என் மலர்
பொது மருத்துவம்
- பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.
- ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.
தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும்.
தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.
இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.
நோய் எதிர்ப்பு சக்தி:
தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.
பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.
சக்தி தரும்:
மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.
ஜீரண சக்திக்கு:
உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த பயன் தரும் .
மேலும் இதிலுள்ள மினரல் மற்றும் வைட்டமின்கள் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.

சர்க்கரை வியாதிக்கு:
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.
இதயம்:
இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
தைராய்டு:
நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.
உடல் எடை:
உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும்.

சிறுநீரகம்:
சிறுநீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறு நீரகத்தை பெறலாம்.
முதுமை:
தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்கவிடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.
- காஃபி குடிக்காதவர்கள் ஆறு மணி நேரம் தினமும் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம்.
- காஃபி குடிப்பவர்கள் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம் குறைவு.
காஃபி உடல் நலத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காபி குடிக்காதவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது உடல் நலத்திற்கு கேடு என்றும், காபி குடிக்கக் கூடியவர்கள் குறைந்த நேரம் உட்கார்ந்தால் அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவு என ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது. பயோமெட் சென்ட்ரல் (BioMed Central) இதழ் ஒன்று வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை மூலம் இது தெரியவந்துள்ளது.
காஃபி குடிக்காத தனி நபர்கள் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தினமும் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்கள் உயிரிழக்க 60 சதவீதம் வாய்ப்புள்ளது. அதேவேளையில் காஃபி குடிக்கக்கூடியவர்கள் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உட்கார்ந்து இருப்பவர்களாக இருந்தால் உயிரிழக்க வாய்ப்பு குறைவு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 13 வருடம் 10 ஆயிரத்திற்கு அதிகமானோரிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.
தினந்தோறும் ஆறு மணி நேரத்திற்கு அதிகமாக உட்கார்ந்து இருக்கக்கூடிய நபர்கள் காஃபி குடிப்பவர்களை விட காஃபி குடிக்காதவர்களுக்கு ஆபத்து அதிகம் என சீனாவில் சூசோப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி என்று ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தது. காஃபி குடிப்பவர்கள் 24 சதவீதம் குறைவான உயிரிழப்பு ஆபத்தை எதிர்கொள்ளவதாக அந்த ஆய்வு தெரிவித்தது.
உட்கார்ந்து இருக்கும் பழக்கம் உடையவர்களின் உடல்நலத்தை காஃபி மேம்படுத்துவதாக ஆய்வு மேற்கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
காஃபியே குடிக்காதவர்களைவிட அதிகமாக காஃபி குடிப்பவர்களுக்கு அனைத்து வகையிலான ஆபத்தில் இருந்து 33 சதவீதம் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காஃபியில் உள்ள வேதிப்பொருட்கள் இயற்கையில் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக கருதப்படுகிறது. இருப்பினும், இறப்பதற்கான ஆபத்தை குறைக்க காபி உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பது 40 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்றும், இதய நோயால் இறக்கும் அபாயம் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அதிகம் என்றும் ஆராய்சிக்குழு கண்டறிந்துள்ளது.
- தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வாழ்வியல் முறையை மாற்ற வேண்டும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாவுச்சத்து, சர்க்கரை சத்து அதிமாக உள்ள உணவுப்பொருட்கள், அசைவ உணவுகள் குறிப்பாக இறைச்சியை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வாழ்வியல் முறையை மாற்ற வேண்டும்.
உடம்பில் எங்காவது புற்றுநோய் இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை இருந்தாலும், தொடர்ந்து நீண்ட நேரம் விரதம் இருந்தாலும், இனிப்பு பண்டங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் யூரிக் அமிலம் அதிகமாகலாம்.
தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
பாகற்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காய், புடலங்காய், கேரட், புரோக்கோலி, வாழைப்பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுப் பழம், அன்னாசி, சாத்துக்குடி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
- நன்கு சமைத்த, சூடான மற்றும் சுகாதாரமான உணவை உண்ணுங்கள்.
- கோதுமை, பார்லி மற்றும் பருப்பு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
மாறிவரும் காலநிலையால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குளிர்காலமாக இருந்தாலும் அல்லது கோடைகாலமாக இருந்தாலும், காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி மற்றும் இருமலுடன் சில சமயங்களில் சுவாசப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நம் உடலில் வரும் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இரண்டு முக்கியமான விஷயங்கள் உடற்பயிற்சி மற்றும் தூக்கம். ஆனால் அதைவிட முக்கியமானது சரியான ஊட்டச்சத்து.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய சில பொதுவான உணவுகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா கூறுகையில்,
நன்கு சமைத்த, சூடான மற்றும் சுகாதாரமான உணவை உண்ணுங்கள். அதிகப்படியான மிளகாய் கொண்ட கொழுப்பு மற்றும் காரமான உணவு அனைவருக்கும் பொருந்தாது. எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
தயிர்:
தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. எனவே உணவில் தயிர், லஸ்ஸி, தயிர் பச்சடி, மோர், பனீர் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அக்ரூட், பாதாம் பருப்புகள்:
பூசணி, சூரியகாந்தி விதைகள், அக்ரூட், பாதாம் பருப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் ஈ மற்றும் பி6 மற்றும் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. உணவில் இந்த கலந்த விதைகளை 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள் - காய்கறிகள்
சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளிலும் ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, குடைமிளகாய் மற்றும் பச்சை இலை காய்கறிகளிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
பருப்பு வகைகள்
கோதுமை, பார்லி மற்றும் பருப்பு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அவை உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, ஊட்டச்சத்துக்களால் உடலை நிரப்புகின்றன.
- ஹைப்பர்சோம்னியா என்பது அதிக பகல்நேர தூக்கத்திற்கான பாதிப்பாகும்.
- புகையிலை மற்றும் பிற நிகோடின் சார்ந்த பொருட்களிலிருந்தும் விலகி இருங்கள்.
பகலில் மந்தமாக இருப்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை ஏற்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திப்பதாக கவனித்திருந்தால், நீங்கள் ஹைப்பர் சோம்னியாவை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். அதிக தூக்கம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது என்றால், இது சில பாதிப்புகளையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹைப்பர்சோம்னியா என்பது அதிக பகல்நேர தூக்கத்திற்கான பாதிப்பாகும்.
பொதுவாக சிலருக்கு இரவில் நன்றாக தூங்கினாலும் பகலில் தூக்கம் வரலாம். இதன் விளைவுகள் அன்றாட வாழ்க்கையில் மோசமாக இருக்கும் என்பதை பலரும் உணர்ந்திருக்க கூடும். இதை சரியான முறையில் கையாள சில வழிகள் உள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை தவிர்ப்பதற்கான முதல் வழி, ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் தூங்குவதற்கு செல்லுங்கள். இது உங்கள் உடலை தூக்க முறைக்கு ஏற்ப மாற்ற உதவும். மேலும், உங்கள் படுக்கையறை நன்கு காற்றோட்டமாகவும், குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வசதிக்கேற்ற மெத்தை, தலையணைகள் மற்றும் போர்வைகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

