என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
தீபாவளி அன்று கஷ்டமான பலகாரங்களை செய்வதைவிட சுலபமான இந்த அச்சு முறுக்கை செய்து அசத்துங்கள்.. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப்
மைதா - 1/4 கப்
முட்டை - 4
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும்.
அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீராக இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காயவைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை எண்ணெயில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில்மாவு அச்சில் ஒட்டிக்கொள்ளும்.
உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணெயில் மூழ்கும்படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணெயில் விழுந்து விடும்.
பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விடவும்.
எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்து எடுக்கவும்.
அது சிவப்பாக மாறும்போது எடுத்து எண்ணெய் வடிகட்டி நீக்கவும், ஈரம் இல்லாத பாத்திரத்தில் அச்சு முறுக்கினை பாதுகாப்பாக இரண்டு மாதங்கள் வரையில் வைக்கலாம்.

இலேசான இனிப்புடன் கூடிய இந்தமுறுக்கு "அச்சப்பம்" என்றும் " ரோஸ் குக்கி" என்றும் அழைக்கப்படுகிறது..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
தீபாவளி பலகாரம் என்றால் அதில் அதிரசம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று மிகவும் சுலபமான முறையில் வெல்ல அதிரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - அரை கிலோ
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ள போதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.
பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும்.
ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் போட்டு எடுக்கவும்.
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார்.

மாவு கிளறியவுடன் அதிரசம் சுடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பலகாரம், இனிப்பு வகைகள் இல்லாமல் தீபாவளியே கிடையாது. அந்த வகையில் தீபாவளி பலகாரம் லிஸ்டில் முக்கிய இடம் பிடிக்கும் இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 1/2 கப்
தேங்காய் துருவியது - 1/2 கப்
கருப்பு வெல்லம் - 1 கப்
கருப்பு மற்றும் வெள்ளை எள் - 1/2 கப்
எண்ணெய் - வறுக்க
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீர் வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய மாவு பதத்தில் அரைக்கவும்.
அரைத்ததும் ஜல்லடையில் மாவை போட்டு ஜலித்து கொள்ளவும்.
வெல்லத்தை கடாயில் போட்டு அதனுடன் 1 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு உருக வைக்காமல் வெல்லம் கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிட்டாலே இறக்கி விடவும்.
அடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்துக்கொள்ளவும். எள்ளை மாவில் கலந்துகொள்ளவும்.
அடுத்ததாக உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும்.
ஒருவேலை மாவில் தண்ணீர் அதிகமாக தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும்.
சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டுமெனில் சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன்தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
பிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
அடுத்ததாக எண்ணெயை கடாயில் ஊற்றி நன்கு காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வ்ந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும். எனவே நன்கு வறுத்தெடுக்கவும்.
வறுக்கும்போது சில சமயத்தில் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பாதுகாப்புடன் கையாளுங்கள்.

