என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
    • கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    கல்லீரலின் மொத்த் எடையில் 5 முதல் 10 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு குவிந்தால் கொழுப்பு நோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் தற்செயலாகவே நமக்கு தெரிய வரும்.

    நீரிழிவு நோய், உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உயர் ரத்த அழுத்தம் , ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, மரபணு ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட முக்கிய காரணம் ஆகும்.

    நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் இரண்டு பேருக்கு இந்த கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு உள்ளது. இதை ஆங்கிலத்தில் பேட்டி லிவர் அல்லது `ஹெபாடிக்ஸ்டீயடோஸிஸ்' என்று அழைக்கப்படுகிறது.

    ஆரம்ப காலகட்டத்தில் இதனை பரிசோதனை செய்து கண்டறியத்தவறினால் இது ஸ்டீயட் ஹெபடைட்டிஸ் சிர்ஹோஸிஸ், கல்லீரல் செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்குடிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் அறிகுறிகளை வெளிப்படுத்தாவிட்டாலும் ஒரு சில நேரங்களில் சிலருக்கு குமட்டல் வாந்தி, உடல் சோர்வு, கால் வீக்கம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேலும் கல்லீரல் கொழுப்பு நோய் இன்சுலின் எதிர்மறை நிலையை உருவாக்குவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டியவை:

    * அதிக சர்க்கரை உள்ள உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும்.

    * தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.

    * புகைப்பழக்கம் மற்றும் மதுபழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

    • வைட்டமின் டி சரியான அளவில் இருந்தால் தான் கால்சியம் உடம்பில் சேரும்.
    • கொள்ளில் சோயாவுக்கு இணையான கால்சியம் உள்ளது.

    உறுதியான, வலுவான எலும்புகள் தான் ஆரோக்கியமான வாழ்வினை தரும். பால், தயிர், பால் பொருட்கள், பீட்ருட், எள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, திராட்சை, மாதுளை, முட்டை, மீன், கோழி, காடை, இறைச்சி வகைகள், வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை, பாலக்கீரை, கொத்தமல்லி தழை, சோயாபீன், பிரண்டை தண்டு, எலும்பொட்டி கீரை, அத்திப்பழம், பேரிட்சை, கேழ்வரகு, கம்பு, கருப்பு உளுந்து, முந்திரி, பாதாம், பிஸ்தா இவை அனைத்தும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் ஆகும். இவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். இது உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க உதவும்.

    வைட்டமின் டி சரியான அளவில் இருந்தால் தான் கால்சியம் உடம்பில் சேரும்.

    பால் சார்ந்த பொருட்கள் மற்றும் பால் சாப்பிடுவதில் ஒவ்வாமை உள்ளவர்கள் சோயா பால், பீன்ஸ், பாதாம் பால், சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான ஒரு கிராம் கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும்.

    கொள்ளில் சோயாவுக்கு இணையான கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி தேவையற்ற கொழுப்பு சதையை குறைக்கும். கொள்ளு 10 கிராம், மிளகு, சீரகம் கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்து குடிக்கவும்.

    ஒருகிராம் குங்குமப்பூவை 100 மிலி தேங்காய் எண்ணெயில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி அதை இரண்டு துளி உட்கொண்டு உடம்பில் தேய்த்தும் மாலை இளவெயிலை நடைபயிற்சி செய்து வந்தால் வைட்டமின் டி உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

    எலும்பொட்டிக்கீரை என்பது ஒரு வகை கொடி வகை தாவரம். இந்த செடியின் இலையை பாலுடன் நன்கு அரைத்து காலை, மாலை இருவேளையும் ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட வேண்டும்.

    பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளதால் இதை புளி சேர்த்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தொண்டை காறல் ஏற்படும். ஆகவே பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.

    சித்த மருத்துவம்

    பவள பற்பம், முத்துப் பற்பம், முத்துச்சிப்பி, பற்பம், சங்கு பற்பம், பகரை பற்பம், நத்தை பற்பம் போன்றவை எலும்பு சார்ந்த பிணிகளுக்கு நல்ல பலனை தரும். இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்ளலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது.
    • குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது.

