என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, நீங்கள் யோகா வகுப்பில் சேர்ந்துவிட்டால், தொடர்ந்து நீங்கள் யோகா பயிற்சியில் முன்னேற சில விஷயங்களை, விதிகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    இனி யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, நீங்கள் யோகா வகுப்பில் சேர்ந்துவிட்டால், தொடர்ந்து நீங்கள் யோகா பயிற்சியில் முன்னேற சில விஷயங்களை, விதிகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    யோகா அறையை ஜிம் போன்று நினைத்துக்கொள்ளக் கூடாது. உடல் கட்டுமானத்தைப் பராமரிக்க யோகா உதவுகிறது. ஆனாலும் அதனை ஜிம் அல்லது பிற உடற்பயிற்சி மையங்களுடன் ஒப்பிட முடியாது. அதாவது வேடிக்கையாக ஆரவாரத்துடன் உள்ளே நுழைவது தேவையற்றது. உள்ளே நுழையும் முன்பு உங்கள் மொபைலை அணைத்துவிடவும் அல்லது சைலன்ட் மோடில் வைத்துவிடவும். காலணிகளை வெளியே விடவும். விசாலமாக இருக்கும் இடத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    வகுப்புக்குள் நுழைந்ததும், விரிப்பை விரித்து நெருக்கமற்ற ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே அமரவும். உங்களுக்கும் அக்கம்பக்கம் இருக்கும் பிறருக்கும் இடையே ஒருவர் செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்க வேண்டும். யோகவில் உங்கள் பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பிறர் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்காதீர்கள்.

    ஏனெனில் யோகா வகுப்புகளில், புதிதாக யோகா கற்றுக்கொள்ள வந்த பலரும் இருப்பார்கள், பல ஆண்டு அனுபவமிக்கவர்களும் இருப்பார்கள். அவர்களை பார்த்து, நீங்களும் அதே போல ஏதேனும் செய்ய முயற்சி செய்தால் தவறாகிப்போகலாம். அதேபோல், நன்றாகச் செய்ய முடியாத சிலரை விட நன்றாகச் செய்துகாட்டுகிறேன் என்ற மனப்பான்மையிலும் செய்யக்கூடாது.

    இதற்கு நண்பர்கள் வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம். அருகில் நண்பர்கள் இருந்தால் இரண்டு விஷயங்கள் நடக்க சாத்தியமுள்ளது. ஏதேனும் ஆசனங்களை செய்ய முயற்சி செய்யும்போது, நண்பர்களின் முன்னால் செய்ய உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். அல்லது உங்களில் ஒருவர் தவறு செய்யும்போது மற்றொருவர் பார்த்து சிரித்துவிட வாய்ப்புள்ளது. ஓரிரு மணி நேரம்தான் யோகா வகுப்பு. ஆகவே, நண்பர்கள் இல்லாமல் தனியாக பயிற்சி செய்வதே நல்லது.

    அது உங்கள் கவனம் சிதறாமல் இருக்கவும் உதவும். வகுப்பு முடிந்த பிறகு உங்கள் நண்பர்களை சந்தித்து நேரம் செலவழித்துக் கொள்ளலாம். யோகா அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, நீங்கள் பயிற்சி செய்த இடத்தை அலங்கோலமாக விட்டுச் செல்லக்கூடாது. யோகாவில் தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்வதும், மனதை சுத்தப்படுத்துவதும் தான் மிக முக்கியம். ஆகவே, நீங்கள் இருக்கின்ற இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதே இதன் முதல் படி. நீங்கள் வரும் முன்பு எப்படி இருந்ததோ அதே போல் அழகாக வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். காகிதம் போன்றவற்றை பயன்படுத்தியிருந்தால் அவற்றை குப்பை தொட்டியில் போட வேண்டும்.

    எப்படி அமைதியாக உள்ளே வந்தீர்களோ அதே போல் அமைதியாக வெளியேறுங்கள். யோகா என்பது மனதையும் உடலையும் அமைதிப்படுத்துவது. உடலும் மனமும் அமைதியடையவும் அந்த அமைதி சிறிது நேரம் நீடிக்கவும் அவகாசம் கொடுங்கள். வகுப்பை விட்டு வெளியே வந்ததுமே கலகலவென்று அரட்டை அடித்தால் நீங்கள் பயிற்சி செய்து பெற்ற மன அமைதி சிதறிப்போய்விடும்.
    நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுகொள்ள கொண்டைக்கடலை மசாலா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொண்டைக்கடலை - 200 கிராம்,
    வெங்காயம், தக்காளி - தலா 2,
    சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    தேங்காய்ப் பால் - முக்கால் கப்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கொண்டைக்கடலை மசாலா

    செய்முறை:


    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைத்துக் வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும்.

    நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவில் எப்படி இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.
    எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதன் அளவு என்பது மிக அவசியமானதாகும். எப்படி உணவில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.

    அதிக எண்ணெயை சேர்த்தால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது நமக்கே நன்கு தெரிந்த ஒன்று தான். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு எண்ணெய்க்கும் தனி தன்மை உண்டு என்பதை தான்.

    வீடுகளில் நாம் சமைக்க பயன்படுத்தும் பல வித எண்ணெய்களின் தன்மையை பொருத்து அவற்றை எவ்வளவு உபயோகப்படுத்த வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    * ஆரோக்கியம் அதிகம் கொண்ட தேங்காய் எண்ணெயை உணவில் சேர்க்கும் போது சற்று ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். காரணம் இவற்றில் 90% கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் தான். மேலும், இவை நல்ல கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய உதவும். நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவராக இருந்தால் 3 அல்லது 4 டீஸ்பூனிற்கு மேல் ஒரு நாளைக்கு பயன்படுத்த கூடாது.

    * வைட்டமின் ஈ நிறைந்துள்ள சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதால் பல நன்மைகள் உண்டாகும். எவ்வளவு தான் சூரிய காந்தி எண்ணெயை நாம் சூடு செய்தாலும் அதன் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் அப்படியே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதனை ஒரு நாளைக்கு 3 ஸ்பூன் அளவு எடுத்து கொள்வது சிறந்தது.

    உணவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் சேர்த்தால் ஆபத்து

    * கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்ய ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. சமையலுக்கு மற்ற எண்ணெய் வகைகளை விடவும் இது மிக பொருத்தமாக இருக்கும். இதனை ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஸ்பூன் அளவுக்கு சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    * குறைந்த அளவிலேயே இதில் கெட்ட கொழுப்புகள் உள்ளன. ஆதலால், இதை சமையலில் பயன்படுத்துவது நல்லது தான். கடலை எண்ணெயை 3 ஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு எடுத்து கொள்ளலாம் என உணவியல் நிபுணர்கள் ஆலோசனை தருகின்றனர்.

    எந்த வகை எண்ணெய்யாக இருந்தாலும் அவற்றை அளவாக நாம் பயன்படுத்தி வந்தால் எந்த வித பாதிப்புகளும் உண்டாகாது. ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இதன் அளவு மீறினால் சிலபல அபாயங்கள் நிச்சயம் உண்டாகும் என ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.

    எண்ணெய்யை உணவில் அதிக அளவில் சேர்த்து கொண்டால் முதலில் வர கூடிய பாதிப்பு கொலஸ்ட்ரால் தான். பிறகு உடல் எடை கூடுதல், இதய நோய்கள், மாரடைப்பு, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் போன்ற பல பிரச்சினைகள் அடுக்கடுக்காக உண்டாகும். அது மட்டும் இல்லை, இது தொடர்ந்தால் உயிரை இழக்க நேரிடும்.
    சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாக வே காரணமின்றி அழுவார்கள். குழந் தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத் தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.

    சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக் கிறோம். இது ஏற்கெனவே மனநோயா ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

    இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட் ட பெண்ணைத் தனியாகவிடுவது நல்ல தல்ல. காரணம், அவர்களுக்குத் தற் கொலை செய்து கொள்ளும் எண்ண ம் இச்சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பது தான் நல்லது.

    சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக்கொன்றுவிடும் அளவுக்கேகூடச்செல்வார்கள்!தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகி ச்சை கொடுத்து வர மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டி வரலாம்..
    இந்த ஆசனத்தை செய்வதனால், மனம் அமைதி அடையும். இரத்த ஒட்டம் சீராகி மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை :

    முதலில் தரையில் அமர வேண்டும். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமர வேண்டும். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யவும்.

    இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்த பின்னர் நிதானமாக ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும்.

    பயன்கள் :

    இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். இரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும். மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக இந்த ஆசனத்தை செய்வதனால், உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யப்படுகின்றன. 
    பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - கால் கிலோ,
    கேரட் - 100 கிராம்,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி - அரை கட்டு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பட்டாணி கேரட் அடை

    செய்முறை:

    கொத்தமல்லி, கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியை நன்றாக கழுவி 3 மணிநேரம் ஊற வைத்துக் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்த கொள்ளவும்.

