என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    நவராத்திரி ஒன்பது நாட்களுள் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானது. அன்று அரிசியினால் செய்யப்படும் வெல்ல புட்டு நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கப்
    வெல்லம் - அரை கப்
    துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    நெய் - 1 தேக்கரண்டி
    முந்திரி - தேவையான அளவு
    ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

    செய்முறை

    ஒரு கப் பச்சரிசியை  30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

    30 நிமிடம் கழித்து ஒரு துணியில் தண்ணீரை வடித்து உலர விடவும்.

    ஈரம் போனவுடன் மிக்சி ஜாரில் போட்டு மாவாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரைத்த மாவை போட்டு மணல் பதத்திற்கு வறுத்து கொள்ளவும்.

    துவரம் பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை வேக்காடாக குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கப் தண்ணீரை மிதமாக சூடு செய்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் தூவி அதை கலந்து கொள்ளவும்.

    அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை போட்டு அதில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசிறி கொள்ளவும்.

    மாவு பிடித்தால் உருவம் வரும் கொஞ்சம் அழுத்தினால் உடைந்து விடும் அது தான் மாவின் பதம்.

    ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மாவை கொட்டி ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    மாவு வேக்காட்டில் இருக்கும் பொழுதே மற்றொரு அடுப்பில் கனமான ஒரு பாத்திரத்தை  போட்டு அதில் வெல்லத்தை போட்டு அது முழ்கும் அளவிற்கு சிறிது நீரை ஊற்றவும்.

    வெல்லம் கரைந்தவுடன் அதை வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கெட்டி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.

    சாதாரண தண்ணீரில் காய்ச்சி பாகினை ஊற்றினால் உருண்டு வரவேண்டும்.

    ஏலப்பொடி நெய்யில் வறுத்தெடுத்த தேங்காய் துருவல், முந்திரியை சேர்த்து கிளறி கொள்ளவும்.

    வெல்லப்பாகில் ஆவியில் வைத்த புட்டு மாவினை போட்டு கிளறி கொண்டு  அரை வேக்காடு துவரம் பருப்பையும் சேர்க்கவும். இறுதியில் மிஞ்சிய நெய்யை ஊற்றி கலந்தால் புட்டு ரெடி.

    புட்டு மாவு கட்டியாக  இருந்தால் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளவும். நேரம் ஆக ஆக புட்டு உதிரியாகி விடும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நவராத்திரி ஒவ்வொரு நாளும் வீட்டில் வைத்திருக்கும் கொலுவை பார்க்க வரும் உங்கள் சுற்றத்தாருக்கு பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் உணவுகளை வழங்குவீர்கள். இன்று இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 1 கப்,
    சர்க்கரை - 3/4 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    எண்ணெய் - பொரிக்க,
     உலர்ந்த திராட்சை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி- தேவையான அளவு.

    செய்முறை :

    முதலில் கடலை மாவை சிறிது ஆப்ப சோடா கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    நிறம் வர சிறிது வண்ண எசன்ஸ் கலந்து கொள்ளவும். வண்ணம் தேவையில்லையெனில் அது வெள்ளை கலர் பூந்தியாகவும் செய்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவைகளை பொரித்து வைத்து கொள்ளவும்.

    வேறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கரைத்த கடலை மாவை ஜல்லி கரண்டியில் விட்டு முத்து முத்தாய் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அதாவது கம்பி பதத்தில் சர்க்கரை பாகு வரவேண்டும்.

    இதில் பொரித்த பூந்திகளை போட்டு கிளறி உதிரியாக செய்து அதனுடன் பொரித்த முந்திரி, திராட்சைகளை கலந்து பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பூந்தி ரெடி.
    ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச்சு அதிகமுள்ளது. செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான உண வாக ஜவ்வரிசி உள்ளது.
    தேவையான பொருட்கள்:

    நெய் - 100 கிராம்
    ஜவ்வரிசி - ½ கப்
    பால் - ஒரு கப்
    தண்ணீர் - ஒரு கப்
    சர்க்கரை - ½ கப்
    குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊறவைத்தது)
    முந்திரி, திராட்சை சிறிதளவு(வறுத்தது)
    ஏலக்காய் பொடி - ¼ ஸ்பூன்

    செய்முறை:

    குக்கரில் சிறிதளவு நெய்விட்டு அரை கப் ஜவ்வரிசியை போட்டு மிதமான சூட்டில் மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

    ஒரளவு வதங்கிய பின் அத்துடன் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் விடவும்.

    ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து ஜவ்வரிசி நன்கு வெந்திருக்கிறதா என்று பார்க்கவும். வேகவில்லை என்றால் இன்னும் ஒன்றிரண்டு விசில்கள் விடலாம்.