சூப்பரான இனிப்பு சீடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பிரெட்டை வைத்து எளிமையான முறையில் ரச மலாய் எப்படி செய்யலாம் என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
பிரெட் - 5 ஸ்லைஸ்கள்
சர்க்கரை - 50 கிராம்
முந்திரி - சிறிதளவு நறுக்கியது
பிஸ்தா - சிறிதளவு நறுக்கியது
கிஸ்மிஸ் - சிறிதளவு
பாதாம் - சிறிதளவு நறுக்கியது
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
பாலை நான்ஸ்டிக் வாணலியில் ஊற்றி சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதிக்கும் பொழுது கரண்டியால் அதை நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பாலானது நிறம் மாறும் பொழுது எடுத்து வைத்துள்ள சர்க்கரை, சிறிதளவு முந்திரி, பிஸ்தா, பாதாம் மற்றும் உலர் திராட்சை (கிஸ்மிஸ்) போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
பின்பு, நடுத்தரமாக தீயை வைத்து பாலானது நான்கில் ஒரு பாகமாக சுண்டும் வரை கரண்டியால் கிளறவும். அதன் மேல் ஆடையானது படியப்படிய அவற்றைக் கரண்டியால் கிளறி குறைந்தது இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்தால் பாலானது கெட்டியாகத் துவங்கி விடும்.
இப்பொழுது பிரட் துண்டுகளை எடுத்து ஓரத்திலிருக்கும் பிரவுண் பகுதியை நீக்கி விட்டு வெள்ளைப் பகுதியை ஒரு டம்ளர் அல்லது விளிம்பு கூரான கிண்ணத்தின் உதவியால் பட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
இந்த வட்டமான வில்லைகளை மலாய் பாலில் அரை நிமிடம் ஊறவிட்டு பின்பு வெளியே எடுத்து தட்டில் வைத்து அவற்றின் மேல் மலாய் பாலை ஊற்றி அதன்மேல் மீதம் வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை மற்றும் குங்குமப்பூவைத் தூவினால் பிரெட் ரசமலாய் தயார்.
பால் - 1 லிட்டர்
பிரெட் - 5 ஸ்லைஸ்கள்
சர்க்கரை - 50 கிராம்
முந்திரி - சிறிதளவு நறுக்கியது
பிஸ்தா - சிறிதளவு நறுக்கியது
கிஸ்மிஸ் - சிறிதளவு
பாதாம் - சிறிதளவு நறுக்கியது
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
பாலை நான்ஸ்டிக் வாணலியில் ஊற்றி சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதிக்கும் பொழுது கரண்டியால் அதை நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பாலானது நிறம் மாறும் பொழுது எடுத்து வைத்துள்ள சர்க்கரை, சிறிதளவு முந்திரி, பிஸ்தா, பாதாம் மற்றும் உலர் திராட்சை (கிஸ்மிஸ்) போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
பின்பு, நடுத்தரமாக தீயை வைத்து பாலானது நான்கில் ஒரு பாகமாக சுண்டும் வரை கரண்டியால் கிளறவும். அதன் மேல் ஆடையானது படியப்படிய அவற்றைக் கரண்டியால் கிளறி குறைந்தது இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்தால் பாலானது கெட்டியாகத் துவங்கி விடும்.
இப்பொழுது ஏலக்காய் பொடியைத் தூவி ஒரு நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாணலியை கீழே வைத்து நன்கு ஆற வைக்க வேண்டும். இந்த மலாய் பாலானது மேலும் கெட்டிப் பதத்தில் பார்க்கவே கலர் ஃபுல்லாக இருக்கும்.
இந்த வட்டமான வில்லைகளை மலாய் பாலில் அரை நிமிடம் ஊறவிட்டு பின்பு வெளியே எடுத்து தட்டில் வைத்து அவற்றின் மேல் மலாய் பாலை ஊற்றி அதன்மேல் மீதம் வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை மற்றும் குங்குமப்பூவைத் தூவினால் பிரெட் ரசமலாய் தயார்.
இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், காலையில் அதை வைத்து சூப்பரான கைமா இட்லி செய்யலாம். இந்த கைமா இட்லியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 10
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2
பச்சை பட்டாணி - 1/4 கப்
குடைமிளகாய் - 1
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் (தனியா) தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
இட்லிகளை துண்டு களாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

சூப்பரான கைமா இட்லி ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வாழைப்பழம், அவல், வேர்க்கடலை சேர்த்து செய்யும் இந்த கட்லெட் மிகவும் சத்தான ஸ்நாக்ஸ். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 2
சிவப்பு அவல் - அரை கப்
வேர்க்கடலை - கால் கப்
நாட்டு சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
செய்முறை
வாழைப்பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.
சிவப்பு அவலை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் ஊற்ற ஊறவைத்து கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்து கொள்ளவும்.
வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி விட்டு போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, ஊற வைத்த அவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு ஒருபுறம் சிவக்க வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சத்தான வாழைப்பழ கட்லெட் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
இறால் சுக்கா தென்னிந்தியாவின் கடலோர மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. நாவில் எச்சில் ஊறும் ஹோட்டல் ஸ்டைல் இறால் சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய இறால் - அரை கிலோ
குடைமிளகாய் (சிவப்பு மற்றும் மஞ்சள்) - 1
கல் பாசி - சிறிதளவு
அன்னாசி பூ - 2
காய்ந்த மிளகாய் - 10
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி- பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
இறாலை நன்றாக கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மஞ்சள் தடவிய இறாலைபோட்டு பொரித்து எடுக்கவும்.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடை மிளகாயை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு கலவையை போட்டு கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி மற்றும் உப்பு போட்டு தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும்.
கடைசியாக வறுத்து இறால் மற்றும் வெட்டிய குடை மிளகாயை சேர்க்கவும்.
வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வெட்டிய பச்சை மிளகாயை அலங்காரமாக வைத்து பரிமாறவும்.

