என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
கணவன், மனைவி இடையே ஆணவம் ஏற்பட்டால் கருத்து வேறுபாடு வந்து, வாய்ச்சண்டையில் ஆரம்பித்து கை கலப்பில் முடிந்து வன்முறையாகி விடுகிறது.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனத் தெரியாமலா சொல்லிவைத்தார்கள். சுருதியும், லயமும் சேரும்போது இன்னிசை எழுவதைப் போல, கணவனும், மனைவியும் இணைந்து வாழும்போது தான் நன்மக்கட்செல்வங்கள் கிடைக்கின்றன.
இசையில் முரண் ஏற்படுவதைப்போல, குடும்பத்திலும் அவ்வப்போது ஊடல்கள் வரலாம். அதை அவ்வப்போது அவர்களே நிவர்த்தி செய்துகொண்டால், வன்முறைகளே நடக்காது தவிர்க்கலாம். கணவன், மனைவி இடையே ஆணவம் ஏற்பட்டால் கருத்து வேறுபாடு வந்து, வாய்ச்சண்டையில் ஆரம்பித்து கை கலப்பில் முடிந்து வன்முறையாகி விடுகிறது.
பெண்கள் படித்து, நல்ல பதவியில் அமர்ந்து, ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் போது, ஆண்களின் மனம் ஏற்பதில்லை. ஆண்களை விட, குடும்பச் சுமைகளை சுமக்கும் மனைவியால், கணவனின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளான மது அருந்துதல், பிற பெண்களை நாடுதல் போன்றவற்றை செய்யும்போது தான் பிரச்சினையே எழுகிறது. கல்வி, வேலை என எல்லாவற்றிலும் விட்டுக்கொடுத்துப்போகும் கணவன், அவன் தவறினைச் சுட்டிக் காட்டும்போது, ஆணவம் ஏற்பட மனைவியை அச்சுறுத்துவது, இழிவாகப் பேசுவது, அவளது கண்ணியத்தைக் கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட, எல்லா மனைவியராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மனம் நொந்து வேறு முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை 2005-ம் ஆண்டு அரசு நடைமுறைப்படுத்தியது. இச்சட்டத்தின்படி கட்டிய மனைவியை விட்டு பிறர் மனைவியரை நாடும் ஆண்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497-ன் கீழ் விசாரணை செய்து தண்டிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ‘பிறன் மனை நயத்தல் பேதமையன்றோ’. மனைவி இருக்கும்போது விவாகரத்துப் பெறாமல் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்வது கூட பிரிவு 494-ன்படி தண்டனைக்குட்பட்டதே.
அதைப்போல ஏமாற்றித் திருமணம் செய்தல், போலிச் சடங்குகளை நடத்தி திருமணம் என்று நம்ப வைத்தல் போன்றவைகளும் குற்றங்களே. பெண்களை துன்புறுத்தும் செய்கைகள் உடலாலோ, மனதாலோ, நோகும் படியான வார்த்தைகளாலோ அல்லது உடல், உயிர், உடலுறுப்பு அல்லது மன நலத்திற்கு கேடு செய்கிற எந்த ஒரு செயலுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறலாம். இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் பெண்களுக்கில்லை. மிரட்டி அவமதித்தல், உள் நோக்கத்துடன் அவமதிப்புச் செய்தல் ஆகியவைகளும் இச்சட்டத்தின் கீழ் குற்றங்களே.
நாளேடுகளைப் புரட்டினால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், அதனால் பெண்கள் செய்து கொள்ளும் தற்கொலைகளும் நிறையவே. படிக்காத பெண்கள் மட்டுமல்ல; படித்த கல்லூரி ஆசிரியைகள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் கூட தற்கொலை செய்வது தான் வியப்பு. முன்னோர்கள் வலியுறுத்திய ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற மரபு பிறழும்போது, குற்றமாகிறது. பிறர் மனைவியரை பெண்டாள நினைக்கும் கணவர் களவு வாழ்க்கை என்ற குற்றம் செய்தவராகிறார்.

திருமண பந்தம் புனிதமான சடங்கு மட்டுமல்ல; சமுதாயத்தோடு ஒன்றியது. முறையான உறவில் பிள்ளைகள் பெறும்போது தான், பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணமும், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து வாழ வேண்டும் என்றும் நினைப்பர். பெண்கள் நேரடியாக வழக்கு மன்றம் சென்று வாதாடி வாழ்க்கையைப் பெற வேண்டிய அவசியமில்லை.
