என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
நடைபயிற்சி இல்லாததால் உடலில் உள்ள கலோரி சத்து குறையாமல் உடல் பருமனாகி நோய்கள் அழையா விருந்தாளிகளாக வருகின்றன.
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள், இதயநோயாளிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். உணவு பழக்கம், மனஉளைச்சல், உடல் பருமன், நவீன வாழ்க்கை முறையே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடைபயிற்சி இல்லாததும் இதற்கு முக்கிய காரணம். நடப்பதை தவிர்த்து இருசக்கர வாகனங்கள், பஸ்களில் பயணிப்பது, படிகளில் ஏறுவதை விட்டு லிப்ட்களில் செல்வது வாடிக்கையாகிவிட்டது. அதிகமாக உணவு சாப்பிடும்போது உடலில் கலோரி சத்து அதிகமாக சேரும். நடைபயிற்சி இல்லாததால் உடலில் உள்ள கலோரி சத்து குறையாமல் உடல் பருமனாகி நோய்கள் அழையா விருந்தாளிகளாக வருகின்றன.
உலகளவில் வளர்ந்த 46 நாடுகளில் நடத்தப்பட்ட சோம்பேறிகள் ஆய்வு பட்டியலில் இந்தியா 39-வது இடத்தை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு இந்தியர்களில் ஆண்கள் 4 ஆயிரத்து 606 அடிகளும், பெண்கள் 3 ஆயிரத்து 684 அடிகளும் மட்டுமே நடப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடந்தால் அவர்களை நோய்கள் எதுவும் அண்டாது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ஹாங்காங், சீனா, ஜப்பான், உக்ரைன் நாட்டு மக்கள் தினமும் 6 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.
பொதுவாக, தினமும் காலையில் 1 மணி நேரம் நடக்கும்போது வைட்டமின் ‘டி’ கிடைக்கும். சுவாச காற்று சீராகும். கைகளை நீட்டி நடக்கும்போது 50 முதல் 100 கலோரி செலவாகிறது. வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி செல்வது ஆரோக்கியம் தரும். இதய பாதிப்பு உள்ளவர்கள் மெதுவாக நடக்க வேண்டும். நடக்கும்போது மாத்திரைகளை எடுத்து செல்ல வேண்டும். நெஞ்சுவலி ஏற்பட்டால் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் நடந்து செல்லும்போது கற்கள் குத்தி அவர்கள் கால்கள் புண்ணாக வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் காலணிகள் அணிந்துகொண்டு நடக்க வேண்டும். இன்சுலின் ஊசிபோட்டவுடன் நடக்க கூடாது. எந்த காரணத்தைக் கொண்டும் சாப்பிட்ட உடன் நடக்கக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நடைபயிற்சி செல்வோம். ஆரோக்கியத்தை காப்போம்.
-கோவீ.ராஜேந்திரன், மதுரை

வழிபாடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இறை வழிபாட்டில் கற்பூரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பூஜையின் நிறைவாக கற்பூர ஆரத்தி காண்பிப்பது வழக்கம். கற்பூரத்தின் மகிமையை அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் அறிந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். வழிபாடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. சுவாசப் பையை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. இதன் வாசனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியது. கற்பூரத்தின் வாசனை மனதிற்கும், ஆன்மாவிற்கும் பிடித்தமானது என்று புராண நூல்கள் கூறுகின்றன.
கற்பூரம் ஆன்மாவிற்கு பிடித்த ஒளி, வாசனையை கொண்டிருக்கிறது. இதன் வாசனை மனதை ஒருநிலைப்படுத்தக்கூடியது. நல்ல எண்ணங்கள், நல்ல உணர்வுகளை தூண்டக்கூடியது. அதனால் தான் கற்பூரத்தை ஆன்மிக சக்திக்காக பயன்படுத்துகிறார்கள். இதன் வாசனை அந்த இடத்தை சுற்றி பரவி இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கக்கூடியதன்மை கொண்டது.
