என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளை பெற்றோர் பார்க்கும் போது, இந்த கண்ணாடியுடன் நீ மிகவும் அழகாய் தோன்றுகிறாய் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.
    குழந்தை பருவத்தில் கண்ணாடி அணிந்திருக்கும் பிள்ளைகள் அல்லது அவர்கள் பெற்றோர் பெரும்பாலும் எதிர்கொள்ளும் கேள்விதான் இது. உங்கள் குழந்தைக்கு கண்ணாடி அவசியம் என்று கூறும் போது பெற்றோர் பலர் மருத்துவரிடம் கேட்கும் கேள்வியும் இதுதான்.

    சமுதாயத்தில் நூற்றில் எட்டு சதவீத பிள்ளைகளுக்கு கண்ணாடி அவசியமாகிறது. பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்படும். ஆய்வுகளின் படி பார்த்தால் 10% பிள்ளைகளுக்கு கண்ணாடிகள் தேவைப்படுகிறது. நம்முடைய கண்கள் கேமராக்களை போன்றவை வெளியிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கருவிழியினாலும், லென்சினாலும் குவிக்கப்பட்டு விழித்திரையின் பார்வைப்புள்ளியில் விழுகின்றன.

    சரியாக விழித்திரையின் மேல் குவியும் போது அந்த ஒளி அற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு பார்வை நரம்பின் மூலம், மூளையை சென்றடைந்து தெளிவான பார்வை சாத்தியமாகிறது. கண்களின் நீளம் அதிக மாகவோ, குறைவாகவோ இருப்ப தனாலும், கருவிழி அல்லது லென்ஸின் வளைவு மாறுபாடாக இருப்பதினாலும், கண் களில் பார்வைப்புள்ளியின் மேல் ஒளிக்கதிர்களை குவிக்க இயலாமல் போகிறது. அதனால் மங்கலான பார்வை நேரிடுகிறது. இதை ஒளிவிலகள் பிழை என்று அழைக்கின்றோம். (Refractive Cross)

    ஒளிக்கதிர்கள் பார்வைப் புள்ளியை அடைவதற்கு முன்பாகவே குவிந்து விட்டால் அதை கிட்ட பார்வை என்று கூறுகிறோம். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகவும், கிட்டத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகவும் தெரியும். ஒளிக்கதிர்கள் விழித்திரையைத் தாண்டி குவியும்போது அதை தூரப்பபர்வை என்று கூறுகிறோம். பின்புறம் சென்று குவியும் ஒளிக்கதிர்களை, கண்களில் உள்ளே உள்ள தசைகள், சுருங்கி லென்ஸின் முன் வளைவினை மாற்றி விழித்திரையில் குவிக்க முயற்சி செய்கிறது.

    ஆதனால் தூரப்பார்வை சுற்று தெளிவாக தெரிந்தாலும், தொடர்ந்து படிக்கும் போதோ எழுதும் போதோ இந்த தசைகள் சேர்ந்து விடுவதன் காரணமாக மங்களான பார்வை, தலைவலி, கண் சோர்வு போன்றவை ஏற்படுகிறது. கிட்டப்பார்வை உள்ளவர்கள், குழிலென்ஸ்களை கண்ணாடிகளில் அணிவதன் மூலமாகவும், தூரப்பார்வை உள்ளவர்கள் குவிலென்ஸ்களை கண்ணாடிகளில் அணிவதன் மூலமும், சமச்சீரற்ற பார்வை உள்ளவர்கள் சிலிண்ட்ரிகள் லென்ஸ் அணிவதன் மூலமாகவும் கண்பார்வையை சீராக பெற முடியும்.

    குழந்தைகளுக்கு, விசேஷமாக இந்த குறைபாடுகளை கண்டறிந்து அதை சரி செய்வது முக்கியம். கண்ணாடிகள் அவை தேவைப்படுவோருக்கு இன்றிமையாதவை இனியாவது கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளையோ அவர்கள் பெற்றோரையோ பார்க்கும் போது, “ச்.ச்.சு.அ. இந்த வயசுலயே கண்ணாடியே” என்று கேட்டு அவர்களை மனவடிவாக்காமல் இந்த கண்ணாடி உனக்கு அருமையாக பொருந்துகிறது. இந்த கண்ணாடியுடன் நீ மிகவும் அழகாய் தோன்றுகிறாய் என்று குழந்தைகளிடம் கூறி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.
    சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவை ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - கால் கப்,
    கோதுமை ரவை - முக்கால் கப்,
    புளித்த மோர் - ஒரு கரண்டி,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
    இஞ்சி - சிறு துண்டு,
    கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,  
    கறிவேப்பிலை - தேவையான அளவு,
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.