அரசால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அல்லது சமூகநலப் பணியாளர்களிடம் எழுத்து மூலமாக தெரிவித்தால் போதும் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்த பதிவு செய்யப்பட்ட தன்னார்வ சேவை அமைப்பின் உதவியுடன், குற்றத்தின் தன்மை குறித்து விசாரணை செய்து, விசாரணை எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் மூலம், குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு அனுப்புவார்.
அதை முதல் வகுப்பு நீதித்துறை குற்றவியல் நடுவர் அல்லது மாநகர குற்றவியல் நடுவர் விசாரணை செய்து குற்றத்திற்கேற்ற தண்டனை மற்றும் இழப்பீடு வழங்கி ஆணையிடுவார். கணவரால் அல்லது அவரது உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நிவாரணம் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால், ஜாமீனில் வெளிவர முடியாது; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். ஆகவே வன்கொடுமைகள் குறைய வாய்ப்புண்டு. இதை அறியாத பெண்களே தற்கொலை முடிவை நாடுகிறார்கள்.
ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொண்டு பதிவு செய்துகொள்ளும் முறையை மாற்றி, இணங்கும்வரை இருவரும் சேர்ந்து வாழவும், இணங்காதபோது பிரிந்துகொள்ளும் முறையை மேலை நாடுகளில் கையாளுகிறார்கள். இந்த நாகரிக முறை ஐதராபாத், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பரவி இதுபோன்ற இணையர்கள் இருக்கிறார்கள்.
இதிலும் பிரியும்போது, பெண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், நீதிமன்றம் மூலம் இந்தியாவில் நிவாரணம் பெற முடியாது. ஆனால் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ‘சேர்ந்து வாழும் அமைப்பில்’ பாதிப்படையும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க அந்நாடுகளில் சட்டம் இயற்றி இருக்கிறார்கள். வாழ்வதே குழந்தைகளுக்காக; அதை ஒழுக்கமாக வாழ்ந்து இல்லறம் நடத்தி நல்லறம் காப்பதே மாண்பு என்பதை இன்றைய இளந்தலைமுறையினர் உணர்ந்து வாழ்வதே நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.
கே.சுப்ரமணியன், வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை.

குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 2 கப்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 250 கிராம்,

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீரகம், மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்).
பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் திரட்டி வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான ஆலு பட்டூரா ரெடி.
மைதா மாவு - 2 கப்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 250 கிராம்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீரகம், மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்).
பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் திரட்டி வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான ஆலு பட்டூரா ரெடி.
குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி பிரச்சனை எதனால் வருகிறது? எம்மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் மற்றும் சிகிச்சை முறையை தெரிந்து கொள்ளலாம்.
அப்பெண்டிக்ஸில் பொதுவாக சீழ்பிடிப்பதால் வரும் நோய் மற்றும் கட்டிகள். சீல் பிடிப்பதற்கு காரணம் கிருமி தொற்று, உள் பகுதியில் மலம் அடைத்து கொள்வது, குடல் புழுக்கலால் அடைப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன.
அனைத்து வயதினருக்கும் வரும். பொதுவாக 15-25 வயதினருக்கு அதிகமாக உள்ளது.
அறிகுறிகள்- தீடீரென்று வயிற்றின் தொப்புள் பகுதியில் வலி மற்றும் வயிற்றில் வலது கீழ்புறத்தில் வலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்படும்.
ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்து அப்பெண்டிக்சை அகற்றி விட்டால் பல பின்விளைவுகளை தடுக்கலாம். பின் விளைவுகளில் முக்கியமானது சீழ்பிடித்த அப்பெண்டிக்ஸ் வெடித்து வயிற்றில் சீழ்பரவி ஜன்னி ஏற்படும், அப்பெண்டிக்ஸ் கட்டி உண்டாவது, அப்பெண்டிக்ஸ் சுற்றி சீழ்பிடித்து கொள்வது, குடல் அடைப்பு ஏற்படும் போன்ற பல சிக்கலான பின் விளைவுகள் உண்டாகும். அப்பெண்டிசைட்டிஸ் தான் என்று கண்டறிவதற்கு மருத்துவருக்கு உடல் பரிசோதனையும் மற்றும் ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகளும் போதும்.