    தண்ணீர் அசுத்தமான நிலையில் இருக்கும் போது அதை அருந்தினால் பல வகையான நோய்கள் உருவாகும். இந்த பாதிப்புக்கு காரணம் தண்ணீரில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள்தான்.

    இந்த கிருமிகள் குறித்து பண்டைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால், தண்ணீரில் மறைந்திருக்கும் ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற கிருமிகளை அழிக்க அவர்கள் சில உத்திகளை கையாண்டார்கள்.

    அந்த வகையில், தண்ணீரை செப்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து பருகினார்கள். தண்ணீரை தேக்கி வைக்கும் நீர் நிலைகளில் செப்பு நாணயங்களை எறிந்து தண்ணீரை சுத்தப்படுத்தினார்கள்.

    செப்பு பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு, கனிமத்தில் இருந்து அயனிகள் பெறுகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் சேமிக்கப்படும் போது செம்பு அதன் சில அயனிகளை தண்ணீரில் பரிமாற்றம் செய்கிறது. இதன் காரணமாக தண்ணீரானது, கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெறுகிறது.

    பொதுவாக, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதால் உடலில் சில நோய் வராமல் தடுப்பதுடன் ஒருவரது சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்வதற்கும் தாமிரம் உதவுகிறது.

    இது தைராய்டு சுரப்பியை நன்றாகச் செயல்பட தூண்டுகிறது. பொதுவாக, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படுகிறது. செம்பு உடலில் இரும்பை உறிஞ்ச உதவுவதால் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த சோகை தடுக்கப்படுகிறது. மேலும், செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டது.

    இதனால், மூட்டுவலிக்கு சரியான மருந்தாக அமைகிறது. செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. செம்பு ரத்த நாளங்களை சுத்தப்படுத்த உதவுகிறது.

    இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. நரம்புகளையும் வலுப்படுத்தும். அந்த வகையில் செம்பு என்பது, மனித உடல்நலத்துக்கு உதவும் உலோகம் ஆகும்.

    • உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது.
    • சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

    • வயதிற்கு வந்த இளம் பெண்பிள்ளைகளுக்கு கர்ப்பப்பை வலுப்பெரும்

    • கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்

    • பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

    • உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.

    • நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன.


    • உளுந்து நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது

    • உளுந்து களியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது

    • உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும்.

    • உளுந்து அபரிமிதமான இரும்பு சத்தை கொண்டது. உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறையாவது உளுந்து களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் திறனை கொடுக்கும்

    • உளுந்து களியை தினந்தோறும் இருவேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமையடையும்.

    • அடுத்த நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துமனைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
    • இந்த நோயினால் ஹெப்பாடிட்டிஸ், கல்லீரல் செயலிழல்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்

    வாயோடு வாயாக எச்சில் மூலம் பரவி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் முத்த நோய் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த நெவி மெக்ரெவி என்ற 22 வயது பெண் ஒருவர் பட்டப்படிப்பை முடித்து டிகிரி வாங்கியதைக் கொண்டாட தனது தோழிகளுடன் பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தற்செயலாக சந்தித்த வேற்று நபருக்கு நெவி வாயோடு வாய் முத்தம் கொடுத்துள்ளார்.

     

    அடுத்த நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துமனைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது GLANDULAR FEVER எனப்படும் சுரப்பிக் காய்ச்சல் அவரைத் தாக்கியுள்ளது. உடலின் சுரப்பிகள் வீங்கி அதீத வேர்வை ஏற்பட்டு தொடர்சியாக வாந்தி எடுத்து தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் நெவி மருத்வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சுரப்பி நோயானது எப்ஸ்டைன் பார் [Epstein barr virus -EPV] என்ற வைரசால் ஏற்படுவது ஆகும். இந்த வைரஸ் எச்சில் மூலம் பரவக்கூடிய தன்மை உடையது. முக்கியமாக ஒருவரது எச்சில் மற்றவருக்கு மிகவும் தொடர்புபடும் முத்தத்தால் இந்த நோய் அதிகமாக பரவுவதால் இதை முத்தக் காய்ச்சல் [Kissing fever] என்று அழைக்கின்றனர். இது இளம் வயதினரிடமே அதிகமாக பரவி வருகிறது.

    உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இல்லாத போது இந்த நோய் ஏற்படுகிறது . இந்த நோயினால் ஹெப்பாடிட்டிஸ்,  கல்லீரல் செயலிழல்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் உயிர்கொல்லியாகவும் மாறக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

    • பாக்கெட்டு உணவில் உப்பின் அளவை சரிபார்த்து வாங்க வேண்டும்.
    • கூடுதலாக உப்பு எடுத்துக்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    ஒருவருக்கு உப்பின் தேவை என்பது அவரின் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவைப் பொருத்து அமைகிறது. உதாரணமாக அதிக உடற்பயிற்சி, உடல் உழைப்பை செய்கிறவர்களுக்கு வியர்வையின் மூலமாக சோடியம் அதிகமாக வெளியேறும். அவர்களுக்கு அதிகமான சோடியத் தேவை இருக்கும்.

    உணவில் உப்பு அதிகமாக சேர்ப்பதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    நாம் எப்போது வீட்டு உணவை விடுத்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தோமோ அதில் இருந்து தான் உடலில் அதிக உப்புச்சத்து அதிகரிக்கத்தொடங்கியது.

    அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகளான பீட்ஸா, பர்கர், பாஸ்தா போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு முக்கியமான காரணம் என்னெவென்றால் பொதுமக்களுக்கு புரியும்படி பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் உப்பு எந்த அளவிற்கு சேர்க்கப்படுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். பொதுமக்களும் அதனை வாங்கி பயன்படுத்தும் போது பாக்கெட்டுகளில் உள்ள உணவில் உப்பின் அளவை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    இந்த முறைகள் எல்லாம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது. இதனை பாடபுத்தகங்களின் வாயிலாக நாம் கொண்டு சென்றால் பிற்காலத்தில் உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க முடியும்.

    இப்போது மக்களை தேடி மருத்துவம் முறையில் 1 கோடி பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு மனிதனுக்கு சோடியம் என்பது தேவை தான். அது பிளாஸ்மா அதிகப்படுத்துவதற்கும், செல்கள் செயல்படுவதற்கும் தேவை. நரம்பு மண்டலம் இயங்குவதற்கும் போதுமானதாக் இருந்தால் போதும். ஆனால் கூடுதலாக தேவை இல்லை. உதாரணமாக ஒரு நாளை 5 கிராம் உப்பு தேவை என்றால், நாம் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம்.

    நாம் கூடுதலாக உப்பு எடுத்துக்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • இயற்கையின் அற்புதங்களுள் ஒன்று இளநீர்.
    • நீரிழப்பு, வெப்ப பக்கவாதத்தில் இருந்து காக்கும்.

    இளநீர் இயற்கையின் அற்புதங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. வேரில் இருந்து உறிஞ்சப்படும் நீரை தென்னை மரம் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உச்சி பகுதியில் காய்க்கும் தேங்காயில் சேமித்து வைத்து ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. அதில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன.

    குறைந்த கலோரியும், கொழுப்பு இல்லா தன்மையும் இளநீரை அனைவருக்கும் ஏற்ற பானமாக மாற்றுகிறது. இளநீரில் இருக்கும் ஒவ்வொரு துளியும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கு ஊட்டச்சத்தையும் அளிக்கும். நீரிழப்பு, வெப்ப பக்கவாதத்தில் இருந்து காக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். எலக்ட்ரோலைட் சமநிலையின்மையில் இருந்து உடலை பாதுகாக்கும்.

    காலையில் நடைப்பயிற்சி செய்து முடித்ததும் பலர் இளநீர் அருந்தும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி பருகுவது உடலை வெப்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும். உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.

    இளநீர் எந்த நேரத்தில் பருகுவது சரியானது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் இளநீர் பருகுவதற்கு சரியான நேரம் ஏதும் இல்லை. காலையில் வெறும் வயிற்றிலும், மதிய உணவுக்கு பிறகும், இரவில் சாப்பிட்ட பிறகும் பருகலாம். மற்ற நேரங்களிலும் கூட பருகலாம். அதேவேளையில் பருகும் நேரத்திற்கு ஏற்ப அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அமையும்.

