என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இந்த ஊறுகாய் சப்பாத்தி, பூரி, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். இந்த ஊறுகாய் மாதக் கணக்கில் கெடாது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பொடியாக நறுக்கிய (அ) துருவிய மாங்காய்  - ஒரு கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைத்த சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்,
    கசகசாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - ஒரு டீஸ்பூன்,

    மாங்காய் இனிப்பு ஊறுகாய்

    செய்முறை:

    கொடுத்துள்ள எல்லா பொருட்களையும், ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு மெல்லிய துணியால் கட்டவும்.

    வெயிலில் 10 முதல் 20 நாள் வைக்கவும்.

    இதில் உள்ள சர்க்கரை கரைந்து லேகியம் மாதிரி ஆகிவிடும்.

    இந்த பதத்தில் எடுத்து வைக்கவும். மாதக் கணக்கில் கெடாது.

    சப்பாத்தி, பூரி, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபிஷ் சப்பாதி ரோலை எளிதாக முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4
    முள் இல்லாத துண்டு மீன் - 500 கிராம்
    வெங்காயம் - 2
    இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
    எலுமிச்சைபழச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    குடைமிளகாய் - 1
    பச்சை மிளகாய் - 3
    மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - 1 கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    ஃபிஷ் சப்பாதி ரோல்

    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    நன்றாக கழுவிய மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

    பிறகு உதிர்த்த மீனில் அரைத்த வெங்காயம், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, தீயை குறைவாக வைத்து 2-3 நிமிடம் வதக்கவும்.

    பின் அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, மறுபடியும் 1-2 நிமிடம் வதக்கவும்.

    பச்சை வாசனை போனவுடன் அதில் ஊற வைத்த மீனை சேர்த்து, நன்கு பிரட்டி மீனானது வெந்தவுடன், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் கிளறி, பின் அதனை இறக்கி வைக்கவும்.

    பின் அந்த கலவையை சப்பாத்தியில் தடவி, சுருட்டி வைத்தால், சுவையான ஃபிஷ் சப்பாத்தி ரோல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறிய காலி ஃப்ளவர் - 1,
    கேரட் - 2,
    நூல்கோல் - 2,
    முள்ளங்கி - 2,
    மாங்காய் - 1,
    பச்சைப் பட்டாணி - 1 கப்,
    எலுமிச்சைப் பழச்சாறு - 1/2 கப்,
    கடுகு எண்ணெய் - 300 கிராம்,  
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய் தூள்,
    கடுகுத்தூள் - 1/2 கப்,
    மஞ்சள் தூள் - தேவைக்கு,
    நீளமாக வெட்டிய பச்சை மிளகாய், இஞ்சி - தேவைக்கு.

    மிக்ஸடு காய்கறி ஊறுகாய்

    செய்முறை:

    காலிஃப்ளவரை சுத்தம் செய்து கழுவிய பிறகே உபயோகிக்கவும்.

    மற்ற காய்களையும் சுத்தம் செய்து துணியால் துடைத்து 1/2 மணி நேரம் ஃபேனுக்கு அடியில்  உலர வைத்து உபயோகிக்கவும்.

    எல்லா காய்களையும் நறுக்கி, அதில் உப்பு, எலுமிச்சைச்சாற்றையும் கலந்து மூன்று நாட்களுக்கு சுத்தமான காய்ந்த பாத்திரத்தில் வைத்திருக்கவும். அடிக்கடி எடுத்து நன்றாக குலுக்கி விடவும்.

    பிறகு இரண்டு நாட்கள் வெயிலில் உலர விடவும்.

    ஒரு காய்ந்த சுத்தமான ஜாடி அல்லது பாட்டிலில் இந்தக் கலவையை கொட்டி மிளகாய் தூள், மஞ்சள், கடுகுத் தூள், பச்சையான கடுகு எண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.

    அப்படியே காற்றுப் புகாதபடி 3 நாட்கள் வைத்திருக்கவும்.

    இந்த காய்கறி மிக்ஸ் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையாக இருக்கும்.

    கடுகு எண்ணெய் பிடிக்காதவர்கள் நல்லெண்ணெய் சூடு செய்து பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான பூரி செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு மசாலா பூரி செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    ரவை - ஒரு டீஸ்பூன்
    ப.மிளகாய் - 3
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

    கேழ்வரகு மசாலா பூரி

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் ரவையை உப்பு சேர்த்து அரைக்கவும்.

    அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, சேர்த்துக் கலந்து ப.மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

    பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த மாங்காய்த் துருவல் ஊறுகாய். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய்த் துருவல் - ஒரு கப்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    வறுத்துப் பொடி செய்த மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    மாங்காய்த் துருவல் ஊறுகாய்

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, மாங்காய்த் துருவலை சேர்த்து 3 நிமிடம் கிளறவும்.

    இதில் மஞ்சள்தூள், உப்பு, வறுத்து அரைத்த மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

    சூப்பரான மாங்காய்த் துருவல் ஊறுகாய் ரெடி.

    இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸ் வெஜிடபிள் சேர்த்து அருமையான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3,
    குடைமிளகாய் - 1,
    முட்டைகோஸ் - 100 கிராம், (விருப்பப்பட்டால்)
    கேரட் - கால் கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 3,
    கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
    சீஸ் - ஒரு சிறு கட்டி,
    எண்ணெய் - தேவையான அளவு,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - சுவைக்கேற்ப.