அப்பெண்டிசைட்டிஸ் தான் என்று அறிந்து கொண்டவுடன் உடனடியாக அறுவை சிகிச்சை மருத்துவரை அணுகி லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து விரைவில் முழுமையாக குணமடைந்து விடலாம். தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் தான் பின் விளைவுகள் ஏற்பட்டு லேப்ரோஸ்கோப்பி மூலம் செய்ய முடியாமல் Open Operation செய்து நோயாளியின் உயிரை காப்பாற்ற போராட வேண்டிய நிலை ஏற்படும். லேப்ரோஸ்கோப்பி என்பது சிறு துவாரத்தின் மூலம் செய்ய கூடிய நவீன அறுவை சிகிச்சை முறையாகும்.
தற்போது அனைத்து ஊர்களிலும் அனைத்து மருத்துவமனைகளிலும் செய்யப்படுகின்றது. இதனால் நோயாளிகள் விரைந்து குணமடைந்து நார்மல் நிலையை அடைய முடியும்.

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்..
குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்காவிடில் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் தரும். இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்..
* கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி, அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்புகள் மறையும்.
* குதிகால் வெடிப்பு அதிகப்படியான வறட்சியினால் வருவதாகும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும்.
* வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும். எனவே, தவறாமல் அன்றாடம் ஒருமுறையாவது செய்து வர வேண்டும். குதிகால் வெடிப்பு மிகவும் மோசமாக இருந்தால், இதனை தினமும் இரண்டு முறை செய்து வர வேண்டும்.
* அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, வெடிப்பு அதிகம் இருப்பவர்கள், இத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பாதங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் இந்த கலவையைக் கொண்டு குதிகால்களை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
* வெள்ளை வினிகரில் அசிடிக் ஆசிட், அதிக அளவில் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவே 1/4 ப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து 10 நிமிடம் அந்த கலவையில் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
* துளசியில் குதிகால் வெடிப்பைப் போக்கும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. ஆகவே துளசியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் சூடம் சேர்த்து நன்கு பேட்ஸ் செய்து, பாதங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்புகள் மறையும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வேகமாக கொழுப்பைக் கரைக்கவும், உடலின் தாங்கு சக்தியை அதிகரிக்கவும் இண்டர்வெல் டிரெயினிங் நல்ல பயிற்சி.
கால மாற்றத்துக்கேற்ப உடற்பயிற்சியில் பல்வேறு புதிய முறைகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் இண்டர்வெல் டிரெயினிங் என்பது சமீபகாலமாக ஃபிட்னஸ் உலகில் அடிக்கடி பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
Interval training என்றவுடன் 2 நாளைக்கு ஒரு முறை இடைவெளிவிட்டு செய்வதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடையிடையே ரெஸ்ட் எடுத்துக் கொண்டு செய்வதோ இல்லை. பல வருடங்களாக விளையாட்டு வீரர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் பயன்படுத்தும் நடைமுறை இது. கார்டியோ பயிற்சிகளின் மூலம் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம்.
உதாரணத்திற்கு ட்ரெட் மில்லில் குறைந்த 2.5 கிமீ வேகத்தில் நடக்க ஆரம்பித்து, பின் 7.5 கிமீ வரை வேகத்தைத் தீவிரமாக்கி அதே வேகத்தை குறிப்பிட்ட நிமிடம் நிலையாக தொடர்வது; அடுத்து 4.5 வேகமாக குறைத்து, மீண்டும் 2.5 வேகத்திற்கு கொண்டு வருவது. இதுதான் அடிப்படை.
குறைவான வேகம், அதிக வேகம், மீண்டும் குறைவு என வேகத்தை மாற்றி மாற்றி செய்வதுதான் இன்டர்வெல் ட்ரெயினிங். வித்தியாசமான இந்த பயிற்சி தற்போது பிரபலங்களையும், ஃபிட்னஸில் அதிக விருப்பம் கொண்டவர்களையும் மிகவும் ஈர்த்துள்ளது.
‘இண்டர்வெல் பயிற்சியானது உடலின் Aerobic மற்றும் Anaerobic என்ற இரு ஆற்றல் உற்பத்தி முறைகளை பயன்படுத்துகிறது. ஏரோபிக் அமைப்பில் நீங்கள் நீண்ட தூரம் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ சுவாசிக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி உடல் முழுவதும் செல்ல அனுமதிக்கிறது.
‘இதயத்திலிருந்து, தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, தசைகள் அதிகப்படியான ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவுகிறது. இதனால் நீங்கள் உடற்பயிற்சியை எளிதாக கையாள முடியும்.
