என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
நம்முடைய கிரெடிட் கார்டை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நம் பிரச்னைகள் தீரும். இதற்கு என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
கிரெடிட் கார்டை இரண்டு விதமாகப் பயன்படுத்த முடியும். ஒன்று, ஷாப்பிங் மால், பல்பொருள் அங்காடி, ஓட்டல் போன்ற இடங்களில் கார்டை பயன்படுத்தும்போது. ஓட்டலில் சாப்பிட சென்றால் கார்டை தந்துவிட்டு, நாம் உட்கார்ந்திருப்போம். அந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு பற்றிய அடிப்படை தகவல்கள் அனைத்தும் திருடு போக வாய்ப்பு இருக்கிறது.
இன்னொன்று, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதும், பொருட்களை வாங்கும் போதும் நமது கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடு போக வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருள் வாங்க நம் கிரெடிட் கார்டு நம்பர், சி.வி.வி. நம்பர் (card verification Value),பின் நம்பர் ஆகியவற்றை தந்தால்போதும். இப்போதுள்ள வேகமான வாழ்க்கைமுறையில் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க பலருக்கும் நேரம் இல்லை.
இதனால்தான் ஆன்லைனில் பொருட்களை அதிகமாக வாங்குகிறார்கள். தவிர, கடைகளைவிட அதிகமான தள்ளுபடி, வீட்டிற்கே டெலிவரி ஆவது என பல கவர்ச்சி கரமான விஷயங்கள் அதில் இருக்கின்றன. விலை மலிவாகக் கிடைப்பதால் அதிகம் தெரியாத இணையதளங்கள் மூலமும் பலர் பொருட்களை வாங்குகிறார்கள். இந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் சி.வி.வி. எண் ஆகியவை திருடு போக வாய்ப்பிருக்கிறது”.
நம்முடைய கிரெடிட் கார்டை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நம் பிரச்னைகள் தீரும். இதற்கு என்ன செய்யலாம் என கிரெடிட் கார்டு சேவை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுடன் பேசினோம். அவர்கள் பல டிப்ஸ்களைத் தந்தார்கள்.
”கிரெடிட் கார்டு பத்திரமாக இருப்பதற்காக, வங்கிகள் ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கிரெடிட் கார்டை தற்போது வழங்கி வருகிறது. இதன் மூலம் உங்கள் கார்டு தொலைந்தால் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இந்த கார்டு செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டிருக்கும். போலி கார்டுகளையும் உருவாக்குவது கடினம். ஏனெனில், இந்த சிப் கார்டு நான்கு துண்டுகளாக இருக்கும். நான்கையும் இணைத்தால் மட்டும்தான் கார்டு செயல்படும். ஒவ்வொரு சிப் கார்டும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கார்டை வாங்க கட்டணங்கள் உண்டு. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். குறைந்தபட்ச 500 ரூபாயிலிருந்து கட்டணங்கள் இருக்கும்.

ஆன்லைனில் அதிக பரிவர்த்தனை செய்பவர்களுக்காகவே 3டி முறையில் பாதுகாப்பு வசதியை இப்போது அறிமுகப் படுத்தியுள்ளன. இதில் வங்கி முதலில் ஒரு பாஸ்வேர்டை தரும். இந்த பாஸ்வேர்டை பயன்படுத்திய உடனே செயல் இழந்துவிடும். இதன்பிறகு உங்களின் பாஸ்வேர்டை நீங்களே உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
இதில் உங்களின் வழக்கமான கார்டு நம்பர், சி.வி.வி. எண், பின் நம்பர் ஆகிய தகவல்களை கொடுத்தபின் ஆறு கேள்விகளைக் கேட்கும். இது முழுவதும் உங்களின் தனிப்பட்ட தகவல்களாகவும், வித்தியாசமான கேள்வியாகவும் இருக்கும். அதாவது, உங்களின் அப்பாவுடன் பிறந்தவர் கள் எத்தனை பேர், உங்களின் அலுவலகம் எத்தனையாவது மாடியில் உள்ளது என்கிற மாதிரியான கேள்விகளை கேட்கும். இதற்கடுத்து ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் இதில் ஏதாவது இரண்டு கேள்விகள் வரும். அதற்கு பதிலளித்தால்தான் பரிவர்த்தனையைத் தொடர முடியும்.
