என் மலர்
பொது மருத்துவம்
- மார்பக சுரப்பி திசுக்களின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாகிறது.
- அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டையும் அடக்குகிறது.
ஆண்களுக்கு பருவ வயதைக் கடந்த பின்னரும் மார்பகம் பெரிதாக இருக்கும் நிலை "கைனகோமாஸ்டியா" எனப்படும். இது மார்பகங்களில் உள்ள சுரப்பி திசுக்களின் விரிவாக்கம் ஆகும். மார்பக சுரப்பி திசுக்களின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாகிறது.

அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டையும் அடக்குகிறது. ஏனெனில் இது விந்தணுக்களில் டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டிற்கு காரணமான ஹார்மோனான, லுடினைசிங் ஹார்மோனை அடக்குகிறது.
ஈஸ்ட்ரோஜனின் அதிகரிப்பு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் குறைதல் ஆகியவை பெரும்பாலும் கைனகோமாஸ்டியாவுக்கு வழிவகுக்கிறது.

காரணங்கள், அறிகுறிகள்:
1) கைனகோமாஸ்டியா ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களினால் இது ஏற்படுகிறது.
2)அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள் காரணமாக வருகிறது.
3) ஆண்ட்ரோஜன் எதிர்ப்பு மருந்துகள், உடல் பருமன், தீவிர கல்லீரல் நோய், சிறுநீரக நோய் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு மார்பக அளவு பெரிதாகிறது.
4) பெரும்பாலான ஆண்களுக்கு எந்த அறிகுறியும் காணப்படாது. இதனால் ஒரு வித அசவுகரியம் ஏற்பட்டு, மன அழுத்தம் உருவாகலாம். ஒரு சிலருக்கு தான் வலி ஏற்படுகிறது.
சித்த மருத்துவம்:
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் கீழ்க்கண்ட மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.
1) முருங்கை விதைப் பொடி, நெருஞ்சில் சூரணம், அமுக்கரா சூரணம் ஆகியவற்றில் தலா ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு நேரங்களில் வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.
- சமநிலையில் உள்ள ஒரு முழு உணவாக பால் விளங்குகிறது.
- பாலில் உள்ள கால்சியம் எலும்புப்புரை நோய் வராமல் தடுக்கிறது.
ஊட்டச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவை ஏறக்குறைய சரியான சமநிலையில் உள்ள ஒரு முழு உணவாக பால் விளங்குகிறது.
மேலும் இது 31 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஏற்றதாக கருதப்படுகிறது.

பாலில் உள்ள கேசின் புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு எலும்பின் ஆரோக்கியம் மற்றும் உறுதிக்கு துணை புரிகிறது. புரதத்தில் உள்ள கிளைத்தொடரி அமினோ அமிலங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் குறைவதற்கும், தசைகள் திறம்பட செயல்படுவதற்கும் உதவுகிறது.
மேலும் பாலில் உள்ள கார்போஹைட்ரேட் லேக்டோஸ் ஜீரணிக்கப்படும் போது குளுக்கோஸ் மற்றும் கேலக்டோசாக மாறி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. பாலில் உள்ள கால்சியம் எலும்புகளில் எலும்புப்புரை நோய் வராமல் தடுக்கிறது.
பாலில் 87 சதவீதம் நீர் இருப்பதால் நீர்ச்சத்து குறைபாடு வராமலும் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தம் குறைவதற்கு உதவி புரிகிறது. இதில் உள்ள டிரிப்டோபான் மற்றும் மெலடோனின் ஹார்மோன்கள் இரவில் நன்றாக தூக்கம் வருவதற்கு துணை புரிகிறது.
பாலில் பெரும்பாலும் பக்க விளைவுகள் கிடையாது. இருப்பினும் ஒரு சிலருக்கு இதில் உள்ள லேக்டோஸை ஜீரணிக்க கூடிய லேக்டேஸ் என்சைம் (நொதி) குறைபாட்டால் லேக்டோஸ் சகிப்புத்தன்மை குறைதிறன் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் இதில் உள்ள இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி முகப்பருவை அதிகப்படுத்தலாம். பாலில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு டம்ளர் வரை பால் குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் பாக்கெட் பாலை உபயோகிக்கும் போது கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பயன்படுத்துவது அதிக நன்மைகளை தரும்.
இதயம், மூளை, நரம்பியல், சிறுநீரகம், கண், மனநலம், மகப்பேறு மருத்துவம், குடும்ப நலம் மற்றும் சித்த மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள்.
- மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- ஸ்மார்ட் போன் ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலையில், எழுந்ததில் தொடங்கி போனையே பார்ப்பது தான் வேலையாக உள்ளன.