சைக்கிளிங், ட்ரெட் மில் போன்ற முன்னரே வேகத்தை செட் செய்யக்கூடிய பொதுவாக கார்டியோ பயிற்சிகளில் மட்டும் இண்டர்வெல் ட்ரெயினிங்கை பயன்படுத்துகிறோம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வேகமாக கொழுப்பைக் கரைக்கவும், உடலின் தாங்கு சக்தியை அதிகரிக்கவும் இது நல்ல பயிற்சி.
வாரத்தில் 3 நாட்கள் இன்டர்வெல் ட்ரெயினிங் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே உடற்பயிற்சியில் செய்த பயிற்சிகளையே திரும்பத் திரும்ப செய்யக்கூடாது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை எக்சர்ஸைஸ் பேட்டர்னை மாற்றி அமைக்க வேண்டும். தொடர்ந்து ஒரே மாதிரி பயிற்சிகளை செய்வதால் உடல் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டுவிடும். அதையும் தினசரி வேலைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளும். ஒவ்வொருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிற்சிகளை மாற்றி, மாற்றி செய்ய வேண்டும்.

காலையில் சத்தான உணவுவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று கோதுமை ரவையும், வெஜிடபிள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - ஒரு கப்,
பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
பீன்ஸ் - 10
கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், காய்கறிகள், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கோதுமை ரவையை சிவக்க வறுத்து கொள்ளவும்.
அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, காய்ந்த மிளகாயை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
அடுத்து அதில் ப.மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் மூன்று கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
அடுப்பை ‘சிம்’மில் வைத்து வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும்.
மீதமுள்ள எண்ணெயையும் சேர்த்து, ரவை நன்றாக வெந்ததும் கிளறி கீழே இறக்கவும்.
கடைசியாக எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.

உப்பு - தேவையான அளவு.

சூப்பரான கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் மாதவிடாயை சரியாக கணக்கிட்டு தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் விரைவில் தாய்மையை அடையலாம்.
ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.
செக்ஸுக்குப் பின், ஆணின் விந்தணு குறைந்தது ஐந்து நாட்களுக்கு பெண்ணின் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பெண்களுக்கு ஓவுலேஷன் ஏற்பட்டாலும், விந்தணு கர்ப்பப்பையில் இருப்பதால் கருவுறும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.
பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற செக்ஸ் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும்.
சில பெண்களுக்கு குறைந்த கால இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. அதாவது 28 முதல் 3௦ நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இதன்னாலேயே, புணர்ச்சி நேரத்தில் அந்தப் பெண் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, மாதவிடாய் முடிவடையும் காலத்தில் புணர்ச்சி செய்தால், அதன்பின் ஓவுலேஷன் விரைவாக ஏற்படுமென்றால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகின்றது என்று அர்த்தம். இதற்காகவே, மாத்திரைகள், ஆணுறை மற்றும் வேறு சில வழிகளை தம்பதியினர் பின்பற்றுகின்றனர்.

காது கேட்கும் திறன் குறைவாக இருப்பதை குழந்தைகளால் சொல்லத் தெரியாது. இவர்கள் சரியாக பேசமாட்டார்கள், படிப்பில் கவனம் இருக்காது.
ஒரு குழந்தை தாய்தந்தை உள்பட பிறர் பேசுவதை கேட்டு கற்றுக் கொள்கிறது. காது கேட்பதில் பிரச்சினை இருக்கும் குழந்தைக்கு பேச்சை கேட்டு கற்றுக் கொள்ளத் தெரியாது. இவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பேச்சு வராமல் இருக்கும். அவர்கள் பேசுவதில், படிப்பதில் சிரமப்படும். மதுரை கே.கே.நகர் வக்போர்டு கல்லூரிக்கு எதிரில் இயங்கும் ஏ.எச்.எ.பி காது கருவி மையம் காது குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து நன்கு பேசவும் படிக்கவும் உதவுகிறது.
மரபணு கோளாறு, நெருங்கிய உறவு திருமணம், ரத்த பிரிவு பிரச்சினை, ஊட்டச் சத்து குறைவு,குறைந்த எடை குழந்தைகள், கர்ப்பத்தில் தொற்றுநோய், காது நரம்பு பாதிப்பு ஆகியகாரணங்களால் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறைகிறது. காது கேட்கும் திறன் குறைவாக இருப்பதை குழந்தைகளால் சொல்லத் தெரியாது. இவர்கள் சரியாக பேசமாட்டார்கள், படிப்பில் கவனம் இருக்காது. பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை கேட்பியல் நிபுணரிடம் காட்டி காது கேட்கும் திறனை பரிசோதிக்க வேண்டும்.
