search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காது கேளாமையும், அதன் தீர்வுகளும்...
    X
    காது கேளாமையும், அதன் தீர்வுகளும்...

    காது கேளாமையும், அதன் தீர்வுகளும்...

    காது கேட்கும் திறன் குறைபாட்டை காது கேளாமை என்கிறோம். குறைபாடு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம்.
    காது கேட்கும் திறன் குறைபாட்டை காது கேளாமை என்கிறோம். குறைபாடு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். அதன்படி நரம்பு பாதிப்பினால், காதில் ஏற்படும் கோளாறுகளால் காது, கேளாமை ஏற்படுகிறது. வெளிக்காது, நடுக்காது, உள்காது, காக்கிளியர், நரம்பு, மூளை ஆகிய இடங்களில் பிரச்சனை இருந்தால் காது கேளாமை ஏற்படும். மேலும் காது கேளாமை பிறவியல் இருந்து ஏற்படுகிறதா அல்லது பின்னர் ஏற்பட்டதா என்பதை கண்டறிய வேண்டும். கண் பாதிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற காரணங்கள் மரபியல் காரணங்கள் ஆகும். காதில் உள்ள குருத்தெலும்புகள் செயல்படாமை, பிறவியிலிருந்து காது அமைப்பு சரியில்லாமை பிறவியிலிருந்தே காதில் கட்டி போன்ற காரணங்கள் பிற காரணங்கள் ஆகும்.

    மேற்கண்ட காரணங்கள் இருந்தால் கேட்கும் தன்மை குறைந்து காணப்படும். மேலும் கீழ்கண்ட நரம்பு பிரச்சனைகளால் காது கேட்காமல் போகிறது. வயதானவருக்கு, அதிக ஒலியை கேட்பவர்களுக்கு, வைரஸ் காய்ச்சல், ஆஸ்பிரின் போன்ற மருத்துகளை எடுத்து கொள்பவர்களுக்கு, மூளை காய்ச்சல், மூளைக்கட்டி, மூளை ரத்த ஒட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கும் காது கேட்காமல் போகிறது.

    பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள்

    இசைக்கவை பரிசோதனை, ஆடியோ பரிசோதனை, பேசி புரிந்து கொள்ளும் பரிசோதனை, ஒ.எ.இ டெஸ்ட் பியிரா டெஸ்ட் ஆகிய பரிசோதனைகளை செய்து பார்க்கலாம். மேலும் குறைபாடுகளின் தரத்தை பொறுத்து சிகிச்சையளித்து குழந்தைகள் என்றால் சிறப்பு பள்ளிகளில் படிக்க வைக்கலாம். மேலும் காது கருவி பொருத்தலாம். மறுவாழ்வு மையத்தை அணுகலாம். அறுவை சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கலாம். காது கருவி பொருத்துவதால் ஒலி அளவை அதிகரிக்க செய்ய முடியும். காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையால் பேச்சில் உள்ள அர்த்தத்தை பிரித்து புரிந்து கொள்ள முடியும்.

    மேலும் ஒன்று முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பளாண்ட் பொருத்துவதால் அவர்கள் அனைவரையும் போல் செயல்படலாம்.பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு இல்லை என்றாலும், மூளைக்கட்டி அறுவை சிகிச்சையின் போது நரம்பு பாதித்தால் நவீன காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் பயன் பெறலாம் என்று சேது இ.என்.டி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பழனியப்பன் தெரிவித்தார்.

    டாக்டர் பழனியப்பன், சேது இஎன்டி மருத்துவமனை
    Next Story
    ×