாட்னா:
இந்தியாவிலேயே முதல் முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட பிறகு சட்டசபையில் பேசிய நிதிஷ் குமார், பீகாரில் தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான (EWS)10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டு அளவு 75 சதவீதமாக உயரும் என்ற தகவலும் அவரது உரையில் இடம் பெற்றிருந்தது.
இதற்கிடையே, முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இட ஒதுக்கீடு உயர்வுக்கான மசோதா அம்மாநில சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
- பீகாரில் கருத்தரிப்பு சதவீதம் குறைவு குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கருத்து
- நிதிஷ் குமார் கருத்து மிகவும் இழிவானது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது பெண்கள் கருத்தரிப்பு வீதம் 4.2-ல் இருந்து 2.9 ஆக குறைந்தது தொடர்பாக முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவிக்கையில் "மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பெண்கள் கல்வியின் பங்கு" குறித்து பேசினார்.
இதுகுறித்து பா.ஜனதா கூறும்போது, "சட்டசபையில் நிதிஷ்குமார் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் புண்படுத்தும் அவமரியாதை, பாலியல், ஆணாதிக்க மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர் பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்தது.
தேசிய மகளிர் ஆணையம் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.
இது தொடர்பாக எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில் "நான் கூறிய வார்த்தை பெண்களை அவமரியாதை செய்யும் அர்த்தம் அல்லை. அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கின
- 3 சந்திப்புகளுக்கு பிறகு ஒன்றும் நடக்கவில்லை என்றார் நிதிஷ்குமார்
இந்திய பாராளுமன்றத்திற்கு அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருக்கிறது. இம்மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கி இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா கூட்டணி" எனும் கூட்டணியை அமைத்தன.
இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அடக்கம்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
இந்தியாவில் பல கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கடின முயற்சிகளுக்கு பிறகு உருவானதே இந்தியா கூட்டணி. கூட்டணி உருவானதும் பாட்னாவிலும், பெங்களூரூவிலும், மும்பையிலும் பல சந்திப்புகள் நடந்தன. ஆனால், அதற்கு பிறகு ஒன்றுமே நடைபெறவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அடுத்த வருடம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் கவனம் முழுவதும் நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களிலேயே உள்ளது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அழைப்பார்கள்.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.
- 590 ஆசிரியர்களின் சம்பளக் குறைப்புக்கான பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
- 49 பேரை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
பாட்னா:
பீகாரில் கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில கல்வித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பள்ளிகளுக்கு ஒழுங்காக வராத 21,90,020 மாணவர்களின் பெயர்களை நீக்கியது. பெயர் நீக்கப்பட்டவர்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய 2.66 லட்சம் மாணவர்களும் அடங்குவார்கள். இதனால் ஏற்கனவே பீகார் அரசு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், அனுமதியின்றி பணிக்கு வராத 2,081 ஆசிரியர்களின் சம்பளத்தை கல்வித்துறை பிடித்தம் செய்துள்ளது. மேலும் 590 ஆசிரியர்களின் சம்பளக் குறைப்புக்கான பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 49 பேரை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
- சம்பவம் நடந்த துர்கா விழா பந்தலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது.
- போதிய அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை.
கோபால் கஞ்ச்:
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் துர்கா பூஜை விழா நேற்று களை கட்டியது. இதற்காக பல இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. அங்குள்ள ஒரு பந்தலில் நடந்த துர்கா விழா கொண்டாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த பந்தலின் நுழைவு வாயிலில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் சிலர் கீழே விழுந்தனர். இதில் ஒரு குழந்தையும் சிக்கி கொண்டது. தரையில் விழுந்த அந்த குழந்தையை காப்பாற்ற 2 பெண்கள் முயன்றனர். அப்போது அவர்கள் கீழே விழுந்தனர். அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. அவர்கள் மீது பலர் ஏறி மிதித்து ஓடினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் மற்றும் குழந்தை பரிதாபமாக இறந்தனர்.
மேலும் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சாதர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த துர்கா விழா பந்தலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. ஆனால் போதிய அளவு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் நெரிசல் ஏற்பட்டபோது பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக 3 பேர் பலியானதாகவும், பலர் காயம் அடைந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