கற்பூரம் எரிந்து அதன் வாசனை காற்றோடு கலக்கும்போது சுற்றி இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர் செய்யும் பணியை கற்பூரம் செய்கிறது. அதாவது விரும்பத்தக்க நறுமணத்தை தருவதோடு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. உடலுக்கு நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றலையும் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதன் வாசனை சுற்றுச்சூழலுக்கும் நன்மைபயக்கிறது. பல மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது, கற்பூரம்.
தோலில் ஏற்படும் பல வியாதிகளை இது குணமாக்குகிறது. அரிப்பு, சொறி, சிரங்கு, வெட்டுக்காயம், தீப்புண் போன்றவற்றிற்கு சுத்தமான கற்பூரத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து காலில் சேற்றுப்புண் தோன்றும் இடத்தில் தடவி வரலாம். உடனடி பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப்புண் ஏற்படாமலும் தடுக்கும். வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். சந்தனத்தில் கற்பூரத்தை குழைத்து பூசினால் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். கற்பூர எண்ணெய்யை முகத்திற்கு பயன்படுத்தலாம்.
கால் வெடிப்புகளை குணப்படுத்த கற்பூரம் சிறந்த மருந்து. அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் சிறிது கற்பூரத்தை போட்டு கலந்து கால்களை முக்கி வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால் கால் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகு பெறும். கற்பூரத்திற்கு தலைவலியை போக்கும் சக்தியும் இருக்கிறது. கற்பூரத்தை சந்தனம் அல்லது துளசி சாற்றில் குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி நீங்கிவிடும். எலுமிச்சை சாற்றில் சிறிது கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்தாலும் தலைவலி கட்டுப்படும். மூட்டுவலி, மூட்டு பிடிப்பு மற்றும் வாத நோயால் அவதிப்படுபவர்கள் கற்பூர எண்ணெய்யை தேய்த்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். தசைப்பிடிப்புக்கும் உபயோகிக்கலாம்.

முடி உதிர பல காரணங்கள் இருக்கின்றன. அதனை கட்டுப்படுத்தும் தன்மை கற்பூரத்திற்கு உண்டு. தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூர எண்ணெய்யை கலந்து தினமும் கூந்தலில் தேய்த்து வரலாம். கூந்தல் வளம் பெறும். வேர்களை உறுதியாக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். துளசி சாறில் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, பேன் தொல்லைகள் நீங்கும். நூறு கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 4 கிராம் கற்பூரத்தை கலந்து தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் பொகுடு தொல்லை அறவே நீங்கிவிடும்.
பல் வலியால் அவதிப்படுபவர்கள் கிராம்புடன் கற்பூரத்தை சேர்த்து தூளாக்கி வலியுள்ள இடத்தில் வைக்கலாம். பல் வீக்கம், வலி நீங்கும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் நல்ல பலன் தரும். பிறகு டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து வாயில் வைத்து அதன் சாற்றை சிறிது, சிறிதாக தொண்டைக்குள் இறக்கலாம். துர்நாற்றம் நீங்கிவிடும்.
தீக்காயத்தழும்பு, அம்மை தழும்பு, கொசு, பூச்சிக்கடி போன்றவற்றிற்கு கற்பூரம் நிவாரணம் தரும். தண்ணீரில் சிறிது கற்பூரத்தை கலந்து தழும்பு உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். நல்லெண்ணெய்யில் கற்பூரம் கலந்து பூச்சிக்கடி உள்ள பகுதியில் தடவினால் விஷம் நீங்கும். தழும்பு மறையும்.
