என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாம்பழ சீசன் முடிவதற்குள்ளே என்னென்ன வித்தியாசமான ரெசிபிகளை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து சுவைக்கலாம். இன்று சூப்பரான மாம்பழ சீஸ் கேக் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிஸ்கட்  - 1/2 பாக்கெட்
    வெண்ணெய்  - 10 கிராம்
    சீஸ் - 50 கிராம்
    தயிர் -  2 டேபிள் ஸ்பூன்
    பொடித்த சர்க்கரை - 100 கிராம்
    மாம்பழச் சாறு - 1/2 கப்
    மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு
    ஜெலடின் - 1 ஸ்பூன்
    லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    வெண்ணெயை உருக்கி அதனுடன் பிஸ்கட்டை பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.

    இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.

    ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், சீஸ், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.

    கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீல்மேக்கரில் வடை செய்து மாலை வேளையில் காபி அல்லது டீயுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த மீல்மேக்கர் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 1 கப்
    கடலை மாவு - 1 கப்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மட்டன் மசாலா - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    மீல்மேக்கர்

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பின் ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    அதற்குள் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைத் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த மீல் மேக்கரை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    இறுதியில் இந்த கலவையை வடைகளாக தட்டி, அடுப்பில் உள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீல்மேக்கர் வடை ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கரம் மசாலா பொடியை கடையில் வாங்கி உபயோகித்து இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சுலபமான முறையில் கரம் மசாலா பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம்
    பட்டை - 10 கிராம்
    கிராம்பு - 10 கிராம்
    அன்னாசிப்பூ - 10 கிராம்
    ஏலக்காய் - 10 கிராம்

    செய்முறை

    எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும்.

    அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.

    நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.

    பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சுலபமான முறையில் இறால் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - கால் கிலோ
    பாசுமதி அரிசி - 4 கப்
    வெங்காயம் - 4
    முட்டை - 4
    பூண்டு - 1 டீஸ்பூன்
    கேரட் - 1
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    மீன் சாஸ் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - 1 கட்டு

    செய்முறை:


    கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதனுடன் பூண்டை சேர்த்துக்கொள்ளவும்.

    அடுத்து கேரட்டையும் சேர்த்து வதக்கவும்.

    முட்டையையும் ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறி விடவும்.

    நன்கு வெந்ததும் வேக வைத்த சாதத்தை கொட்டி கிளறவும்.

    அதனுடன் சோயா சாஸ், மீன் சாஸ், மிளகுத்தூள், வெங்காயம், வெங்காய்த்தாள் போன்றவற்றை கலந்து வேகவிடவும்.

    அவை வெந்து பிரைடு ரைஸ் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

    சூப்பரான இறால் பிரைடு ரைஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் இட்லி என்றால் சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இப்படி வித்தியாசமான முறையில் ஸ்டஃப்டு மசாலா இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - ஒரு பெரிய கப்
    பட்டாணி - 1/2 கப்
    உருளை கிழங்கு - 2 (பெரியது)
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை
     
    பட்டாணியை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

    உருளைக் கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து விடவும்.

    கடுகு, சீரகம் பொரிந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துப் பிரட்டி விட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.

    அதனுடன் பொடி வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அடுத்து ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும்.

    இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான மசாலா ஸ்டஃப்டு இட்லி தயார்.

    சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதாரண காபியை விட ஃபில்டர் காபியின் நறுமணமும், சுவையும் அடடே பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல வைக்கும்.. சரி, இப்போ ஃபில்டர் காபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்...
    தேவையான பொருட்கள்:

    பால், காபி தூள் - 3 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்கவும்.

    பிறகு, காபி ஃபில்டரின் மேல் பகுதியில் காபி பவுடரை சேர்க்கவும். அத்துடன் சுடு தண்ணீரை ஊற்றி மூடி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சவும்.

    ஒரு டம்ளரில் தேவையான அளவு சர்க்கரை போட்டு, அத்துடன் டீகாஷன் மற்றும் பால் சேர்த்து ஸ்பூன் வைத்து கலக்கினால் சுட சுட ஃபில்டர் காபி ரெடி..!

    குறிப்பு: ஒரு முறை பயன்படுத்திய டிகாஷனை மேற்ப்படி கூறியதுபோல் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உணவுகளை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்தவகையில் இன்று ஸ்மைலி சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரெட் துண்டு - 4,
    சாஸ் அல்லது மையோனஸ் - தேவையான அளவு

    செய்முறை

    4 பிரட் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளுங்கள்.

    ஸ்மைலி சாண்ட்விச்

    இரண்டு பிரட் துண்டுகளுக்கு நடுவே சாஸ் அல்லது மையோனஸ் தடவி, ஒட்டிக்கொள்ளுங்கள்.

    வீட்டில் புதினா சட்னி இருந்தால் அதையும் மையோனஸுடன் தடவிக்கொள்ளலாம்.

    சாண்ட்விச்சின் மேல் பாகத்தில் சாஸ் ஊற்றி கண் மற்றும் வாய் பகுதிகளை உருவாக்கி கொள்ளுங்கள்.

    அழகுபடுத்த ஆலிவ் பழங்களை கூட நறுக்கி, கண் பகுதியை உருவாக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான தந்தூரி சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். செய்வதும் மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள்

    சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :


    தயிர் - ஒரு கப்
    பூண்டு - ஒன்று
    இஞ்சி - ஒரு துண்டு
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சைமிளகாய் - 2
    லவங்கம் - 4
    எலுமிச்சை - பாதி
    மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    பிரியாணி செய்ய :

    அரிசி - அரை கிலோ
    சிக்கன் லெக்பீஸ் - 4
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

    தாளிக்க :

    பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா2

    செய்முறை


    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக்கால் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

    அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.

    அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

    விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.

    அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த செட்டிநாடு கத்தரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கத்தரிக்காய் - 6
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    கடலை மாவு - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து பொடிக்க :

    தனியா - 2 ஸ்பூன்
    கடலை பருப்பு - 1 ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1ஸ்பூன்
    மிளகு - அரை ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு

    கத்தரிக்காய் வறுவல்

    செய்முறை :

    கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து சற்று கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.

    கத்தரிக்காயை வட்டவட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

    அடுத்து தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கத்தரிக்காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

    தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். 2 நிமிடம் ஆனதும் திருப்பி போடவும்.

    இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டுகளையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும்.

    சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் ரெடி.

    சாம்பார் சாதம், தயிர் சாதம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபிங்கர் சிப்ஸை கடைகளில் வாங்கி கொடுத்து இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஃபிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
    மிளகாய் வற்றல் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    முதலில் உருளைக் கிழங்கின் தோலினை சீவிக் கொள்ளவும்.

    பின்னர் உருளைக் கிழங்கினை நீளவாக்கில் 1/4 இன்ஞ் தடிமனில் வட்ட வட்டமாக வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெட்டிய உருளைக் கிழங்கு வில்லைகளைப் போடவும்.

    பின்னர் வட்ட வில்லைகளை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக விரல் வடிவத்தில் வெட்டி தண்ணீரில் போடவும்.

    விரல் வடிவத்துண்டுகள் ஒரே அளவில் இருக்குமாறு வெட்டிக் கொள்ளவும். அப்போதுதான் எண்ணெயில் பொரித்து எடுக்கும்போது ஒரே சீராக வேகும்.

    உருளைக் கிழங்கு துண்டுகளை வடிகட்டியில் போட்டு வடித்துக் கொள்ளவும்.

    காட்டன் துணியில் வடிகட்டி உருளைக் கிழங்கு துண்டுகளை உலர்த்தி விடவும்.

    ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கிளறிக் கொள்ளவும்.

    உருளைக் கிழங்கின் மேற்புறம் உலர்ந்த பின்பு அதனை எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் சோள மாவுக் கலவையை சேர்க்கவும்.

    எல்லா கிழங்கிலும் சோள மாவுக் கலவை படுமாறு நன்கு குலுக்கி விடவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோளமாவு பிரட்டிய உருளைக் கிழங்கினை போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

    சுவையான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் தயார்.

    குறிப்பு

    விருப்பமுள்ளவர்கள் சோள மாவிற்கு பதிலாக அரிசி மாவையோ, மைதாவையோ பயன்படுத்தி சிப்ஸ் தயார் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் மிளகாய்ப் பொடிக்குப் பதில் மிளகுப் பொடி சேர்த்தும் சிப்ஸ் தயார் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் விரும்பும் விதத்தில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து அவர்களுக்கு ருசிக்க கொடுக்கலாம். இன்று வாழைப்பூவில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    நறுக்கிய வாழைப்பூ - 1 கப்  
    துவரம் பருப்பு - கால் கப்  
    கடலைப்பருப்பு - அரை கப்  
    உளுத்தம் பருப்பு - கால் கப்  
    காயந்த மிளகாய் - 5  
    தேங்காய் துருவல் - கால் கப்  
    பெருங்காயத்தூள் - சிறிதளவு  
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு  
    கறிவேப்பிலை - சிறிதளவு

    வாழைப்பூ வடை

    செய்முறை:

    வாழைப்பூக்களை உதிர்த்து பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

    காய்ந்த மிளகாயையும் தனியாக நீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் பருப்பு வகைகளுடன் மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசிறாக அரையுங்கள்.

    பின்னர் மாவு கலவையுடன் வாழைப்பூவை கொட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சூப்பரான வாழைப்பூ வடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவு வகைகளை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையல் இன்று ஆம்லெட் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 4
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    குடைமிளகாய் - பாதி
    கேரட் - சிறியதாய் ஒன்று
    மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - அரைத் தேக்கரண்டி

    செய்முறை

    முதலில் இரண்டு முட்டைகளை வேக வைத்து எடுத்து, முட்டை ஓட்டினை நீக்கி தனியே வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    இரண்டு முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, நறுக்கிய காய்களைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அடுப்பில் தவாவினை வைத்து எண்ணெய் தடவி சூடேறியதும், அதில் பாதி முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றவும். மிளகுத்தூள் தூவவும்.

    முக்கால் பதம் வெந்ததும், ஏற்கனவே அவித்து வைத்துள்ள முட்டைகளை துண்டங்களாக நறுக்கி ஆம்லெட்டில் சேர்க்கவும். ஆம்லெட் வெந்ததும் அதை திருப்பிப் போடாமல் சுருட்டி எடுத்து வைக்கவும்.

    மீதமுள்ள முட்டைக் கலவையை மறுபடியும் ஆம்லெட்டாக ஊற்றவும். முக்கால் பதம் வெந்ததும் ஏற்கனவே செய்து வைத்துள்ள ஆம்லெட் சுருளை அதன் மேல் வைத்து சிறிது நேரம் வேகவிடவும்,

    ஆம்லெட் வெந்ததும் மீண்டும் சுருட்டவும்.

    ஆம்லெட் சுருளை வட்ட வடிவ துண்டங்களாக வெட்டி பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×