கேட்பு திறனில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சரியான காதுகருவியை பொருத்தி பயிற்சி தரும் போது அவர்களின் பேச்சு, மொழி, கேட்பு திறன் மேம்படுகிறது. எங்களிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை போலவே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழந்தை 5 வயதில் இங்கு பயிற்சிககு கொண்டு வரப்பட்டு நல்ல பேச்சு பயிற்சி தரப்பட்டு தற்போது, அவன் கல்லூரி படிப்பை எட்டியுள்ளான். இவனை போல 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பயிற்சி பெற்று தற்போது தமிழ் ஆங்கில வழி பள்ளி, கல்லூரி படிப்பை சிறப்பாக பயின்று வருகின்றனர்.
இந்த மையத்தில், குழந்தைகளின் ஆட்டிசம் என்னும் குறைபாடு, வயதுக்கேற்ற வளர்ச்சி இன்மை, சரியான வயதில் பேச்சு வராதது, அன்ன பிளவு, திக்குவாய், உச்சரிப்பு பிழை, குரல் மாற்றம், அன்னம் மற்றும் உதடு பிளவு, விழுங்குவதில் சிரமம், அறுவை சிகிச்சைக்கு பின்னர் பேச இயலாமல் போவது, சில நேரங்களில் பேசவே இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு கூட பயிற்சிகள் நிபுணர்களால் வழங்கப்பபட்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள மாற்று வழிகள் கற்றுத் தரப்படும்.
செல்போனில் தொடர்புக்கு- 94433 53356.

தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது என்று பொருள் என்பார் பல வெற்றிகளை குவித்த மாவீரன் நெப்போலியன்.
வாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாகவும் சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே, நினைத்த படிப்புக்கு இடம் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் கவலைப்படக்கூடாது. தொழிலில் தோற்று விட்டோமே என்று தொழில் செய்வோர் கவலை கொள்ளத் தேவையில்லை. தவறான முடிவுகளையும் எடுக்கத் தேவை இல்லை. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி. யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்குப் பலம் தன்னம்பிக்கையில் என்பார்கள். “தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது என்று பொருள் என்பார் பல வெற்றிகளை குவித்த மாவீரன் நெப்போலியன்.
‘தோல்வி என்பது வெற்றிப் பயணத்திற்கு வழிகாட்டும் நெடுஞ்சாலை’ என்பார் கவிஞர் கீட்சு. ஏழ்மையில் வாடிய ஹென்றிபோர்டு என்பவர் அமெரிக்க வீதிகளில் குதிரைகள் பூட்டப்படாத தேரில் பவனி வருவேன் என்று அறிவித்தார். கடினமான ஆராய்ச்சிகளை செய்தார். மோட்டார் வாகனத்தைக் கண்டு பிடித்தார். பெரும் பணக்காரர் ஆனார். பத்திரிகை நிருபர்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டனர். ரகசியம் ஒன்றும் இல்லை. எனது தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு இவையே காரணம் என்றார். தோல்விகள் பலவற்றை சந்தித்த பலர் தன்னம்பிக்கையாய் வெற்றி பெற்ற வரலாறுகள் பல உண்டு.
அயர்லாந்து மன்னராக இருந்த ராபர்ட்புரூஸ் இங்கிலாந்தின் மீது படையெடுத்து ஆறுமுறை தோற்றார். கவலையோடு ஒரு குன்றில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி ஒரு குன்றில் இருந்து அடுத்த குன்றிற்குத் தாவித்தாவி வலை பின்னியது. ஆறு முறை அதனால் முடியவில்லை. ஏழாவது முறை வென்றது. இதைப் பார்த்த ராபர்ட் புரூஸ் சிலந்தியின் தன்னம்பிக்கையைகண்டு வியந்தார். தானும் ஏழாவது தடவை இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். வெற்றி பெற்றார். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல.
