என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.
    சர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.

    சர்க்கரை நோய்

    உடலுக்கு பலவிதமான நோய்களை கொண்டு வந்து சேர்க்ககூடிய நுழைவு வாயி லாக சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் 3 வகையாக உள்ளது.
    1.முதல்வகை சர்க்கரைநோய்,
    2. 2-ம் வகை சர்க்கரைநோய்,
    3.கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் சர்க்கரைநோய்

    முதல்வகை சர்க்கரைநோய்

    முதல் வகை சர்க்கரை நோய் சிறுவயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இந்த வகை நோயில் கணையத்தால் இன்சுலினை சுரக்க முடிவதில்லை. இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள். உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே இவர்களுக்கு மாத்திரைகளும் இன்சுலின் ஊசி மருந்தும் கொடுக்க வேண்டும்.

    2-ம் வகை சர்க்கரைநோய்

    2-ம் வகை சர்க்கரை நோய் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது. பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறை பண்புகளை கொண்டு செல்லும் ஜீன்கள் 2-ம் வகை சர்க்கரைநோயை உருவாக்ககூடியது. பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும் மிக மெதுவாகத்தான் தன் பணியை செய்யும். எனவே மாத்திரைகளுடன் இன்சுலின் மருந்து தேவைப்படும். இவர்களுக்கு உணவு பழக்கத்தில் கட்டுபாடு தேவை மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய்

    2% முதல் 4% வரை பெண்களுக்கு கர்ப்பக்காலத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்த போதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

    சர்க்கரை நோய்க்கான காரணங்கள்

    மன அழுத்தம், துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், பரம்பரையாக வருதல், அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், கட்டுபாடற்ற உணவுகளை உண்ணுதல். சர்க்கரை நோய்க்கான காரணங்களாக உள்ளது.

    சர்க்கரை நோயை கண்டறியும் முறை

    ரத்தபரிசோதனை


    காலை உணவிற்கு முன்னும் உணவு உண்ட 2 மணி நேரத்திற்கு பின்னரும் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும். ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு உணவிற்கு முன்-80 முதல் 120 மில்லிகிராம்-/டெசிலிட்டர், உணவிற்கு பின்-100 முதல் 140 மில்லிகிராம்-/டெசிலிட்டர்

    எச்பிஏ/சி பரிசோதனை

    சிறுநீர்பரிசோதனை


    சிறுநீரில் சர்க்கரையின் அளவு உள்ளதா என கண்டறிய வேண்டும்.

    நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள்

    இந்த நோயால் பார்வை இழப்பு, இதயகோளாறு மற்றும் மாரடைப்பு, சிறுநீரக கோளாறுகள், பக்கவாதம் மயக்கமுற்ற நிலை ஏற்படும்.

    சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டியவை

    இந்நோய் வராமல் தடுக்க பசி நன்கு வந்த பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது குறுநடை கொள்ள வேண்டும். நொறுக்கு தீனி உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    சினிமாவில் எப்போது சண்டை கோழிகளாகவே காட்டப்பட்ட மாமியார் மருமகள் உண்மையிலும் அப்படித்தான் இருக்கிறாரக்ளா? இருவருக்குள்ளும் நடைபெறும் மர்ம யுத்தங்களுக்கு யார் காரணம் என்பதை பார்க்கலாம்.
    திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். சினிமாவில் எப்போது சண்டை கோழிகளாகவே காட்டப்பட்ட மாமியார் மருமகள் உண்மையிலும் அப்படித்தான் இருக்கிறாரக்ளா? இருவருக்குள்ளும் நடைபெறும் மர்ம யுத்தங்களுக்கு யார் காரணம் என்பதை பார்க்கலாம்.

    பையன் பிறந்துவிட்டால் சந்தோசப்படும் பெண்கள் மகனுக்கு திருமண வயது வந்துவிட்டால் பெரும் சோகமாகிவிடுகிறார்கள். காரணம், இதுவரை தன்னுடைய பலம் தன் வருங்காலத்தை பாதுகாக்கும் அரணாக நினைத்திருந்த மகனை உரிமை கொண்டாட வந்துவிடும் மருமகள். இது உரிமை போராட்டமாக அணுக வேண்டிய அவசியமே இல்லை.

    இயற்கையான விஷயம் தான் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமண வயதில் மகன் கொடுக்கும் முன்னுரிமைகளை எல்லாம் பெரிது படுத்தி கவலைப்படாதீர்கள். உங்களுக்கான இடம் எப்போதுமே மகன் மனதில் இருக்கும். அந்த இடம் எப்போதும் மாறாது. மருமகள், கிட்டதட்ட 20 வருடங்கள் வாழ்ந்த சூழலை, வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய இடத்திற்கு வந்திருக்கிறாள். புதிய இடத்தை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை கொடுத்திடுங்கள்.

