என் மலர்

  ஆரோக்கியம்

  மஸ்கோத் அல்வா
  X
  மஸ்கோத் அல்வா

  வீட்டிலேயே செய்யலாம் மஸ்கோத் அல்வா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அல்வா நெய் அல்லது மற்ற எண்ணெய்களில் செய்யப்படும் ஒன்று. ஆனால், இந்த மஸ்கோத் அல்வா முழுக்க முழுக்க எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் பாலால் தயாரிக்கின்றனர்.
  தேவையான பொருள்:

  மைதா - 1/2 கப்
  தேங்காய் - 1
  சர்க்கரை - 1 1/2 கப்
  முந்திரி - 10

  செய்முறை

  நீங்கள் அல்வா செய்வதற்கு முந்திய நாள் மைதாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து தண்ணீரில் ஊற விட வேண்டும். பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் பத்திற்கு பிசையவும். பால் போன்று இருக்கும் மைதா தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். மறுநாள் வடிகட்டிய பாலின் மேலோடோயை மட்டும் நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.

  தேங்காயை துருவி அதிலிருந்து 3 கப் வரை தண்ணீர் சேர்க்காமல் பாலை எடுத்து வைக்க வேண்டும்.

  கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்த தேங்காய்பால், சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் மைதா பாலினையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

  தொடர்ந்து கெட்டிப்பதம் வரும் வரை கலக்கிகொண்டே இருக்கவும்.

  தேங்காய்பாலில் இருக்கும் எண்ணெய் சூட்டில் வெளிவந்து அல்வா வேக சரியான பதத்திற்கு வந்துவிடும்.

  தற்போது அல்வா சுருண்டு விடும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் பரிமாறலாம்.

  இப்பொழுது சுவையான மஸ்கோத் அல்வா தயார்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
  Next Story
  ×