மோடி ஸ்டேடியத்தில் நடந்த 'Coldplay' இசைக் கச்சேரி.. சிலாகித்து பேசிய பிரதமர்

மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரி வரவேற்பை பெற்றது.
மோடி ஸ்டேடியத்தில் நடந்த 'Coldplay' இசைக் கச்சேரி.. சிலாகித்து பேசிய பிரதமர்
Published on

பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக்குழுவான கோல்ட் பிளே[Coldplay] 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' என்ற தலைப்பில் வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக இந்தியா வருகை தந்தது. மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஜனவரி 26 வரை 5 இசைக்கச்சேரிக்குகளை இக்குழு நடத்தியது.

பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்திருந்தன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் Coldplay இசைக்குழு நடத்திய கச்சேரியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

இந்நிலையில் கோல்ட் பிளே கச்சேரிகளைச் சிலாகித்துள்ளார். இந்தியாவில் நேரலை இசை நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று அவர் கூறினார்.

நாட்டில் இசைக்கச்சேரி பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகவும் இந்த துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், மாநில அரசுகளும், தனியார் துறையும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக மோடி கூறினார்.

புவனேஸ்வரில் நடந்த ஒடிசா கான்க்ளேவ் 2025 நிகழ்ச்சியில் பேசிய மோடி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ட்ப்ளே கச்சேரிகளின் அற்புதமான படங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இந்தியாவில் நேரடி கச்சேரிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது.

 உலகெங்கிலும் உள்ள பெரிய கலைஞர்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளின் போக்கு அதிகரித்துள்ளது என்றார்.

அடுத்ததாக 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ்' வேர்ல்டு டூரின் ஒரு பகுதியாக கோல்ட் பிளே குழு ஹாங் காங் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com