என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தினமும் எளிதில் கிடைக்கக்கூடிய சில காய்கறி, பழங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
    ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளாதது, போதிய அளவு தண்ணீர் அருந்தாதது, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சருமம் சீக்கிரத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறது. தினமும் எளிதில் கிடைக்கக்கூடிய சில காய்கறி, பழங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

    * நம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதனால், நம் தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோல் பளபளப்புடன் அழகாக இருக்கும்.

    * தோலை அழகாக்குவதில் குடைமிளகாய்க்கு முக்கிய பங்கு உண்டு. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்து உள்ளன. இதை, உணவில் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், நிறக் குறைவு மற்றும் தோல் பிளவுகள் மறையும். முக்கியமாக, இதில் கலோரி மிகக் குறைவாகவே இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கூட இதை எடுத்துக்கொள்ளலாம். குடல் புண்ணை ஆற்றும் வலிமையும் இதற்கு உண்டு.

    * இரும்பு, கால்சியம், ஏ, பி, சி, டி, ஈ ஆகிய வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இதில், ஃபிளவனாய்ட்ஸ் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடெண்ட்களும் உள்ளன. 70 சதவிகிதத்துக்கும் மேலாக கோக்கோ பவுடரைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த வகையான சாக்லெட்டுகள் சருமத்தை மினுமினுப்பாக, மென்மையாக, அழகாகக் காட்டுவதற்கும், உலர்ந்துபோகும் பிரச்னையை சரிசெய்யவும் உதவுகின்றன. புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும் தன்மை இதில் உள்ளது. ஆனால் சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே சாப்பிட வேண்டும்.



    * இயற்கையின் சிறந்த வரம் கிரீன் டீ. இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால், சூரியனில் இருந்து வரும் வெப்பத்தாக்கங்களைத் தடுக்கின்றன. கிரீன் டீ-யில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே, ஒரு நாளைக்கு எவ்வுளவு வேண்டுமானாலும் பருகலாம். இதில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட் தோலைப் பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகின்றன. இதய நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

    * சூரியகாந்தி, பூசணிக்காய் மற்றும் ஆளி (Flax) செடிகளின் விதைகளில் ஒமேகா 3 கொழுப்புச் சத்து உள்ளது. இவை நம் சருமத்தின் ஈரப்பதத்தை சமன்படுத்தத் தேவையான வைட்டமின் ஈ, புரதச்சத்து கிடைக்க உதவுகிறது. சூரியகாந்தி விதைகள் தோல் பாதுகாப்புக்கு உதவுவதுடன், உடல் பருமனையும் குறைக்கும். மேலும், தைராய்டு உள்ள பெண்களுக்கு கழுத்தில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்க உதவும்.

    * பப்பாளியை உணவாகவும் சாப்பிடலாம், அரைத்து முகத்தில் தடவினாலும் கண்டிப்பாகப் பலன் உண்டு. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. தோல் பொலிவு தரும். பெண்களின் முறையான மாதவிலக்குக்கு உதவும். தோல் வெடிப்புக்கு இது சிறந்த மருந்து. ஆனால், குறிப்பிட்ட அளவுதான் உண்ண வேண்டும்.

    இந்த ஆசனம் செய்வதால் வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும். வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும்.
    குறுக்குவாட்டு முக்கோணத் தோற்றம். 'பரிவிருத்த’ என்றால் குறுக்கு வாட்டு. 'திரிகோண’ என்றால் முக்கோணம். உச்ச நிலையில் உடல் குறுக்குவாட்டு முக்கோணம் போன்று இருக்கும்.

    செய்முறை: உள்ளங்கைகள் இரு பக்கவாட்டிலும் தொடையை ஒட்டி இருக்கும்படி நேராக நிற்கவும். கால்களை அகட்டிக்கொள்ளவும். காலை அசைக்காமல் இடுப்பை மட்டும் இடது புறம் திருப்பவும். இடுப்பை வளைத்து, வலது உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் ஊன்றவும்.

    உயர்த்திய இடது உள்ளங்கையின் மேல் பார்வை இருக்கட்டும். இப்போது மூச்சை வெளியே விடவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடியே மேலெழும்பி உடம்பு வலதுபுறம் நோக்கியிருக்க, கைகள் தோள் மட்டத்தில் நீட்டியிருக்கவேண்டும்.