நாட்டிலும், உலகிலும் என்ன நடந்தாலும், மற்றவர்களுடை நிலையை ஸ்டேட்டஸ் மூலம் தெரிந்துகொள்கிறோம். மேலும் பொருட்களை ஆர்டர் செய்கிறோம்.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க கடினமாக இருக்கும். ஆனால் அத்தகையை ஸ்மார்ட் போனால் தான் நம் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

எவ்வளவு நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களா அவ்வளவு அதிகமாக மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுபடி போன் நீண்டகாலமாக பயன்படுத்துவதால் உணர்ச்சி வசப்படுதல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவை ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது.
உதாரணத்துக்கு சாப்பிடும் போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம். அவ்வாறு சாப்பிடும் போது மனதளவில் சாப்பிட முடிவதில்லை. பல சமயங்களில் போனிலேயே மூழ்கிவிடுகிறோம்.
இதனால் அதிகமாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகிறது. எடை அதிகரிப்பு பிரச்சினை, அதுமட்டுமின்றி ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை, ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.

மேலும் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் போனில் நோட்டிபிகேஷன்களை சரிபார்க்கும் போது உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது. கார்டிசோலின் அளவு அதிகரிப்பதால் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இந்தமாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க இரவில் தூங்குவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பு ஸ்மார்ட்போனை பயன்படுத்தக்கூடாது. கழிவறையில் கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
- குழந்தையை உயிருடன் வைத்திருக்க தொப்புள் கொடியே காரணம்.
- பிறப்பு நிலை கோளாறுகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருக்க உணவு, உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி மட்டும் காரணம் கிடையாது. குழந்தையை உயிருடன் வைத்திருக்க தொப்புள் கொடியே காரணம்.
ஒரு குழந்தை உருவாகும் போதே அதனுடன் சேர்ந்து தொப்புள் கொடியையும் சேர்த்து உருவாக்குகின்றன. அதன் பிறகு கருமுட்டை தானாகவே கருப்பை சுவற்றில் பதித்துக்கொள்ளும்.

உட்புற அணுக்கள் வளர்ச்சி அடைந்து சிசுவாக மாறுகிறது. அதேபோல் வெளிப்புற அணுக்கள் சுவர்களுக்குள் ஆழமாக புதைந்து தொப்புள் கொடியாக உருவாகும்.
இன்னும் சொல்லப்போனால் பிரசவத்திற்கு முன்பே பிறப்பு நிலை கோளாறுகளை கண்டுபிடிக்க இந்த தொப்புள் கொடி அணுக்கள் உதவுகின்றன.
ஒரு குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான உயிர்பாதை என்று கூறலாம்.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் கருப்பை வழியாக ரத்தம் அனுப்பப்படுகிறது. அப்போது ஊட்டச்சத்துக்களும் பரிமாறப்படுகின்றன. சிசுவின் கழிவை ரத்த ஓட்டத்தின் வாயிலாக வெளியேற்றவும் இந்த தொப்புள் கொடிகள் உதவுகின்றன.
தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் தாயின் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடி மூலமாக பெறுவார்கள்.
மேலும் தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும் தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாய் ஆகும்.