மேலும், இந்தத் தகவல்களை யாரும் திருட முடியாது. இந்தத் தகவல் கோடிங் முறையில் மற்றவர்கள் படிக்க முடியாத முறையில் பதிவாகும். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணத்தைச் செலுத்தவேண்டும் எனில், அதை அந்த கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்றுதான் செலுத்த முடியும். தவிர, ஆர்.பி.ஐ.யின் அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியும்.
முறையான வங்கியின் இணையதளங்கள் அனைத்தும் Https என்றுதான் ஆரம்பிக்கும். ஆனால், போலியான இணையதளங்கள் http என ஆரம்பிக்கும். இதைக் கவனித்தாலே போதும் மோசடி நிறுவனங்களை நிமிட நேரத்தில் ஒதுக்கிவிடலாம்.
கிரெடிட் கார்டை வாங்கும்போதே அதை பின் நம்பருடன் வங்கிகளில் கேட்டு வாங்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் சிக்கல் என்னவென்றால், பின் நம்பரை தவறாகப் பதிவு செய்தால் கார்டை வங்கி பிளாக் செய்துவிடும். முதல்முறை என்றால் கார்டை ரிலீஸ் செய்வார்கள். அடிக்கடி இப்படி நடந்தால் புது கார்டுதான் வாங்கவேண்டியிருக்கும். இதற்கு தனிக் கட்டணம் தரவேண்டும்.

காலையில் சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். இன்று குடைமிளகாயில் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் - தலா பாதி அளவு,
லெட்டூஸ் இலை - சிறிதளவு,
தக்காளி - 1,
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
புதினா - சிறிதளவு,
தேன் - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
மூன்று நிற குடைமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும்.
லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.
புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, தேன், எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலை, நீளவாக்கில் நறுக்கிய குடைமிளகாயை போட்டு அத்துடன் இந்த கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சூப்பரான கலர்ஃபுல் குடைமிளகாய் சாலட் ரெடி.

உப்பு - தேவையான அளவு.

குறிப்பு: டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ‘ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.
உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.
குந்து பயிற்சி : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.
ஸ்டேப்-அப்ஸ் : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.
கிக்-பேக் : ஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்
குந்து பயிற்சி : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.
ஸ்டேப்-அப்ஸ் : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.
லாஞ்சஸ் : லாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும். இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.
கருமுட்டை முழுமையான வளர்ச்சியோடும் கருத்தரிக்கும் தன்மையோடும் இருக்கின்றதா என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் கருவுறும் வாய்ப்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
கருமுட்டை முழுமையான வளர்ச்சியோடும் கருத்தரிக்கும் தன்மையோடும் இருக்கின்றதா என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் கருவுறும் வாய்ப்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதை தெரிந்து கொள்வதால், உங்களுக்கு தற்சமயம் கருவுற விருப்பமில்லை என்றாலும், அதற்கேற்றவாறு உங்கள் நாட்களை திட்டமிடலாம். எனினும், இதனை நீங்கள் புரிந்து கொள்ள பல மாதங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணித்து புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி உங்கள் கருவுறும் தன்மை / நாட்களை கண்காணிப்பது? (How to track fertile days/ possibility)
பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்:
* 8 முதல் 12 மாதங்களுக்கு, எந்த நாளில் மாதவிடாய் ஏற்படுகிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த மாதவிடாய் மொத்தம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகின்றது, அதாவது அதன் சுழற்சி நாட்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
* ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் நாளே உங்கள் மாதவிடாயின் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் குறுகிய மற்றும் நீண்ட நாட்கள் அந்த மாதத்தில் எத்தனை ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
* மாதவிடாய்க்குப் பின் வளமான சாளரத்தை குறித்துக் கொண்டு அதில் இருந்து 18 நாட்களை குறுகிய சுழற்சி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு 27 நாட்கள் குறுகிய சுழற்சி காலம் என்றால், 27ல் இருந்து 18 நாட்களை கழிக்க வேண்டும். அதன் பின் கிடைப்பது 9 நாட்கள்.