காஃபின் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இதை உட்கொள்வது மூளைக்கும் உடலுக்கும் இடையில் பயணிக்கும் செய்திகளை விரைவுப்படுத்தும். இது ஒரு நபர் அதிக விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், ஆற்றலுடனும் இருக்கும்படி உணர வைக்கிறது. எனவே காபி, கோலா, டீ, சாக்லேட் போன்றவற்றை தவிர்ப்பதால் பகல் நேர தூக்கத்தை தவிர்க்கலாம். மேலும், தூக்க மாத்திரைகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றுடன் புகையிலை மற்றும் பிற நிகோடின் சார்ந்த பொருட்களிலிருந்தும் விலகி இருங்கள்.
உங்கள் உடல்நிலையைப் பற்றி உங்கள் நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம். ஹைப்பர் சோம்னியாவைக் கையாளும் ஒருவருக்கு, இரவு நேர ஷிஃப்ட் வேலை செய்வது தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது அவர்களின் நிலையான தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். எனவே, பகல் நேரங்களை கொண்ட வேலைக்கு சென்று உங்கள் தூக்க நேரத்தை சீர்படுத்துங்கள்.
மது பெரும்பாலும் உங்களை தூங்க வைக்க உதவும் ஒரு பானமாக கருதப்படுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், இதற்கு மாறாக மது என்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது உங்களை இரவு நேரத்தில் விழித்திருக்கச் செய்யும், மற்றும் அடிக்கடி மோசமான கனவுகளையும் ஏற்படுத்தும். மேலும் இது உங்களின் உடல் நலத்தையும் பாதிக்க செய்யும். ஹைப்பர் சோம்னியாவில் இருந்து விடுபட மதுவை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் ஹைப்பர்சோம்னியா அல்லது பிற தொடர்புடைய மருத்துவ நிலைமைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால், வாகனம் ஓட்டுவது மட்டுமல்லாமல், உங்களுக்கோ மற்றவர்களுக்கோ ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு உபகரணத்தையும் இயக்கும்போது கவனமாக இருங்கள். ஏனெனில் சில நேரங்களில் இந்த பாதிப்பு நிலையற்ற மனநிலையை தர கூடும் என்பதால் அதிக கவனம் தேவை.
- உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யும்.
- கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது,
• சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூனை மீசை மூலிகை
• இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யும்.
• பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
• பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரம்.
• மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .
• மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது .
• தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .
• சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது.
• கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய், கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது,

• சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .
• இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் .
• இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள்.

• தினசரி 2 வேளை பயன்படுத்துவதால் மேற்கண்ட அனைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.
• சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது .
• மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது.
• ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.
• அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .
• தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.
- புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும்.
- கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்கக் கூடாது.
தற்போது பலரும் கணினியில் நீண்டநேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் கண் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். அதற்காக அவர்கள் எதிலெல்லாம் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
போதுமான அளவு தூக்கம்:
கண் ஆரோக்கியத்துக்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டு. நாம் விழித்திருக்கும் போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது.
போதுமான தூக்கம் இல்லாதது, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள் கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்.
பாதுகாப்பு கண்ணாடிகள்:
நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும். அதேநேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாசின் லென்சுகள் 99 முதல் 100 சதவீதம், புற ஊதா ஏ, புற ஊதா பி கதிர்களை தடுக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

கைகளால் கண்களை தேய்க்காதீர்கள்:
கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்கக் கூடாது. அதனால், உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், கைகளால் அழுந்த தேய்க்கும்போது அது சேதம் அடையும் வாய்ப்புள்ளது.
வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி, துகள் போன்றவை கண்களில் படுவதற்கு முன்னர் கழுவிவிட வேண்டும். இதன்மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.
நீரேற்றம், உணவுமுறை:
உடலில் நீரிழப்பு இருக்கும் போது உடல் வறட்சி ஏற்பட்டு கண்களை சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும். குறிப்பாக ஒமேகா 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால் கண்களை பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.
கணினி பார்க்கும் சரியான முறை:
கணினி அல்லது மடிக்கணினி திரை. உங்கள் கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும் கண் மட்டத்தில் இருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கணினியில் நீங்கள் பணிபுரியும்போது, உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்ய வும். அதேநேரம், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினை வில் கொள்ளுங்கள்.
கண்களின் பாதிப்பை தடுக்கும் விதிமுறை:
கணினியில் பணிபுரியும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு, உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்தும்.
இவை எல்லாவற்றுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
- 7 பேர் முதுகுவலி குறைந்திருப்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.
- 6 மாதங்கள் 24 முதல் 30 நிமிடங்கள் தினமும் நடக்க வைத்துள்ளார்கள்.
தினமும் 30 நிமிடங்கள் விறு விறு என நடந்து நடைபயிற்சி செய்தால் முதுகு வலி குறையும் என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். முதுகுவலி தாங்க முடியவில்லை என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். அதற்காக சிகிச்சை எடுத்து அவஸ்தைபடுவதை விட நடந்தாலே போதுமாம். அதுவே வலி நிவாரணியாக வேலை பார்க்குமாம்.