அடிக்கடி சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் குளிக்கும் முன்பு கற்பூரத்தை பயன்படுத்தலாம். ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி அதனுடன் கற்பூரம், நான்கைந்து மிளகை பொடித்து போட்டு சூடாக தலையில் தேய்த்து ஊறவிடலாம். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நுரையீரலில் பரவி இருக்கும் சளி நீங்கி சுவாசம் சீராகும். தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் நெய்யில் சிறிது கற்பூரத்தை கலந்து சூடாக்கி கால் பாதங்களில் தடவி மசாஜ் செய்து வரலாம். நல்ல தூக்கம் வரும்.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்று. பெண்கள் எப்படியெல்லாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நம் வீட்டில் உள்ள தண்ணீர் நமக்கு மட்டும் சொந்தமானதா? நமக்குச் சொந்தமான இடத்தில் துளையிட்டு நாம் கட்டணம் செலுத்தும் மின்சாரம், நமது மோட்டாரைக் கொண்டு நாம் சேமிக்கும் தண்ணீர் நம்முடைய நீர் என்று மட்டும் சொல்ல முடியுமா? பூமியிலிருந்து எடுக்கும் ஒவ்வொரு துளி நீரும் அனைவருக்கும் பொதுவானது. நாம் நீரை விரயமாக்கினால் அது பிறரையும் பாதிக்கும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்று.
தண்ணீருக்காக அலையாய் அலையும் மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் கஷ்டங்களை காதுகொடுத்து கேட்கிறோம். ஆனாலும் எத்தனையோ அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தனி வீடுகளிலும் மொட்டை மாடியில் காணப்படும் நீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் காட்சி தென்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கோடை நெருங்குகிறது. நிலத்தடியில் மழைக்காலம் போன்று தாராளமாக நீர் கிடைக்காது. இது எல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் அது நமது நினைவில் உறைப்பதில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் அனைவருமே தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் யாரோ ஒருவரது தவறால் அனைவருக்கும் கஷ்டம் வந்துசேரும். தேவைக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துங்கள். நமது இருப்பு மிகவும் குறைவு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகச் செலவிட்டால் சிரமங்களைக் குறைக்கலாம்.
பெண்களே பாத்திரங்களை கழுவும் தொட்டியில் போட்டுப் பாத்திரங்களை கழுவும்போது குழாயில் நீர் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா? சிறிது கவனமாக இருந்தால் பெருமளவில் நீரைச் சேமிக்கலாம். பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது செடிகளுக்கு மட்டும் நீரைத் தெளிக்கலாம். துணி துவைக்கும்போது பக்கெட் நிரம்பிய பின்னரே அலசுங்கள். குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டே துணிகளை அலசும்போது நீர் வீணாவது தெரியவே தெரியாது. காய்கறிகளையும், பழங்களையும் கழுவ வேண்டுமானால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் இவற்றைப் போட்டுக் கழுவுங்கள். குழாயைத் திறந்துவைத்து இதே வேலையைப் பார்த்தால் தண்ணீர் அதிகம் செலவாகும்.
வீட்டின் முன்பகுதிகளையும் நடைபாதைகளையும் கழுவி விடுவதற்கு முன்னர் அவற்றை துடைப்பத்தால் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். முழுவதும் தண்ணீரால் செய்ய வேண்டுமானால் ஏராளமாய் தண்ணீர் செலவாகும். இப்படிப் பல வழிகளில் நீரைச் சேமித்தால் அது நமக்கும் நல்லது; பிறருக்கும் நல்லது.

தோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த ஸ்பைசி மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த மட்டன் சாப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரை கிலோ
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - இரண்டு
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை :
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.
குக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும்.
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.
சுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்..!
நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்..!
ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், பிளாஸ்மா என்ற பொருளும் உள்ளது.
உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும், எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்கள் உற்பத்தியாகின்றன.
சிவப்பு நிறம் ஏன்?: ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.
ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோ குளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது, ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவர்.
ரத்தத்தின் வகைகள்: ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான். அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.