* அதன் பின் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வளமான சாளரத்தை உங்கள் நீண்ட கால மாத விடாய் சுழற்சி காலத்தில் இருந்து 11 நாட்களை கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 3௦ நாட்களில் இருந்து 11 கழித்தால், 19 நாட்கள் கிடைக்கும்.
* இந்த குறுகிய மற்றும் நீண்ட கால சுழற்சிக்கு இடையில் உங்களுக்கு கிடைக்கும் நேரம் தான் வளமான சாளரம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி நீங்கள் கருவுறும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிடலாம்.
* உங்கள் வேலையை எளிதாக்க இப்போது பல மொபைல் அப்பிளிகேஷன்கள் உள்ளன, இவற்றை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம். இதில் நீங்கள் எளிதாக உங்கள் மாதவிடாய் காலங்களை குறித்து வைத்து கணக்கிட முடியும். இதில் பல மாத தகவல்களை சேகரித்து வைக்கலாம்.
* உங்கள் மாதவிடாயை நீங்கள் இத்தகைய பயன்பாடு கருவிகளை கொண்டும், உங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு கணக்கிட்டாலும்.
* மேலும் வேறு பல விஷயங்கள் உங்கள் கணிப்பை/கணக்கை தவறாக்கக்கூடும். குறிப்பாக, உங்கள் வேலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், இது உங்கள் உடலைக் காலப்போக்கில் பாதிப்பதால், உங்கள் மாத விடாயும் பாதிக்கக் கூடும்.
இது மட்டுமல்லாது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவு பழக்கங்களும் உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கக்கூடும். இதனோடு சேர்த்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்களும் ஓவுலேசன் நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.

காது கேட்கும் திறன் குறைபாட்டை காது கேளாமை என்கிறோம். குறைபாடு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம்.
காது கேட்கும் திறன் குறைபாட்டை காது கேளாமை என்கிறோம். குறைபாடு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். அதன்படி நரம்பு பாதிப்பினால், காதில் ஏற்படும் கோளாறுகளால் காது, கேளாமை ஏற்படுகிறது. வெளிக்காது, நடுக்காது, உள்காது, காக்கிளியர், நரம்பு, மூளை ஆகிய இடங்களில் பிரச்சனை இருந்தால் காது கேளாமை ஏற்படும். மேலும் காது கேளாமை பிறவியல் இருந்து ஏற்படுகிறதா அல்லது பின்னர் ஏற்பட்டதா என்பதை கண்டறிய வேண்டும். கண் பாதிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற காரணங்கள் மரபியல் காரணங்கள் ஆகும். காதில் உள்ள குருத்தெலும்புகள் செயல்படாமை, பிறவியிலிருந்து காது அமைப்பு சரியில்லாமை பிறவியிலிருந்தே காதில் கட்டி போன்ற காரணங்கள் பிற காரணங்கள் ஆகும்.
மேற்கண்ட காரணங்கள் இருந்தால் கேட்கும் தன்மை குறைந்து காணப்படும். மேலும் கீழ்கண்ட நரம்பு பிரச்சனைகளால் காது கேட்காமல் போகிறது. வயதானவருக்கு, அதிக ஒலியை கேட்பவர்களுக்கு, வைரஸ் காய்ச்சல், ஆஸ்பிரின் போன்ற மருத்துகளை எடுத்து கொள்பவர்களுக்கு, மூளை காய்ச்சல், மூளைக்கட்டி, மூளை ரத்த ஒட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கும் காது கேட்காமல் போகிறது.
பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள்
இசைக்கவை பரிசோதனை, ஆடியோ பரிசோதனை, பேசி புரிந்து கொள்ளும் பரிசோதனை, ஒ.எ.இ டெஸ்ட் பியிரா டெஸ்ட் ஆகிய பரிசோதனைகளை செய்து பார்க்கலாம். மேலும் குறைபாடுகளின் தரத்தை பொறுத்து சிகிச்சையளித்து குழந்தைகள் என்றால் சிறப்பு பள்ளிகளில் படிக்க வைக்கலாம். மேலும் காது கருவி பொருத்தலாம். மறுவாழ்வு மையத்தை அணுகலாம். அறுவை சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கலாம். காது கருவி பொருத்துவதால் ஒலி அளவை அதிகரிக்க செய்ய முடியும். காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையால் பேச்சில் உள்ள அர்த்தத்தை பிரித்து புரிந்து கொள்ள முடியும்.
மேலும் ஒன்று முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பளாண்ட் பொருத்துவதால் அவர்கள் அனைவரையும் போல் செயல்படலாம்.பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு இல்லை என்றாலும், மூளைக்கட்டி அறுவை சிகிச்சையின் போது நரம்பு பாதித்தால் நவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் பயன் பெறலாம் என்று சேது இ.என்.டி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பழனியப்பன் தெரிவித்தார்.
டாக்டர் பழனியப்பன், சேது இஎன்டி மருத்துவமனை

பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பிட வெரைட்டி சாதம் செய்து கொடுக்கலாம். இன்று சோயா சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 2 கப்,
சோயா உருண்டைகள் - அரை கப்,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன்,
தயிர் - அரை கப்,
கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,

செய்முறை:
சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில், மெலிதாக நறுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள்.
பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, 10 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
பச்சரிசி - 2 கப்,
சோயா உருண்டைகள் - அரை கப்,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன்,
தயிர் - அரை கப்,
கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில், மெலிதாக நறுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள்.
பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, 10 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
இப்போது சூப்பரான சோயா சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரெடிமேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அடிக்கடி ரெடிமேட் உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்தினை பாதிக்கும்.
இன்றைய நவீன அவசர வாழ்வுக்குத் தகுந்ததாக இருக்கிறது Ready to Eat என்கிற உடனே சாப்பிடத் தகுந்த உணவுகள். சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஃபுட் கோர்ட்டுகளிலும் விதவிதமான இந்த ரெடிமேட் உணவுகள் நம்மை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் இருப்பதைப் பார்க்கிறோம்.
அவற்றை வாங்கி வந்து வீட்டிலும் அடுக்கிவிடுகிறோம். ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமோ, உடனே எடுத்து வெந்நீர் அல்லது பால் கலந்து அப்படியே எடுத்து சாப்பிடலாம். சமைப்பதும் எளிது... சுவையும் அதிகம் என்பதால் இதனை பலரும் விரும்புகிறார்கள். ஆனால், இத்தகைய ரெடிமேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
உட்கார்ந்தே அமர்ந்து அதிக நேரம் வேலை செய்யும் இன்றைய இளையதலைமுறையினர் இந்த Ready to eat வகை உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். அதற்கு காரணம் கஷ்டப்படாமல் விரைவில் சமைக்கலாம், சமைக்கும் நேரமும் மிகவும் குறைவு என்பதாலும், அதிக ருசியாகவும் இருப்பதால் இந்த வகை உணவுகளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
இந்த உணவுகளுக்கு அடிமையாகி போனவர்கள் இதிலிருந்து மாறுவது மிகவும் கடினம். உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது தான் விழித்துக்கொள்கிறார்கள்.
Ready to eat வகை உணவுகளை ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள், பேரழிவு காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்கள், மலையேற்ற வீரர்கள், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தினர். ஆனால், எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நகர மக்களிடையே இப்போது இந்த உணவுகள் இப்போது பிரபலமாகிவிட்டன.