    கால்களை நகர்த்தாமல் உடலை முன்னுக்குத் திருப்பவும். கைகளைக் கீழே தொங்கவிடவும். வலது காலைத் தூக்கி இடது காலின் அருகில் ஊன்றவும். இதே போல் மறுபுறம் செய்யவேண்டும்.

    பலன்கள்: வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும். சிறுநீரகம் வலுவடையும்.

    எச்சரிக்கை: தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்புக் கீல் வாயுவினால் அவதிப்படுபவர்கள், இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
    அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ எனும் பழமொழி, ஆப்புகள் என்றழைக்கப்படும் செயலிகளை நினைத்து சொல்லப்பட்டிருக்குமோ என்று எண்ணத்தோன்றும் அளவு இந்தச் சமுதாயத்தை செயலிகள் சீரழிக்கத்தொடங்கியுள்ளன.
    அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ எனும் பழமொழி, ஆப்புகள் என்றழைக்கப்படும் செயலிகளை நினைத்து சொல்லப்பட்டிருக்குமோ என்று எண்ணத்தோன்றும் அளவு இந்தச் சமுதாயத்தை செயலிகள் சீரழிக்கத்தொடங்கியுள்ளன. இணைய ஊடகத்தின் கட்டில்லா சுதந்திரம் மனித இனத்தை மாயத்திரைகளால் பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. தூக்கம் தொலைத்த நம் இரவுகள் துக்கம் சுமந்து நீண்டுகொண்டே இருக்கின்றன. தேவையோ தேவையில்லையோ நம் ஒவ்வொரு அசைவையும் பொதுவெளியில் பகிர்ந்து, அதில் கிடைக்கும் விருப்பக்குறிகளுக்காக நாம் இறப்புவீட்டுக்குச் சென்றதைக்கூடத் தம்பட்டம் அடிக்கும் தற்படப்பிரியர்களாய் மாற்றி நம்மை இணைய உலகம் அடிமையாக்கியிருக்கிறது.

    நம் இறப்பு என்று நிகழும்? என்று ஒரு செயலி ஜாதகம் சொல்கிறது, நம் முகத்தை அழகுபடுத்தி நாம் விரும்பும் இன்னொரு முகத்தோடு இணைத்துத் தருகிறது இன்னொரு செயலி, நாம் இன்று எத்தனை அடிகள் எடுத்துவைத்தோம், ரத்தத்தில் சர்க்கரை அளவு என்ன என்பதை எவ்விதமான உடல் சோதனை இல்லாமல் நம் விரல்அழுத்தத்தைக் கொண்டு ஆருடம் சொல்கிறது ஒரு செயலி. ஓரிடத்தில் இருந்துகொண்டு வேறோர் இடத்தில் இருப்பதாகக் கணவர் பொய்சொல்கிறாரா? என்று மனைவிக்கு வேவுபார்த்துச் சொல்கிறது வேறோர் செயலி. பிஞ்சுமனங்களில் நஞ்சை விதைக்கும் ஆபாசப்படங்களைத் தந்து குழந்தை மனங்களைக் குறிவைத்துக் குதறிக்கொண்டிருக்கிறது பிறிதோர் செயலி.

    தேவையற்ற செயலிகளை நம் செல்பேசிகளில் இறக்கி நம் தனிப்பட்ட தகவல்களை உலகின் பார்வைக்குக் கடைவிரித்திருக்கிறோம். கேமரா செல்போன் வாங்கிவிட்டோம் என்கிற ஒரே காரணத்தினால் நம் குடும்ப நிழற்படங்கள் இன்று இணையப் பெருவெளியில் நிரம்பிக்கிடக்கின்றன. எதையும் மூளையால் பகுத்தறிந்த சமூகம் இன்று கேமராக் கண்களால் எல்லாவற்றையும் குறுகுறுவென்று உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது. 160 கோடி மக்களுக்கும் மேல் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி, நம் குழுக்களில் நாம் பகிரும் எல்லாத் தகவல்களையும் கண்காணித்து உட்பதிந்து வைத்திருக்கிறது. , நம் செல்பேசி எண்கள் நமக்கே தெரியாமல் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் கோர்த்துவிடப்பட்டு யார்யார் படங்களோ நம் செல்பேசிகளை நிறைத்துவிடும் கொடுமை நடந்துகொண்டே இருக்கிறது.