ஆஸ்திரேலியாவில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 701 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 54 வயதுடையவர்கள். ஆராய்ச்சியாளர்கள் இந்த மக்களை இரண்டு குழுக்களாக பிரித்துள்ளார்கள். அவர்களை 6 மாதங்கள் 24 முதல் 30 நிமிடங்கள் தினமும் நடக்க வைத்துள்ளார்கள். ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டு கொண்டிருந்த அவர்களை முதுகுவலி சிகிச்சை கட்டுப்பாட்டு குழு, 12 முதல் 36 மாதம் தொடர்ந்து கண்காணித்து உள்ளது.
அப்போது நடை பயிற்சியின் போது முதுகுவலி குறைந்ததை கண்டுபிடித்துள்ளது. மீண்டும் பயிற்சியை கைவிட்டால் திரும்பி வருவதற்கு 200 நாட்களுக்கு மேல் ஆவதும் தெரிய வந்துள்ளது. 10 பேரில் 7 பேர் முதுகுவலி குறைந்திருப்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.
இந்த வாக்பேக் ஆய்வு குழுவினர் கூறும்போது, 'நடைபயிற்சி என்பது சிகிச்சை இல்லாமலே முதுகுவலியை குறைக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் உலக அளவில் இந்த மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பியல் துறை நிபுணர் டாக்டர் மல்ஹோத்ரா கூறும்போது, 'நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு லேசான முதுகுவலி ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் இது உடலின் உள்ளே இருக்கும் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். நான் இந்த மாதிரி நோயாளிகள் நான்கைந்து பேரை தினமும் பார்க்கிறேன் என்றார்.
- நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கிறது மற்றும் பெருந்தமனி தடிப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது .
- க்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு தடுப்பது மட்டுமல்லாமல், உறுப்பு மிகவும் திறம்பட செயல்படச் செய்கிறது.
கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.
இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க...
கறிவேப்பிலை ஒருவரின் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த இலைகள், எல்டிஎல் கொழுப்பை (கெட்ட கொலஸ்ட்ரால்) உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கின்றன. இது நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கிறது மற்றும் பெருந்தமனி தடிப்பு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது .
செரிமானத்தை அதிகரிக்க...
பழங்காலத்திலிருந்தே கறிவேப்பிலையின் நன்மைகளில் ஒன்று செரிமானத்திற்கு உதவுகிறது. கடி பட்டா ஆயுர்வேதத்தில் மிதமான மலமிளக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது, இது வயிற்றில் தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது.
கல்லீரலுக்கு...
கறிவேப்பிலை ஆய்வின்படி, இலைகளில் உள்ள டானின்கள் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகளின் வலுவான ஹெபடோ-பாதுகாப்பு பண்புகள் உள்ளன. மேலும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றுடன் இணைந்தால், அதன் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு தடுப்பது மட்டுமல்லாமல், உறுப்பு மிகவும் திறம்பட செயல்படச் செய்கிறது.

முடி வளர்ச்சிக்கு...
சேதமடைந்த கூந்தலுக்கு சிகிச்சையளிப்பதில், கறிவேப்பிலை மிகவும் வெற்றிகரமானது, தளர்வான முடிக்கு துள்ளல் சேர்க்கிறது, மெல்லிய முடி தண்டுக்கு வலுவூட்டுகிறது மற்றும் முடி உதிர்வை தடுக்கிறது. இது தவிர, இலைச் சாறு மலாசீசியா ஃபர்ஃபரின் பூஞ்சை உச்சந்தலையில் தொற்றுக்கு எதிராக பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை நிரூபித்துள்ளது, அதனால்தான் பொடுகுக்கு சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்தலாம் .
கண் ஆரோக்கியத்திற்கு...
கறிவேப்பிலையில் கரோட்டினாய்டு கொண்ட வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இதனால் கார்னியா பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. வைட்டமின் A இன் குறைபாடு இரவு குருட்டுத்தன்மை , பார்வை இழப்பு மற்றும் மேகம் உருவாக்கம் உள்ளிட்ட கண் கோளாறுகளை ஏற்படுத்தும் . இதனால், இலைகள் விழித்திரையைப் பாதுகாப்பாக வைத்து, பார்வை இழப்பிலிருந்து பாதுகாக்கின்றன.
பாக்டீரியாவை நீக்க...
கார்பசோல் ஆல்கலாய்டுகள், ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள், கறிவேப்பிலைகள் நிறைந்தவை மற்றும் பாக்டீரியாவை அழிக்கும் திறன் கொண்டவை மற்றும் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் இந்த மரங்களின் மலர் வாசனைக்கு காரணமான கலவை லினலூல் ஆகும்.
எடை இழப்பை ஊக்குவிக்க...
உடல் எடையை குறைக்கும் போது, கறிவேப்பிலை ஒரு நல்ல மூலிகை. உடலில் தேங்கியுள்ள கொழுப்பை வெளியேற்ற இது சிறந்த மருந்து. கறிவேப்பிலை ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது உடல் பருமனை தடுக்க உதவுகிறது .
பக்க விளைவுகளை கட்டுப்படுத்த...
கறிவேப்பிலை உட்கொள்வது கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையின் விளைவுகளை குறைக்கிறது மற்றும் குரோமோசோமால் சேதம் மற்றும் எலும்பு மஜ்ஜை பாதுகாப்பிலிருந்து பாதுகாக்கிறது.
இரத்த ஓட்டத்திற்கு...
கறிவேப்பிலையை வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் பிரச்சினைகள், கோனோரியா , வயிற்றுப்போக்கு மற்றும் வலிகளைப் போக்க உதவுகிறது .
நீரிழிவு எதிர்ப்பு பண்புக்கு...
கறிவேப்பிலையின் மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது . ஒருவரின் உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதன் மூலம், இன்சுலின் உற்பத்தி செய்யும் கணைய செல்கள் தூண்டப்பட்டு மறைக்கப்படலாம்.