குழந்தை பிறந்த பிறகு ஊட்டச்சத்திற்கு தொப்புள் கொடி தேவை இல்லை. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி இடுக்கிறப்பட்டு குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் வெட்ட முடியுமோ அவ்வளவு தூரம் வலியே இல்லாமல் வெட்டி விடலாம்.
தொப்புள் கொடியில் நரம்புகள் இல்லாததால் அது வலியில்லாத ஒன்றாக இருக்கும்.
தொப்புள் கொடியை வெட்டுவதற்கு முன், குழந்தையின் இதயத்துடிப்பில் வித்தியாசமான சத்தம் ஏதும் கேட்கிறதா, அதாவது இதயத்துடிப்புக்கு இடையில் வரக்கூடிய சின்னச்சின்ன சத்தங்கள் கேட்டால், குழந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்னை ஏதும் இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்வார்கள். அதன் பிறகே அதனை வெட்டி எடுப்பார்கள். இல்லை என்றால் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- தைராய்டு சுரப்பி ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும்.
- கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.
குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வளவு பேருக்கு இந்த தைராய்டு பிரச்சனை இருக்கும்? தைராய்டு பிரச்சனை குழந்தையின்மைக்கு வழி வகுக்குமா?
பொதுவாக குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிற 15 சதவீதம் பெண்களில், கிட்டத்தட்ட 6 முதல் 22 சதவீதம் வரையிலான பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கும்.

தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்களில் கிட்டத்தட்ட 60 முதல் 65 சதவீதம் பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். ஒருவேளை அவர்கள் கருத்தரித்தால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள்.
எனவே குழந்தையின்மை சிகிச்சையில் தைராய்டு ஹார்மோன் பரிசோதனை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தைராய்டு தாக்கம் அனைத்து செல்களையும் பாதிப்பதால் கண்டிப்பாக குழந்தை பேறுக்கு தைராய்டு பரிசோதனை மிக முக்கியமானதாகும்.

தைராய்டு சுரப்பி என்பது ஒவ்வொருவரின் கழுத்திலும் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இணைக்கப்பட்ட 2 மடல்களை கொண்டுள்ளது. அந்த தைராய்டு சுரப்பியில் இருந்துதான் தைராய்டு ஹார்மோன் சுரக்கிறது.
இந்த தைராய்டு ஹார்மோன் நமது உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சினைப்பையிலும் செயல்பாடுகளை ஊக்குவித்து கருமுட்டைகள் முதிர்ச்சி அடைவதற்கு உதவுகிறது.
கருமுட்டைகளின் மேல் கிரானுலோசா என்ற செல் இருக்கும். அந்த கிரானுலோசா செல்கள்தான் கருமுட்டையின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது. அதன் மூலமாகத்தான் அனைத்து ஹார்மோன்களும் அந்த கருமுட்டையின் செயல்பாடுகளை ஊக்குவித்து முட்டையின் வளர்ச்சி, முட்டையின் முதிர்ச்சி ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.
இதற்காக கிரானுலோசா செல்கள் மற்றும் கருமுட்டையை சுற்றியுள்ள அனைத்து செல்களிலும் தைராய்டு ஏற்பி காணப்படும். இந்த தைராய்டு சுரப்பியானது அந்தந்த செல்களில், அதனுடைய செயல்பாடுகளை ஊக்குவித்து அந்த கருமுட்டைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைக்கும் பணிகளை செய்கிறது.
எனவே தைராய்டு குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருமுட்டைகளை சுற்றியுள்ள செல்களில் இருக்கும் தைராய்டு சுரப்பியில் சரியான செயல்பாடு இருக்காது. இதனால் கருமுட்டைகளின் வளர்ச்சி, முதிர்ச்சி ஆகியவை சீராக அமையாது.

