என் மலர்tooltip icon

    அசாம்

    • பிரதமர் மோடி உள்கட்டமைப்புகளை உருவாக்கினார். அசாம் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தினார்.
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வளர்ச்சி திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுத்தார். கட்டமைப்புகள் மேம்படுத்தினார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அசாமில் புனரமைக்கப்பட்ட லசித் பார்புகான் போலீஸ் அகாடமியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுத்தார். உள்கட்டமைப்புகளை உருவாக்கினார். அசாம் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தினார்.

    10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதி நிலவ முக்கிய வளர்ச்சி திட்டத்தில் இணைந்துள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கட்டமைப்பு திட்டங்களை அசாமுக்கு கொடுக்க இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த வணிக மாநாட்டில் கூடுதலாக 5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அசாமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக காவல்துறை இருந்தது. ஆனால் இப்போது அது மக்களை மையமாகக் கொண்டதாகியுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் தண்டனை விகிதம் 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது விரைவில் தேசிய சராசரியை விட அதிகமாகும்.

    லசித் பார்புகான் போலீஸ் அகாடமி அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் முதன்மையானதாக மாறும். இந்த அகடாமிக்கு 1050 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • அசாம் முன்னாள் முதல்வரின் மகள், தனது கார் ஓட்டுனரை செருப்பால் அடிக்கும் வீடியோ வைரல்
    • அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் காஷ்யப், தனது கார் ஓட்டுநரை செருப்பால் வீடியோ வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், கார் ஓட்டுநர் மண்டியிட்டு அமர்ந்துள்ளார். அப்போது அவரை காஷ்யப், கடுமையாக திட்டி செருப்பால் அடிக்கிறார்.

    அசாம் மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரின் மகள், "எனது ஓட்டுநர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை பற்றி தவறாக பேசி வந்தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. இப்போது குடித்துவிட்டு என் வீடு கதவை தட்டினான்" என்று தெரிவித்தார்.

    பிரபுல்ல குமார் மஹந்தா, 1985 முதல் 1990 மற்றும் 1996 முதல் 2001 வரையில் 2 முறை அசாம் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அசாமில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கம் மோரிகன் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    • தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு விழா.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு.

    அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதை முன்னிட்டு கவுகாத்தியில் நடந்த ரோட் ஷோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரதமர் மோடி பங்கேற்றுள்ள விழாவில், ஒரே நேரத்தில் 9 ஆயிரம் பெண்கள் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி விழா மேடை நோக்கி வந்தபோது 9 ஆயிரம் பெண்களும் நடன அசைவுகளுடன் வரவேற்றனர்.

    • அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்தினார்.
    • "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார்.

    வனவிலங்குகள் பாதுகாப்பிற்கான சிறந்த பங்களிப்புகளுக்காக, இந்திய பாதுகாவலர் பூர்ணிமா தேவி பர்மன்(45), டைம் பத்திரிகையின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    மொத்தம் 13 பேரை கொண்ட இந்த கவுரவமிக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண்மணி பூர்ணிமா தேவி ஆவார்.

    அசாமின் காம்ரூப் பகுதியில் பிறந்த பூர்ணிமா தேவி பர்மன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவர் விலங்கியல் துறையில் சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

     

    2007 இல் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வீட்டு உரிமையாளர் அருகில் இருந்த நாரை கூடு கட்டிய மரத்தை வெட்டுவதை பார்த்தார். இதுகுறித்து உரிமையாளரிடம் கேட்டபோது நாரை கெட்ட சகுனம் என்றும் அவை நோய்களை பரப்பும் என்றும் பதிலளித்தார். இந்த பதில் பூர்ணிமாவின் வாழ்க்கையையே மாற்றியது.

    அப்பகுதி மக்களின் அறியாமையை கண்ட பூர்ணிமா தேவி தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை இடைநிறுத்திவிட்டு, வன உயிர்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அதன் முக்கியத்துவம் குறித்த முழு நேர பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

     

    நாரைகள் பாதுகாப்பிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், உள்ளூர் சமூகங்களிடம் வன உயிடீகள் பாதுகாப்பு விழ்ப்புணர்வு  ஏற்படுத்துவற்காக "ஹார்கில்லா ஆர்மி" என்ற 10,000 பெண்களை கொண்ட குழுவை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பறவைகளின் கூடு கட்டும் இடங்களைப் பாதுகாத்தல், காயமடைந்த நாரைகள், பிற வன உயிரிகளுக்கு சிகிச்சை அளித்த மறுவாழ்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதோடு மட்டுமல்லாமல் இந்த அமைப்பு மூலம் பெண்களுக்கு தறிகள் மற்றும் நூல் நெசவு இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் துணிகளை நெசவு செய்து அவற்றை விற்கும் தொழில்முனைவோராக பல பெண்கள் மாறியுள்ளனர்.

