search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாழைப்பழ கட்லெட்
    X
    வாழைப்பழ கட்லெட்

    சத்தான ஸ்நாக்ஸ் வாழைப்பழ கட்லெட்

    வாழைப்பழம், அவல், வேர்க்கடலை சேர்த்து செய்யும் இந்த கட்லெட் மிகவும் சத்தான ஸ்நாக்ஸ். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 2
    சிவப்பு அவல் - அரை கப்
    வேர்க்கடலை - கால் கப்
    நாட்டு சர்க்கரை - கால் கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    நெய் - சிறிதளவு

    செய்முறை

    வாழைப்பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.

    சிவப்பு அவலை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் ஊற்ற ஊறவைத்து கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்து கொள்ளவும்.

    வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி விட்டு போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, ஊற வைத்த அவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த கலவையை வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும்.

    தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு ஒருபுறம் சிவக்க வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான வாழைப்பழ கட்லெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×