தைராய்டு பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டுமா? அதை எப்படி கணக்கிடுவது?
குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த தைராய்டு பரிசோதனையில் உங்களுக்கு இருக்கும் தைராய்டு அளவானது டி.எஸ்.எச். (தைராய்டு தூண்டுதல் ஹார்மோன்) என்ற வகையில் கணக்கிடப்படுகிறது.
இந்த டி.எஸ்.எச். அளவானது குறிப்பாக எல்லா பெண்களுக்கும் 3.5 ஆக இருக்கிறது. இது சரியான அளவுதான் என்பார்கள்.
ஆனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு இந்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் உயர் நிலையை கணக்கிடுவோம். ஏனென்றால் டி.எஸ்.எச். அளவானது 3 முதல் 3.5 வரை இருக்கும் பெண்களுக்கு கூட இந்த குறைபாடுகளால் கருமுட்டைகளின் தரம், கருமுட்டைகளின் கருத்தரிக்கும் தன்மை ஆகியவை குறைவாகிறது.
குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களில் தைராய்டு பிரச்சனை உள்ள 20 சதவீதம் பெண்களுக்கு தைராய்டு அளவு குறைவாக இருப்பதை இந்த வகையில் தான் நாம் கண்டுபிடிக்க முடியும்.
கருமுட்டை வளர்ச்சிக்கான ஹார்மோன்களில் ஒன்றான கோனோ டோட்ரோபின் மூளையில் உள்ள ஹைப்போதலாமசில் இருந்து சுரக்கிறது. இந்த ஹார்மோனும் தைராய்டு பிரச்சனை ஏற்படுவதில் முக்கியமான பங்கை வகிக்கிறது.
ஏனென்றால் இதில் இருந்து வருகிற ஹார்மோன் மூளையில் உள்ள தைராய்டின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் போது தைராய்டு ஹார்மோன் அளவு குறைகிறது.
தைராய்டு அளவு குறைவானால் தானியங்கி முறையில் தைராய்டு அளவை சரி செய்வதற்காக நமது மூளையில் இருந்து ஒரு சிக்னல் வரும். இதை தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் என்று சொல்வோம்.
இந்த தைரோட்ரோபின் ரிலீசிங் ஹார்மோன் ஹைபோதலாமசில் செயல்பட்டு தைராய்டு சிமுலேட்டிவ் ஹார்மோனை சுரக்கும். அதோடு சேர்த்து புரோலாக்டின் என்ற ஹார்மோனையும் அதிகரிக்கும்.
இந்த புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, அதுவும் முட்டையின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது. தைராய்டு குறைவாக இருக்கும் நிலையில், புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகும் போது, மறைமுகமாக இது கோனோ டோட்ரோபின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கிறது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தை பேறு பெறுவதில் பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் குறிப்பாக கரு முட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் மாதவிலக்கு தள்ளித் தள்ளி வரும். சில பெண்களுக்கு மாதவிலக்கு வரவே வராது. சில நேரங்களில் மாதவிலக்கு அதிகமாக போகும்.
இந்த மாதிரியான பலவித குறைபாடுகளால் கருமுட்டைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருமுட்டைகள் சரியாக வளரவில்லை என்றால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் முட்டைகளில் கரு உருவானால் கூட இந்த குறைபாடுகளால் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு, குறைபாடுள்ள குழந்தை மற்றும் குறைவான எடை கொண்ட குழந்தை பிறக்கும்.
குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு தைராய்டு பாதிப்புகளை சரி செய்வதற்கும், அவர்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுப்பதற்கும் வழிமுறைகள் உள்ளன.
- பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன.
- நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும்.
நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் விக்கல். அதாவது, அனிச்சைசெயல்.

நாம் சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.
சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் 'விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் 'விக்கல்'.
விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், `இல்லை' என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.
அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.
ஆனால், சிலருக்கு சில நாட்கள் வரை விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.
- பேஸ்மேக்கர் எப்படி பொருத்துகிறார்கள் தெரியுமா?
- இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பொருத்தக்கூடிய ஒரு கருவி ஆகும்.
பேஸ் மேக்கர் சிகிச்சை என்பது இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கு பொருத்தக்கூடிய ஒரு கருவி ஆகும். இது ஒரு சிறிய தீப்பெட்டி அளவில் இருக்கும் மெட்டல் கருவி ஆகும். ஒரு மனிதனின் இதயம் 60-ல் இருந்து 100 என்ற அளவில் இருக்கும். இதுவே ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ அதிகமாக இருக்கும்.

