search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆலு பட்டூரா
    X
    ஆலு பட்டூரா

    குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா

    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு  - 2 கப்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    உருளைக்கிழங்கு - 250 கிராம்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    ஆலு பட்டூரா

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சீரகம், மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்).

    பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் திரட்டி வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஆலு பட்டூரா ரெடி.

    குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×