ஆபிரகாம்லிங்கன் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சிலமுறை தோற்றார். தன்னம்பிக்கையோடு மீண்டும் போட்டியிட்டு அமெரிக்க குடியரசு தலைவர் ஆனார். நிற வேறுபாடுகளை நீக்கி உலகப்புகழ் பெற்றார். விறகு வெட்டியின் மகனாகப் பிறந்த ஆபிரகாம் லிங்கன் வெற்றிக்கு ஏழ்மையோ தோல்வியோ தடை அல்ல என்பதை நிரூபித்தார். படிப்பில் மிகவும் மந்தமாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் பிற்காலத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்தார் என்றால் அவரது தன்னம்பிக்கையும் முயற்சியும் செயல் திறமுமே காரணம்.
சிறுவனாக இருந்தபோது ஏழ்மையில் வாடினால் சீர்திருத்தவாதியான எமர்சன், தாயையும் தந்தையையும் சகோதரர் சிலரையும் இழந்தார். ஆயினும் தன்னம்பிக்கையோடு படித்தார். உலகப் பொருட்கள் பலவற்றை ஆராய்ந்து நூல்கள் பலவற்றை எழுதினார். புகழ் பெற்றார். தமது அனுபவத்தை சில வரிகளில் இவ்வாறு தருகிறார். “தன்னம்பிக்கை இல்லாதவன் காலால் நடப்பவனைப் போல் அல்லாமல் தலையால் நடப்பவனைப் போன்றவன்” என்றார். தனது வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கையே என்றார். வாழ்வது ஒருமுறைதான் அதில் எழுத்தராக இருந்து காலத்தை வீணாக கழிக்க மாட்டேன் என்றுதான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து விலகி முழு நேர எழுத்தாளர் ஆனார் பெர்னாட்ஷா. பத்திரிகை அலுவலகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் ஏறி ஏறி இறங்கினார்.
தொடக்கத்தில் யாரும் அவரது நூல்களை வெளியிட முன்வரவில்லை. கடின முயற்சிக்குப் பிறகு அவரது நூல்களை வெளியிட முன்வந்தனர். பல நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றார். இங்கிலாந்தின் நாடக அரங்குகளில் திரைச்சீலைகளை ஏற்றி இறக்கும் வேலையிலும் நாடகம் காண வருபவர்களின் குதிரைகளைப் பராமரிக்கும் வேலையையும் செய்து வந்த ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்ற நாடகங்களை எழுதினார். இன்றும் புகழுடன் நிற்கிறார். மனிதன் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் வெற்றி உறுதி’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.
மகாத்மா காந்தி இளைஞராக இருந்தபோது லண்டனில் ‘பார் அட்லா’ படித்தார். இந்தியா வந்தபிறகு முதல் வழக்கை மும்பையில் நடத்தினார். நீதிமன்றத்தில் பேசவே முடியாமல் தவித்தார். இடையிலேயே வெளியேறினார். ஆனாலும் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கே இன வேறுபாட்டை நீக்கப் பல்வேறு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார். இந்தியா திரும்பியதும் அகிம்சை வழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கும் தடியடிகளுக்கும் சிறைவாசத்திற்கும் அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டார். இந்தியாவில் விடுதலை மலர்ந்தது. ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து பள்ளிப் படிப்பையே முடிக்காமல் விட்ட காமராசர் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றார். முதல்-அமைச்சராக வந்தார். படிக்காத மேதை, கர்ம வீரர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ் பெற்றார்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். தன்னம்பிக்கையில் உயர்ந்தார். தன்னம்பிக்கை இருந்தால் வயதோ, ஏழ்மையோ தடையாக இருக்காது. வயதான காலத்தில்தான் மில்டன் சொர்க்கத்தின் இறப்பு, சொர்க்கத்தின் மீட்பு போன்ற காவியங்களைப் படைத்தார். நோய் வாய்ப்பட்டவர்களும் உடல்குறைபாடு உடையவர்களும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெற முடியும். இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படும் கண் தெரியாதவர் ஒருவரும் நடக்க இயலாதவர் ஒருவரும் பல தமிழ் பாடல்களை பாடினர். இளம் வயதில் மாவீரன் அலெக்சாண்டர் பல நாடுகளை வென்றார். இளம் வயதில் கரிகாலன் கல்லணை கட்டி சோழநாட்டை வளம் கொழிக்கச் செய்தார். இளம் வயதில் அரியனை ஏறிய தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எதிர்த்த மன்னர்களை வென்றான்.