    எப்போது பார்த்தாலும் செல்போனுக்குள் மூழ்கியிருக்காதே என்று கணவர் கண்டித்ததற்காக மனமுடைந்து விஷம் அருந்தி அதை அச்செயலியில் பதிவேற்றிவிட்டு இறந்துபோன பெண்ணைப் பார்த்து உலகம் உறைந்து போனதே. திரைப்படக்காட்சி வசனங்களின் பின்னணியில் அரிவாளைத் தரையில் உரசியபடி உச்சகட்ட வேகத்துடன் மோட்டார் சைக்கிள்களில் நள்ளிரவு நேரம் பயணிக்கும் இளைஞர்களின் ஆபத்தான பெருமைகளை ஓர் செயலி பதிவேற்றம் செய்வது எவ்வளவு ஆபத்தானது? புதிதாக நாம் ஒருவரின் செல்பேசி எண்ணை நம் செல்பேசியில் சேமித்தவுடன் அடுத்த வினாடி அவர்களின் படத்தோடு அவர்களை முகநூல் உங்களுக்கு நட்பறிமுகம் செய்து வைக்கிறதே.

    நம்மைப் பற்றிய தகவல்களை நம்மிடமே பெறப்பட்டு நம்மையே நம்மிடமே இணைய உலகம் விற்றுக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். உலகம் முழுவதும் 230 கோடிக்கும் அதிகமாகப் பயன்படுத்துனர்களை கொண்ட முகநூல் செயலியில் நம் பிறந்தநாள், நம் செல்பேசி எண்கள், நம் இல்ல அலுவலக முகவரி, நாம் யாருடன் என்ன பேசுகிறோம்? நம் நண்பர்கள் எந்தெந்த நாட்டில் இருக்கிறார்கள்? நம் விருப்பமென்ன? போன்ற விவரங்கள் விரல்நுனியில் இருக்கிறது. முகநூலில் பதிவிடப்படும் ஏதாவது ஒரு பதிவின்கீழ் பதிவிடப்பட்ட பின்னூட்டங்களின் மொழியையும் அது சுட்டும் முகம்சுளிக்கவைக்கும் எதிர்வினைகளையும் கண்டால் சமூகத்தின் போக்கு இன்று எவ்வாறு செல்கிறது என்று நமக்குத் தெளிவாகப் புரியும். நானூறுகோடிப் பயனர்களைக் கொண்ட கூகுள், எந்த நேரம் நாம் இணையத்திற்கு வருகிறோம்? நாம் அடிக்கடி இணையத்தில் எதைத்தேடுகிறோம்?



    யார்யாருக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்? நம் நண்பர்கள் யார்யார்? நம் வங்கி விவரங்கள் என்ன? நம் வருமானம் என்ன? வருமானவரி எவ்வளவு கட்டுகிறோம்? எந்தெந்தப் பொருட்களை இணையத்தின் மூலமாக வாங்கியிருக்கிறோம்? நாம் எங்கே பயணிக்கிறோம்? இப்போது நாம் எங்கே இருக்கிறோம்? நமக்கு எத்தனைக் கடன் அட்டைகள் உள்ளன? நம் நண்பர் பட்டியலில் யார் யார் உள்ளனர்? நாம் யார் யார்க்கு குறுஞ்செய்திகள் அனுப்புகிறோம்? என்று மிகத்தெளிவாக அறிந்துவைத்துள்ளது. அதைத் தேவைப்படுகிறவர்களுக்குத் தேவையான நேரத்தில் தந்து வணிகமாக்குகிறது.

    செயலிகள் மூலமாய் நாம் பொருட்கள் வாங்கத் தொடங்கிய பின் உள்நாட்டு வணிகநிறுவனங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டன என்பதை நாம் அறிவோமா? வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் டுவிட்டரில் உருவாக்கிப் பிரபலமாக்கப்படும் ஹேஷ்டாக்குகளுக்குப் பின்னால் சப்தமின்றி அரங்கேற்றப்படும் பல அநீதிகளின் குரலை நாம் அறிவோமா? நம்மை நாமே ரசிப்பதையும் திரைநட்சத்திரங்களின் அங்க அசைவுகளுக்கு ஏற்ப போல செய்வதும் அதைப் பொதுவெளியில் பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கான விருப்பக்குறிகளையும் நாகரிகமில்லாமல் ஆபாசமாக இடப்படும் பின்னூட்டங்களைப் பெறுவதில் என்ன பலன் இருக்கப்போகிறது?