ரத்த அணுக்களின் வேலை: ரத்த வெள்ளை அணுக்களை, படை வீரர்கள் என்று அழைப்பர். ஏனெனில், உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுபவை, ரத்த வெள்ளை அணுக்களே.
ரத்தத்தில் உள்ள, பிளேட்லெட் அணுக்கள், உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் அமைப்பாக செயல்படுகிறது. உடல் செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதும், கார்பன் டை ஆக்சைடு வாயுவை சுமந்து சென்று வெளியேற்றுவதும் சிவப்பு செல்களின் பணியாகும்.
ரத்த ஓட்டம்: உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நல்ல உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றினால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?: ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீதம் பிளாஸ்மாவும், 40 சதவீதம் ரத்த சிவப்பு அணுக்களும் உள்ளன. மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்களும் இருக்கின்றன.
ரத்த அழுத்தம் என்பது என்ன?: உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், பம்ப் செய்யும்போது ஏற்படும் அழுத்தமே, ரத்த அழுத்தம், இதயத்திலிருந்து நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம்: ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தொலைவு, ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு சமமாகும். ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகமாகும்.

வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை என இருவிழிகளில் வெளிவந்து விடுவதால் உடல் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு.
வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வாந்தி மற்றும் வியர்வை என இருவிழிகளில் வெளிவந்து விடுவதால் உடல் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு. ஆனால் இந்த சமயத்தில் தான் கர்ப்பிணிப் பெண்கள் ஒருநாளுக்கு குறைந்தது ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்சினை நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று (Urinary tract infection). இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். கர்ப்பமாயிருக்கும் முதல் மூன்று மாதங்கள் தான் குழந்தையின் கண், மூக்கு, இதயம் என எல்லா உடல் உறுப்புகள் வளரும் காலம். அதனால் இந்த சமயத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
சிறுநீர்த் தாரை நோய்த்தொற்று தடுக்க வழிகள் :
1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
2. எலுமிச்சம் சாற்றில் இருக்கும் அமிலத்திற்குக் கிருமிகளை அழிக்கும் திறன் இருப்பதால் எலுமிச்சைச்சாறு குடிப்பது மிக நல்லது.
3. வேலைக்குப் போகிற பெண்கள் வேலைக்குச் செல்லும் இடத்தில் சிறுநீர் கழிக்கச் சிரமப்பட்டுக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடாது. வீட்டிலிருக்கும் போதாவது அதிகபட்சமான தண்ணீர் குடிப்பது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் கால் வீக்கம் இருக்கிறது என்று பார்லி தண்ணீர் குடிப்பார்கள். இதனால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து போகும் ஆபத்து உள்ளது. விரும்புகிறவர்கள் வாரம் ஒருமுறை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் குழந்தை வளர வளர பனிக்குட நீர் குறைய ஆரம்பிக்கும். ஐந்து மாதத்தில் இருக்கும் பனிக்குட நீரின் அளவு, ஒன்பது மாதத்தில் இருக்காது. வெயில் காலத்தில் இன்னும் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால் குழந்தை மூச்சுவிட, வளர, அசைய என இந்த காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு நீர்ச்சத்து தேவைப்படும். இந்த நீர் அளவு குறைந்து போனால் குழந்தையின் உடம்பில் இரத்த ஓட்டம் குறையும். இரத்த ஓட்டம் குறைந்தால் குழந்தையின் உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.
குழந்தையைச் சுற்றி தண்ணீர் குறைவாக இருந்தால் குளூக்கோஸ் டிரிப்ஸ் ஏற்றவேண்டும். குறைந்திருக்கும் நீர்ச்சத்தை ஈடுசெய்ய வேண்டும். இல்லையெனில் குழந்தையால் சரியாக சுற்றிவர முடியாது. கர்ப்பப்பையில் குழந்தை ஒட்டிக் கொள்ளும். கர்ப்பப் பையானது தொப்புள் கொடியை அழுத்தும். நீர் சரியான அளவில் இருந்தால்தான் தொப்புள் கொடி மிதக்கும். அப்போது தான் குழந்தையின் உறுப்புகளுக்கு சரியான அளவில் இரத்த ஓட்டம் கிடைக்கும். அதனால் தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தாயும் குழந்தையும் நலமாக இருப்பார்கள்.