பிஸி ஷெட்யூலுக்கு நடுவே உணவை தவிர்க்க வேண்டிய சூழலில் இருக்கும்போது, தங்களுடைய பசியை சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்கு வேண்டுமானால் ரெடிமேட் உணவுகள் வசதியாக இருக்கலாம். ஆனால் சினிமா, பார்க், பீச் என எங்கு சென்றாலும் அங்கே கடைகளில் விற்பதை வாங்கி சாப்பிடுவதோ, வெளியூரில் தங்கியிருப்பவர்கள் சோம்பேறித்தனத்தால் இவற்றை சாப்பிடுவதோ தவறான
செயல்.
ஏனெனில், ஒன்று, முழுவதுமாக சமைக்காமல், பாதி சமைத்த உணவை அடைத்து விற்கிறார்கள் அல்லது நீண்டநாள் பாதுகாத்து வைக்கவும், ஃப்ரெஷ்ஷாக இருக்கவும், அந்த உணவுகளில் ரசாயனங்கள் கலந்த ப்ரசர்வேடிவ்ஸ்களை சேர்க்கிறார்கள். இதுதவிர, தேவைக்கு அதிகமான உப்பு, சர்க்கரை, காரம், மசாலா வகைகளையும் சேர்த்திருப்பார்கள். இதனால், இவற்றை அடிக்கடி உண்ணும் மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இளமையை பாதுகாத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் ஆமணக்கு எண்ணெயை எந்த வகையில் எந்த பொருளுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
பலவித எண்ணெய்கள் இருந்தாலும் இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்த தீர்வாக உள்ளது. இந்த எண்ணெயில் இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளது. இந்த எண்ணெயை ஒரு சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் இளமை மாறாமல் இருக்கலாம்.
* 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்ட அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.
* 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி இதமாக மசாஜ் கொடுக்கவும். இதனை 20 நிமிடம் கழித்து நீக்கி விடலாம். 1 நாளைக்கு 3 முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, என்றுமே இளமையாக இருக்க இந்த குறிப்பு உதவும்.
* 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.
* 1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மருந்து இளமையை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள்.

திருமணம் ஆன புதிதில் குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல்வேறு வழிகள் இருந்தாலும் எந்த முறையை பயன்படுத்தினால் பிரச்சனை வராது என்பதை பற்றி பார்க்கலாம்.
திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கட்டுப்பாடெல்லாம் சரிப்பட்டு வராது. திருமணமான புதிதில் பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் ஆண்கள் ஆணுறையையும் பயன்படுத்தலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்கலாம். இதைச் சரியாக உபயோகித்தால் கருவுறாமல் இருக்கலாம். ஆனால், இந்த மாத்திரைகளை ஒன்றிரண்டு வருடத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
இந்த மாத்திரைகள் சிலருக்கு சில அசௌகரியங்களை உண்டுபண்ணலாம். அப்படியிருந்தால் ஆண் ஆணுறையையும், பெண், விந்து நாசினி கிரீமையும் சேர்த்து உபயோகிக்கலாம்.
இப்போது இந்தியாவில் பெண்களுக்கான “பெண்ணுறை“ விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றையும் பெண்கள் உபயோகிக்கலாம். திருமணமாகி, குழந்தைகளும் பிறந்து விட்டிருந்தால் அப்போது பயன்படுத்த வேறுபல கருத்தடை முறைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு நடுவே இடைவெளி விட நினைப்பவர்கள் காப்பர்-டி மாதிரியான சாதனத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்திக் கொள்ளலாம்.
குழந்தை பெற்றது போதும், இனி “நோ பேபீஸ்“ என்பவர்கள் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.
இப்போதெல்லாம் லாப்ரோஸ்கோபி முறைப்படி மிகத்துரிதமாக இந்தக் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சைகைளை செய்துகொள்ள முடிகிறது. அதிலும் ஆண்களுக்கான வாசக்டமி எனும் அறுவை சிகிச்சை ரொம்பச் சுலபம் என்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் சம்பா கோதுமை சுண்டல் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை - அரை கப்,
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி, தேங்காய் துருவல் - சிறிதளவு,

செய்முறை:
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சம்பா கோதுமையை நன்றாக கழுவி முதல் நாள் இரவே நன்றாகக் களைந்து ஊற வைக்கவும். மறுநாள், குக்கரில் உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
பிறகு, வேக வைத்த சம்பா கோதுமையை அதில் போட்டுக் கிளறவும்.