    நம்மைப் பற்றிய போலிபிம்பங்களுக்காக செயலிகளில் நம் வாழ்வையும் நேரத்தையும் தொலைப்பதில் என்ன நியாயம்? நம் வாழ்வில், நம் குடும்பங்களில் நடைபெறும் தேவையற்ற இந்தக் குழப்பங்களுக்கும் கூச்சல்களுக்கும் இப்படிப்பட்ட செயலிகள் காரணமாக நாம் அனுமதிக்கலாமா? பற்றி எரியும் பிரச்சினைகளை லாவகமாகத் திசைதிருப்பும் செயலிகளால் சாமானியர்களுக்கு இழப்பே அதிகம். எப்படி அடுப்பு தன் மேல் ஏற்றப்பட்ட பாத்திரத்தைச் சூடுதணியாமல் கொதிநிலையில் வைத்திருக்கிறதோ அதேபோல் ஒன்றின் பின்னால் இன்னொன்று என்று உணர்வுமயமான பிம்பங்களை உருவாக்கி போலி பிம்பங்களை இந்தச் செயலிகள் ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காய் சமுதாய வீதியில் உலவவிடுகின்றன.

    ஒரு மனிதனை அடிமைப்படுத்த வேண்டுமானால் ஆசையைத் தூண்டி அலையவைக்கவேண்டும். அதைத்தான் செயலிகள் செய்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியின் புதியவடிவத்தைக் கொண்டே தன்னை இச்சமூகம் கெடுத்துக்கொண்டிருக்கும் நிகழ்வுதான் இந்த நூற்றாண்டின் உச்சகட்டக் கொடுமை. ஆப்புகள் எனும் செயலிகள் நமக்கு நாமே வைத்துக்கொண்டிருக்கும் ஆப்புகளோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    -முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறை தலைவர் தனியார் கல்லூரி, திருநெல்வேலி.
    சூடான சாதம், சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெங்காயத்தாள் பருப்பு கூட்டு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயத்தாள் - 1 கட்டு
    பாசிப்பருப்பு - 25 கிராம்
    துவரம்பருப்பு - 50 கிராம்
    சாம்பார் பொடி - அரை டேபிள் ஸ்பூன்
    மஞ்சள்பொடி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 5
    வெங்காயம் - 2
    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயத்தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வெங்காயத்தாளை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து அதில் வேகவைத்து உப்பு, மசித்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூடான வெங்காயத்தாள் பருப்பு கூட்டு ரெடி.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கூட்டுடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரைநோய் வந்த பின்னும் அல்லது வருமுன் காப்பதற்கு சித்தர்கள் எளிமையாக இயற்கையான உணவுகளை பற்றி முன்பே நமக்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
    சர்க்கரைநோய் வந்த பின்னும் அல்லது வருமுன் காப்பதற்கு சித்தர்கள் எளிமையாக இயற்கையான மூலிகைகளை பற்றி முன்பே நமக்கு குறிப்பிட்டுள்ளார்கள்.

    வெந்தயம் : வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். மேலும் வெந்தயக்கீரையை வாரம் 2 முறை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம்.

    நாவல் : நாவல் பழக்கொட்டைகளை காய வைத்து நன்கு இடித்து பொடிசெய்து தினம் 1 தேக்கரண்டி அளவு காலை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும், மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்

    மாந்தளிர் : மாமரத்தினுடைய தளிர் இலை களை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் 1 தேக் கரண்டி பொடி எடுத்து கசாயமிட்டு தினமும் காலையில் உணவிற்கு முன் அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

    பாதாம்பருப்பு : தினம் 5 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து தோல் நீக்கி உண்டுவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்து கொள்ளும்.
    வெண்டைக்காய்: வெண்டைக்காயை தினம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. சர்க்கரை சத்து அதி களவில் உள்ளவர்கள் 2 வெண் டைக்காயை நீளவாக்கில் அரிந்து அதை 1 டம்ளர் நீரில் இரவு போட்-டு வைத்து மறுநாள் காலையில் குடித்து வருவது நல்லது.

    பாகற்காய் : தினம் 60 மில்லி பாகற்காய் சாறு அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்த சர்க் கரையின் அளவு குறையும். உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்து வருவது நல்லது.

    நெல்லிக்காய் : நெல்லிவற்றலை பொடித்து வைத்து கொண்டு 1/2 தேக்கரண்டி அளவு தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத் தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவும்.



    கொய்யா : சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள வர்கள் தினம் 2 கொய்யா சாப்பிட்டு வருவது நல்லது. இது நம் உடலில் சர்க்கரையின் அளவு சமநிலையில் வைக்க உதவுகிறது. மேலும் 5 கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து 60 மில்லி காலை, மாலை இரு வேளை குடித்து வர சர்க்கரையின் அளவு குறையும்.

