search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பட்டாணி சாட்
    X
    பட்டாணி சாட்

    மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி சாட்

    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பட்டாணி சாட். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    குட்டி பூரிகள் (கடைகளில் பாக்கெட் டாக கிடைக்கும்) - 10
    காய்ந்த பட்டாணி - ஒரு கப்
    வெங்காயம் - ஒன்று
    சீரகம் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 4
    கெட்டித் தயிர் - அரை கப்
    ஸ்வீட் சட்னி - ஒரு டீஸ்பூன்
    சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன்
    ஓமப்பொடி (ஸ்நாக் வகை) - கால் கப்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பச்சை மிளகாயை போட்டு வதக்கி, வெந்த பட்டாணி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

    ஒரு தட்டில் பட்டாணி கலவையை சேர்த்து அதன் மேல் பொடித்த பூரி துண்டுகள், கெட்டித் தயிர், ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

    சூப்பரான பட்டாணி சாட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×