என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகள் விரும்பும் விதத்தில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து அவர்களுக்கு ருசிக்க கொடுக்கலாம். இன்று வாழைப்பூவில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    நறுக்கிய வாழைப்பூ - 1 கப்  
    துவரம் பருப்பு - கால் கப்  
    கடலைப்பருப்பு - அரை கப்  
    உளுத்தம் பருப்பு - கால் கப்  
    காயந்த மிளகாய் - 5  
    தேங்காய் துருவல் - கால் கப்  
    பெருங்காயத்தூள் - சிறிதளவு  
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு  
    கறிவேப்பிலை - சிறிதளவு

    வாழைப்பூ வடை

    செய்முறை:

    வாழைப்பூக்களை உதிர்த்து பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

    காய்ந்த மிளகாயையும் தனியாக நீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் பருப்பு வகைகளுடன் மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசிறாக அரையுங்கள்.

    பின்னர் மாவு கலவையுடன் வாழைப்பூவை கொட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சூப்பரான வாழைப்பூ வடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது.
    தேவையான பொருட்கள்

    கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
    புதினா - ஒரு கைப்பிடியளவு
    இஞ்சி - 1 இஞ்ச் அளவு
    தேன் - 2 ஸ்பூன்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.

    அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.

    இப்போது டீ பாதி தயாராகிவிட்டது.

    இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும். அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.

    காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை. முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.

    இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவு வகைகளை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையல் இன்று ஆம்லெட் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 4
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    குடைமிளகாய் - பாதி
    கேரட் - சிறியதாய் ஒன்று
    மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - அரைத் தேக்கரண்டி

    செய்முறை

    முதலில் இரண்டு முட்டைகளை வேக வைத்து எடுத்து, முட்டை ஓட்டினை நீக்கி தனியே வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    இரண்டு முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, நறுக்கிய காய்களைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

    அடுப்பில் தவாவினை வைத்து எண்ணெய் தடவி சூடேறியதும், அதில் பாதி முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றவும். மிளகுத்தூள் தூவவும்.

    முக்கால் பதம் வெந்ததும், ஏற்கனவே அவித்து வைத்துள்ள முட்டைகளை துண்டங்களாக நறுக்கி ஆம்லெட்டில் சேர்க்கவும். ஆம்லெட் வெந்ததும் அதை திருப்பிப் போடாமல் சுருட்டி எடுத்து வைக்கவும்.

    மீதமுள்ள முட்டைக் கலவையை மறுபடியும் ஆம்லெட்டாக ஊற்றவும். முக்கால் பதம் வெந்ததும் ஏற்கனவே செய்து வைத்துள்ள ஆம்லெட் சுருளை அதன் மேல் வைத்து சிறிது நேரம் வேகவிடவும்,

    ஆம்லெட் வெந்ததும் மீண்டும் சுருட்டவும்.

    ஆம்லெட் சுருளை வட்ட வடிவ துண்டங்களாக வெட்டி பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவல் வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளும், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் உதவிகரமாக இருக்கின்றன.
    தேவையான பொருட்கள் :

    அவல் - ஒரு கப்
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    தோல் சீவி நறுக்கிய காய்கறி (கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட்) - அரை கப்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - பெரியது 1
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சோள மாவு, ரஸ்க் தூள் - தலா 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை அலசி 10 - 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவிடவும்.

    இத்துடன் ஊறிய அவல், மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி கொத்தமல்லித்தழை, சோள மாவு சேர்த்துக் கிளறி அடுப்பை நிறுத்தவும்.

    இந்தக் கலவையை சிறு உருண்டைகளாகப் பிடித்து ரஸ்க் தூளில் புரட்டி விருப்பமான வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் கட்லெட்டைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் வேகவைத்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இவை இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மில்க் பிஸ்கட்ஸ் - 12
    கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி
    கன்டன்ஸ்டு மில்க் - 1/4 டின்
    கேக் ஸ்பிரிங்க்ஸ் - 1/4 கப்
    பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 1/4 கப்

    செய்முறை

    பிஸ்கட்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பொடித்த பிஸ்கட் தூளுடன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து அழுத்தி பிசையாமல் விரல்களால் மிருதுவாக ஈரப்பதமாக பிசைந்து கொள்ளவும்

    சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.

    சில உருண்டைகளை ஸ்பிரிங்கிஸ்ஸில் பிரட்டி எடுக்கவும்.

    டேஸ்டி பிஸ்கட் சாக்லேட் பால்ஸ் ரெடி..

    குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    பொடித்த நட்ஸ் வகைகளிலும் பிரட்டி எடுக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி வரலையா? கவலைய விடுங்க. இன்று ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தேங்காய்  - 1 கப் (துருவியது)
    பச்சை மிளகாய்  - 1
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    சீரகம் - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு

    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பிறகு அதை சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - கால் கப்
    சிறிய புடலங்காய் - 2
    காய்ச்சிய பால் - கால் கப்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    கடுகு, சீரகம் - சிறிதளவு
    உளுத்தம்பருப்பு - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    பெ.வெங்காயம் - 1
    நெய் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புடலங்காயை வட்ட வடிவத்தில் சிறிய துண்டுகளாக நறுக்குங்கள்.

    கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாசிப் பருப்பை வேக வையுங்கள்.

    அதனுடன் புடலங்காய், வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.