    நடைப்பயிற்சி அல்லது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் காலை வேளையில் பயிற்சியை முடித்ததும் இளநீர் பருகுவது உடல் சோர்வை போக்கும். உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். உடற்பயிற்சி செய்தபோது ஏற்பட்ட நீர் இழப்பை ஈடு செய்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

    மதியம் சாப்பிட்ட பிறகு இளநீர் பருகுவதன் மூலம் செரிமான செயல்பாடுகள் மேம்படும். இரவு உணவு உட்கொண்ட பிறகு இளநீர் பருகுவது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.


    சிறுநீரக பிரச்சினைகள் அல்லது கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இளநீர் பருகக்கூடாது.

    100 மி.லி. இளநீரில் 18 கலோரிகளே உள்ளன. 0.2 கிராம் புரதமும், 4.5 கிராம் கார்போஹைட்ரேட்டும், 4.1 கிராம் சர்க்கரையும், 165 மில்லி கிராம் பொட்டாசியமும் உள்ளடங்கி இருக்கின்றன.

    • வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றை ஒன்றாக உட்கொள்ளும்போது அதிசயத்தக்க நன்மைகளை அளிக்கும். அதிலும் இவை மூன்றையும் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், சத்தான, ஆரோக்கியமான அமுதமாக கருதப்படுகிறது.

    ஏ.பி.சி. ஜூஸ் தயாரிப்பது எப்படி?

    ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், 2 கேரட் இவைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் ஜூசரில் போட்டு விழுதாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அதனை அப்படியே பருக வேண்டியதுதான்.

    நன்மைகள்:

    நச்சு நீக்கம்

    ஏ.பி.சி. ஜூஸ் பருகுவதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றிவிடலாம். குறிப்பாக பீட்ரூட், இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலை சுத்தப்படுத்த உதவும்.

    செரிமானம்

    ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சீரான செரிமானத்துக்கு உதவும். கேரட், குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கும். ஏ.பி.சி ஜூஸை தவறாமல் உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    இந்த ஜூசில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின் சி, நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடி உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவி செய்யும்.

    சரும நலன்

    ஏ.பி.சி. ஜூஸில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் பளபளப்பை தக்கவைக்க உதவி புரியும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சரும திசுக்களை சரி செய்ய உதவும்.

    சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு வழங்கும். அத்துடன் இந்த ஜூஸில் இருக்கும் நச்சு நீக்கும் பண்புகள் முகப்பரு மற்றும் சருமம் சார்ந்த பிற பிரச்சினைகளை குறைக்க உதவும்.

    உடல் ஆற்றல்

    பீட்ரூட் ரத்த ஓட்டத்தையும், தசைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தையும் துரிதப்படுத்த உதவி புரியும். உடல் செயல்திறனையும் மேம்படுத்தும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள இயற்கை சர்க்கரைகளும் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.

    இதய ஆரோக்கியம்

    ஏ.பி.சி. ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்களிக்கும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதேவேளையில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். கேரட் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.

    எடை மேலாண்மை

    ஏ.பி.சி. ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கும், உடல் எடையை சீராக நிர்வகிப்பதற்கும் இது சரியான தேர்வாக அமையும். நொறுக்குத்தீனிகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் ஆர்வத்தைக் குறைத்து, நீண்ட நேரம் பசி உணர்வு இன்றி வயிற்றை நிறைவாக வைத்திருக்கவும் வழிவகை செய்யும்.

    • நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி புகார் செய்யும் மற்றொரு பிரச்சனை அரிப்பு.
    • நரம்புகள் சரியாக வேலை செய்யாததே இதற்குக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

    சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒரு நோயாகும். பெரும்பாலும் பார்வை பிரச்சினைகள், சிறுநீரக பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி புகார் செய்யும் மற்றொரு பிரச்சனை அரிப்பு. இது ஒரு சிறிய பிரச்சனை போல் தோன்றலாம், ஆனால் அரிப்பு ஒரு நபருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

    நள்ளிரவில் விழித்தெழுந்து, அரிப்பு உள்ள பகுதிகளில் சொறிந்து, போதுமான தூக்கம் வரவில்லை. நீரிழிவு நோய்க்கும் அரிப்புக்கும் என்ன தொடர்பு?

    சர்க்கரை நோயாளிகள் பொதுவாக பாதங்களில் அரிப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக பாதங்களில் அரிப்பு இருக்கும். நாளமில்லாச் சுரப்பி நிபுணர் கூறுகையில், நரம்புகள் சேதமடையும் போது அரிப்பு ஏற்படுகிறது மற்றும் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது.