    கோதுமை ரவா தோசை

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து சூடானதும். சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும்.

    ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை ரவா தோசை

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஃபேர் அண்ட் ஹேர் அமெரிக்க தொழில் நுட்பத்தின் மூலம் தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    இந்த நவீன யுகத்தில் 25 வயதிலேயே சில இளைஞர்களுக்கு தலைமுடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது. இதனால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த மன உளைச்சல் இவர்களது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடுகிறது. காரணம் என்னவென்றால் தலையில் வழுக்கை விழுந்த இளைஞர்கள் வயதானவராக தோன்றுகிறார்கள். இதனால் திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் போது வெட்கப்படுகிறார்கள்.

    பெண் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவாரோ என்று அச்சப்படுகிறார்கள். அவரது தொழிலும் இதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வழுக்கை விழுந்த இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்களுக்கு வரப்பிசாதமாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோயம் புத்தூரில் ஃபேர் அண்ட் ஹேர் என்ற செயல்பட்டு வருகிறது. இங்கு ஹேர் வீவிங், ஹேர் பாண்டிங் மற்றும் சிலிக்கான் முறை என்ற அமெரிக்க தொழில் நுட்பத்தின் மூலம் தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

    ஹேர் வீவிங்: இந்த சிகிச்சை முறையில் நபரின் தலையில் வழுக்கை விழுந்த இடம் அளக்கப்பட்டு அதற்கு இயற்கை முடியாலான பேட்ச் தயாரிக்கப்படுகிறது. பிறகு அந்த பேட்ச் கச்சிதமாக தலையில் உள்ள மற்ற முடியுடன் தைக்கப் (இணைக்க)படுகிறது.

    ஹேர் பாண்டிங்:- இந்த சிகிச்சை முறையில் மேற்கூறிய முறையில் பேட்ச் தயாரிக்கப்பட்டு தலையில் உள்ள மற்ற முடிகளுடன் கிளிப்புகள் மூலம் இணைக்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சை பெறுபவர்கள் எப்போது வேண்டுமானலும் பேட்சை கழற்றி வைத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சை முறை விலை உயர்ந்தது. இது ஹேர் பாண்டிங் முறையைப் போன்றது. நடிகர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள் இந்த சிகிச்சையை செய்து கொள்கிறார்கள்.
    நீங்கள் சாப்பிடுகின்ற சில உணவுகள் சொல்வதன் மூலம் உங்களுடைய புகைப்பழக்கத்தை வேகமாக மாற்றிவிடலாம். அது பற்றிய ஆய்வுகள், உண்மையை பற்றி இங்கே காண்போம்.
    அப்போ இந்த பழக்கத்தை நிறுத்தவே முடியாதா என்று நிறைய பேர் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ஒரு பிரச்சினை இருந்தால் அதற்கு தீர்வும் கட்டாயம் இருக்கத்தானே செய்யும். ஆனால் மருந்துகள் எல்லாம் இந்த பழக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சாப்பிடுகின்ற சில உணவுகள் சொல்வதன் மூலம் உங்களுடைய புகைப்பழக்கத்தை வேகமாக மாற்றிவிடலாம். அது பற்றிய ஆய்வுகள், உண்மையை பற்றி இங்கே காண்போம்.

    ஐரோப்பியாவில் உள்ள மருத்துவ ஆய்வு இதழுக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 680 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்லாது, புகைப்பழக்கம் இல்லாதவர்கள், புகைப்பழக்கத்தை பாதியில் நிறுத்தியவர்கள் என பல வகையான மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களுடைய நுரையீரலின் செயல்பாடுகள் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கப்பட்டது. அதில் புகைப்பழக்கத்தை மருந்தின் மூலம் நிறுத்திய பின், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நுரையீரல் செயல்பாடுகள் சீராக இல்லாதது கண்டறியப்பட்டது.