    வெங்காயம்: தினமும் 50 கிராம் பச்சை வெங்காயம் மதிய உணவிற்கு பின் சாப்பிட்டு வர நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தும். இதை தினமும் உணவில் சேர்த்து வருவதால் நம் உடலில் இன்சுலின் ஹார்மோன் சமநிலையில் இருக்கும்.

    ஆவாரை: ஆவாரை சமூலம் காயவைத்து பொடித்து வைத்து கொண்டு தினம் 2 கிராம் அளவு காலை மாலை சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு குறையும்.

    கறிவேப்பிலை : கறிவேப்பிலையை காய வைத்து பொடித்து வைத்து கொண்டு 1 தேக்கரண்டி அளவு காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டுவர இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும், இதனால் பரம்பரையாக ஏற்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

    முருங்கை இலை: முருங்கை இலையை கீரையாக பொரியல் செய்து உணவில் உண்டுவர இதில் அஸ்கார்பிக் ஆசிட் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும். இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறைகிறது.

    நித்தியகல்யாணி பூ: 10 நித்தியகல்யாணி பூ எடுத்து கசாயமிட்டு தினம் 60 மில்லி குடித்து வர சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்கும்.

    மஞ்சள் தூள்: தினமும் இரவு 1 டம்ளர் பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்கள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    பசலைக்கீரை: பசலைக்கீரை வாரம் 3 நாள் தினமும் உணவில் சேர்த்து வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமஅளவில் வைக்க உதவுகிறது. 
    குழந்தைகளைப் பொறுத்தவரை அனைவருக்குமே டான்சிலின் மேல் புண்ணாகத்தான் செய்யும். இந்த நோய்க்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளைப் பொறுத்தவரை அனைவருக்குமே டான்சிலின் மேல் புண்ணாகத்தான் செய்யும். இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், இதன் பாதிப்பு அனைவருக்கும் தீவிரமானதாக இருப்பதில்லை. தானாகவே இது குணமடையவும் செய்யும். இவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமில்லை. மருத்துவரின் ஆலோசனையின்படி ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக் கொள்வதன் மூலம் முற்றிலுமாக குணமடைந்துவிடும். ஆனால், சில குழந்தைகள் மட்டும் டான்சிலுடன் சேர்ந்த அடினாய்டு சதையினால் குறட்டை பிரச்னை ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள்.

    உதாரணமாக உட்கார்ந்திருக்கும்போதே குழந்தை உறங்குவது, படுத்தவுடன் மூச்சடைப்பது, ஐந்து நிமிடத்திற்கொரு முறை புரண்டு புரண்டு படுத்து உறங்குவது சீரான தூக்கமில்லாதது, வாயில் உமிழ்நீர் வந்து கொண்டே இருப்பது போன்றவர்களுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

    மருத்துவ சொற்களில், தொற்றுநோய்களில் ஏற்படக்கூடிய ஒரு தொற்று-அழற்சி செயல்முறை, அவைகளில் உள்ள கார்க்ஸை விளைவிக்கும். பெரும்பாலும் இந்த நோய் குழந்தை பருவத்தில் ஏற்படுகிறது.

    தொண்டை அழற்சி கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், அது குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு, மருந்தளவிலான மருந்துகள் அதிக அளவில் உள்ளன. தொண்டை அழற்சி குணப்படுத்த, உள்ளிழுக்கும் நடைமுறைகளைப் பின்பற்றவும், அத்துடன் பெருகும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நாட்டுப்புற வைத்தியம் கருதப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

    உணவிற்கான ஒவ்வாமை எதிர்வினைகள், அதே போல் குழந்தை உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாமை, நோய் வளரும் அதிக ஆபத்து பங்களிக்கின்றன.

    சில வேளைகளில் தொண்டை அழற்சி அறிகுறிகள் நோய்க்கான வடிவத்தை சார்ந்துள்ளது. சில சமயங்களில், காதுகளில் காதுகள், தலைவலி, வெப்பநிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படலாம். குழந்தைகளும் மூச்சுத்திணறல் மற்றும் எரிச்சலையும் கொண்டிருக்கின்றன.பொதுவாக, இந்த அறிகுறிகள் ஆண்டின் குளிர்ந்த காலத்தில் நோய் நீண்ட கால வடிவத்தில் உணர்ந்தன. வழக்கமாக ஊனமுற்ற மாநிலங்களுடனான exacerbations மாறி, அவை வழக்கமாக வசந்த காலத்தில் மற்றும் கோடை காலத்தில் காணப்படுகின்றன.