    டைப் 2 நீரிழிவு நோயாளிகளிடம் சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டது. 109 பேர் ஆய்வு செய்யப்பட்டனர். 36 சதவீதம் பேருக்கு அரிப்பு ஏற்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்று ஆய்வு காட்டுகிறது.


    நீரிழிவு நோயாளிகளுக்கு அரிப்புக்கான காரணங்கள் என்ன?

    • நீரிழிவு நோய் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளில், சிறுநீரகங்கள் அதிகப்படியான சர்க்கரையை வடிகட்டி உறிஞ்சுவதற்கு அதிக நேரம் வேலை செய்கின்றன. அவற்றைத் தக்கவைக்க முடியாதபோது, அதிகப்படியான சர்க்கரை சிறுநீரில் சென்று உடலின் திசுக்களில் இருந்து திரவங்களை எடுத்துக்கொள்கிறது. இதனால் நீரிழப்பு ஏற்படுகிறது. இது பின்னர் வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.

    • நீரிழிவு நரம்பியல் அல்லது நரம்பு பாதிப்பு நீரிழிவு நோயில் பொதுவானது. இதனால் அரிப்பு ஏற்படும். நரம்புகள் சரியாக வேலை செய்யாததே இதற்குக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

    • உயர்ந்த இரத்த சர்க்கரை அளவு ஈஸ்ட் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது அரிப்பையும் ஏற்படுத்தும்.

    • நீரிழிவு நோயால் இரத்த ஓட்டம் குறைகிறது. இந்த குறைக்கப்பட்ட இரத்த ஓட்டம் தோலில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இழந்து, இறுதியில் அரிப்பு ஏற்படுகிறது.

    • நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இது சருமத்தில் தொற்று மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும்.

    • இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
    • அத்தி ஒரு சிறந்த பாலியல் துணை என்று கருதப்படுகிறது.

    அத்தி பழம் செரிமானத்திற்கு...

    நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . அத்திப்பழத்தை உண்டால் நம்மை மற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள விடாமல் தடுக்கிறது .

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்...

    ட்ரைகிளிசரைடுகள் (triglyceride) இரத்தத்தில் உள்ள ஒரு கொழுப்புத் துகள்கள், அவை இதய நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும் . அத்தி பழம் உங்கள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    கொழுப்பை குறைக்க...

    அத்திப்பழத்தில் பெக்டின் ( pectin )உள்ளது, இது கரையக்கூடிய நார்ச்சத்து, இது கொழுப்பின் அளவைக் குறைக்கும் . உலர் அத்திப்பழங்களில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்த கொழுப்பையும் குறைக்கின்றன.

    ஆஸ்துமாவை சமாளிக்க...

    மூச்சுக்குழாய் ஆஸ்துமாவை சமாளிக்க ஒரு திறமையான முறை தூள் வெந்தயம், தேன் மற்றும் அத்தி சாறு ஆகியவற்றின் கலந்து குடிப்பது . ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் அத்தி சாற்றையும் பருகுங்கள் .

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...

    அத்திப்பழம் உங்கள் உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் roundworms ரவுண்ட் வார்ம்களைக் கொல்கிறது , இவை தான் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது . அத்திப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் சேர்ந்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    ஹார்மோன்களை பெருக்கும்...

    அத்தி ஒரு சிறந்த பாலியல் துணை என்று கருதப்படுகிறது. அவற்றில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மெக்னிசியம் மற்றும் துத்தநாகத்தை அதிகம் கொண்டுள்ளது இந்த சத்துக்கள் ஆண்ட்ரோஜன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்ற பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

    • விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது ‘ஸ்பைருலினா’ (Spirulina) எனும் சுருள்பாசி.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உப உணவாக பயன்படுத்தலாம்.

    எதிர்காலத்துக்கான சிறந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனத்தாலும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கான உணவாக நாசாவாலும் அங்கீகரிக்கப்பட்டது 'ஸ்பைருலினா' (Spirulina) எனும் சுருள்பாசி.

