search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சோயா சாதம்
    X
    சோயா சாதம்

    குழந்தைகளுக்கு விருப்பமான சோயா சாதம்

    பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பிட வெரைட்டி சாதம் செய்து கொடுக்கலாம். இன்று சோயா சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்,
    சோயா உருண்டைகள் - அரை கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன்,
    தயிர் - அரை கப்,
    கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    சோயா சாதம்

    செய்முறை:

    சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில், மெலிதாக நறுக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள்.

    பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, 10 நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

    இப்போது சூப்பரான சோயா சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×