    திருமணம் செய்து கொண்ட நாளின் முதலே பொறுப்புகளை தூக்கி மருமகள் தலையில் வைக்காதீர்கள். தட்டிக் கொடுங்கள், உரிமையாய் பழகுங்கள். இன்னொரு வீட்டுப் பெண், குறைந்த வரதட்சனை, சொத்து இல்லை என்ற சங்கதிகளை எல்லாம் மறந்துவிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான மகனின் மனைவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



    மருமகளைப் பற்றிய முன் அபிப்பிராயங்களை தவிர்த்திடுங்கள், குடும்ப வழக்கங்கள், நடைமுறைகள், பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்து வரும் விஷயங்கள் என்றால் முன்னரே மருமகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், கேட்கட்டும் என்று காத்திருந்து தவறிய பின்னர் கடிந்து கொள்ள வேண்டாம். எதிர்காலம் குறித்தும், வருமானம் குறித்தும் சதா சர்வ காலமும் பயந்து கொண்டே இல்லாமல் மகனுடன் இயைந்து வாழுங்கள். முயற்சித்துப் பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.

    உங்களின் கணவர் வீட்டினர் யாரும் எதிரிகள் கிடையாது. உங்களுக்கு கணவர் மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ அதேயளவு அவரை இப்போதைய நிலைக்கு உயர்த்திய அவரது குடும்பத்தினர் மீதும் இருக்கட்டும். ஒரே நாளில் கணவர் வளர்ந்துவிடவில்லை என்பதையும் உணருங்கள். திருமணம் ஆகிவிட்டால் கணவர் முழுவதும் தனக்கே சொந்தம் என்று குழந்தைகள் பொம்மைக்கு சண்டையிடுவது போல சிறுபிள்ளைத்தனமாக யோசிக்காதீர்கள். கணவரின் எண்ணங்களுக்கு, விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும். தனக்கு பிடித்தமான அம்மாவிடம் காபி வாங்கி குடிப்பதாலோ அம்மாவுக்கு பிடித்த சேலை வாங்கிக் கொடுப்பதாலோ ஒன்றும் உங்களுக்கான அன்பு குறைந்திடாது.  

    வெவ்வேறு எல்லைகளில் நின்று கொண்டிருக்கும் பெண்களுக்கு நடுவே சிக்கியிருக்கும் ஆண், இச்சூழலை சமாளிப்பது ஒன்றும் பெரிய வித்தையல்ல. மாறி மாறி புகார்கள் வந்தால் உடனடியாக உணர்ச்சி வசத்தில் முடிவெடுக்காதீர்கள். உங்களுக்கான முன்னுரிமைகள் எது என்று தீர்க்கமாக முடிவெடுங்கள். முடிந்தவரையில் ஒளிவுமறைவுகளைத் தவிர்த்திடுங்கள். பொய்களை சொல்லி சிக்குவதை விட உண்மையைச் சொல்லி வரும் விவாதங்களை சந்தியுங்கள். மனைவி வந்துவிட்டால் அம்மாவின் இடம் குறைந்திடாது என்பதை புரிய வையுங்கள். நீங்கள் சமநிலையாக இருப்பது அவசியம். வாழ்க்கை வசப்படட்டும்! அன்பு வாழ்த்துக்கள்.... மாமியார் மருமகள் தீர்க்க முடியாத பிரச்சனையல்ல தீர்க்க மறுக்கிற பிரச்சனை தான்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    தானியங்கள் அடங்கிய பிரெட் :

    இந்த தானியங்களில் போலிக் அமிலம் அடங்கியிருக்கிறது. அதாவது போலிக் அமிலம் என்பது வைட்டமின் - பி தான். வேறு எதுவுமல்ல... இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகைகளை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

    பழங்கள் :

    கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்த பழங்கள் எல்லாவித ஊட்டச்சத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலை போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    காய்கறிகள் :

    பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக, 9-வது மாதத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.

    பால் உற்பத்தி உணவுகள் :

    சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கியிருக்க, இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களையும் தரவல்லது. கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்றவற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
    முருங்கைக்கீரையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குழிப்பணியாரம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - ஒரு கப்
    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
    முருங்கைக்கீரை - ஒரு கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ப.மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைக்கீரை, உப்பு போட்டு போட்டு வதக்கவும்.