கடைசியாக எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சம்பா கோதுமை சுண்டல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டிலேயே ஜிம் அமைத்து, ஃபிட்டான உடலைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஜிம், ஃபிட்னெஸ் பயிற்சி மையங்களுக்குச் சென்றால்தான் ஃபிட்டான உடலைப் பெற முடியுமா என்ன? அப்படியெல்லாம் இல்லை. பலருக்கு ஜிம்முக்குச் செல்ல நேரமே இருப்பது இல்லை. அதனால், உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி, வீட்டிலேயே குட்டி ஜிம் அமைத்துவிடுகிறார்கள். வீட்டிலேயே ஜிம் அமைத்து, ஃபிட்டான உடலைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள்...
படுக்கை அறை, பூஜை அறைபோல முடிந்தவரை ஜிம்முக்கு எனத் தனி அறை ஒதுக்குங்கள். ஜிம் மேட் தரையில் பதிக்க வேண்டியது அவசியம். ஜிம் கருவிகள் மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே, ஜிம் அமைக்கும் அறையில் ஜன்னல்களை வைக்காதீர்கள். அதே சமயம் வெளிச்சத்துக்கு கண்ணாடித் திரை வைப்பது நல்லது. ஜிம் அறையில் குளிர்சாதன வசதி இருப்பது நல்லது.
தரையில் செய்யும் பயிற்சிகள் அவசியம். எனவே, ஜிம் அமைக்கும் அறையில் தரையில் இரண்டு மூன்று பேராவது ஒரே சமயத்தில் நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ உடற்பயிற்சி செய்ய ஏதுவாக இடம் ஒதுக்குவது அவசியம்.
வீட்டில் எத்தனை பேர் உள்ளனர், யார் யாரெல்லாம் ஜிம் பயன்படுத்துவார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிக் கருவிகள் தேவைப்படும் என்பதைத் திட்டமிட்டு ஜிம் கருவிகளை வாங்க வேண்டும். வயதானவர்கள், பெண்களுக்கு கார்டியோ பயிற்சிக்கான சாதனங்கள் சிறந்தவை. இளைஞர்களுக்கு, கார்டியோ மற்றும் உடலை உறுதிப்படுத்தும் கருவிகளை வாங்கலாம்.
வீட்டிலேயே பயிற்சி செய்வதற்கு முன்னர், உடற்பயிற்சியாளர், பிசியோதெரப்பி நிபுணரிடம் ஆலோசனைகளைக் கேட்டு, ஜிம் அறையை அமைக்கலாம். ஜிம்முக்குச் சென்று ஒவ்வொரு ஜிம் கருவியையும் எப்போது, எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்றாகக் கற்றுக்கொண்ட பின்னரே கருவிகளை வாங்கிப் பொருத்தி, பயன்படுத்த வேண்டும்.
டிரெட்மில் போன்றவை பேட்டரியில் இயங்கக்கூடியவை. சுமார் 1.5 கிலோ வாட் திறனில் இயங்கக்கூடிய டிரெட்மில் பயன்படுத்துவது நல்லது. விலை குறைந்தது என்பதற்காக மட்டும் ஜிம் கருவிகளை வாங்கிவிடக் கூடாது, வாரன்டி இருக்கிறதா, டிரெட்மில்லில் ஏதேனும் பிரச்னை என்றால், வீட்டுக்கு வந்து சரிசெய்து கொடுப்பார்களா என்பதை எல்லாம் நன்கு விசாரித்த பிறகே வாங்க வேண்டும்.

திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம்.
திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?
குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.
திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல்.