    டான்சில்ஸின் நீண்டகால அழற்சி குழந்தைகளில் மூட்டுகள், சிறுநீரகங்கள் மற்றும் இதய அமைப்பு பாதிக்கும் நச்சு-ஒவ்வாமை புண்கள் ஏற்படும்.

    தைரொய்டிசோசிஸ் - தைராய்டு நோய்க்கு ஆபத்து உள்ள குழந்தைகளில் தொண்டை அழற்சியின் ஆபத்து உள்ளது. சில நேரங்களில் நோயை அலட்சியம் செய்வது தன்னியக்க சூழல் நிலைகளை தூண்டலாம்.இந்த சிக்கல்களைத் தடுக்க, எந்த வடிவத்திலும் டான்சில்லெடிஸ் சிகிச்சையளிப்பது முக்கியம்.
    உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை பெறும். உங்கங் சருமம் முன்பு போல் ஒளிர, உங்கள் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை.
    உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை பெறும். அது முன்பு போல இருக்காது. மென்மையான மிளிரும் சருமம் இருக்காது. முன்பை விட மங்கலாகவும், உலர்ந்தும், கோடுகள் உருவாகி, கரும்புள்ளிகளோடும் காணப்படும். இதெல்லாம் சருமம் முதிர்ச்சியடைவதற்கான அறிகுறிகளே. முன்பு போல் ஒளிர, உங்கள் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவை. அதுமட்டுமில்லாமல், இதை எவ்வளவு விரைவாக செய்கிறீர்களோ அதுவரை இது நல்லது.

    அடிப்படையில் பார்த்தால், உங்கள் சருமம், கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய ஃபைபர்களின் வலைப்பின்னல் ஆகும். இந்த புரதங்கள் தான் உங்கள் சருமத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் தோல் நீடிக்கப்பட்டால், அதை மீண்டும் அதனுடைய இடத்திற்கே கொண்டு செல்லும் வேலையை இந்த புரதங்கள் செய்கின்றனர். எனினும், வயதாக வயதாக இந்த புரதங்கள் வலுவிழந்து, உங்கள் தோல் தொங்க ஆரம்பித்துவிடும். அவை மெல்லியதாகி கொழுப்பை இழப்பதால், மிருதுவான உணர்வு நமக்கு கிடைப்பதில்லை.

    சரும முதிர்வு பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள். இங்கே அதற்கான அறிகுறிகளும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

    1 முகம் பொலிவிழந்து காணப்படுதல்

    சருமம் உலர்ந்து இருந்தால் முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் முகம், ஒளிரும் தன்மையை இழக்கிறது. மேலும் உங்கள் சருமத்தில் துகள்கள் சேர ஆரம்பித்து உங்கள் சருமம் இறுக்கமடையும். மேலும், உங்கள் சருமத்தில் புதிய செல்களின் பிறப்பு குறைவதால், உங்களின் மேல் அடுக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும். இதை சரி செய்ய இறந்த செல்களை நீக்கினால் போதும். உங்களுக்கு மிருதுவான சருமம் இருந்தால் உங்களின் தோல் மருத்துவரை அணுகுங்கள் அல்லது இறந்த செல்களை வாரம் ஒரு முறை நீக்க முயற்சி செய்யுங்கள். இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல், சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கினால் உங்கள் சருமம் முன்பு போல் மென்மையாகவும் மிளிரவும் செய்யும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்த உங்களின் தோல் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.

    2 கரும்புள்ளிகள்

    சூரியனில் இருந்து வெளிவரும் UV கதிர்களால் சருமம் பாதிக்கப்படுவதால், கரும்புள்ளிகள் உண்டாகின்றன. UV கதிர்களால் பாதிப்படைந்த செல்கள் சருமத்தின் மேல் புறத்தில் வரும் போது கரும்புள்ளிகளாக உருவாகின்றன. கரும்புள்ளிகள் ஏற்பட சூரிய கதிர்கள், வீக்கம், தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் முகப்பரு கூட காரணமாக இருக்கலாம். எனவே சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்துங்கள். உங்களின் சருமத்திற்கு ஏற்ற ஒன்றை பயன்படுத்துங்கள். மேலும், அது புற ஊதா கதிர்களான UVA மற்றும் UVB ஆகிய இரண்டையும் தடுக்கும் ஆற்றல் கொண்டா SPF15 ஆக இருக்க வேண்டும். கரும்புள்ளிகளை தடுக்க வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்த மறக்காதீர்கள்.



