search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடைமிளகாய் சாலட்
    X
    குடைமிளகாய் சாலட்

    கலர்ஃபுல் குடைமிளகாய் சாலட்

    காலையில் சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். இன்று குடைமிளகாயில் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் - தலா பாதி அளவு,
    லெட்டூஸ் இலை - சிறிதளவு,
    தக்காளி - 1,
    ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    புதினா - சிறிதளவு,
    தேன் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    குடைமிளகாய் சாலட்

    செய்முறை:

    மூன்று நிற குடைமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும்.

    லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.    

    புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, தேன், எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலை, நீளவாக்கில் நறுக்கிய குடைமிளகாயை போட்டு அத்துடன் இந்த கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கலர்ஃபுல் குடைமிளகாய் சாலட் ரெடி.

    குறிப்பு: டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ‘ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×