என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இவை இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மில்க் பிஸ்கட்ஸ் - 12
    கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி
    கன்டன்ஸ்டு மில்க் - 1/4 டின்
    கேக் ஸ்பிரிங்க்ஸ் - 1/4 கப்
    பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 1/4 கப்

    செய்முறை

    பிஸ்கட்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பொடித்த பிஸ்கட் தூளுடன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து அழுத்தி பிசையாமல் விரல்களால் மிருதுவாக ஈரப்பதமாக பிசைந்து கொள்ளவும்

    சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.

    சில உருண்டைகளை ஸ்பிரிங்கிஸ்ஸில் பிரட்டி எடுக்கவும்.

    டேஸ்டி பிஸ்கட் சாக்லேட் பால்ஸ் ரெடி..

    குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    பொடித்த நட்ஸ் வகைகளிலும் பிரட்டி எடுக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - கால் கப்
    சிறிய புடலங்காய் - 2
    காய்ச்சிய பால் - கால் கப்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    கடுகு, சீரகம் - சிறிதளவு
    உளுத்தம்பருப்பு - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    பெ.வெங்காயம் - 1
    நெய் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புடலங்காயை வட்ட வடிவத்தில் சிறிய துண்டுகளாக நறுக்குங்கள்.

    கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாசிப் பருப்பை வேக வையுங்கள்.

    அதனுடன் புடலங்காய், வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.

    புடலங்காய் நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவைத்துவிட்டு காய்ச்சிய பாலை ஊற்றி கிளறுங்கள்.

    பின்னர் வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டு கலவையில் கலந்து பரிமாறுங்கள்.

    சூப்பரான புடலங்காய் கூட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு நலம் சேர்க்கும் சிறுதானியங்களில் இனிப்பு பலகாரங்களை தயாரித்து சுவைக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து சூப்பரான ரசகுல்லா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை பருப்பு - 100 கிராம்
    தூளாக்கிய வெல்லம் - 200 கிராம்
    மைதா - 50 கிராம்
    எண்ணெய் - தேவைக்கு
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    சோடா உப்பு - அரை டீஸ்பூன்
    கேசரி பவுடர் - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    வெல்லத்தை நீரில் கலந்து பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    வேர்க்கடலையை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

    மைதா மாவுடன் சிறிதளவு வெந்நீர், சோடா உப்பு, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.

    அதனுடன் அரைத்த வேர்க்கடலையையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் மாவு கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    அந்த உருண்டைகளை வெல்ல பாகுவில் ஊறவைத்து ருசிக்கலாம்.

    சூப்பரான வேர்க்கடலை ரசகுல்லா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புதுமையான உணவுகளை அதிகம் விரும்பும் குழந்தைகளுக்கு எப்போதாவது சிலவகை புதுமையான உணவுகளை நாமே தயார் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் இன்று பிரெட் பீட்சா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாண்ட்விச் பிரெட் - 4 துண்டுகள்
    தக்காளி நறுக்கியது - கால் கப்
    வெங்காயம் நறுக்கியது - கால் கப்
    குடைமிளகாய் - கால் கப்
    பன்னீர் துருவியது - கால் கப்
    சீஸ் துருவியது - கால் கப்
    கொத்தமல்லி தழை நறுக்கியது - ஒரு கைப்பிடி
    உப்பு - தேவைக்கு
    மிளகாய் அல்லது மிளகு தூள் - அரை தேக்கரண்டி

    செய்முறை

    தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். அடுப்பை சிறுதீயில் வைக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளை தவாவில் வைத்து அவற்றின் மேல் நறுக்கிய காய்கறிகளை பரவலாக வைக்க வேண்டும்.

    பின் அதன் மேல் துருவிய பன்னீர் மற்றுத் துருவிய சீஸ்ஸை தாராளமாக தூவ வேண்டும்.

    அதற்கு மேல் தேவையான உப்பு, மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வேக விட வேண்டும்.

    இப்போது காய்கறிகள் தேவையான அளவு வெந்து சீஸ் நன்றாக உருக ஆரம்பித்து காய்கறிகள் மேல் பரவ ஆரம்பிக்கும்.

    உருகிய சீஸ் காய்கறிகளின் மேல் சீராக பரவும் அதே நேரம் நல்ல நறுமணமும் வர ஆரம்பிக்கும்.

    இந்த தருணத்தில் அடுப்பில் இருந்து எடுத்து பரிமாறுங்கள்.

    குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்த பிரெட் பீட்சாவை ருசித்து சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் சாமை, வெஜிடபிள் சேர்த்து சூப்பரான பிரியாணி செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாமை அரிசி - 500 கிராம்,  
    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்
    பச்சைப்பட்டாணி - 50 கிராம்,
    தயிர் - அரை கோப்பை, இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு,
    சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,
    மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்.
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:
    நெய் -100 மி.கி,
    ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,
    பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

    இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    பின் புதினாவை சேர்த்து நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

    பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வால்நட்ஸ் மசால் வடை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு - 1 1/4 கப்
    வால்நட்ஸ் - 3/4 கப்
    சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 துண்டு
    கறிவேப்பில்லை - சிறிதகளவு
    கொத்தமல்லி இலை - சிறிதகளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலை பருப்பை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    சிறிதளவு வால்நட்ஸ், கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.

    நன்றாக ஊறிய கடலை பருப்புடன், வால்நட்ஸ், சோம்பு, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த கடலை பருப்பு கலவையுடன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, ஊறவைத்த கடலை பருப்பு, நறுக்கிய வால்நட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிதளவு எடுத்து, தட்டி, எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

    பொன்னிறமானதும், வடையை எடுக்கவும்.

    சுவையான வால்நட்ஸ் மசாலா வடை தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், சப்பாத்தி மற்றும் அனைத்து வகை சாதங்களுக்கும் ஏற்ற சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கத்தரிக்காய் - 250 கிராம்
    வெங்காயம் - 3
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    புளி - சிறு எலுமிச்சை அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - 1 கப்

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் கத்தரிக்காய்களை கழுவி காம்பு நீக்கி நான்காய் கீறிக் கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து, தேங்காய் துருவல், மிளகாய் தூள், அரிந்த வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் புளிக் கலவையை கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பின் கலவையை எடுத்து கீறிய கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை அதன்மீது கொட்டி மூடிவைத்து மிதமான தீயில் வேகவைக்கவும்.

    சிறிது நேரம் கழித்து கத்தரிக்காய்களை திருப்பி போடவும்.

    எல்லாப் பக்கங்களும் வெந்தபின் எடுத்தால் ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா ரெடி!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை போன்ற அத்தனை பிரச்சனைகளும் தீருகின்றன.
    தேவையான பொருட்கள்
     
    முருங்கைக்காய் -  4
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப

    மசாலா அரைக்க :

    தேங்காய் துருவல் - தேவையானஅளவு
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 10
    காய்ந்த மிளகாய் -  7
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    செய்முறை

    முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்காய், அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்கவும்.

    ஈசியான முருங்கைகாய் மசாலா தயார்.

    இதே முறையில் முருங்கைக்காய்க்கு பதிலாக கத்தரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடைக்கு இதமாக தர்பூசணி பழத்தில் விதவிதமான ரெசிபிகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தர்பூசணியில் அல்வா செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி பழம் - 1  
    வெல்லம் - அரை கிலோ
    தேங்காய் பால் - கால் கப்
    ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
    முந்திரி பருப்பு - 5  
    பாதாம் - 10
    நெய் - சிறிதளவு

    செய்முறை:

    தர்பூசணி பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக்கிக்கொள்ளவும்.

    பாதாம், முந்திரியை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    பாகு பதத்துக்கு வந்ததும் தர்பூசணி கூழ், தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.

    அவ்வப்போது சிறிதளவு நெய் ஊற்றி கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் முந்திரி பருப்பு, பாதாம், ஏலக்காய் தூள் தூவி இறக்கவும்.

    பின்னர் ஆறியதும் துண்டுகளாக நறுக்கி அல்வாவை சுவைக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ். கடையில் பீனட் பட்டர் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 1 கப்
    கடலை அல்லது ரைஸ் பிராண்ட் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    தேன் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலையாக இருந்தால் அதை உரித்து கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதன் தோலை நீக்கிவிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

    கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    கொஞ்சம் மசிந்ததும் எண்ணெய் மற்றும் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள்.

    அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்.

    இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. இந்த வரிசையில் மிகவும் பிரபலமான நெல்லை மடக்கு பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்
    முட்டை - 2
    சர்க்கரை - 4 டீஸ்பூன்
    நெய் - 3 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் பால் - அரை கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

    அத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும்.

    கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.

    இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை கொழுக்கட்டைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டவும்.

    வட்டமாக தட்டிய மாவை சுருள் போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான மடக்கு பணியாரம் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள காரசாரமாக இருக்கும் இந்த மிளகாய் சப்ஜி. காரம் ரொம்ப பிடித்தவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
    தேவையான பொருட்கள்

    மிளகாய் - 10
    சாம்பார் வெங்காயம் - 10
    புளி - நெல்லிக்காய் அளவு

    வறுத்து அரைக்க :

    வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
    எள்ளு - ஒரு தேக்கரண்டி
    கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 5

    செய்முறை

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.

    வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

    அடுத்து அதில் மிளகாயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

    அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வதக்கிய வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..

    கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சுவையான மிளகாய் சப்ஜி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×