    மிகக் குறைந்த விலையில், நிறைந்த சத்துக்களைக்கொண்ட ஒரு மகத்துவ உணவு. சயனோ பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த சுருள்பாசியான ஸ்பைருலினா, நன்னீரில் மிதந்து வாழும் தன்மையைக்கொண்ட, நீலப்பச்சைப் பாசி.

    *ஒரு கிலோ ஸ்பைருலினா உணவு, ஆயிரம் கிலோ காய்கறிகளுக்குச் சமமான சத்துக்களைக்கொண்டது. எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும், அதிக அளவு புரதமும் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

    ஸ்பைருலினாவில் இருக்கும் காமாலினோலெனிக் அமிலம், உலகில் தாய்ப்பாலைத் தவிர வேறெந்த ஒரு உயிரினத்திலும் இல்லை. இந்த அமிலம்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, உடலை வலுவாக்குகிறது. மற்ற எந்த உணவையும் விட, மிக அதிக அளவில் சீரணமாகும் தன்மையுள்ள புரதச்சத்துக்கள் நிரம்பி உள்ளது.

    ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்...

    இந்த சுருள் பாசியில் மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ,டி,இ,கே, அமினோ ஆசிட், காமாலினோலெனிக் அமிலம், புரதம் (55% முதல் 65%வரை), மக்னீசியம், நைட்டனின் ஏ, பீட்டா கரோட்டின் , வைட்டமின் பி6,பி12, இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூட்டேஸ் (SOD)போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன.


    பயன்கள்

    மனிதர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து தயாரிப்பில் முக்கியமாக இந்தப் பாசி பயன்படுகிறது.

    அழகு சாதன பொருட்கள் தயாரிக்க, மீன்களின் வளர்ச்சியை அதிகபடுத்தும் உணவாக, மாடுகளை அதிக அளவில் பால் கறக்கச் செய்யும் தீவனமாக, பட்டுப்புழுவின் தரத்தை அதிகரிக்கும் வகையில் பட்டுப் புழுவுக்கு உணவாக, 'கொழுகொழு'வென கோழிகள் வளர்வதற்கு என்று ஸ்பைருலினா பாசியின் பயன்பாட்டு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

    இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைருலினாவில் உள்ள புரதம் எளிதில் ஜீரணிக்கும் தன்மை கொண்டது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உப உணவாக பயன்படுத்தலாம்.

    தாதுக்கள்

    இவற்றில் அனைத்து வகையான தாதுக்களும் அடங்கியுள்ளது. உடலை சீராக இயக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

    மக்னீசியம்

    ஸ்பைருலினாவில் தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான தாது உப்புகளாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது.

    வைட்டமின் ஏ

    கண்பார்வை சீராக இருப்பதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்பது அத்தியாவசியமானது. பிற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஸ்பைருலினாவில் இச்சத்து அதிகளவில் உள்ளது.


    பீட்டா கரோட்டீன்

    இது கேரட்டில் இருந்து கிடைக்கக்கூடிய அளவைவிட ஸ்பைருலினாவில் இருந்து 10 மடங்கு அதிகமாக கிடைக்கிறது.

    வைட்டமின் பி6-பி12

    ஸ்பைருலினாவில் இவை மிகுந்து காணப்படுவதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரின் கணையம் சீராக செயல்பட்டு இன்சுலினை தேவையான அளவு சுரக்கச் செய்து இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

    இரும்புச்சத்து

    மற்ற உணவுப் பொருட்களைவிட ஸ்பைருலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.

    கார்போஹைட்ரேட்

    நேரடியாக ஸ்பைருலினாவிலிருந்து நமது உடலுக்கு கிடைக்கிறது.

    காமாலினோலெனிக் அமிலம்...

    இவை ஸ்பைருலினாவிலிருந்து நேரடியாக கிடைப்பதால், உடலில் கொழுப்புச்சத்து சீராக இருப்பதற்கு உதவி புரிந்து உடல் பருமனை குறைக்கின்றது.

    ஸ்பைருலினாவில் காமா லினோலினிக் அமிலம் இருப்பதால் தாய்ப்பாலுக்கு நிகரான உணவாக அமைகிறது.

    சூப்பர் ஆக்சைடு டிஸ்மியூட்டேஸ் (SOD)

    உடலில் இறந்த செல்களுக்கு புத்துயிர் கொடுக்கவல்லது. புற்றுநோய் மற்றும் குடல்புண் போன்ற நோய்களை தீர்க்கவல்லது.