    அரைத்த மாவில் நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை  அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    சூப்பரான சத்தான பட்டாணி கேரட் அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பணிபுரியும் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் இருந்தால் இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகளை பயன்படுத்திக் கொண்டு உரியவர்களுக்கு பெண்கள் தண்டனை வாங்கித் தரலாம்.
    பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைகள் அதிகம் இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. அதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகி’ என்ற ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உடன் பணிபுரிபவர்களால் ஏற்படும் பாலியல் தொல்லை பற்றி புகார் அளிக்கலாம்.

    கமிட்டியின் விதிமுறைப்படி காவலர்கள், வழக்கறிஞர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர் இவர்கள் முன்னிலையில் புகார் கொடுத்த பெண் விசாரிக்கப்பட மாட்டார். இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிக்கு அடுத்த நிலை, ‘லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டி‘ என்ற ‘உள்ளூர் புகார் குழு‘. இந்த குழு, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேக அலுவலர்கள் உள்ளனர்.

    பெரும்பாலான லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்குகின்றன. 10-க்கும் குறைவான பெண் பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில், சட்டப்படி கமிட்டி அமைக்க தேவையில்லை. எனவே, அவர்கள் மற்றும் கட்டுமான தொழிலில் சித்தாளாக பணிபுரியும் பெண்கள், துணிக்கடைகளில் விற்பனையாளர் வேலை பார்க்கும் பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என இவர்களெல்லாம் பாலியல் தொல்லைக்கு ஆளானால் மாவட்டம் தோறும் இயங்கும் லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டியில் நேரடியாக புகார் அளிக்கலாம்.

    அல்லது, கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மூலமாகவும் புகார் மனு கொடுக்கலாம். அது 7 நாட்களுக்குள் லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிக்கு சென்றடையும். புகார்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தற்காலிகமாக பணி நீக்கம், பதவி உயர்வு ஒத்திவைப்பு, பணியிட மாற்றம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

    காழ்ப்புணர்ச்சியால் பெண் ஊழியர் பொய் புகார்கள் கொடுத்தது உண்மையென்று நிரூபணமானால் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும். எனவே பணிபுரியும் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் இருந்தால் மேற்கண்ட கமிட்டிகளை பயன்படுத்திக் கொண்டு உரியவர்களுக்கு பெண்கள் தண்டனை வாங்கித் தரலாம்.
    ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்துக் கொள்ளக் கூடாது. தினமும் ஷாம்பூ போட்டு குளித்தீர்கள் என்றால், நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும்.
    ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் மண்டையில் அது அப்பிக் கொள்ளத்தான் செய்யும். தினமும் இப்படி ஷாம்பூ போட்டு குளித்தீர்கள் என்றால், நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும். ஷாம்பூவில் தண்ணீரைக் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக்கொள்ள வேண்டும், பிறகே, தலையில் வைத்துத் தேய்க்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கும் நல்லவிளைவை அது தரும். இல்லையேல் கூந்தலுக்கு ஆபத்துதான்.

    எப்போதும், என்ன அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக் கூடாது. டவலால் நன்றாகத் துடைத்து, ஈரம் போய் உலர்ந்தவுடன், நல்ல தரமான பெரிய பற்களுடைய சீப்பினால் வாரி சிக்கெடுக்க வேண்டும். மரச்சீப்பு அல்லது நைலான் பிரஷ்ஷால் வாருவது மிகவும் நல்லது.

    கண்டிப்பாக, வாரம் இருமுறையாவது தலையை அலச வேண்டும்.

    மாதம் ஒருமுறை கூந்தலின் அடிப்பகுதியை ‘ட்ரிம்’ செய்துகொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்.

    இரவு படுக்கும்முன், கூந்தலை மென்மையான ப்ரஷ்ஷினால் வாரி, பின்னாமல் அப்படியே விட்டு விட்டுப் படுக்க வேண்டும். இது தலைமுடி நன்கு வளர உதவும்.

    அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல. வேண்டுமானால், டவலால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே, உபயோகிக்கலாம்.