இதேபோல் இதயத்துடிப்பு 32-ல் இருந்து 30 வரையிலான இதயத்துடிப்பு இருப்பவர்களுக்கு பேஸ் மேக்கர் மிகவும் அவசியம். இவர்களுக்கு பேஸ் மேக்கர் சிகிச்சை செய்யப்படுகிறது.
இதயநோயாளிகள் பேஸ்மேக்கர் சிகிச்சை பொருத்தியதாக சொல்வதை கேள்வி பட்டிருப்போம். பேஸ்மேக்கர் எப்படி பொருத்துகிறார்கள் தெரியுமா?
ஆஞ்சியோகிராமுக்கு செய்வது போல கையில் உள்ள சிரையின் மூலமோ கழுத்து எழும்பின் பின் உள்ள சிரையின் மூலமோ ஒரு மெல்லிய குழாய் வழியாக மின் இணைப்பு கம்பியை இதயத்தின் மேல் அறைகளின் தடுப்பு சுவரை தொடும்படியாகவோ அல்லது வலதுபுற கீழறையின் மூலையிலோ பொருத்துவார்கள். இதன் வெளிநுனியை தீப்பெட்டி அளவிலான பேட்டரியுடன் பொருத்துவார்கள்.
நோயாளி ஆண் என்றால் அவரது கழுத்து எலும்புக்கு கீழ் தோலுக்கடியிலும், பெண்ணாக இருந்தால் மேல் வயிற்று தோலுக்கு அடியிலும் பொருத்தப்படும்.
இதயத்துக்கு தேவையான மின்சக்தியை தேவையான நேரத்தில் செலுத்தும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு நோயாளி வீடு திரும்புவார். இதனை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
இந்த கருவியானது இதயத்தை மீண்டும் சரியாக துடிக்கும்படி மின் தூண்டலை ஏற்படுத்துகிறது. ஈசிஜி மெஷினில் இணைத்து பதிவுகளை காகிதத்தில் வரைபடமாக பெறலாம்.

அதேபோல் இந்த பேஸ்மேக்கர் பேட்டரியின் ஆயுள் இவற்றையும் சரிபார்க்க முடியும். சாதாரணமாக பேட்டரியின் ஆயுள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் ஒவ்வொருவரின் இதயத்தின் மின்தூண்டல் தேவையை பொறுத்து அதிகமாக வேலை செய்தால் குறையலாம்.
பேட்டரி ஆயுள் குறையும் போது சிறிய அறுவை சிகிச்சை மூலம் பழைய பேட்டரியை அகற்றிவிட்டு புதிய பேட்டரியை பொருத்த முடியும்.

மேலும் பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் ஏதாவது நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது மாரடைப்பு வர சாத்தியக்கூறுகள் இருப்பதாக பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தாலோ தவிர மற்றவர்கள் மாதிரி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள் எக்காரணம் கொண்டும் தப்பித்தவறிக்கூட காந்த சக்தி உள்ள பொருட்களின் அருகில் செல்லக்கூடாது.
இந்த கருவி பொருத்தப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் ஒரு சான்றிதழ் தருவார்கள் அதை பயணங்களின் போது கூடவே வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் பயணங்களின் போது பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யாமல் இருப்பதற்கு இந்த சான்றிதழ் உதவும்.
ஆனாலும் இது வயதானவர்களுக்கே அதிகமாக தேவைப்படுகிறது.
- உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது.
- மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது.
மதிய உணவுக்கு பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை உணவு கோமா என்று அழைப்பார்கள். மதிய வேளையில் தூக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மதியம் உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதை போன்ற உணர்வு ஏற்படும். அதோடு செரிமான அமைப்பிற்கு உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்கு பிறகு நாம் மந்தமாக இருக்கவும், தூக்கம் வரவும் இது தான் காரணம்.
உணவு உட்கொண்ட உடனேயே செரிமான செயல்முறைகளால் ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.

மேலும் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த மந்தமான உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.
ஆகவே காலை நேரத்தில் முழு தானியப்பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
- வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
- மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.
ஆல்கஹால் என்ற சொல் 'அல்குஹ்ல்' என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. தற்போது மது வகைகள் அனைத்தும் ஆல்கஹால் எனப்படுகிறது. ஆல்கஹாலின் வீரியத்தை அது உடலுக்குள் சென்ற பின் ஏற்படுத்தும் விளைவுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் ஆல்கஹால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இதற்கு காரணம் இது அதிக கொழுப்பில் கரையக் கூடியது மற்றும் உடலின் தசைகளில் விரைவாக பரவக்கூடியது. குறிப்பாக வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
உதாரணமாக 60 மி.லி. ஆல்கஹாலை வெறும் வயிற்றில் சில நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், ஒன்று முதல் 1½ மணி நேரத்திற்குள் ரத்தத்தில் கலந்து விடும். மேலும் 6 முதல் 8 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக ரத்தத்தில் இதன் தன்மை நீடித்து காணப்படும்.
ஆல்கஹாலின் மிக முக்கியமான பாதிப்பு மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கும் போது மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.
ஒரு வித தூக்க கலக்கம், மந்தமான பேச்சு, மன குழப்பம், நிலையற்ற நடை, இரட்டை பார்வையை ஏற்படுத்துகிறது. உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் உடல் மன ஒருங்கிணைப்பு இழப்பு ஏற்படுகிறது.
மது குடித்ததும், ஆல்கஹால் வயிறு வழியாக ரத்த ஓட்டத்தில் சேரும். ஒரு நபர் குடிக்கும் மதுவில் 20 சதவிகிதம் வயிற்றின் வழியாக ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. மேலும் 80 சதவிகிதம் ஆல்கஹால் சிறுகுடலால் உறிஞ்சப்படுகிறது.