    ஆய்வின் முடிவில் மருத்துவர்கள் பரிந்துரைத்தது என்னவென்றால், எந்த மருந்துகளும் தேவையில்லை. மூன்று பழங்களை பரிந்துரை செய்திருக்கிறார்கள். எந்த மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத புகைப்பழக்கத்தை இந்த மூன்று பழங்களும் நிரந்தரமாக மாற்றும் என்று கூறப்படுகிறது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

    புகைப்பழக்கம்

    சில உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும். இதில் மிக முக்கியமான ஒன்று தான் தக்காளி. தக்காளியில் லைகோபைன் அதிகமாக இருக்கிறது. இது நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. வாழைப்பழத்திலும் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இதுவும் நுரையீரலைப் பாதுகாக்கும். ஆப்பிளும் நுரையீரலுக்கு மிக நல்லது.

    ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரல் சுவாசப் பிரச்சினைகளை நீக்கும். மூச்சுத் திணறலையும் சரிசெய்யும். இது போன்ற ஆன்டி- இன்பிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகளும் பழங்களும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும்.

    தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்ட பின், கொஞ்சம் கொஞ்சமாக புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறது அந்த ஆய்வு.

    இந்த மூன்று பழங்களிலும் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் நுரையீரலில் தேங்கியிருக்கின்ற நச்சுகளை வெளியேற்ற ஆரம்பிக்கும். நுரையீரலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்குகிறது. நம் முன் உள்ள தட்டில் என்ன வகையான உணவு வைத்திருக்கிறோம். என்ன சாப்பிடுகிறோம் என்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    உடற்பயிற்சியின்போது செய்யும் தவறுகள் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும். உடற்பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்டு, மேற்கொள்ள வேண்டும்.
    உடற்பயிற்சியின்போது செய்யும் தவறுகள் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும். செய்யப்போகும் உடற்பயிற்சிக்கு ஏற்ப உடல் பாகங்களின் இயக்கம் அமைய வேண்டும். முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கால் பாதங்களையும், கைவிரல்களையும் தரையில் ஊன்றி குனிந்த நிலையிலும், படுத்த நிலையிலும் நிமிர்ந்து எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதை தவறாக செய்தால் முதுகுவலி தோன்றிவிடும்.

    40 வயதை கடந்தவர்களுக்கு முதுகுவலியுடன் மூட்டுவலி பிரச்சினையும் தலைதூக்கும். கால் தசை பகுதிகள் வலுப்படுவதற்கு குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். அப்போது மூட்டுகளை எல் வடிவத்தில் வைத்திருக்க வேண்டும். கழுத்து பகுதியையும் நேராக வைத்திருக்க வேண்டும்.

    உடற்பயிற்சி

    ஆண்கள் ‘தம்புள்ஸ்’ கொண்டு பயிற்சி செய்யும்போதும் கவனமாக இருக்கவேண்டும். நேராக நிமிர்ந்து நின்று கொண்டு ‘தம்புள்ஸை’ நெஞ்சு பகுதியில் வைத்துக்கொண்டு கைகளை மேலும் கீழும் அசைக்க வேண்டும். அதை விடுத்து உடலை சாய்வாக வைத்துக்கொண்டு நெஞ்சுப்பகுதிக்கு மேலே தம்புள்ஸை தூக்கிக்கொண்டு பயிற்சி மேற்கொள்ளக்கூடாது.

    படுத்த நிலையில் இரு கைகளாலும் தம்புள்ஸை மேல்நோக்கி தூக்கும்போது கைகள் நேராக இருக்க வேண்டும். அதைவிடுத்து கைகளை சாய்வாக வைத்துக்கொண்டு தம்புள்ஸை தூக்கக்கூடாது. அது கைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். பக்க விளைவுகளையும் உண்டாகும். உடற்பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்டு, மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி நிபுணர்கள் அதற்கு வழிகாட்டுவார்கள்.
    இன்று மக்களிடையே அதிகமாகக் காணப்படும் பாதிப்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் மிக ஆபத்தான பாதிப்புகளுக்கு அடிப்படை ஆகி விடுகின்றது.
    உயர் ரத்த அழுத்தம்: இன்று மக்களிடையே அதிகமாகக் காணப்படும் பாதிப்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். நன்கு படித்தவர்கள் கூட முறையாக தொடர்ந்து இதற்காக மருந்து எடுத்துக் கொள்வதில் தவறி விடுகின்றார்கள். உயர் ரத்த அழுத்தம் மிக ஆபத்தான பாதிப்புகளுக்கு அடிப்படை ஆகி விடுகின்றது. ஆக சில அவசிய குறிப்புகளை இங்கு மீண்டும் பார்க்கும் பொழுது சீரான ரத்த அழுத்தத்தினை பெற நமக்கு உதவும்

    * மருந்துவர் ஒரு நபருக்கு உயர் ரத்த அழுத்த மருந்து கொடுத்துள்ளார் என்றால் அவரது அறிவுரை இன்றி மருந்தினை நிறுத்தவோ, மாற்றவோ, கூட்டவோ கூடாது.