    புடலங்காய் நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவைத்துவிட்டு காய்ச்சிய பாலை ஊற்றி கிளறுங்கள்.

    பின்னர் வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டு கலவையில் கலந்து பரிமாறுங்கள்.

    சூப்பரான புடலங்காய் கூட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தடுக்கும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    காம்பு நீக்கிய சுண்டைக்காய் - 1 கப்
    பெரிய நெல்லிக்காய் ( விதை நீக்கி நறுக்கி கொள்ளவும் ) - 1
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    முழு உ.ளுந்து - 4 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து. மிளகாய் போட்டு வதக்கவும்.

    அத்துடன் சுண்டைக்காய், நெல்லிக்காய், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    வதக்கிய பொருட்களை ஆறவிட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்தால் சுவையான சுண்டைக்காய் துவையல் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு நலம் சேர்க்கும் சிறுதானியங்களில் இனிப்பு பலகாரங்களை தயாரித்து சுவைக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து சூப்பரான ரசகுல்லா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை பருப்பு - 100 கிராம்
    தூளாக்கிய வெல்லம் - 200 கிராம்
    மைதா - 50 கிராம்
    எண்ணெய் - தேவைக்கு
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    சோடா உப்பு - அரை டீஸ்பூன்
    கேசரி பவுடர் - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    வெல்லத்தை நீரில் கலந்து பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    வேர்க்கடலையை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

    மைதா மாவுடன் சிறிதளவு வெந்நீர், சோடா உப்பு, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.

    அதனுடன் அரைத்த வேர்க்கடலையையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் மாவு கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    அந்த உருண்டைகளை வெல்ல பாகுவில் ஊறவைத்து ருசிக்கலாம்.

    சூப்பரான வேர்க்கடலை ரசகுல்லா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் வீணாக்காமல் சமைக்கும் முறைகளில் ஒன்று துவையல். இன்று மாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முழு உளுந்து - 4 டேபிள் ஸ்பூன்
    மாங்காய், தோல் நீக்கி துருவியது - 1 கப்
    தேங்காய் துருவல் - அரை கப்
    ப.மிளகாய் - 2
    பூண்டு - 3 பற்கள்
    எண்ணெய் மற்றும் உப்பு  - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு உளுந்தம் பருப்பு - தலா  1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

    செய்முறை

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் முழு உளுந்தை வறுத்து எடுத்துகொள்ளவும்.  

    பிறகு அதே வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய் துருவல், மாங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வதக்கிய பொருட்களை ஆறவிட்டு தண்ணீர் தெளித்து அரைக்கவும். பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து விழுதுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    குறிப்பு- முழு உளுந்துக்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    புதுமையான உணவுகளை அதிகம் விரும்பும் குழந்தைகளுக்கு எப்போதாவது சிலவகை புதுமையான உணவுகளை நாமே தயார் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் இன்று பிரெட் பீட்சா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாண்ட்விச் பிரெட் - 4 துண்டுகள்
    தக்காளி நறுக்கியது - கால் கப்
    வெங்காயம் நறுக்கியது - கால் கப்
    குடைமிளகாய் - கால் கப்
    பன்னீர் துருவியது - கால் கப்
    சீஸ் துருவியது - கால் கப்
    கொத்தமல்லி தழை நறுக்கியது - ஒரு கைப்பிடி
    உப்பு - தேவைக்கு
    மிளகாய் அல்லது மிளகு தூள் - அரை தேக்கரண்டி

    செய்முறை

    தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். அடுப்பை சிறுதீயில் வைக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளை தவாவில் வைத்து அவற்றின் மேல் நறுக்கிய காய்கறிகளை பரவலாக வைக்க வேண்டும்.

    பின் அதன் மேல் துருவிய பன்னீர் மற்றுத் துருவிய சீஸ்ஸை தாராளமாக தூவ வேண்டும்.

    அதற்கு மேல் தேவையான உப்பு, மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வேக விட வேண்டும்.

    இப்போது காய்கறிகள் தேவையான அளவு வெந்து சீஸ் நன்றாக உருக ஆரம்பித்து காய்கறிகள் மேல் பரவ ஆரம்பிக்கும்.

    உருகிய சீஸ் காய்கறிகளின் மேல் சீராக பரவும் அதே நேரம் நல்ல நறுமணமும் வர ஆரம்பிக்கும்.

    இந்த தருணத்தில் அடுப்பில் இருந்து எடுத்து பரிமாறுங்கள்.

    குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்த பிரெட் பீட்சாவை ருசித்து சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட தனியா விதைகளை சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்புகள் குறைந்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கப்படுகிறது.
    தேவையான பொருட்கள்

    தனியா (மல்லி) - 4 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
    புளி - சிறு நெல்லிக்காய் அளவு
    தக்காளி - 2 (பெரியது)
    வெங்காயம் - 2
    மிளகாய் வற்றல் - 7
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    எண்ணெய் - தேவைக்கேற்ப
    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

    பருப்புகள் நிறம் மாறியதும் தனியா, மிளகாய் வற்றல், புளி சேர்த்து தனியா வாசம் வரும் வரை வறுக்கவும். வாசம் வந்ததும் வேறு தட்டிற்கு மாற்றி விடவும்.

    அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.

    வதக்கியவற்றை ஆற வைத்து தனியாவுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    சுவையான தனியா சட்னி தயார். இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×