ஆல்கஹால் ரத்த ஓட்டத்தை அடைந்தவுடன், அது கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமடைகிறது. ஆல்கஹால் மூலக்கூறுகளை உடைக்கும் நொதிகளைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது.
வளர்சிதை மாற்றமடையாத (மெட்டபாலிசம் ஆகாத) ஆல்கஹால் உடலில் மீதம் இருக்கும். எஞ்சிய அனைத்தும் வியர்வை, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது.
பொதுவாக, ஆல்கஹால் உடலில் பசியின்மை, கல்லீரல் சிதைவு, இரைப்பை, அமில சுரப்பை அதிகரித்து அழற்சியை அதிகரிக்கிறது. கடுமையான கணைய அழற்சியும் நாளடைவில் ஏற்பட்டு உடலின் பல்வேறு செயல்பாடுகளும் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது. மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பது இதனால் தான்.
- இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.
- ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.
ஒரே இடத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், அல்லது கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தால், கால்களிலுள்ள ரத்தக்குழாய்களில் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் ரத்தக் குழாய்களிலிருந்து, நீர் வெளியே வந்து, சுற்றியிருக்கும் திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது. இப்படித்தான் கால் வீக்கம் ஏற்படுகிறது.

அதிக உடல் எடை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது அல்லது அமர்ந்திருப்பது, இறுக்கமான காலுறைகள், ஜீன்ஸ் பேண்ட் நீண்ட நேரம் அணிந்திருப்பதாலும் காலில் நீர் சேரலாம்.
இதுதவிர சிறுநீரகம், இதயத் தசைகள் பாதிப்பு, புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பக்க விளைவு, காலிலுள்ள ரத்தக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு ரத்தம் வந்து சேருவதில் பிரச்சினை, ஹார்மோன் பிரச்சனை, நிணநீர் மண்டல பாதிப்பு, சிறுநீரக வடிகுழாய்களில் பிரச்சினை, கர்ப்ப காலம், நுரையீரல் ரத்தக் குழாய்களில் அதிக ரத்த அழுத்தம், கால்களிலுள்ள ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டி அடைப்பது, அதிக உப்புள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, காலில் ஏதாவது புண், மூட்டு வீக்கம் இருப்பது, சோடா, குளிர்பானங்கள் அடிக்கடி அதிகமாகக் குடிப்பது போன்ற பல காரணங்களினால் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு.
பயணத்தின் போது காலில் வீக்கம் வராதிருக்க, அதிக உப்பு சேர்த்த உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். காலை நன்றாக, இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள். கால்களை ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.
நிறைய காய்கறிகள், பழங்கள், தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோடா, சிப்ஸ், குளிர்பானங்களை தவிர்க்கவும்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கால்களை தூக்கி தலையணை மீதோ அல்லது மேஜை மீதோ வைத்துக் கொள்ளவும். ஏதாவது ஒரு வழியில் கால்களை ஆட்டிக் கொண்டே இருங்கள்.
'கால் ஆட்டியாவது காஞ்சிபுரத்தில் போய் பிழைத்துக் கொள்ளலாம்' என்று தறி நெய்யும் வேலைக்காக சொல்வதுண்டு. இது அன்றைய பழமொழி. 'கால் ஆட்டிக்கொண்டே இருந்தால், கால் வீக்கம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்'- இது இன்றைய புதுமொழி.
பகலில் கால்கள் வீங்குவதும், இரவு தூங்கி காலையில் எழுந்தால், கால் வீக்கம் சுத்தமாக வடிந்து விடுவதும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் கால் வீக்கம் 3 நாட்கள் கழித்தும் வடியவில்லை என்றால் உடனே உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திக்கவும்.
- சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும்.
- சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.
டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகளை கடைகளில் நேரடியாக வாங்கி பயன்படுத்துவது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இன்றைக்கு, காய்ச்சல், தலைவலி என்று வந்துவிட்டால் உடனே கடையில் சில மாத்திரைகளை வாங்கி எடுத்துக்கொள்வது எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பதை பார்க்கலாம்.
இதுபோன்ற மாத்திரைகள் வலி மற்றும் காய்ச்சலை உடனடியாக குறைக்கும். ஆனால் சில நேரங்களில் உடலில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது அழற்சி நோய்கள் போன்ற தீவிர நிலைகளின் அறிகுறிகளை மறைத்துவிடும். இதனால், உடலில் ஏற்பட்டுள்ள உண்மையான பாதிப்பை கண்டறிய முடியாமல் சரியான சிகிச்சை பெற முடியாது போகும்.