மட்டனை வைத்து பிரியாணி, குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று கொஞ்சம் வித்தியாசமாக சாஹி மட்டன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத மட்டன் - 600 கிராம்
வெங்காயம் - 3
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
இலவங்க பட்டை - 1
மிளகு - 7
இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
முந்திரி பேஸ்ட் - 1/4 கப்
கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
கிரீம் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதோடு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு 1 நிமிடம் தொடர்ந்து வதக்கவும்.
அடுத்து அதில் கழுவிய மட்டனை சேர்த்து, தீயை அதிகப்படுத்தி 5 நிமிடம் கிளறி வேகவிடவும்.
பின்னர் அதில் மல்லிப் பொடி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மறுபடியும் 5 நிமிடம் வேக விடவும்.
அடுத்து அதில் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் தீயின் அளவை குறைத்து, மட்டனை தட்டை வைத்து மூடி, மட்டன் வேகும் வரை வேக விடவும்.
பிறகு அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் கரம் மசாலா பொடியை போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
கடைசியாக அதில் கிரீமை சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான சாஹி மட்டன் குருமா ரெடி!!!

நண்பர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசிப் பழகி, அடுத்த கட்டமான காதல் செய்வதற்கு டேட்டிங் ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.
நமது சமூகத்தில் ஆணும் பெண்ணும் பழகிக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. நண்பர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசிப் பழகி, அடுத்த கட்டமான காதல் செய்வதற்கு டேட்டிங் ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது எப்படி?
சினிமாவில் வருவது போலவே ‘டேட்டிங் சென்றவுடன் காதலியை கட்டிப்பிடிக்கலாம்... முத்தம் கொடுக்கலாம்’ என நினைக்கக்கூடாது. சரியான புரிதல் இல்லாத பட்சத்தில் இப்படி செய்தால், அது இருக்கும் உறவையும் முறித்துவிடும். யதார்த்தமாக மட்டுமே பழக வேண்டும். ‘நான் இப்படி அப்படி’ என வீண் ஜம்பம் பேசக்கூடாது. குறிப்பாக பொய் சொல்லக்கூடாது. அடுத்த முறை நீங்கள் வெளியே கூப்பிட்டால் இவரோடு போகலாம் என்னும் நம்பிக்கையை உங்கள் காதலிக்கு ஏற்படுத்த வேண்டும். காதலி பேசுவதையும் முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்த விஷயத்தை மட்டுமே பேசி காதலியை சலிப்படைய செய்யக்கூடாது. துணைக்குப் பிடித்த விஷயங்களை தெரிந்து கொண்டு அதை பேசி உற்சாகம் அடையச் செய்ய வேண்டும். டேட்டிங் போகும் நேரத்தில் ஃபேஸ்புக் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் பிசியாக இருப்பது போன்ற விஷயங்களைச் செய்யக்கூடாது.காதலிக்கிறவர் மேல் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். பழக ஆரம்பித்த உடனே ‘ஐ லவ் யூ’ சொல்லக்கூடாது. அப்படி எடுத்தவுடன் அணுகுவது ‘இவர் செக்ஸுக்குதான் நம்மிடம் பழகுகிறாரோ’ என்ற பயத்தை ஏற்படுத்தும்.