    சீஸ் வெஜிடபிள் ஆம்லெட்

    செய்முறை:

    கேரட், முட்டை கோஸ், ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.

    அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.

    விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம்.

    சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக சுவையாக செய்து கொடுக்க விரும்பினால் சேமியா, முட்டை சேர்த்து சுவையான இந்த டிபனை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்
    நெய் - தேவையான அளவு
    முட்டை - 3
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - தேவைகேற்ப
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பட்டை - 1 துண்டு
    கிராம்பு - சிறிதளவு
    சோம்பு - கால் ஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 3
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    முட்டை சேமியா

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் சேமியாவை சேர்த்து  நன்றாக வறுத்து கொள்ளலாம்.

    அதே கடாயில் ஒரு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு , சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளலாம்.

    கடாயில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு  தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

    உங்களுக்கு தேவையானால் கேரட்,பீன்ஸ், பச்சைப்பட்டாணி போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.

    ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 250 மி.லி வீதம் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக விடவும்.

    சேமியா நன்றாக வெந்ததும் இதனுடன் பொரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்துக் கிளறி கொஞ்சம் கொத்தமல்லி இலை தூவி கலந்து இறக்கவும்.

    சூப்பரான சேமியா முட்டை உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதம், தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய காராமணி - 100 கிராம்,
    துவரம்பருப்பு - 100 கிராம்
    சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சைப் பழ அளவு,
    கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    முளைகட்டிய காராமணி குழம்பு

    செய்முறை:

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    புளியை கரைத்துகொள்ளவும்.

    வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி. அதில் உப்பு, சாம்பார் பொடி போட்டு, முளைகட்டிய காராமணி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    காராமணி நன்றாக வெந்ததும் எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான முளைகட்டிய காராமணி குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - கால் கிலோ
    ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - ஒரு கப்
    தேங்காய்த்துருவல் - 2 கப்
    ஏலக்காய் - 2
    டூட்டி ப்ரூட்டி - கால் கப்
    பால் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய்
    உப்பு

    தேங்காய் பன்

    செய்முறை:

    முதலில் ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் விடவும்.

    மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு, எண்ணெய், உப்பு சேர்த்து கலந்து, ஈஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும்.

    இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் தேங்காய்த்துருவல், அரை கப் சர்க்கரை, ஏலக்காய், டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

    பின்னர் இரண்டு மடங்கு பெரியதாக ஆன மாவை இரண்டு சிறிய மற்றும் பெரிய பங்காக பிரித்துக் கொள்ளவும்.

    பிறகு, பேக்கிங் ஷீட் மீது சிறிய உருண்டையை வைத்து பெரியதாக விரித்து அதன் மீது தேங்காய் கலவை வைத்து மீண்டும் அதன் மீது விரித்த மாவை வைத்து ஓரங்களில் அழுத்திவிடவும். அதன்மீது பாலை தொட்டு தடவவும்.

    ஓவனை 150 டிகிரி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்து இதனை வைத்து சுமார் 25 முதல் 30 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்து வி வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

    சுவையான தேங்காய் பன் ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்நாடகா சமையலின் ருசி என்றுமே அலாதிதான். இன்று கர்நாடகா ஸ்பெஷல் மத்தூர் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    ரவை - ஒரு கப்,
    மைதா மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    துருவிய தேங்காய் - கால் கப்,
    வேர்க்கடலை, வெள்ளை எள் - சிறிதளவு,
    மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    மத்தூர் வடை

    செய்முறை:  

    ரவை, மைதா, அரிசி மாவு மூன்றினையும் துருவிய தேங்காயுடன் கலந்து கொள்ளவும்.

    கலவையில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு எண்ணெய், வெள்ளை எள் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி ஆட

    கலந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொன்றையும் தட்டையைப் போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓமம் ஜீரண சக்தி தரும். வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாரம் ஒருமுறை இந்த குழப்பை வைத்து சாப்பிடலாம். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓமம் - 1 டீஸ்பூன்,
    புளி -  எலுமிச்சைப் பழ அளவு,
    சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
    கடுகு, கடலைபருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    ஓமம்

    செய்முறை:

    புளியை கரைத்து கொள்ளவும்.

    ஓமத்தை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் கைகளால் நன்றாக பொடித்து கொள்ளவும்.

    மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும்.

    இதில் கரைந்த புளி கரைத்து ஊற்றி... உப்பு, ஓமம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

    சத்தான ஓமக் குழம்பு ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொச்சை காரக்குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மொச்சை வைத்து சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உலர் மொச்சை - 100 கிராம்,
    சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
    துவரம்பருப்பு - 100 கிராம்,
    புளி -  எலுமிச்சைப் பழ அளவு,
    தேங்காய்த் துருவல் - சிறிய கப்,
    கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,  
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    மொச்சை சாம்பார்

    செய்முறை:

    மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும்.

    துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும்.

    தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும்.

    இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த  விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.

    சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

    கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

    சூப்பரான மொச்சை சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×