    * உயர் ரத்த அழுத்தம் சரி செய்யப்படும் எனப்படும் பொழுது மருத்துவர் ஒருவர் எடை கூடுதலாக இருப்பின் எடையை குறையுங்கள் என்ற அறிவுரையும் கூறுவார். அதிக எடை மட்டுமே உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகாது என்றாலும் அதிக எடையினைக் குறைப்பது ரத்த அழுத்தம் சீராக உதவும்.

    * பொட்டாசியம், மக்னீசியம் இரண்டும் உயர் ரத்த அழுத்தத்தினை சீர் செய்ய அவசியம். மருத்துவர்கள் நார்ச்சத்து மிகுந்த சத்துள்ள தாவர வகை உணவுகளையும், புரதத்தினையும் கூட்ட விரும்புவார்கள். கூடவே தாது உப்புக்களையும் உடல் ஆரோக்கியத்திற்காக சேர்ப்பர். பொட்டாசியம் சத்து மிகுந்த தாவர உணவுகளை பரிந்துரைப்பார். உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம், தாது உப்பு பெரிதும் உதவுகின்றது. கீரை வகைகள், பசலை, பீட்ரூட் கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் இவற்றில் இது அதிகம் உள்ளது. பசலை, முழு கோதுமை, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, வேர்க்கடலை அவற்றில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. ஸ்ட்ரெஸ் குறைய, உயர் ரத்த அழுத்தம் குறைய இது உதவுகிறது.

    பீட்ரூட் கீரை

    * அதிக கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழம், அதிக கொழுப்பு இல்லாத பால் உணவுகள், அதிக உப்பு சேர்த்த உணவுகளை தவிர்ப்பது போன்றவை உயர் ரத்த அழுத்தம் குறைய உதவும்.

    * அடர்ந்த சாக்லேட் சிறிதளவு தினம் எடுத்துக்கொள்ளலாம்.

    * மன உளைச்சல், சதா எதனையோ நினைத்து கவலைப்படுவது இவற்றினைக் குறையுங்கள்.

    தைராய்டு: தைராய்டு சுரப்பி வண்ணத்து பூச்சிபோல் கழுத்தில் உள்ள சுரப்பி. உடல் செயல்பாட்டிற்கும். மூளை செயல்பாட்டிற்கு முக்கியமான தைராய்டு ஹார்மோனை இது சுரக்கின்றது. தைராய்டு குறைபாட்டின் அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் செல்வதே நல்லது. இரவில் நன்கு தூங்குபவர், திடீரென நன்கு தூங்க முடியவில்லை என்றால் அது தைராய்டு பிரச்சினையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. அதிகம் இயங்கும் தைராய்டு அதிகமாக ஜி3, ஜி4 ஹார்மோன்களை சுரந்து நரம்பு மண்டலத்தினைத் தூண்டி தூக்கமின்மையை உருவாக்கலாம். அதேபோல் இரவில் நன்கு தூங்கியும் காலையில் இன்னமும் அதிகம் தூங்க வேண்டும் என்று தோன்றினால் ஹார்மோன்கள் தேவையான அளவு சுரக்காமல் இருக்கலாம்.

    * திடீரென்று பதட்டம் ஏற்படுவது தைராய்டு அதிகம் செயல்படுவதன் காரணமாக இருக்கலாம்.

    * அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால் தைராய்டு குறைவாக செயல்படுவதன் காரணமாக இருக்கலாம்.

    * தைராய்டு அதிகம் செயல்பட்டால் அடிக்கடி வெளிப்போக்கு இருக்கும். இது வயிற்றுப்போக்கு அல்ல. ஆனால் வெளிப்போக்கு மட்டும் அடிக்கடி இருக்கும்.

    * முடி மெலிதானால், குறிப்பாக புருவ முடி மெலிதானால் தைராய்டு பிரச்சினை வாய்ப்புகள் அதிகம்.