இதுபோன்ற மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும். அதில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.
இந்த வகை மாத்திரைகளின் தொடர் பயன்பாடு சில நேரங்களில் தோல் மற்றும் நுரையீரல் அழற்சிக்கு காரணமான எபிடெர்மல் நெக்ரோலிஸ் என்ற தீவிரமான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தான நிலையாக கருதப்படுகிறது.
ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்கள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் எக்காரணம் கொண்டும் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

சில வகை மாத்திரைகள் ஆல்கஹாலுக்கு மோசமான எதிரியாகும். அது போன்ற மாத்திரைகளை தாமாக கடைகளில் வாங்கி உட்கொண்டு, மது அருந்துவது கல்லீரல் பாதிப்பை தீவிரமாக்கும். இதன் தொடர் விளைவு கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும்.
- குளுட்டன் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.
- பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை.

மூலம் நோய் ஆபத்தானவை அல்ல. இருப்பினும், இது கடுமையானது மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியது. இந்த பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனித்தால், பைல்ஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.
சில உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கி மூல நோய் பிரச்சனையை தீவிரப்படுத்தும். அந்த உணவுகளைத் தவிர்த்து வந்தாலே, பைல்ஸ் வராமல் தடுக்கலாம்.

குளுட்டன் உணவுகள்
குளுட்டன் அதிகம் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் பிரச்சனையை உண்டாக்கும். இந்த குளுட்டன் கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் அதிகம் காணப்படுகிறது.
குளுட்டன் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுப்பதோடு, சிலருக்கு நோயெதிர்ப்பு அமைப்பு செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்துகிறது. இது மலச்சிக்கலைத் தூண்டி பின்னர் மூல நோயை உண்டாக்கும்.

பசும்பால் அல்லது பால் பொருட்கள்
சிலருக்கு பசும்பால் அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
மேலும் இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பசும்பாலுக்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தலாம்.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியை சாப்பிடுவதும் பைல்ஸ் நோயை உண்டாக்கலாம். ஏனெனில் மாட்டிறைச்சியில் மிகவும் குறைவான அளவில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இதில் கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆகவே மாட்டிறைச்சியை உட்கொண்டால், அது எளிதில் ஜீரணிக்காமல், உடலில் அப்படியே தேங்கி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே தான் பைல்ஸ் நோயாளிகள் மாட்டிறைச்சியை அறவே தொடக்கூடாது.

வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அது பைல்ஸ் பிரச்சனையை வரவழைக்கும். ஏனெனில் மாட்டிறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளன. ஆகவே வறுத்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

ஆல்கஹால்
ஆல்கஹால் உடலில் நீரின் அளவைக் குறைத்து, நீரிழப்பை ஏற்படுத்தும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது மலச்சிக்கலை தீவிரமாக்கும். மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், நீண்ட காலமாக மலம் எளிதாக வெளியேறாமல் அதிக அழுத்தம் மலக்குடலுக்கு கொடுக்கப்பட்டு, தீவிர பைல்ஸ் நோயை ஏற்படுத்தும். ஆகவே ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.