சூப்பரான இறால் சுக்கா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பட்டாணி சாட். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குட்டி பூரிகள் (கடைகளில் பாக்கெட் டாக கிடைக்கும்) - 10
காய்ந்த பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
கெட்டித் தயிர் - அரை கப்
ஸ்வீட் சட்னி - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன்
ஓமப்பொடி (ஸ்நாக் வகை) - கால் கப்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பச்சை மிளகாயை போட்டு வதக்கி, வெந்த பட்டாணி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
ஒரு தட்டில் பட்டாணி கலவையை சேர்த்து அதன் மேல் பொடித்த பூரி துண்டுகள், கெட்டித் தயிர், ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

சூப்பரான பட்டாணி சாட் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று பாகற்காய் காரக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 300 கிராம்,
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 50மி.லி.,
தக்காளி - 2,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்.
செய்முறை
சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.
பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு முக்கால் பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
அல்வா நெய் அல்லது மற்ற எண்ணெய்களில் செய்யப்படும் ஒன்று. ஆனால், இந்த மஸ்கோத் அல்வா முழுக்க முழுக்க எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் பாலால் தயாரிக்கின்றனர்.
தேவையான பொருள்:
மைதா - 1/2 கப்
தேங்காய் - 1
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 10
செய்முறை
நீங்கள் அல்வா செய்வதற்கு முந்திய நாள் மைதாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து தண்ணீரில் ஊற விட வேண்டும். பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் பத்திற்கு பிசையவும். பால் போன்று இருக்கும் மைதா தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். மறுநாள் வடிகட்டிய பாலின் மேலோடோயை மட்டும் நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.
தேங்காயை துருவி அதிலிருந்து 3 கப் வரை தண்ணீர் சேர்க்காமல் பாலை எடுத்து வைக்க வேண்டும்.
கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்த தேங்காய்பால், சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் மைதா பாலினையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
தொடர்ந்து கெட்டிப்பதம் வரும் வரை கலக்கிகொண்டே இருக்கவும்.
தேங்காய்பாலில் இருக்கும் எண்ணெய் சூட்டில் வெளிவந்து அல்வா வேக சரியான பதத்திற்கு வந்துவிடும்.
தற்போது அல்வா சுருண்டு விடும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் பரிமாறலாம்.

இப்பொழுது சுவையான மஸ்கோத் அல்வா தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
சிக்கன், மட்டன், இறால், மீன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான இளநீர் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொங்கு இளநீர் - 5,
சீரக சம்பா - 1/2 கிலோ
சிக்கன் - அரை கிலோ
வெண்ணெய் - 2 தேக்கரண்டி,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 10,
இஞ்சிப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
தேங்காய்ப்பால் - 100 கிராம்,
உப்பு - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
சீரகம் - 1 தேக்கரண்டி,
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
ஏலக்காய், கிராம்பு - தலா 4,
பிரியாணி இலை - சிறிதளவு.
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சீரக சம்பா அரிசியை முக்கால் பதத்துக்கு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததைத் தனியாக கொட்டி ஆறவிடவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து, சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
அடுத்து தக்காளி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை சேர்த்து சிக்கன் வேகும் வரை சமைக்கவும்.
இப்போது ஆறவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இளநீர் குடுவையில் மூடி தணலில் தம் போடணும். (முன்பே அடுப்பு கரியில் தணல் போட்டு வைக்கவும்.
இருபது நிமிடங்கள் வேகவைத்து கொத்தமல்லி, மிளகுத் தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான இளநீர் தம் பிரியாணி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
குழந்தைகளுக்கு பான் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான எளிய முறையில் நூடுல்ஸ் வைத்து பான் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - ஒரு கப்,
பிளெய்ன் நூடுல்ஸ் - அரை பாக்கெட்,
கேரட் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெங்காயம் - ஒன்று
இட்லி மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 50 கிராம்,
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நூடுல்ஸை வேகவிட்டு, வடிகட்டி, ஆறியபின் தோசைமாவில் சேர்க்கவும்.
துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சூடான தவாவில் ஒன்றரை கரண்டி மாவை கனமான ‘பேன் கேக்’ ஆக ஊற்றவும்.
எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு மேலே சிறிதளவு இட்லி மிளகாய்ப் பொடி தூவவும்.

தேங்காய் சட்னி, புதினா/கொத்தமல்லி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.