கணவனை இழந்த ராணிமங்கம்மாள் மதுரை அரசியானார். பதினெட்டு ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். அறச்செயல்கள் பல புரிந்தார். அவர் போட்ட சாலைகள் ‘மங்கம்மா சாலை’ என்று தமிழகத்தில் பல இடங்களில் இன்றும் உள்ளது. அவரால் கட்டப்பட்ட சத்திரங்கள் பலவும் இன்று உள்ளன. மதுரையில் உள்ள மங்கம்மா சத்திரம் புகழ் பெற்றது. அவுரங்கசீப்பின் படைத் தலைவன் படையெடுத்து வந்தபோதும் அஞ்சாமல் நின்றவர் ராணி மங்கம்மாள். அறிவியல் வளராத காலத்தில் கப்பல் படையை அமைத்துப் பல நாடுகளை வென்றான் ராஜேந்திர சோழன். கங்கை வரை படையெடுத்துச் சென்று பல மன்னர்களை வென்றான். ‘கங்கை கொண்ட சோழன்’ என்று புகழ் கொண்டான். தமிழரை பழித்த ஆரிய அரசர்களை வென்று கண்ணகிக்கு இமயத்தில் இருந்து சிலை செய்ய கல்லெடுத்து வந்தான் சேரன் செங்குட்டுவன்.
இவ்வாறு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அரிய சாதனைகள் செய்து புகழ் பெற்றவர் பலர்.
‘பூமி இருந்தால் என்ன வாழ்ந்தால் என்ன
தன்னம்பிக்கையோடு வாழ்வதை தொடருவோம்’
என்றார் மகரிஷி ரமணர். மாணவர்களும் சரி பிற தொழில் செய்வோரும் சரி யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.
பேராசிரியர் அ.பாஸ்கரபால்பாண்டியன், திருச்செந்தூர்.

கோதுமை அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை - ஒரு கப்,
சர்க்கரை - இரண்டரை கப்,
நெய் - அரை கப்,
எண்ணெய் - கால் கப்,
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கேசரி பவுடர் - 2 சிட்டிகை,
முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவை - தேவையான அளவு,
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
கோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்கவும்.
மறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.
இதை எடுத்து சிறு கண்ணுள்ள வடிதட்டியில் போட்டு கரண்டியால் அழுத்தி பாலை வடிக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டவும். இது போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து, இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும். பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதை பால் சிதறாமல் வடிகட்டவும். மீண்டும் அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே தெளியும் நீரை வடித்துவிடவும்.
முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும்.
எண்ணெய் - நெய்யைக் கலந்து கொள்ளவும்.
நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.
கோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.
கோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வரை கிளறவும்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
நெய் தடவிய தட்டில் பரத்தி சுடச்சுடவோ… ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும்.

பாதாம் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) - சில சொட்டுகள்.

சூப்பரான கோதுமை அல்வா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும். அவற்றைப் புறக்கணிக்கவே கூடாது.
நம் தமிழர் மருத்துவம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சில நல்ல வழிகளைக் காட்டியிருக்கிறது. அவற்றைப் பின்பற்றினால் பிரசவம் சுகமாகும். அவற்றில் சில...
* கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பகால வாந்தி, ரத்தசோகை, முதல் ட்ரைமெஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுக்கள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும்.
* காரணமற்ற வெள்ளைப்போக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுந்தங்கஞ்சி சிறந்த தீர்வைத் தருபவை.
* கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கர்ப்பப்பையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நல்லது.
* தாமரைப்பூ, தக்கோலம், நெய்தல் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு ஆகியவை கர்ப்பகால சங்கடங்களில் இருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். இவை ஃபோலிக் அமிலம் நிறைந்தவை; வலி நிவாரணி தன்மை உடையவை; வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் உடையவை. இரும்பு மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தவை.
* வண்ணங்கள் நிறைந்த பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி சாதம் ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டியவை.
* விலை உயர்ந்த எந்த டானிக்குகளும் தர முடியாத பயனை, முருங்கைக்கீரை, பாசிப் பருப்பு கலந்த பொரியல், கேழ்வரகு அடை ஆகியவை தந்துவிடும்.