    * அதிக உடல் உழைப்பு இல்லாத பொழுதும் அதிகமாக வியர்ப்பது தைராய்டு அதிகம் வேலை செய்கின்றது என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

    * திடீரென நமது முயற்சி எதுவும் இல்லாமல் எடை கூடுவது தைராய்டு குறைபாட்டின் காரணமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோன்று முயற்சி இன்றி ஒருவர் அதிகம் இளைத்தாலும் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * மறதி, குழப்பம் இவையெல்லாம் தைராய்டு குறைவாக செயல்படுவது காரணமாக இருக்கலாம்.

    * பெண்களுக்கு மாத விலக்கில் போக்கு அதிகமானதாகவும், நீண்ட நாட்கள் கொண்டதாகவும் இருந்தால் மருத்துவர் தைராய்டு பரிசோதனை செய்வார்.

    * பகலில் சிறிது நேரம் தூங்க வேண்டும் என்ற உணர்வு இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம்.

    * கருத்தரிக்கவில்லை, கருத்தரித்தாலும் கரு தங்குவதில்லை போன்ற பிரச்சினைகளுக்கும் தைராய்டு காரணமாக இருக்கலாம்.

    ஆக அறிகுறிகளை ஆரம்ப காலத்திலேயே அறிந்து உடனடியாக மருத்துவரிடம் செல்வது அநேக பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    சிகரெட் பிடிப்பதனை நிறுத்துவதற்கு பழக்கப்பட்ட பலருக்கும் ஒருவித அச்சம் இருக்கின்றது. சிகரெட், புகையிலை நிறுத்திய 10 வருடத்தில் தொண்டை, வாய், கணைய புற்றுநோய் பாதிப்பு வாய்ப்புகள் 50 சதவீதம் குறைகின்றன.
    சிகரெட் பிடிப்பதனை நிறுத்துவதற்கு பழக்கப்பட்ட பலருக்கும் ஒருவித அச்சம் இருக்கின்றது. ஆனால், உறுதியாய் முழு மனதாய் இதனை தைரியமாய் செய்யும் அநேகருக்கு...

    * உடல் சக்தி கூடுகிறது.
    * வாசனை, சுவை இவற்றினை நன்கு அறிய முடிந்தது.
    * சரும நிறம் கூடியது.
    * சுய மரியாதையும், சுய நம்பிக்கையும் கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன.

    மேலும் மருத்துவ ரீதியாக

    * சிகரெட்டை நிறுத்திய 20 நிமிடங்களிலேயே நாடித்துடிப்பு சீராகின்றது.
    * எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீர்படுகிறது.
    * எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் நிகோடின் அளவு 90 சதவீதம் குறைகிறது.
    * 24 மணி நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது.
    * இருதய பாதிப்பு அபாயம் குறையத் தொடங்குகின்றது.
    * 48 மணி நேரத்தில் சுவை, வாசனை இவற்றினை நன்கு உணர முடிகிறது.
    * 5-10 நாட்களில் புகை பிடிக்க வேண்டும் என்ற வெறி வெகுவாய் குறைகிறது.
    * 72 மணி நேரத்தில் நுரையீரல் எளிதாய் சுவாசிக்கிறது.
    * 2-12 வாரங்களில் இருமல், மூச்சு வாங்குதல் வெகுவாய் குறைகின்றது.
    * உடல் செயல்பாடுகள் எளிதாகின்றது.

    சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள்

    மூன்று முதல் ஒன்பது மாதங்களில்

    * மூக்கடைப்பு
    * சோர்வு
    * சைனஸ்
    * மூச்சு வாங்குதல்
    * சுவாச மண்டல தாக்குதல்கள் மறைந்தே போகின்றன

    ஐந்து வருடங்களில்

    * பக்க வாத அபாயம் வெகுவாய் குறைகின்றது.
    * உடல் தன்னைத்தானே ஆற்றிக்கொண்டு ரத்த குழாய்கள் சீராய் செயல்பட தொடங்குகின்றன.

    ஒரு வருடத்திலேயே சளியினை வெளி தள்ளும் சக்தியினை நுரையீரல் பெறுகின்றது.

    சிகரெட், புகையிலை நிறுத்திய 10 வருடத்தில் தொண்டை, வாய், கணைய புற்றுநோய் பாதிப்பு வாய்ப்புகள் 50 சதவீதம் குறைகின்றன.

    15 வருடத்தில் இருதய நோய் பாதிப்புகள் குறைகின்றன.

    இருபது வருடத்தில் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகின்றன.