சினிமாவில் மட்டும்தான் எடுத்த எடுப்பிலேயே காதலை சொல்ல முடியும். நிஜ வாழ்வில் நன்கு பழகிய பின் மட்டும்தான் காதலை சொல்வதே சரியாக இருக்கும்.பல முறை டேட்டிங் சென்றபின்தான் ஒருவருக்கொருவர் புரிந்து, ஒத்திசைவான மனநிலை ஏற்படும். அதுவரை பொறுமையாக இருப்பது அவசியம். ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது விலையுயர்ந்த பொருட்களை கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒவ்வொரு சந்திப்பின் போதும் அப்படியான பொருட்களை கொடுக்க வேண்டும் என நினைக்காதீர்கள். ரோஜாப்பூ மாதிரி எளிய பரிசுகளை அன்புடன் கொடுத்து மகிழலாம்.
அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு சென்றால் சரியாக பேச முடியாது. அதே நேரத்தில் கூட்டம் இல்லாத அநாதரவான இடத்துக்கு காதலியை கூட்டிச் செல்வதும் பாதுகாப்பானது கிடையாது. மிதமான கூட்டம் உள்ள காபி ஷாப், டிரைவ் இன் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். டேட்டிங்கில் காதலி கட்டிப்பிடிப்பதையோ, முத்தம் கொடுப்பதையோ அன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் சலுகையாக எடுத்துக் கொண்டு எந்தத் தவறான காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதுதான் இருவரிடையே உறவை வளர்க்கும்.

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பொதுவாக குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.

குழந்தைகளுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.
அதே போல் தாய்மார்கள் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க நுங்கு - மாம்பழ சாலட் சாப்பிடலாம். இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நுங்கு - 4
மாம்பழம் - 1 (நன்றாக பழுத்தது)
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு பிட்ச்
மிளகு தூள் - சிறிதளவு.

செய்முறை :
மாம்பழம், நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நுங்கு, மாம்பழத்தை போட்டு அதனுடன் தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இந்த சாலட் வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும்.
இந்த பழங்களை தவிர இந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் சேர்த்து சாலட் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நுங்கு - 4
மாம்பழம் - 1 (நன்றாக பழுத்தது)
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு பிட்ச்
மிளகு தூள் - சிறிதளவு.

செய்முறை :
மாம்பழம், நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நுங்கு, மாம்பழத்தை போட்டு அதனுடன் தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இந்த சாலட் வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும்.
இந்த பழங்களை தவிர இந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் சேர்த்து சாலட் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பின்னோக்கிய நடைப்பயிற்சி அல்லது ஓடுவதால், பின்புறம் மற்றும் பின்னங்காலின் தசைகளும், நரம்புகளும் வலுவடைவதால் நிமிர்ந்த நேரான தோற்றத்தையும் பெற முடியும்.
‘ஜாக்கிங்னா முன்னாடிதான் ஓடணுமா... ரிவர்ஸ்லயும் போலாமே’ என்று மாத்தி யோசித்த ஒரு லேட்டஸ்ட் டிரெயினிங்தான் Backward running. இந்த Backward running முறையை பலநாடுகளில் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பின்னோக்கி ஓடுவது ஆரோக்கியரீதியிலும் நிறைய பலன்கள் கிடைக்கும்.
இதுபோல் பின்னோக்கி ஓடும்போது முழங்காலுக்குக் குறைவான அழுத்தம் கிடைப்பதால், முழங்காலில் ஏற்படும் காயங்களும் கணிசமான அளவில் குறைவதாகவும் கூறப்படுகிறது. சாதாரணமாக ஓடுவதைவிட, பின்னோக்கி ஓடும்போது ஒவ்வொரு அடியின்போதும் பின்புறம் மற்றும் பின்னங்கால்களின் தசைகளை அதிகமாக உபயோகிக்கிறோம்.