    3 தோலில் வரிகள் மற்றும் சுருக்கங்கள்


    வயதாவதை காட்டும் அறிகுறிகளுள் இது முதன்மையானது. உங்கள் தோலில் உள்ள கொலாஜென் இழப்பின் காரணமாக உங்கள் சருமத்தின் மீளும் தன்மை குறைகிறது. இதனால் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகின்றன. இதை தடுக்க முடியாது எனினும், இது இளம் பருவத்தினருக்கும் அதிக நேர சூரிய வெளிப்பாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் வரலாம். முதலில் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அவை சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். மாய்ஸ்சரைசர் அல்லது foundation கிரீம்களை பயன்படுத்தலாம். சுருக்கங்கள் வருவதை குறைக்க நன்றாக உறங்குவது, புகைப்பழக்கத்தை தவிர்ப்பது, அதிகளவு மீன் எண்ணெய் எடுத்துக்கொள்வது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யலாம். உங்கள் உணவு பழக்கம் உங்கள் சருமத்தை பாதிக்கும் என்பதால் உணவில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

    4 தோல் தளர்வது

    வயது ஆக ஆக சருமத்தின் உறுதித்தன்மை வலுவிழந்து, உங்களின் தோல் தளர்வாக தோற்றமளிக்கும். இதனால் உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படும். கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகியவை தான் உங்கள் சருமத்திற்கு உறுதியான, மென்மையான, மிளிர்வான கட்டமைப்பை கொடுக்கிறது. 20 வயதிற்கு மேல் இவைகளின் உற்பத்தி குறைவதால், உங்கள் சருமத்தின் உறுதித்தன்மை குறைகிறது, குறிப்பாக தாடை மற்றும் கன்னங்களை சுற்றி. இந்த புரதங்களை திரும்ப பெற, நீங்கள் தோல் சார்ந்த பொருட்களை வாங்கும் பொழுது, அதில் நியாசினாமைடு மற்றும் பெப்டைட்ஸ் போன்ற பொருட்கள் உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். இதில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் உங்களின் சருமத்தை வலுவாக வைத்திருக்கும்.

    பழங்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு சாலட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆரஞ்சு பழம் - 1
    தேன் - 2 டீஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிதளவு



    செய்முறை :

    ஆரஞ்சு பழத்தில் இருந்து கொட்டை, தோலை நீக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழங்களை போட்டு அதனுடன் தேன், குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சத்தான ஆரஞ்சு சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்னைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.
    நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்ளிங் போன்ற ஏரோபிக் பயிற்சிகளும், சாதாரண உடற்பயிற்சிகளும் நம் உடல் தசைகள் எடுத்து கொள்ளும் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, இதயமும், நுரையீரலும் நன்கு செயல்பட உதவி புரிபவை. ஆனால், எடையைத் தூக்கி செய்யப்படும் பயிற்சிகள் தளர்வடைந்த தசைகளை இறுக்கமடைய செய்யும் திறன் கொண்டவை. நல்ல அழகான கட்டுக்கோப்பான உடலழகை பெறுவதற்கும், வயதாவதால் உண்டாகும் தசை இழப்பு பிரச்னைகளுக்கும் எடை தூக்கும் பயிற்சியே சிறந்தது.

    நம் உடலின் ஒவ்வொரு பகுதி தசைக்கும், அதன் எடையை விடவும் அதிக எடை கொண்ட உபகரணங்களின் மூலம் எடை தூக்கும் பயிற்சிகள் செய்வதால் தசைகள் நன்கு வலுப்படும். இந்த எடை தூக்கும் பயிற்சிகள் பெண்களுக்கு அதிகப்படியான நன்மையை கொடுப்பவை. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு வளர்சிதை மாற்ற விகிதம் குறைவு என்பதால், வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும், எலும்பின் அடர்த்தியை மேம்படுத்தவும் இத்தகைய பயிற்சிகள் உதவுகின்றன.