காயங்களை குணப்படுத்த...
கறிவேப்பிலையின் பேஸ்ட்டை தடவுவதால் காயங்கள், சொறி, கொதிப்பு மற்றும் லேசான தீக்காயங்கள் போன்றவற்றில் குணமடையும் . இலைகளின் பேஸ்ட் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் தொற்றுநோயையும் தடுக்கவும் அகற்றவும் உதவுகிறது.
- கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும்.
- ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
கர்ப்ப காலத்தில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்க உங்கள் உடலுக்கு கூடுதலான கர்ப்ப காலத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவை.
மேலும், உங்கள் குழந்தைக்கு உணவளிக்க உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் பெறுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பாதம்
பாதாமில் கால்சியம், மெக்னீசியம், புரதம், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது.
பாதாம் சாப்பிடுவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும்.
இதய நோயில் இருந்து காப்பாற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
புற்றுநோயைத் தடுக்க உதவும்.
ஆற்றல் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

பிஸ்தா
பிஸ்தா மொறுமொறுப்பு சுவையான நட்ஸ் ஆகும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது.
பிஸ்தாவில் நார்ச்சத்து, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், தாமிரம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
பிஸ்தா சாப்பிடுவது உங்கள் உறுப்புகள், தசைகள் மற்றும் திசுக்கள் சரியாக செயல்பட உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்களின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

முந்திரி
கர்ப்ப காலத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் முந்திரியால் வழங்க முடியும். இதில் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் கே போன்ற சத்துகள் உள்ளது.
முந்திரி ஒட்டுமொத்த செரிமானத்திற்கு நல்லது மற்றும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இது இரும்பின் சிறந்த மூலமாகும், ரத்த சோகையைத் தடுக்கவும் போராடவும் உதவுகிறது, மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
இது கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல ஆதாரங்களாகும், எனவே அவை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.
முந்திரியை உட்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈறுகள் மற்றும் பல் சிதைவைத் தடுக்க உதவும்.
இது கொழுப்பு அளவுகளை பராமரிக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. முந்திரி வைட்டமின் கே இன் நல்ல மூலமாகும், இது கர்ப்ப காலத்தில் ரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது.

வால்நெட்
அக்ரூட் பருப்புகள் பசியின்மை, இனிப்புகள் மற்றும் பல சுவையான உணவுகளுக்கு ஒரு சிறந்த மூலப்பொருள். வால்நெட் பருப்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த உலர்ந்த பழங்கள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானது மற்றும் சத்தானது.
மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நல்ல தூக்கம் மற்றும் மனச்சோர்வு சரிசெய்ய உதவுகிறது.
சரியான எடை மேலாண்மைக்கு உதவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கூடுதலாக, அத்திப்பழம் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றிற்கான உங்கள் தினசரி தேவைகளை கிட்டத்தட்ட உள்ளடக்கியது.
ஒரு நாளைக்கு ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தை ஜூசாக குடித்தால், கர்ப்பிணித் தாயின் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து 10% கிடைக்கிறது. உடலின் தாது தேவைகளை பூர்த்தி செய்கிறது.
ஆரோக்கியமான உணவுக்கு பங்களித்து செரிமானத்தை எளிதாக்குகிறது. ஒமேகா 3 மற்றும் ஃபோலிக் அமிலம் கருவின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. காலை சுகவீனத்தை குறைக்கிறது. இது இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாகும். உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லது.

