search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய் பன்
    X
    தேங்காய் பன்

    வீட்டிலேயே செய்யலாம் தேங்காய் பன்

    தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - கால் கிலோ
    ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - ஒரு கப்
    தேங்காய்த்துருவல் - 2 கப்
    ஏலக்காய் - 2
    டூட்டி ப்ரூட்டி - கால் கப்
    பால் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய்
    உப்பு

    தேங்காய் பன்

    செய்முறை:

    முதலில் ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் விடவும்.

    மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு, எண்ணெய், உப்பு சேர்த்து கலந்து, ஈஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும்.

    இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் தேங்காய்த்துருவல், அரை கப் சர்க்கரை, ஏலக்காய், டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

    பின்னர் இரண்டு மடங்கு பெரியதாக ஆன மாவை இரண்டு சிறிய மற்றும் பெரிய பங்காக பிரித்துக் கொள்ளவும்.

    பிறகு, பேக்கிங் ஷீட் மீது சிறிய உருண்டையை வைத்து பெரியதாக விரித்து அதன் மீது தேங்காய் கலவை வைத்து மீண்டும் அதன் மீது விரித்த மாவை வைத்து ஓரங்களில் அழுத்திவிடவும். அதன்மீது பாலை தொட்டு தடவவும்.

    ஓவனை 150 டிகிரி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்து இதனை வைத்து சுமார் 25 முதல் 30 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்து வி வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

    சுவையான தேங்காய் பன் ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×