    முட்டையில் பொரியல், ஆம்லெட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முட்டையை வைத்து மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    மிளகு தூள், உப்பு - தேவையான அளவு,
    மைதா - கால் கப்
    சோள மாவு - கால் கப் + 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    பொடியாக நறுக்கி இஞ்சி - 1 ஸ்பூன்
    பொடியாக நறுக்கி பூண்டு - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    குடைமிளகாய் - 1
    சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்,
    சோயா சாஸ் - 1 ஸ்பூன்,
    வெங்காயத்தாள் - சிறிதளவு.

    முட்டை மஞ்சூரியன்

    செய்முறை  :

    குடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    1 ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்

    பின்னர் சிறிது எண்ணெய் தடவிய அகன்ற கிண்ணத்தில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோளமாவு, மிளகாய் தூள், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து அதில் முட்டை துண்டுகளை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு வதக்கவும்.

    இரண்டும் நன்றாக வதங்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து சில்லி சாஸ், tomato ketchup, சோயா சாஸ் போட்டு நன்றாக கிளறவும்.

    அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி திக்கான பதம் வந்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை போட்டு உடையாமல் கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

    முட்டை மஞ்சூரியன் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோய் வரும் முன் காப்பதற்கான ஆலோசனைகளையும், தவிர்க்க, சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், உணவிற்கு முன்னர் அருந்தும் ஒரு கோப்பை நீர் உணவின் அளவை குறைக்கும். தினமும் 2 முறை பல்துலக்குவது நல்லது. மருத்துவரின் அறிவுரைப்படி தினமும் உடற்பயிற்சிகளை 1/2 மணி நேரம் செய்ய வேண்டும். சாப்பிட்ட உணவின் கலோரிகளை பயன்படுத்தும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை உடல்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடலில் ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுகோப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

    முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள் : சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:- சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப் படும் இனிப்பு வகைகள், தேன், பொரித்த உணவுகள், உருளைகிழங்கு, பீட்ரூட், காரட், இனிப்பான குளிர்பானங்கள், இளநீர், தேங்காய், மைதா, அரிசிப்பொருட்கள் பழஜூஸ் வகைகள் குறிப்பாக ஆப்பிள், மாதுளை, திராட்சை, தர்பூசணி, சப்போட்டா, அத்தி.

    கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டிய உணவு பொருட்கள்:- வெங்காயம், வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, கோவைக்காய், எலுமிச்சை, புதினா, ஆவியில் வைத்த உணவுகள்(இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை), மோர், பாதாம்பருப்பு, சூப்வகைகள், மூங்கில் அரிசி, இந்துப்பு, கார் அரிசி, கேழ்வரகு, கோதுமை, பாசிபயிறு, சுண்டல் வகைகள், உளுந்து, கொய்யா, பப் பாளி, முட்டை வெண்கரு, கீரைகளில் குறிப்பாக பசலைக்கீரை அல்லது பாலக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைகீரை, சிறுக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கன்னி கீரை.

    இந்நோய் வராமல் தடுக்க பசி நன்கு வந்த பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது குறுநடை கொள்ள வேண்டும். நொறுக்கு தீனி உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    சர்க்கரைநோயின் அறிகுறிகள்

    அதிக தாகம், அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிதல், உடல் எடை கூடுதல் அல்லது குறைதல், சிறுநீர் தொற்று, தோலில் அரிப்பு காணல், கண்பார்வை திறன் மங்குதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து காணல், சிறுநீரில் சர்க்கரை சத்து காணல், சிராய்ப்பு அல்லது வெட்டுகாயம் ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல் பாதங்களில் மற்றும் கைகால்களில் எரிச்சல், உடற்சோர்வு, கைகால், தோள்பட்டை எலும்புகளில் வலி.
    குழந்தைகள் பிறந்தது முதல் 3 வயது வரை, குழந்தைகளை வளர்ப்பதில் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை வளர்ப்பை மிக மிக எளிதாகக் கடந்து போய், செயற்கரிய செயல்கள் புரிந்து சாதனை படைத்தார்கள், முந்தைய தலைமுறை அன்னைகள்; ஆனால், இன்றைய கால அம்மாக்களுக்கு, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் இருந்து, அவர்கள் அழாமல், சோறூட்டுவது வரை என அனைத்திலும் மிகப்பெரிய தடுமாற்றங்கள். இதற்கு என்ன காரணம்? இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்..! குழந்தைகள் பிறந்தது முதல் 3 வயது வரை, குழந்தைகளை வளர்ப்பதில் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை, அவர்களுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்; இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை, சக்தியான, அதிராத அடித்தளம் அமைப்பது தாய்ப்பாலே!

