என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆரஞ்சு பழம் சேர்த்து எளிய முறையில் சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆரஞ்சு பழம்  -3
    பால்  - 4 கப்
    கண்டென்ஸ்ட் மில்க்  - 5 ஸ்பூன்
    ஏலக்காய் தூள்  - 1 சிட்டிகை
    ரோஸ் எசன்ஸ் -  3 சொட்டு

    செய்முறை :

    ஆரஞ்சு பழத்திலிருந்து சதையை மட்டும் தனியாக எடுத்து உதிர்த்து வைக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து பிரிட்ஜில் வைக்கவும்.

    பால் நன்றாக குளிர்ந்த பின்னர் பிரிட்ஜில் இருந்து அதை எடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க்கை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் ஏலக்காய்தூள், உதிர்த்து வைத்த ஆரஞ்சு சதையை சேர்த்து நன்றாக கலந்து மறுபடியும் பிரிட்ஜில் வைக்கவும்.

    கீர் நன்றாக குளிர்ந்ததும் அதை வெளியில் எடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து பருகவும்.

    சுவையான ஆரஞ்சு கீர் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகளும் வலுவடைகிறது.
    தேவையான பொருட்கள்

    சீரக சம்பா அரிசி - கால் கிலோ
    தக்காளி - 2
    வெங்காயம் - 3
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பன்னீா் பாக்கெட் - 1
    எலுமிச்சை பழம் - 1
    கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
    சீரக தூள் - அரை தேக்கரண்டி
    தனியா தூள் - அரை தேக்கரண்டி
    பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
    முந்திரி - விருப்பதிற்கு ஏற்ப
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய், நெய் - தேவையான அளவு

    செய்முறை

    சீரக சம்பா அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி நெய்யில் போட்டு வறுத்து வைக்கவும். அடுத்து அதில் முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சோ்த்து நன்கு வதக்கவும்.

    பின்னர் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்கு வதங்கியப் பிறகு தக்காளியை சோ்த்து வதக்கவும். தக்காளி சோ்த்தவுடன் சிறிதளவு உப்பு சோ்க்கவும். உப்பு சோ்த்து வதக்கினால் தக்காளி நன்கு வதங்கும்.

    அடுத்து மேலே குறிப்பிட்டுள்ள தூள் வகைகளை சோ்க்கவும். அனைத்தையும் சேர்த்து கிளறிவிட்டு, அதில் அரிசி, பன்னீர், முந்திரி சேர்க்கவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீா் விட்டு, உப்பு சோ்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மூடி விடவும். நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் திறந்து பரிமாறவும்.

    சூடான சுவையான சீரக சம்பா பன்னீா் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காளான், முட்டை சேர்த்து செய்யும் இந்த குழம்பை தோசை, இட்லி, நாண், சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - கால் கிலோ
    முட்டை - 6
    பெ.வெங்காயம் - 2
    காய்ந்த மிளகாய் - 4
    தனியா - 1 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகு தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - தேவைக்கு
    துருவிய தேங்காய் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    காளானை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டைகளை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிறு தீயில் வாணலியை வைத்து மிளகாய், சீரகம், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறிவிடவும்.

    பின்னர் அதனுடன் காளான்களை போட்டு வதக்கவும்.

    அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றையும் தூவி கிளறிவிடவும்.

    பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டையை உதிரியாக்கி போட்டு கிளறிவிடவும்.

    மசாலா வாசம் நீங்கி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பூரி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த காளான் குழம்பு. இன்று இந்த குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    காளான் - 200 கிராம்
    தக்காளி - 1
    பெரிய வெங்காயம் - 1
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க :

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    தாளிக்க :

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பட்டை - ஒரு இன்ச் அளவு
    கிராம்பு - 2
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    முதலில் காளானை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.

    தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பட்டை போட்டு பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் காளானை சேர்த்து கிளறவும்.

    காளான் வதங்கியதும் ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

    மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    சுவையான காளான் குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்களுக்கு சீரகம் ஒரு அருமருந்து. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் ஏதாவது ஒரு வகையில் சீரகத்தை தவறாமல் தங்கள் உணவில் எடுத்து கொள்ளலாம்.
    தேவையான பொருள்கள்:

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    நெய் - 2 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 2 மேசைக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 2
    பெரிய வெங்காயம் - 1

    செய்முறை:

    வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.

    சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.

    நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

    சுவையான ஜீரா புலாவ் தயார்.