    கூந்தலை ப்ளீச் செய்வது, கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

    தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நாள்தோறும் பொம்மைகளும் புதுவடிவம் பெற்று வருகின்றன. அப்படி உங்கள் மனம் மயக்கும் நவீன எந்திர பொம்மைகள் சிலவற்றை பார்ப்போமா?
    குட்டீஸ்... உங்களுக்கு செல்போன் வேண்டுமா? ரோபோ எந்திரப் பொம்மை வேண்டுமா? என்று கேட்டால் நிறைய பேர் பொம்மைகளைத்தானே சொல்வீர்கள்? எனக்கு செல்போன்தான் இஷ்டம் என்று சொல்லும் பாப்பா கூட, அண்ணன் ஒரு டிரோனை உங்கள் முன்னே பறக்கவிட்டால் செல்போனை கீழே வைத்துவிட்டு, டிரோன் பின்னால் ஓட ஆரம்பித்துவிடுவார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நாள்தோறும் பொம்மைகளும் புதுவடிவம் பெற்று வருகின்றன. அப்படி உங்கள் மனம் மயக்கும் நவீன எந்திர பொம்மைகள் சிலவற்றை பார்ப்போமா?

    குட்டீஸ் உங்களுக்கு மாயாஜாலம் செய்வது என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே. ஹாரிபாட்டர் கையில் வைத்திருக்கும் மந்திரக்குச்சியால், தான் நினைப்பதை சாதிப்பதை நீங்கள் அதிசயமாக பார்ப்பீர்கள். அதுபோல ஒரு குச்சியை கையில் வைத்துக்கொண்டு நீங்களும் மேஜிக் செய்வதுபோல பாவனை செய்வீர்கள் இல்லையா?

    நிஜத்தில் அதுபோன்ற மேஜிக் செய்யும் மந்திர தொழில்நுட்ப குச்சி, விளையாட்டுப் பொருளாக வெளிவந்திருக்கிறது. ஹாரி பாட்டர் கானோ கோடிங் கிட் எனப்படும் இந்த மந்திரக்குச்சியை கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேம் விளையாட்டுகளையும், இன்னும் பல்வேறு கணினி இயக்கங்களையும் செயல்படுத்த முடியும்.

    அதாவது ரிமோட் உங்கள் கையில் இருந்தால் எப்படி உங்களால் தூரத்தில் இருந்து எதையும் செய்ய முடிகிறதோ அதுபோல இந்த மந்திரக்குச்சியை மந்திரவாதிபோல அசைத்துக் கொண்டு, வீடியோ கேமில் இயக்கும் கார் மற்றும் பொருட்களை முன்னே போ, வேகமாகப் போ, நிறுத்து என்று கட்டளை கொடுக்கலாம். 70 விதமான இயக்கங்களுக்கு இந்த மந்திரக்கோலில் கோடிங் எழுதி வைத்திருக்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள்.

    குழந்தைகளை குஷிப்படுத்தும் எந்திரப் பொம்மைகள்

    நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு, குச்சியை ஆட்டினால்போதும் டேப்லட்களிலும், உங்கள் ஸ்மார்ட் டி.வி.யிலும் நீங்கள் நினைக்கும் மாயாஜாலங்களை நிகழ்த்தலாம். கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த மேஜிக் வாண்ட் குச்சிக்கு ஏக கிராக்கி. இணையதளம் வழியாக ஆர்டர் கொடுக்க முடியும்.

    ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தால் சிறிது நேரத்தில் உடைத்து பிரித்து மேய்ந்துவிடும் குழந்தைகளுக்கு ஆர்வத்தை தூண்டக்கூடியது நைன்டென்டோ லேபோ விளையாட்டுக் கருவி. அட்டைப் பெட்டி மற்றும் எலக்ட்ரானிக் பாகங்கள் இணைந்த விளையாட்டுப்பொருளான இதை பல்வேறு உருவங்களாக, விளையாட்டு பொருட்களாக செய்ய முடியும்.

    பியானோ, வீடியோ கேம் திரை, மீன்பிடிக்கும் தூண்டில், ரோபோ உடை இன்னும் பல்வேறு உருவங்களைச் செய்ய முடியும். லீகோ பிரிக்ஸ் விளையாட்டுப் பொருட்களைவிட அதிகமாக குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டக்கூடியது இது. ஏராளமான வடிவங்களை செய்யும்வகையில் விதவிதமான லேபோ விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.

    புத்தக வடிவில் வரும் துப்பறியும் கதைகள் சிறியவர் பெரியவர் அனைத்தையும் ஈர்ப்பதாகும். அதை எலக்ட்ரானிக் மயமாக்கி, குழந்தைகளை துப்பறியும் நிபுணர்களாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது ஆஸ்மோ டிடெக்டிவ் விளையாட்டு சாதனம். 8 வரைபடங்களுடன் கொடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு சரியான இடங்களை துப்பறிந்து கண்டுபிடித்தால் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துபோகும் இந்த விளையாட்டு குழந்தைகளை ரொம்பவே ஈர்த்துவிடும். துப்பறியும் ஆற்றலையும் வளர்க்கும். டேப்லட் அப்ளிகேசன் வழியே இதை விளையாடலாம்.