     

    மூத்த வனவிலங்கு உயிரியலாளராக அறியப்பட்ட பூர்ணிமா தேவி, WiNN (இயற்கை வலையமைப்பில் பெண்கள்) அமைப்பின் இந்திய பிரிவு இயக்குநராகவும், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) நாரை, ஐபிஸ் மற்றும் ஸ்பூன்பில் பறவைகள் நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

    2017 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து இந்தியப் பெண்களுக்கான மிக உயர்ந்த சிவில் விருதான 'நாரி சக்தி புரஸ்கார்' விருதை பூர்ணிமா தேவி பெற்றார். அதே ஆண்டில், இங்கிலாந்து இளவரசி ராயல் அன்னே வழங்கிய கிரீன் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் விட்லி விருதையும் பூர்ணிமா தேவி பெற்றார்.  

     

    • யூடியூபரின் கருத்து பெரும் கண்டத்திற்கு உள்ளானது.
    • யூடியூபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு.

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் இவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் India's Got Latent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வியை கேட்டார். இவரது கேள்வி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் இருந்தது.

    இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஹேமந்த் பிஸ்வா, "இன்று கவுகாத்தி காவல் துறையினர் சில யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதளInfluencers மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி அசிஷ் சஞ்சல்னி, ஜஸ்பிரீத் சிங், அபூர்வா மகிஜா, ரன்வீர் அல்லாபாடியா மற்றும் சமய் ரெய்னா மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    India's Got Latent நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் தரக்குறைவான விவாதத்தில் ஈடுபட்டதாக இவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்தடுப்பீர்கள் என்று கேட்டார். 

    • மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.
    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரி வரவேற்பை பெற்றது.

    பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக்குழுவான கோல்ட் பிளே[Coldplay] 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' என்ற தலைப்பில் வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக இந்தியா வருகை தந்தது. மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.

    பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்திருந்தன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

    இந்நிலையில் கோல்ட் பிளே கச்சேரிகளைச் சிலாகித்துள்ளார். இந்தியாவில் நேரலை இசை நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று அவர் கூறினார்.

    நாட்டில் இசைக்கச்சேரி பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகவும் இந்த துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், மாநில அரசுகளும், தனியார் துறையும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக மோடி கூறினார்.

    புவனேஸ்வரில் நடந்த ஒடிசா கான்க்ளேவ் 2025 நிகழ்ச்சியில் பேசிய மோடி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ட்ப்ளே கச்சேரிகளின் அற்புதமான படங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இந்தியாவில் நேரடி கச்சேரிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது.

     

     உலகெங்கிலும் உள்ள பெரிய கலைஞர்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளின் போக்கு அதிகரித்துள்ளது என்றார்.

    அடுத்ததாக 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக கோல்ட் பிளே குழு ஹாங் காங் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பண்டிகையின்போது பாரம்பரிய உடையணிந்து வாலிபர்களும் இளம்பெண்களும் இணைந்து பிகு நடனம் ஆடுவார்கள்.
    • குழந்தையை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

    அசாம் மாநிலத்தின் கலாசார நடனமாக பிகு உள்ளது. பண்டிகையின்போது பாரம்பரிய உடையணிந்து வாலிபர்களும் இளம்பெண்களும் இணைந்து பிகு நடனம் ஆடுவார்கள். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா. பிகு நடன கலைஞரான இவர் தனது நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பிரபலமாக உள்ளார்.

    இந்தநிலையில் பிரியங்கா புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது குழந்தையுடன் இணைந்து அவர் பிகு நடனமாடினார். பாரம்பரிய உடையணிந்த அந்த குழந்தை துள்ளலான இசைப்பாடலுக்கு தனது தாயுடன் சேர்ந்து கைகளை காற்றில் அசைத்தும் துள்ளி குதித்தும் உற்சாகமாக நடனமாடியது.