    பிறந்த குழந்தைக்கு பவுடர், லோஷன் போன்ற பொருட்கள் தேவையில்லை; அவர்களுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பதே போதுமானது. 6 மாதங்களுக்குப்பின், தாய்ப்பாலுடன் கூடிய இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்; ஆனால், அது வீட்டில் சுத்தம் கூடிய சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

    குழந்தைகள் என்ன வயதினர் ஆயினும், அவர்களுக்கு இரவில் மற்றும் வெளியில் செல்கையில் மட்டும் டையப்பர் பயன்படுத்தலாம்; பகலில் டயப்பர் உபயோகிக்காமல் இருந்தால், அது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. டையப்பரால், குழந்தைகளின் நடை மற்றும் தவழ்தல் போன்ற செயல்கள் தடைபடலாம்; தாமதமாகலாம். மேலும் டையப்பர் ஈரத்தினால், உண்டாகும் தடுப்புகள், புண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.



    குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை மறக்காமல், தவறாமல் போடுவதுடன், குழந்தையின் நோயுற்ற சமயங்களில், மருத்துவர் கொடுத்த மருந்துச் சீட்டுகள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை ஒரு கோப்பு போன்று பராமரித்துவர வேண்டும்.

    குழந்தை ஏலெட்டு மாதத்தில் ‘தாத்தா’, ‘ப்பா’ என பேச ஆரம்பிக்கையில், அச்சமயம் அவர்களுடன் பெற்றோர்கள், வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். இது தான் குழந்தைகளைப் பேச வைப்பதற்கான முதல்முழு படி.

    குழந்தையின் 7 மாதத்துக்குப் பின்னர், ‘டாய்லெட் டிரெய்னிங்’ பயிற்சியை அவர்க்ளுக்கு அளித்து, குழந்தைகளின் 2 வயதுக்குள் ‘கக்கா வருது’ என குழந்தைகள் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில், அவர்களை பழக்கிவிட வேண்டும்.

    ஓடி விளையாடுவது, எழுத்துகள் மற்றும் எண்களை விளையாட்டாகச் சொல்லிக்கொடுப்பது என்று குழந்தைகளின் மூளைக்கும், உடலுக்கும் ஏற்ற மற்றும் பிடித்த வகையில் கற்றுக்கொடுத்து, அவர்களே செய்யும் வண்ணம் வேலை கொடுக்க வேண்டும். 2 வயதில் நீங்கள் உண்ணும் எல்லா வகை உணவுகளையும் குழந்தையும் உண்ணும் வகையில் அவர்களை பழக்க வேண்டும்.

    1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தினம் 2 முறை உடலுக்கும், 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் குளிக்க வைக்க வேண்டும்; வீட்டினுள்ளேயே குழந்தைகளைப் பூட்டி வைக்காமல், அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், குடியிருப்பின் விளையாட்டுப்பூங்கா போன்றவற்றிலும் அவர்களை விளையாட அனுமதித்து, ‘சோஷியல் பிஹேவியர்’ எனும் சமூக நடத்தை அப்போது தான் குழந்தைகளில் தோன்றி, அவர்களும் இச்சமூகத்திற்கு ஏற்ற மனிதனாய் மாறுவார்கள்..!
    நாப்கினுக்கு மாற்றாக வந்துள்ள மென்சுரல் கப்தான், தற்போது பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக இருக்கிறது. அதே நேரம், இந்த மென்சுரல் கப் யாரெல்லாம் பயன்படுத்தலாம்; அதை எப்படிப் பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ளலாம்.
    `மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை அப்புறப்படுத்த ஆரம்ப காலங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின் காட்டன் பஞ்சுகள் நிரப்பப்பட்ட நாப்கின்கள் புழக்கத்துக்கு வந்தன. துணி மற்றும் நாப்கின் நம்முடைய உடல் உறுப்பின் வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தக்கூடியவை. ஆனால், மென்சுரல் கப் என்பது பெண்களின் பிறப்புறப்பின் உள்ளே வைத்துப் பயன்படுத்தக்கூடியது. கூம்பு வடிவத்தில், சிலிகான் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதை, மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளலாம். மாதவிடாய் நேரத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றம், அரிப்பு, நாப்கின்களால் உண்டாகும் அலர்ஜி போன்றவை வராது என்பதுதான் மென்சுரல் கப்பின் ப்ளஸ்.

