search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 election"

    • நகர்புறங்களில் கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
    • 2024-25-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.

    நாடாளுமன்ற தேர்தல் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மாகராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான ஷீரடியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

    நாட்டின் தற்போதைய சூழ்நிலை பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

    பா.ஜனதா அதிகாரத்தில் உள்ளது. அவர்கள் தீவிரமான பிரசார அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜெர்மனியில் ஹிட்லருடைய பிரசார அமைப்பை போன்று பா.ஜனதா பணியாற்றி வருகிறது.

    ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் இல்லை.

    2022-ம் ஆண்டு விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், நகர்புறங்களில் கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    2024-25-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். ஆனால் இதில் 50 சதவீதத்தை கூட நாம் எட்டிப்பிடிக்கவில்லை. எனவே இதுவும் ஒரு வெற்று வாக்குறுதிதான்.

    2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு பா.ஜனதா அரசு பல திட்டங்களை அறிவித்தது. பல உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்தாமல் ஏமாற்றியது. மக்கள் இதனை தற்போது உணர ஆரம்பித்துவிட்டனர். பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.

    வேலையில்லா திண்டாட்டம் காரணமாக இளைய தலைமுறையினர் கவலையில் உள்ளனர். இதன் காரணமாகவே கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் சிலர் பாதுகாப்பை மீறி நுழைந்தனர்.

    எரிபொருள் விலை சாதாரண குடிமக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்தது.
    • மக்களை தேர்தலுக்கு இந்த மாநிலத் தேர்தல்கள் முன்னோட்டமாக கருதப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு முன்னோட்டம் என அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தலில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.

    இதனால் மக்களவை தேர்தல் பா.ஜனதா சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கிடையே பா.ஜனதாவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், அரசியல் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் ஐந்து மாநில தேர்தல் அடுத்த மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதலாமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு லாலு பிரசாத் யாதவ் "அவர்கள் (பா.ஜனதா) எப்படி வெற்றி பெற முடியும். மக்களவை தேர்தல் எங்களுடையதாக இருக்கும. அது மிகவும் பரந்த நிலையாக இருக்கும்" என்றார்.

    மேலும், பாராளுமன்றத்தில் அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசும்போது, "ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. ஒட்டுமொத்த காஷ்மீரையும் கட்டுக்குள் கொண்டு வராமல், போர் நிறுத்தம் அறிவித்தது நேருவின் தவறு" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து லாலுவிடம் கேட்டதற்கு "அமித் ஷாவிற்கு என்ன தெரியும்? அவருக்கு எதுவுமே தெரியாது" என்றார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெறப் போவதில்லை என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
    கொல்கத்தா:

    வரும் பாராளுமன்ற தேர்தலின்போது மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஜூன் முதல் வாரத்தில் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் புர்லியா பகுதியில் நடந்த கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெறப் போவதில்லை. நீங்கள் எப்போதும் உள்ளே நுழைய முடியாது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என நாட்டு மக்கள் இப்போதே கூறத் தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார்.

    ×