இதனால் அதிகப்படியான ஆற்றலும், முழு கவனமும் தேவைப்படுகிறது. கவனம் ஒருமுகப்படுவதால் ஒருவிதத்தில் நம்முடைய மன அழுத்தத்தை குறைக்க முடிகிறது. சிலர் நிமிர்ந்த நிலையில் நேராக நடக்காமல் கூன் விழுந்தது போல் நடப்பார்கள். இதனால் சரியான தோற்றம்(Straight posture) இல்லாமல் இருக்கும். பின்னோக்கி ஓடுவதால், பின்புறம் மற்றும் பின்னங்காலின் தசைகளும், நரம்புகளும் வலுவடைவதால் நிமிர்ந்த நேரான தோற்றத்தையும் பெற முடியும். சாதாரணமான ஓட்டப்பயிற்சியின்போது எடை குறைப்பதற்காக நீண்ட தொலைவு ஓட வேண்டியிருக்கும்.
இதனால் விரைவிலேயே களைப்படைவதோடு ஆர்வமும் குறைய ஆரம்பிக்கும். இதுவே பின்னோக்கிய நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ எதுவாக இருந்தாலும் ஒருவித ஆர்வத்தோடு செய்வோம். மற்ற உடற்பயிற்சிகள் செய்வதால் தசைவலி, உடல்வலி ஏற்படும்போது சற்றே தொய்வடைந்து இடையில் நிறுத்திவிடுவோம். அதுபோன்ற நேரங்களில் இந்த பின்னோக்கிய ஓட்டப்பயிற்சியைத் தொடரலாம். இதைச் செய்வதால் தசைகளுக்கு எந்த வலியும் ஏற்படாது.
இடுப்பு, பின்புறம், பின்னங்கால்கள் மற்றும் தோள்கள் நல்ல திண்மை பெற்று பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது. இதற்காக கிரவுண்டுக்கோ, வெளியிடங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே தோட்டம், மொட்டை மாடி போன்ற இடங்களிலும் செய்வதற்கு எளிதானது.

பார்பதற்கு பெரிய நெக்லஸ் போன்ற தோற்றத்தையும், அதே நேரம் எடை குறைவாகவும் உள்ள புதிய நெக்லஸ்களை பெண்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர்.
பெண்கள் விரும்பி அணிகின்ற தங்க நெக்லஸ்கள் நவீன வடிவமைப்பு மற்றும் அதிக எடையில்லாத வகையில் உருவாக்கி தரப்படுகின்றன. பார்பதற்கு பெரிய நெக்லஸ் போன்ற தோற்றத்தையும், அதே நேரம் எடை குறைவாகவும் உள்ள புதிய நெக்லஸ்களை பெண்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். அதுபோல் பழைய வடிவமைப்பில் மாறுபட்டு நெக்லஸ் உருவ அமைப்பு வட்டம், ஒவல், முக்கோணம் மற்றும் இதய வடிவம் ஒத்தவாறு உருவாக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாடல் நெக்லஸ்களிலும் அதிக சிரத்தையுடன் மேற்கொள்ளப்படும் வேலைப்பாடு ஒன்றை விட்டு மற்றொன்றை குறைத்து பெற முடியாத படிக்கு உள்ளன. நெக்லஸ்கள் பட்டையான, கல் வைத்தவாறு இருந்தவை மாறி தங்க தகடுகளில் அச்சுகள் வைக்கப்பட்டு சிற்ப வேலைபாடு மற்றும் மெல்லிய தொங்கல் வேலைப்பாடு என்றவாறு உருவாக்கம் பெருகின்றன.
இயந்திரங்கள் உதவி மற்றும் கணிணி உதவியுடன் செயல்படும் புதிய வடிவமைப்பு நெக்லஸ்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற டிசைன்களில் கிடைக்கின்றன. குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், மணப்பெண், மணமான பெண்டீர், வயது முதிர்ந்த பெண்கள் என அனைவர் மனதையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய மாடல் நெக்லஸ்கள் வருகின்றன. அதிலும் குறிப்பாக நமது வாங்கும் திறனுக்கேற்ற குறைந்த விலையிலான பிரமாண்ட நெக்லஸ்கள் கூடுதல் பலனை தருகின்றன. நெக்லஸ்களின் அணிவரிசையை பார்ப்போம்.