    தாய்க்கு நிகராக ஈடுபாடுடன் ஆடிய அந்த குழந்தையை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.



    • இருவரும் காதலித்து வந்ததை அறிந்த முதியோர் இல்லத்தினர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • மணமக்கள் அசாம் பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.

    கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் பகுதியை சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (வயது71). வீட்டு வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரது 2 சகோதரர்களும் காலமான நிலையில் பெல்டோலா பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

    இதே போல சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (வயது65), திருமணமாகாத இவர் கவுகாத்தியில் மத்காரியா பகுதியில் பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

    இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். பத்மேஸ்வர் கோலா குரல் வளமிக்கவர். இவர் பிகு மற்றும் இந்தி பாடல்களை பாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது குரலில் மயங்கிய ஜெயபிரபா, பத்மேஸ்வருடன் பேசிய போது மனதை பறிகொடுத்தார்.

    இருவரும் காதலித்து வந்ததை அறிந்த முதியோர் இல்லத்தினர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்தை மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி உள்ளது.

    இதையொட்டி மணமக்கள் அசாம் பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

    இதுகுறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், பொது நிதி உதவியுடன் இந்த திருமணம் நடைபெற்றது. சுமார் 4 ஆயிரம் விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் விருந்து பரிமாறினோம் என்றார்.

    • எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
    • தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது.

    சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அசாம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:-

    எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. அசாமில் பதிவான முதல் எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது, புதிதாக எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீரென வெள்ளம் புகுந்ததால் தொழிலாளர்களால் தப்பிக்க முடியவில்லை.
    • மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    அசாம் மாநிலம் திமா ஹசாயோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெள்ளம் புகுந்ததால் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் திமா ஹசாயோ மாவட்த்தில் உள்ள உம்ராங்சோவில் உள்ள 3 கிலோ பகுதியில் உள்ள அசாம் நிலக்ககரி குவாரியில் நடந்துள்ளது.

    இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "நிலக்கரிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள உம்ராங்ஷுவிலிருந்து துயரமான செய்தி வந்துள்ளது. சரியான எண்ணிக்கை மற்றும் நிலை இன்னும் தெரியவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் எனது சக ஊழியர் கௌசிக் ராய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அனைவரின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கேட்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திமா ஹசாயோ எஸ்.பி. மயங்க் ஜா "சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். திடீரென வெள்ளம் வந்ததால் தொழிலாளர்கள் உடனடியாக சுரங்கத்தில் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்படடது என நேரில் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    • ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகம் அசாம்
    • சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருவதைக் காண்கிறோம்.

    ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாகும்.

    இங்கு ஜீப் வண்டி சஃபாரி சவாரி மூலம் பார்வையாளர்களுக்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் பிற விலங்குகளைப் பார்க்கும் வாய்ப்பை கிடைக்கிறது. வழக்கான இந்த சஃபாரி ஒரு தாய் மற்றும் அவரது மகளுக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது.

    இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், ஆக்ரோஷத்துடன் காண்டாமிருகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பார்வையாளர்களை ஏற்றிக்கொண்டு மூன்று ஜீப் வண்டிகள் அங்கு வருகிறது.

    அதில் ஒரு ஜீப் வலதுபுறம் திரும்பும்போது உள்ளே ஒரு தாய் தனது மகளுடன்  சேர்ந்து தரையில் விழுகிறார்.  தாய் உதவி கேட்டு கூப்பாடுபோடத் தொடங்கினார்.

    அந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வருவதைக் காண்கிறோம்.

    பதறியடித்த தாய் சுதாரித்துக்கொண்டு மகளுடன் வேகமாக ஓடி ஜீப்பில் ஏறி ஆக்ரோஷத்துடன் நெருங்கிய காண்டாமிருகத்திடம் இருந்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். மற்றொரு ஜீப்பில் இருந்த சுற்றுலாப்பயணி இந்த பயங்கர சம்பவத்தை கேமராவில் படம்பிடித்துள்ளார். இந்த இந்த சம்பவம் காசிரங்கா தேசிய பூங்காவின் பகோரி மலைத்தொடரில் நடந்துள்ளது.

    ×