    மேலும் உடலுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கவும் எடை தூக்கும் பயிற்சிகள் அவசியம். இத்தனை முக்கியத்துவம் பெற்ற எடை தூக்கும் பயிற்சிகளில், Weight Plate Excercise மிகவும் முக்கியமானது. இதனை உடற்பயிற்சி நிபுணரிடம் முறையாகப் பயிற்சி பெற்ற பின்னர் வீட்டிலேயும் செய்யலாம்

    Overhead  Press Squat Jack

    செய்முறை A. காலை சிறிது அகட்டி இடுப்புக்கு நேராக வைத்துக் கொள்ளவும். வெயிட் பிளேட்டை இரு கைகளிலும் பிடித்து, முழங்கைகளை மடக்கி மார்புக்கு நேராக வைத்துக் கொண்டு நிற்கவும். B. பின் ஒரு ஜம்ப் செய்து கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் அகட்டி, படத்தில் காட்டியுள்ளவாறு, உட்காரும் நிலையில் வைத்துக் கொள்ளவும். வெயிட் பிளேட்டை தலைக்கு மேல் தூக்கியவாறு வைக்கவும். அப்படியே பழைய நிலைக்குத் திரும்பி நேராக நிற்கவும். இதேபோல 5 முதல் 8 முறை செய்யலாம்.

    பலன்கள்

    முழு உடலின் தசைகளுக்கு வலிமை அதிகரிக்கும். இடுப்பு, தொடைப்பகுதிகளில் உள்ள அதிகப் படியான கொழுப்பை விரைவில் எரிக்க முடியும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தொடை, இடுப்புகளில் உள்ள செல்லுலைட் எனப்படும் கொழுப்பு கட்டிகளை கரைக்க உதவுகிறது.இடுப்பு, எலும்புகள், தசைகள், மற்றும் நரம்புகளுக்கு நெகிழ்ச்சித்தன்மை கிடைக்கிறது. தோள்பட்டை, கைகள் வலுவடைகின்றன. கைகளில் தொங்கும் கொழுப்பு தசைகள் குறைகிறது. அழகிய உடல் வடிவமைப்பு பெற உதவுகிறது.
    பெண்களின் உடல் பருமன் பிரச்சனை குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் எப்படி பெண்களுக்கு குழந்தையின்மையை அதிகரிக்கிறது என்பது குறிந்து அறிந்து கொள்ளலாம்.
    கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

    இதற்கு முக்கிய கரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.
    உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும்.
    நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநல பிரச்சினைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு இது அதிகம். ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன.

    உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். இதற்கு காரணம், பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் திடீர் மனநிலை மாற்றங்களாக வந்து சென்றுவிடுகின்றன. ஏதோ சில நாட்கள் நீடிக்கும் மன இறுக்கமாக கருதப்படுகின்றன. எனவே அவை தானாக சரியாகிவிடும் என்று கண்டுகொள்ளப்படுவது இல்லை.

    உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக தூங்குவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னை பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் பிற அறிகுறிகளாகும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும், திடீர் மனநிலை மாற்றங்களும், எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் மன இறுக்கம் உள்ளது என எச்சரிக்கும் அறிகுறிகளாகும்.

    ஒரு பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த சமூகத்தின் அபிப்ராயம், அவர்கள் சாப்பிடுவது குறித்த கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கே சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பசியின்மை பிரச்சினை உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எடை குறைவாக இருக்கும், உடல் எடை கூடிவிடும் என்று அதிகம் பயப்படுவார்கள். புலிமியா என்பது பெண்களுக்கு வரும் மற்றொரு பிரச்சினையாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், பிறகு உடல் எடை கூடுவதை தடுப்பதற்காக வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவார்கள். இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாள்பட்ட பிரச்சினை பசியின்மை ஆகும். எனினும், மெலிதாக இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மை பிரச்சினை உள்ளது என்று கருத முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    உங்களுக்கோ, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ எப்போதும் உடல் எடை கூடிவிடும் என்ற பயம், உடல் எடை பற்றிய கவலை இருந்தால், ஓரிரு வாய் சாப்பிட்டுவிட்டு அத்தோடு போதும் என்று சொல்லும் பழக்கம் இருந்தால், அவர்கள் உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
    ராஜஸ்தானில் ரப்டி மால் பூவா இனிப்பு மிகவும் பிரபலம். இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்,
    சர்க்கரை - 1¼ கப்,
    தண்ணீர் - தேவைக்கு,
    உப்பு - 1 சிட்டிகை,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    காய்ந்த திராட்சை, பாதாம், பிஸ்தா - தலா 15.

     

    செய்முறை

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து இளம் பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை எண்ணெயில் தட்டையாக ஊற்றி பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் புரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.

    அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, திராட்சையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான ரப்டி மால் பூவா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×