search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் சட்டசபையில் 65 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
    X

    பீகார் சட்டசபையில் 65 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

    • பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சமீபத்தில் வெளியிட்டார்.

    பாட்னா:

    இந்தியாவிலேயே முதல் முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட பிறகு சட்டசபையில் பேசிய நிதிஷ் குமார், பீகாரில் தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

    பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான (EWS)10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டு அளவு 75 சதவீதமாக உயரும் என்ற தகவலும் அவரது உரையில் இடம் பெற்றிருந்தது.

    இதற்கிடையே, முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இட ஒதுக்கீடு உயர்வுக்கான மசோதா அம்மாநில சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×