    பின்பு ஒரு நான்ஸ்டிக் கடாயில் இந்தக்கலவையை ஊற்றி அத்துடன் எடுத்து வைத்துள்ள சர்க்கரை, குங்குமப்பூ போன்றவற்றை சேர்த்து, தேவையான அளவு நெய்யும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

    நெய் கடாயின் ஓரத்தில் பிரிந்து வரும்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    வேரொரு பாத்திரத்திற்கு அல்வாவை மாற்றி வைக்கும் பொழுது அல்வா அதிகம் கெட்டியாவது தவிர்க்கப்படும்.

    சூப்பரான ஜவ்வரிசி அல்வா.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நவராத்திரி சமயங்களில் வீட்டிலேயே எளிய பிரசாதங்களை செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சரி, இன்று வேர்கடலை - தேங்காய் சாதம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - கால் கப்
    வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
    கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
    உளுந்து - ஒரு தேக்கரண்டி
    வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
    கடுகு - ஒரு தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - சிறு துண்டு
    கொத்தமல்லி - சிறிது
    பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க
    தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப

    செய்முறை :

    உதிரியாக வடித்த சாதத்தை தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

    கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர்  பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

    நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சுவையான வேர்கடலை - தேங்காய் சாதம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நவராத்திரி சமயங்களில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிதில் பலகாரங்களைச் செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. சரி, எளிதில் செய்யக்கூடிய எள் பர்ஃபியை பார்க்கலாம் வாங்க.
    எள்ளில் வைட்டமின் பி1, பி6, நியாசின், தையாமின், போலிக் அமிலம், ரிபோ பிளேவின் போன்ற வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் இரும்புசத்து உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் - 1 கப்
    நெய் - 3 ஸ்பூன்
    வெல்லம் - ½ கப்
    தண்ணீர் - சிறிதளவு
    பிஸ்தா, பாதாம் - சிறிதளவு (நறுக்கியது)

    செய்முறை:

    வாணலியில் ஒரு கப் வெள்ளை எள்ளை போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து மூன்று நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த எள் ஆறியவுடன் அதை மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு தவாவில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் பொடி செய்து வைத்துள்ள அரை கப் வெல்லத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும். பாகு வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள எள்ளை சேர்த்து ஒரளவு திரண்டு வரும் வரை கை விடாமல் கிளறவும்.

    பின்பு, நெய் தடவிய தட்டில் திரண்ட எள்ளை கொட்டி சமன் செய்து அதன் மேல் நறுக்கி வைத்துள்ள பாதாம், பிஸ்தாக்களால் அலங்காரம் செய்யவும்.

    வெது வெதுப்பாக சூடு இருக்கும் பொழுதே கத்தியில் நெய் தடவிக் கொண்டு வேண்டிய அளவில் பர்பியாக அறுக்கவும். ஆறிய பிறகு பர்பியாக துண்டுகள் போடுவது மிகவும் கடினமாகி விடும்.

    இப்பொழுது, சுவையான சத்துகள் நிறைந்த எள் பர்ஃபி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வெண்டைக்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கு நன்மை புரிகிறது. இதில் உள்ள நார்ப்பொருட்களால் கொழுப்பு கரைந்து, மலச்சிக்கல் நீங்கும்.
    தேவையான பொருட்கள் :
     
    வெண்டைக்காய் - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :
     
    வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக நறுக்கி நடுவில் கீறி கொள்ளவும்.
     
    ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
     
    இந்த கலந்த மசாலாவை வெண்டைக்காயின் நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.
     
    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பிரை தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் மயோனைஸை தயாரிப்பது, அத்தனை பெரிய காரியமில்லை. வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்பதைக் காணலாம்.
    தேவையான பொருட்கள்:

    சமையல் எண்ணெய் - ஒரு கப்
    முட்டை - 2
    கடுகுத் தூள் - 1 மேசைக் கரண்டி
    எலுமிச்சை சாறு - 1 மேசைக் கரண்டி
    உப்பு - சிறிதளவு

    மயோனைஸ் செய்ய தேவையான பொருட்கள்

    செய்முறை :

    மிக்ஸி ஜாரில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    அதில் கடுகுத் தூள், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் , கொஞ்சம் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும். இவ்வாறு செய்வதால் முட்டை கலவை கெட்டிப் பதத்திற்கு வரும்.

    பின் இறுதியாக மொத்த எண்ணெயையும் ஊற்றி நன்கு அரைத்தால் கெட்டியான பதத்தில் மயோனைஸ் ரெடி.