    புத்துணர்ச்சி அளிக்கும்

    ஸ்பைருலினாவை தினமும் உட்கொண்டு வந்தால் அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதன்மூலம் உடலின் கலோரி அளவு குறைந்து உடல் எடை வேகமாக குறையும்.

    எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்து

    நிறைவுறா ஒமேகா மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது

    ஹார்வார்டு மெடிக்கல் ஸ்கூல் போஸ்டன் (1996 1998) ஸ்பைருலினா தொடர்பாக நடத்திய ஆய்வின் முடிவில் ஹெச்.ஐ.வி.வைரஸ் மேலும் மேலும் பெருக்கமடையாமல் தடுப்பதுடன் எய்ட்ஸ் நோயாளிகள் அதிக நாட்களுக்கு உயிர் வாழ உதவுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.


    யாரெல்லாம் ஸ்பைருலினா சாப்பிடலாம்...

    ஸ்பைருலினாவில் உள்ள அதிகபட்ச செரிக்கும் தன்மைகளுடைய புரதத்தால், இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சிறுவர்கள் முதல் தாய்மார்கள் வரை, உடல் உழைப்பாளர்கள் முதல் மன உழைப்பாளர்கள் வரை, பாமரன் முதல் மேதைகள் வரை, எல்லோரும் உபயோகிக்கலாம், ஸ்பைருலினா அடைத்த கேப்ஸ்யூல்களையே, விண்வெளி வீரர்கள் உணவாக பயன்படுத்துகின்றனர்.

    உலகினில் தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில், அனைத்து சத்துகளும் கொண்டுள்ள ஸ்பைருலினா, பசும்பாலைவிட, நான்கு மடங்கு கூடுதல் சத்து மிக்கது.

    இத்தகைய நலம்தரும் தன்மைகளாலேயே, ஐக்கிய நாடுகள் சபை ஸ்பைருலினாவை முழு ஊட்டச்சத்துள்ள உணவாக, அங்கீகரித்திருக்கிறது.

    • ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.
    • மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    கர்ப்பத்தை திட்டமிடும் அனைவருக்கு கருத்தரிக்க சிறந்த நாட்கள் எது என்பதை தெரிந்து கொள்ளுவதில் குழப்பமாக இருக்கும். இப்படி குழப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் அண்டவிடுப்பின் நாட்களை சரியாய் தெரிந்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.

    ஓவரியில் இருந்து கரு முட்டையை வெளியிடும் போது அண்டவிடுப்பு நிகழ்கிறது, உங்கள் மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பு நிகழ்கிறது.

    அதாவது 28 நாள் சுழற்சியின் 11 நாள் முதல் 14-வது நாளில் அண்டவிடுப்பின் நடக்கிறது, இது எல்லோருக்கும் பொதுவானது இல்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது கருப்பை நீர்கட்டிகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.

    நீங்கள் சரியான 28-நாள் சுழற்சியைக் கொண்டிருந்தால், 14 -ம் நாளில் அண்டவிடுப்பு நிகழும்.

    எனவே, நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்பினால், உங்கள் மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த நேரம்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அண்டவிடுப்பு வித்தியாசமாக இருக்கும், மேலும் இது பல காரணங்களால் கருவுறுதலை பாதிக்கலாம்.

    ஒருமுறை கருமுட்டை வெளியேற்றினால், விந்தணுவுடன் இணைந்து கருவுற கரு முட்டை 24 மணி நேரம் வரை மட்டுமே உயிர்வாழும்.

    எனவே ஒரு மாதத்தில் அண்டவிடுப்பு நடக்கும் நாள் தான் கருவுற சிறந்த நாட்கள், மற்ற நாட்கள் கர்ப்பம் தரிக்க சிறந்த நாட்கள் இல்லை.

    மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அப்போது தான் உங்கள் கரு முட்டை வெளியில் வரும், பிறகு அண்டவிடுப்பின் நிகழும் அந்த சமயத்தில் தாம்பத்தியம் கொள்ளுவதன் மூலம் கருத்தரிக்க முடியும்.

    இதைச் செய்வதன் மூலம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

    ×