ஆப்ரிகாட்
ஆப்ரிகாட்டில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, தாமிரம், வைட்டமின் ஈ போன்ற சத்துகள் உள்ளது. மேலும் இதனை எடுத்துகொள்வதால் கர்ப்பகால மலச்சிக்கலைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தசை மற்றும் உறுப்பு செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.
பல பெண்கள் கர்ப்பகால நீரிழிவு நோயாலும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், ஆப்ரிகாட் பழங்களை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவுகிறது.
இதை சாப்பிடுவதால் தாய்க்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் நன்மை பயக்கும். ஆப்ரிகாட் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த உலர்ந்த பழங்களில் ஒன்றாகும். ஒரு சுவையான மில்க் ஷேக் செய்ய உலர்ந்த அப்ரிகாட் பழங்களை துண்டாக்கி தானியங்கள், இனிப்புகள் மற்றும் பலவற்றை சேர்த்து பாலுடன் கலக்கவும். பின்பு அதனை எடுத்துகொள்ளலாம்.

பேரிட்சை
பிரசவத்தின்போது ஏற்படும் பிரச்சினை வருவதை தவிர்க்க தாய்மார்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இது கருப்பையில் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
உங்கள் குழந்தைக்கு சுமூகமான பிறப்பை உறுதி செய்கிறது மற்றும் தாய்க்கு பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
மக்னீசியம் நிறைந்தது, இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரும்புச்சத்து குறைபாட்டை நிர்வகிப்பதற்கும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பேரிட்சம்பழம் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது.
- காலை உணவுடன் பழங்களையும் சேர்த்து சமச்சீர் உணவாக உட்கொள்ளலாம்.
- நோய் எதிர்ப்பு மண்டலம் திறம்பட செயல்படவும் உதவி செய்யும்.
வயிறு காலியாக இருக்கும்போது, உடல் ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சும். பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவற்றை காலையில் உட்கொண்டால் இந்த ஊட்டச்சத்துக்களை உடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குவதோடு நோய் எதிர்ப்பு மண்டலம் திறம்பட செயல்படவும் உதவி செய்யும். அதனால் காலை உணவுடன் பழங்களையும் சேர்த்து சமச்சீர் உணவாக உட்கொள்ளலாம். அதற்கு ஏற்ற பழங்கள் இவை...

வாழைப்பழங்கள்
இவை எளிதில் ஜீரணமாகக்கூடியவை. அவற்றில் இருக்கும் இயற்கை சர்க்கரை உடலுக்கு விரைவாக ஆற்றலை கொடுக்கும்.

தர்பூசணி
அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது என்பதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். அதிலும் காலை வேளையில் உண்ணும்போது உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்யும். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.

பப்பாளி
இதிலிருக்கும் என்சைம்கள் செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலுக்கும் நிவாரணம் தரும்.

ஆரஞ்சு
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும்.

ஆப்பிள்
ஆப்பிளில் அதிகம் நார்ச்சத்து இருக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. செரிமானத்திற்கும் உதவி புரியும்.

அன்னாசிப்பழம்
இதில் புரோமெலைன் என்னும் என்சைம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது.

மாம்பழம்
வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாம்பழங்கள் அன்றைய நாளில் உடலுக்கு தேவையான சத்தை வழங்கி, உற்சாகமுடன் செயல்பட வைக்கும். இதில் சர்க்கரை அதிகம் என்பதால் குறைவாக சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பழங்களில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் குறைந்த கலோரிகள் நிரம்பியுள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கக்கூடியவை. செரிமானம் சுமுகமாக நடைபெறுவதற்கு உதவி புரியும்.

கிவி
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. செரிமானத்திற்கு உதவி புரியும்.

திராட்சை
இதில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக அளிக்கும்.
- உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
- மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது.
இரவில் தாமதமாக உறங்கச் செல்பவர்களை தூக்கி வாரிப் போடும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் முக்கியமானது சிறுவர்கள் உட்பட பெரும்பாலானோர் அதிகமாக மொபைல் பயபடுத்துவது ஆகும்.
இரவில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு விடிய விடிய மொபைல் பயன்படுத்தும் காட்சிகளை ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் நாம் பார்க்க முடியும். இதனால் மனிதர்களின் உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக ஸ்டேன்போர்டு பலகலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், நோய் எதிர்ப்புதிறன் குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது. மேலும் அந்த ஆய்வில் இரவு வேகமாக தூங்கி அதிகாலையில் எழுந்துகொள்பவர்களின் மனநலம் சிறப்பானதாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது பிரிட்டனில் உள்ள சுமார் 74,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