    இதை சிக்கன் 65, சாலட், சாண்ட்விச் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் நல்லி பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் நல்லி - 200 கிராம்,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    தக்காளி - 1,
    இஞ்சி, பூண்டு விழுது- தேவைக்கு,
    பட்டை, சோம்பு, சீரகம் - தேவைக்கு
    க.எண்ணெய் - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மிளகாய்த்தூள்- தேவைக்கு,
    உப்பு- தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    மட்டன் நல்லியை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிய பிறகு நல்லி எலும்புகளை அதில் சேர்த்து கிளறிய பிறகு சிறிது நேரம் மூடி விடவும்.

    சிறிது நேரம் கழித்து தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

    சூப்பரான மட்டன் நல்லி பெப்பர் பிரை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிக்கன், காளான் பெப்பர் பிரை சாப்பிட்டிருப்பீர்கள். அந்த வகையில் இன்று பன்னீரை வைத்து அட்டகாசமான பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்
    சோளமாவு - 25 கிராம்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு நறுக்கியது - 25 கிராம்
    வெங்காயம் - 1 பெரியது
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    நொறுக்கிய மிளகு - 20 கிராம்
    உப்பு - சுவைக்கேற்ப
    கொத்தமல்லி - ஒரு கட்டு
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை


    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீர் துண்டுகளை, சோளமாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு நன்குப் பொரித்து கொள்ளவும். எண்ணெயில் இருந்து எடுத்து, கிச்சன் டவலில் வைத்து, எண்ணெயை வடிக்கவும்.

    வேறொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

    வெங்காயம், கறிவேப்பிலைகள், பச்சை மிளகாய் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்த பன்னீர் துண்டுகள், மிளகு தூள், எலுமிச்சை சாறு சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான பன்னீர் பெப்பர் பிரை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நாண், சப்பாத்தி, பூரி, புலாவ், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காளான் குருமா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    காளான் - 250 கிராம்
    சின்ன வெங்காயம் - 150
    தக்காளி - 2
    தேங்காய் - 1/2 மூடி
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    மல்லிதூள், மிளகாய்தூள் - தலா 2 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
    சோம்பு - கால் ஸ்பூன்
    கசகசா - கால் ஸ்பூன்
    பட்டை இலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு,எண்ணை - தேவைக்கேற்ப

    செய்முறை  :

    காளான்களைக் கழுவிச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கசாகசா-சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    தேங்காய், மிளகு, சீரகம் முன்றையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை போட்டுதாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி நன்கு குழை வதங்கியதும் அரைத்த பட்டை கசாகசா சேர்த்து நன்க வதக்கி அதனுடன் மசாலா தூள்களையும் போட்டு வதக்கி காளான் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் சேர்த்து குக்கரில் 2 விசில் போட்டு இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.        

    சூப்பரான காளான் குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு சாக்லேட் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். கடையில் கிடைக்கும் ரிச் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்
    கோக்கோ பவுடர் - 2/3 கப்
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    வெண்ணெய், அடித்தது - 3/4 கப் 
    பொடித்த சர்க்கரை -  1 3/4 கப்
    வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - 2 தேக்கரண்டி
    பெரிய முட்டை - 1
    சூடான நீர் - 1 கப்

    செய்முறை:

    மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போடவும்.

    வெண்ணெயை நன்கு அடித்து, சர்க்கரை, வெணிலா எக்ஸ்ட்ராக் ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து, கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
    அடுத்து அதில் முட்டையைச் சேர்த்து, மீண்டும் அடித்து கலக்கவும்.

    மாவு கலவையை மெதுவாக சேர்த்து, தொடர்ந்து அடித்துக் கலக்கவும், தேவையான பதம் கிடைக்க அவ்வப்போது சுடுநீரைச் சேர்க்கவும். தனித்தனி பாத்திரத்தில் பரப்பி வைக்கவும்.

    சுமார் 25 முதல் 35 நிமிடங்களுக்கு அல்லது மரக்குச்சியை நுழைத்து எடுக்கும்போது, ஒட்டாமல் வரும் வரைக்கும் பேக் செய்யவும். 15 நிமிடங்களுக்கு குளிர வைக்கவும்.

    முழுமையாக ஆறிய பிறகுதான் ரிச் சாக்லெட் கேக் சரியான பதத்தில் இருக்கும்.

    ஆறிவிட்டதை உறுதி செய்வதற்காக திருப்பி வைத்து சிறிது நேரம் வைத்திருக்கவும். இதோ யம்மியான கேக் தயார்.

    குறிப்பு: க்ரீம் பதம் வரும் வரை நன்கு கலக்க மறக்க வேண்டாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி - கால் கப்
    உளுந்து - அரை கப்
    ஆய்ந்த முருங்கை இலை - 1 கைப்பிடி
    எள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×