    குத்துக்கால் இட்டோ, ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை கழிப்பறையின் மீது வைத்து கால்களை நன்றாக அகற்றி, மென்சுரல் கப்பின் வாய்ப்பகுதியை அழுத்தி 'c' போன்று மடித்து பிறப்புறுப்பின் உள்ளே பொருத்திக்கொள்ள வேண்டும். சரியாக நீங்கள் பொருத்திவிட்டால் கப்பில் சேகரமாகும் ரத்தம் வெளியே கசிய வாய்ப்பே இல்லை. மென்சுரால் கப் பயன்படுத்த ஆரம்பிக்கும் புதிதில், 'சரியாகத்தான் பொருத்தியிருக்கிறோமா' என்ற சந்தேகம் வந்தால், நாப்கினையும் வைத்துக்கொள்ளுங்கள். மென்சுரல் கப்பை  5 மணி நேரத்துக்கு ஒரு முறை வெளியே எடுத்துச் சுத்தப்படுத்தி மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.

    ``5 மணி நேரத்துக்கு ஒருமுறை, மென்சுரல் கப்பில் இருக்கிற ரத்தத்தை அப்புறப்படுத்தும்போதும், அதைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் முழுதும் பயன்படுத்திய பின்னர், கொதிக்கும் நீரில் போட்டு சுத்தம் செய்து, மீண்டும் மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் சுத்தம் செய்யப்பட்ட கப்பை பத்திரமாக ஒரு துணியிலோ அதற்கென கொடுக்கப்பட்ட பைகளிலோதான் வைக்க வேண்டும். கண்ட இடங்களில் வைத்து, பிறகு பயன்படுத்தினால், தொற்றுக் கிருமிகளால் அலர்ஜி ஏற்படலாம்.''



    ``திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். திருமணமாகாத பெண்களுக்கு என பிரத்யேக மென்சுரல் கப்புகள் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

    திருமணமாகாத பெண்களுக்கு, பிறப்புறப்பில் மென்சுரல் கப்பை பொருத்துவது சிரமமாக இருக்கிறது என்றால், நாப்கினையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    குழந்தை பெற்ற நேரத்தில் பிறப்புறுப்பு பாகம் அதிகமாகப் புண்பட்டு இருக்கும் என்பதால், அப்போது மென்சுரல் கப்பை தவிர்த்து விடுங்கள்.

    நீள நீளமாக நகம் வைத்திருப்பவர்கள் பென்சுரல் கப்பை வைக்கும்போது, பிறப்புறுப்பில் காயம் ஏற்படும் தவிர, நகங்களில் இருக்கிற அழுக்கு, அந்தக் காயங்களில் பட்டால் இன்ஃபெக்‌ஷனும் ஏற்படலாம். அழகுக்காக நகம் வளர்க்கிற பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.''

    மென்சுரல் கப் உடலுக்குள் சென்றுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற வதந்தியை நம்ப வேண்டாம். கப்பில் உள்ள அழுத்தம் நாம் பொருத்திய இடத்தைவிட்டு நகரவிடாது என்பதால் வீண் பயம் வேண்டாம். அதேபோல, கப்பில் சேகரிக்கப்படும் ரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்றுவிடும் என்ற வதந்தியையும் நம்ப வேண்டாம். மென்சுரல் கப் கால மாற்றம் மட்டுமல்ல, பாதுகாப்பான மாற்றமும்கூட.
    புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று புரோட்டீன் நிறைந்த பருப்பு வகைகளை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - 100 கிராம்,
    முளைகட்டிய பாசிப்பயிறு - 50 கிராம்,
    கொண்டைக்கடலை - 50 கிராம்,
    கொள்ளு - 50 கிராம்,
    கோதுமை - 50 கிராம்
    உளுந்து - 50 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 4,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,
    உப்பு எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:

    இட்லி அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

    முளைகட்டிய பயறு மற்றும் மற்ற பயறு வகைகளை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    அரிசி, பயறு வகைகளை காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி சேர்த்து அடைமாவுப் பதத்தில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவு அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான சத்தான புரோட்டீன் அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×