    குருமா வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கன் நூடுல்ஸ் என்றால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று எளிய முறையில் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்களை :

    சிக்கன் - 100 கிராம்
    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
    சர்க்கரை - 1 தேக்கரண்டி
    தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
    வெங்காயத் தாள் - தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்ஸை போட்டு முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்னர் அதில் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சிறிது சர்க்கரை, வெங்காய தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள வகை வகையாய் சட்னி, சாம்பார் வைத்தாலும், வடகறி இருந்தால் அந்த உணவே விருந்து தான். அரைமணி நேரத்தில் சுவையான வடகறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - ஒரு கப்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் -  3
    தக்காளி -  2
    சோம்பு  - 1 ஸ்பூன்
    பட்டை, லவங்கம், கிராம்பு  - தலா 1
    எண்ணெய்  - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    முந்திரி - 10
    மஞ்சள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
    தேங்காய் - அரை கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இட்லி தட்டில் துணி பரப்பி அதன் மேல் அரைத்த மாவை கொட்டி 15 நிமிடங்கள் வேக வைத்து உதிர்த்து வைத்து கொள்ளவும்.

    தேங்காயுடன் முந்திரி, சோம்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , லவங்கம், கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை  வதக்கவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    குழம்பு கொதித்ததும் வேக வைத்த கடலை பருப்பை சேர்த்துக் கிளறவும்.

    அடுத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும்.

    ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான வடகறி தயார்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைக்காய் வாய்வு என்று பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேரும் போது உங்கள் பயம் பறந்தேவிடும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைக்காய் - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கடுகு - 1 டீஸ்பூன்

    அரைப்பதற்கு

    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 5
    மிளகு - 3 டீஸ்பூன்

    செய்முறை

    வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும். வெட்டிய வாழைக்காயை அரை வேக்காடு வேகவைத்து கொள்ளவும்.

    வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட இந்த ஸ்நாக்ஸ் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெபிசி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஜவ்வரிசி - 1 கப்
    வேக வைத்த உருளைக்கிழங்கு -2
    உப்பு - தேவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 1
    வெங்காயம் - 1
    கொத்தல்லி  - சிறிதளவு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிக்க
    கறிவேப்பிலை -சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை நன்கு கழுவி சிறிது நீர் தெளித்து 2 மணி நேரம் ஊற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து போட்டு அதனுடன் ஜவ்வரிசி, ப.மிளகாய், வெங்காயம்,  கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

    இந்த மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுவையான வித்தியாசமான ஜவ்வரிசி உருளைக்கிழங்கு வடை தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 25
    சர்க்கரை - 1/4 கிலோ
    ஏலக்காய் தூள் - பாதாம் எஸ்சென்ஸ்
    பால் - 1 லிட்டர்
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    வெதுவெதுப்பான பாலில் குங்குமப் பூவை ஊறவைக்கவும்.

    பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சவும், பால் அரை பங்காக சுண்டியதும் சர்க்கரை சேர்க்கவும்.

    பிறகு பாதாம் விழுதை போட்டு 5 நிமிடம் அடி பிடிக்காமல் கிளறவும்

    பால் திக்காகும் போது ஏலக்காய் தூள், ஊறவைத்த குங்கும பூ சேர்த்து கிளறினால் பாதாம் கீர் ரெடி…

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பட்டாணி மசாலா கூட்டு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - 2 கப்
    சின்னவெங்காயம் - அரை கப்
    நெய் - 4 டீஸ்பூன்
    கருவாப்பட்டை - 1
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கல் உப்பு - தேவைக்கு
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    தக்காளி - 3
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்கவும்.

    அதில் அரைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகுவரை வதக்கவும்.

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியா தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக கிளறவும்.

    பின்னர் தக்காளி, பட்டாணியை அடுத்தடுத்து கொட்டி நன்றாக வதக்கவும்.

    வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.

    எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூப்பரான பட்டாணி மசாலா கூட்டு ரெடி.

    குறிப்பு: பாக்கெட்டில் அடைத்து விற்கும் பட்டாணியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்கை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கேக்கை வீட்டிலேயே ஈஸியாக, முட்டை சேர்க்காமல், சிம்பிளாக செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:

    கலவை: 1

    மைதா - ஒன்றரை கப்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    டூட்டி ஃப்ரூட்டி - அரை கப்
    உப்பு - 1 சிட்டிகை

    கலவை: 2

    சர்க்கரை - அரை கப்
    எண்ணெய் - 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன்
    வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் அரை  கப்

    கலவை: 3

    கெட்டியான தயிர் - அரை கப்
    வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பௌலில் சர்க்கரை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் சிறு பௌலில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃப்ரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, 2 முறை சலித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின் 1 டேபிள் ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டியை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொண்டு, மீதமுள்ளதை மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்னர் மற்றொரு பௌலில் தயிர், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியில் கலவை 1, கலவை 2 மற்றும் கலவை 3 ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு 180 டிகிரி C-யில் மைக்ரோ ஓவனை சூடேற்ற வேண்டும்.

    பின் பேக்கிங் ட்ரேயில் பேப்பரால் செய்யப்பட்ட கப் கேக் லைனரை வைத்து, அதற்குள் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள டூட்டி ஃப்ரூட்டியை தூவி, மைக்ரோ ஓவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து, 25-30 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×