    இன்னும் பல்வேறு ரோபோ பொம்மைகள், பறக்கும் டிரோன்கள் இன்றைய மழலைகளை மகிழ்விக்க வந்திருக்கின்றன.
    புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் பட்டர் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கரம் மசாலா பொடி: இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத்தான் இப்படி!

    செய்முறை:

    லவங்கம் - 2 டீஸ்பூன்,
    ஏலக்காய் - 1 டீஸ்பூன்,
    பட்டை - 4,
    தனியா - 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்…

    இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!

    கறி மசாலா பொடி: இதை, மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

    செய்முறை:


    காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் - 1 கப்,
    தனியா - அரை கப்,
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
    சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 5.

    இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!

    பன்னீர் பட்டர் மசாலா

    தேவையான பொருட்கள் :


    பன்னீர் - 200 கிராம்,
    பெரிய வெங்காயம் -3,
    தக்காளி - 4,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,
    வெண்ணெய் - 50 கிராம்,
    ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!),
    காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.

    கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.

    ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

    குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பன்னீர் பட்டர் மசாலா!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
    தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலே தெரியவந்துள்ளது.

    ‘சர்க்கரை சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட உணவுகளில் கூட தேன் அல்லது பழச்சாறு மூலமாக சர்க்கரை உடலுக்குள் செல்கிறது என கூறப்படுகின்றது.

    குழந்தைகள் குறைந்தளவு சர்க்கரை உண்பதை உறுதிசெய்யும் பெற்றோர், அதேநேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று ராயல் காலேஜ் ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பரிந்துரை செய்கிறது.

    இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பற்சிதைவு, மோசமான உடல்நிலை மற்றும் உடற்பருமனிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் எனவும் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட அதிகளவு சர்க்கரை கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரை கொண்ட பானங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக பழங்கள், பால் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பால் பொருட்களையும் கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    சிறு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகளவிலான சர்க்கரை அல்லது இனிப்பு சுவை செயற்கையாக சேர்க்கப்படுவதாக இந்த ஆராய்ச்சிக்குழுவை சேர்ந்த பேராசிரியர் மேரி பியூட்ர்ல் கூறுகிறார்.

    மேலும் அவர் கூறுவதாவது,

    “இயற்கை மற்றும் செயற்கை என அனைத்து விதமான மூலங்களில் இருந்தும் பெறப்படும் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இயற்கையாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆனால், அதை தூண்டக்கூடிய வகையில் பெற்றோர்கள் செயல்படக் கூடாது.

    புரோக்கலி, கீரை வகைகள் உள்ளிட்டவற்றையும், கசப்பு நிறைந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சர்க்கரை உடலில் ஏற்படுத்த கூடிய விளைவுகள் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

    ஐந்து வயதிற்குட்பட்ட 25 சதவீதத்துக்கும் மேலான குழந்தைகளை பாதிக்கும் பற்சிதைவுக்கு சர்க்கரையே காரணம். அதுமட்டுமின்றி, சிறுவயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
    சந்தனத்தைக் கொண்டு முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.
    இக்காலக்கட்ட பெண்கள் தங்கள் சருமத்தின் அழகைப் பராமரிப்பதற்கு பல கீரிம்களை உபயோகிப்பதால் தோல் வறண்டு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து எளிதில் விடுபடுவதற்கு சந்தனம் பெரும் உதவியாக உள்ளது.

    அதிலும் சந்தனத்தைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். அந்தவகையில் வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என இங்கு பார்ப்போம்.

    * சந்தனப் பவுடரை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.

    * கற்றாழை ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம் குணமாகும்.

    * சந்தனப் பவுடர் மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி காய வைத்து கழுவ, முகம் பிரகாசமாக இருக்கும்.

    * பருக்கள் அதிகம் உள்ளவர்கள், சந்தனப் பொடி மற்றும் வேப்பிலைப் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள பாக்டீரியல் தன்மை, பருக்களைப் போக்கி, முகத்தைப் பொலிவாக்கும்.

    * சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அதிலும் இதை தினமும் முகத்திற்கு போட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    * சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சந்தனப் பொடியுடன், கடலை மாவை சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, 20-30 நிமிடம் கழித்து தேய்த்து கழுவ, முகம் அழகாக ஜொலிக்கும்.
    ×