வலை பின்னல் வடிவிலான நெக்லஸ்கள்
கவிழ்ந்த கூம்பு வடிவ அமைப்பில் பட்டையான வடிவம். அதில் சிறு சிறு மணிகள் இணைப்புடன் ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு இருக்கும்படி வலை போன்று காட்சி தருகிறது. இருபக்கமும் நடுப்பகுதியில் எனாமல் பூசப்பட்ட பதக்கமும், நடுவில் பெரிய தட்டு வடிவ பதக்கமும் அதன் நடுவே பூய்பற்றும் உள்ளது. இதில் கீழேதொங்கும் கலச பதக்கமும், சிறு மணி வகைகள் அற்புதம். இதே கலச பதக்கம்தான் காதணிக்கு தொங்கும் பகுதியாக செட் நெக்லஸ் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

பூக்கள் இணைந்த நெக்லஸ்
நெக்லஸ்யின் ஏதேனும் ஒரு பகுதி பூ வடிவில் இருக்கும். ஆனால் இந்த நெக்லஸ் முழுவதும் பூக்கள் இணைந்தவாறு உள்ளது. நடுவில் பெரிய இரட்டை அடுக்கு இதழ் பூவுடன் ஆரம்பித்து இருபக்கமும் ஒற்றை அடுக்கில் ஆறு இதழ் கொண்ட பூக்கள் அழகுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதுபோல் பெரிய பூவின் கீழ் ஓர் ஒற்றை பூ அதற்கு கீழ் தொங்கும் மணியும் அழகுடன் உள்ளன. இது போல் ஒற்றை பூவுடன் கூடிய காதணி மணி தொங்கலுடன் இணைப்பாக கிடைக்கின்றன.
டிசைனர் மாங்காய் நெக்லஸ்
கயிற்றில் சிறு சிறு தங்க மாங்காய்கள் கோர்த்து விடப்பட்ட நெக்லஸ் அமைப்பு. இதில் புதுமை என்ன வென்றால் மாங்காய் மேல் அழகிய வலைபின்னல் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கயிற்று பகுதியில் சிறு மணி செதுக்கல்களும் செய்யப்பட்டுள்ளன. மெல்லிய அமைப்பில் அதி அற்புதமான வேலைப்பாட்டுடன் டிசைனர் மாங்காய் நெக்லஸ் காட்சி தருகின்றது.
நவீன வடிவமைப்பில் உருளை நெக்லஸ்
நெக்லஸ் அகலமான பட்டை அமைப்பில் அதிக வேலைபாடுடன் காட்சி தரும். இப்புதிய நெக்லஸ் என்பது இருபுறமும் செயின் அமைப்பும் அதன் கீழ் அதிக வேலைபாடின்றி பிளைன் உருளை அமைப்பும் அதன் மேல் எனாமல் பூசப்பட்டு உள்ளது. உருளை அமைப்பு நடுப்பகுதி வரவர விரிந்து அகலமான தட்டை அமைப்பாய் உருமாற்றம் பெருகிறது.
நடு தட்டையான பகுதியில் ஓவியங்கள் எம்மோஸ் செய்யப்பட்டுள்ளன. அதில் தனித்து தெரியுமாறு பூ ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகுதான் ஆச்சிரியம் கீழ் தொங்கும் பதக்கம் என்பது மிகப்பெரிய பூவாய் காட்சிதருகிறது. மகரந்தம், மகரந்த பூ மற்றும் பூவிதழ் கொண்டவாறு பெரிய பூவாய் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் வித்தியாசம் தெரிய இதழ்கள் கம்பி வளை அமைப்புகளும், மகரந்த காம்புகள் எனாமல் பூசப்பட்டும் உள்ளது. இதற்கும் கீழ் வரிசையாய் செயின் மணி தொங்கலுடன் தொங்க விடப்பட்டுள்ளது.