search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,338 ஆக குறைந்தது

    கொரோனா தொற்றில் இருந்து இதுவரை மொத்தம் 4 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

    நேற்று முன்தினம் பாதிப்பு 2,828 ஆக இருந்தது. நேற்று 2,706 ஆக சரிந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது.

    தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,134 பேர் முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் குணமடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று இந்த எண்ணிக்கை மேலும் 185 உயர்ந்து உள்ளது. தற்போது 17,883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கொரோனா காரணமாக மேலும் 19 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 17 மரணங்கள் அடங்கும்.

    இதுதவிர நேற்று டெல்லி, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,630 ஆக உயர்ந்தது.

    நாடு முழுவதும் நேற்று 13,33,064 டோஸ்களும், இது வரை 193 கோடியே 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 3,63,883 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.04 கோடியாக உயர்ந்துள்ளது.


    Next Story
    ×