* முன் பக்கம் சிறுநீர்ப்பையும் பின் பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால், முறையே நீர்ச் சுருக்கமும் மலச்சிக்கலும் ஏற்படுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு, தினமும் நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு ஆகியவற்றைச் சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
* கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு சர்க்கரைநோய் (Gestational Diabetes) ஏற்படும். இதற்காகக் கலங்கத் தேவையில்லை. இந்தப் பெண்களுக்கு உரிய மருத்துவமும் வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத உணவையும் கொடுக்கவேண்டியது அவசியம். தினமும் உணவில் வெந்தயத்தையும் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்கொள்வது கூடுதலாக நல்லது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பிரச்சனைகள் தவிர்த்து உற்சாகமான, மகிழ்ச்சிகரமான, நிம்மதியான பணி அனுபவம் பெறுவதற்கான ஆலோசனைகளை பார்க்கலாம்.
* வேலைக்குச் செல்லும் பெண்கள் பெர்சனல், அலுவலகம் என இரண்டு மொபைல்போன்கள் வைத்துக்கொள்ளலாம். அலுவலக நேரத்தில் பெர்சனல் மொபைலை மியூட்டில் வைத்துவிட்டு, வீடு திரும்பும் நேரத்தில் அதை உபயோகித்துக் கொள்ளலாம்
* பணியிடத்தில் ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் அதை பக்குவமாக கணவரிடமோ அல்லது தந்தையிடமோ ஆரம்பத்திலேயே சொல்லி வைப்பது நல்லது.
* உடன் பணிபுரியும் நெருங்கிய தோழிகளை வீட்டுக்கு அழைத்து ஒரு விருந்து கொடுத்து, நட்பை பலமாக்கிக்கொள்ளுங்கள். அலுவல் சிரமங்களை இணைந்து எதிர்கொள்ளும் தைரியத்தையும் திறனையும் அந்த நட்பு கொடுக்கும்.
* வீட்டுப் பிரச்சனைகள அலுவலகத்தில் பகிராதீரகள். உங்கள் குடும்பம் பற்றி எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே சொல்லி வையுங்கள். உங்களுக்கான மதிப்பு கிடைக்க, உங்கள் குடும்பம்தான் அடிப்படை என்பதை மறவாதீர்கள்.
* பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத அல்லது உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசாதீர்கள், யோசிக்காதீர்கள், யாருக்கும் ஆலோசனை சொல்லாதீர்கள். தோழியோ, சக அலுவலரோ, உயர் அதிகாரியோ உங்களிடம் ஒரு பிரச்னைக்குத் தீர்வு சொல்லச்சொல்லிக் கேட்டால், உடனே பதில் சொல்லாதீர்கள். தீர சிந்தனை செய்து அதில் உள்ள சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு பதிலளியுங்கள்.

* பணி குறித்து நீங்கள் கோபமாகவோ அல்லது மூட் அவுட் ஆகவோ இருக்கும்போது அதற்கான காரணத்தை யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். அந்நிலையில் எதையும் பேசாதீர்கள். அந்தப் பிரச்னை குறித்து பிறரிடம் பஞ்சாயத்து வைக்காதீர்கள். மனது சமநிலைக்கு வந்த பிறகு அதைப் பற்றி யோசியுங்கள், பேசுங்கள், முடிவு எடுங்கள்.
* ஒரு பொறுப்பு உங்களுக்குத் தரப்படும்போது, அதை நீங்கள் கையாளும் முறை மற்றும் அது குறித்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் உங்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை மறவாதீர்கள்.
* என்ன கோபம் என்றாலும் யாரிடமும் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டாதீர்கள். மாறாக ஒரு புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு சென்று விடுங்கள். பணிச்சூழலில் பிரச்சனை, நிரந்தரப் பகையெல்லாம் தேவையற்றது.
* அலுவலகத்தில் சக பணியாளரோ, மேலதிகாரியோ ஒரு குறை/புகார் கூறினால், அது உங்கள் வேலை குறித்த குறையேயன்றி, தனிப்பட்ட முறையில் உங்களைப் பற்றியதல்ல என்ற புரிதலுடன் அதை அணுகுங்கள். அதேபோலவே நீங்களும் மற்றவர்களின் மீதுள்ள குறைகளைக் கையாளுங்கள்.
* அலுவலகத்தில் ஒரு கெட் டு கெதர் என்றால், மகிழ்ச்சியான மனநிலையுடன் கலந்துகொள்ளுங்கள்.
* கூடியவரை தனியாக அலுவலகத்தில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களுடன் யாரேனும் ஒரு பெண் உடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உயரதிகாரியாக இருந்தால், உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் கவனமாகவும், கண்டிப்புடன் அதே சமயம் அன்புடனும் நடந்துகொள்ளுங்கள்.