    கீரை 5 நிமிடங்கள் வதங்கினால்  போதுமானது.

    வதக்கிய கீரையை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான முருங்கைக்கீரை குழிப்பணியாரம் ரெடி.

    இந்தப் பணியாரத்துக்கு சாம்பார் தொட்டுச் சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஃபிட்னஸுக்கான சில உடற்பயிற்சிகளை ஜிம்முக்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து உடலை தகுதியாக்கிக் கொள்ள முடியும்.
    ஃபிட்னஸுக்கான சில உடற்பயிற்சிகளை ஜிம்முக்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து உடலை தகுதியாக்கிக் கொள்ள முடியும். நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய உடற்பயிற்சிகள் இவை...இந்த உடற்பயிற்சிக்கு எந்தக் கருவிகளும் தேவையில்லை என்பதால் இவற்றை Own body exercise என்றே பயிற்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை வேகமாகத்தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. உங்களால் எவ்வளவு முடிகிறதோ அந்த வேகத்தில் ஆரம்பிக்கலாம். இந்தப் பயிற்சிகளை செய்வதால் உடல் தசைகளை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூட்டு எலும்புகளை வலுவாக்கவும் அல்லது ஏற்கனவே மூட்டு இணைப்புகளில் வலி, உடல் வலி இருப்பவர்கள் சைக்கிளிங் பயிற்சியை தாராளமாக செய்யலாம். எல்லா வயதினரும் எளிதாக செய்யக்கூடிய மற்றும் அடிப்படையான உடற்பயிற்சிகள் இவை.

    எல்லோருக்குமே ஜிம்முக்குப் போக நேரமோ, பொருளாதார சூழலோ இருக்காது. ஆனால், உடலை வலுவாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் எந்தவொரு சிறப்பு உபகரணங்கள் இல்லாமல் வீட்டிலேயே செய்யக் கூடிய Squats, Push-Ups, Sit-Ups, யோகா போன்ற Own Body பயிற்சிகளை சுவரை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து, எழுவது, பந்துகளை வைத்துச் செய்யும் பயிற்சிகள், நாற்காலியில் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை செய்யலாம். உடல் தசைகளையும், நரம்புகளையும் ஒருங்கிணைப்பதால் முழு உடலுக்கும் வலு கிடைக்கும்.

    நெகிழ்வுப் பயிற்சிகள் (Flexibility exercises) இடுப்பு, தொடைப் பகுதிகள்தான் மேல் மற்றும் கீழ் உடலை இணைக்கும் பாலமாக இருப்பவை. இவை இறுக்கமடையும்போது முதுகுவலி, இடுப்புவலி, கீழ் இடுப்பு வலிகள் தோன்றும். உடலின் மேல், கீழ் பாகங்களின் நெகிழ்வுத் தன்மைக்காக தரையில் உட்கார்ந்து கால்களை நீட்டி மடக்கி செய்யும் Plank, மல்லாந்து படுத்து கால்களை மடக்கி செய்யும் யோகா பயிற்சிகள் போன்றவற்றைச் செய்யலாம். தோள் பட்டை, கழுத்து, கை, கால், விரல்கள் என அனைத்து இணைப்புகளுக்கும் நெகிழ்வு தரக்கூடிய பயிற்சிகளைச் செய்யலாம்.

    தீவிரப் பயிற்சிகள் (Core Exercises) : அடிவயிற்றுத் தசைகள் இறுக்கம், புஜ வலிமைக்காக தம்பிள்ஸ், பளு தூக்குதல், க்ரஞ்சஸ் போன்ற கடுமையான பயிற்சிகளை இளைஞர்கள் வீட்டில் செய்யலாம். மேற்சொன்ன பயிற்சிகளை குறைந்த எண்ணிக்கைகளில் செய்ய ஆரம்பித்து போகப்போக எண்ணிக்கைகளை கூட்டி செய்ய வேண்டும். எடுத்த எடுப்பில் அதிகமாக செய்ய  ஆரம்பித்தால் அதுவே உடல் வலியை உண்டாக்கக் கூடும்!
    இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் கூந்தலுக்கு நன்மை கிடைக்கும். இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளைத் தருகிறது. அவற்றில் தலைமுடிப் பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate) போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    சீயக்காய் ஷாம்பூ

    தேவையான  பொருட்கள்


    சீயக்காய் - 1 கிலோ
    செம்பருத்திப்பூ - 50
    பூலாங்கிழங்கு - 100 கிராம்
    எலுமிச்சை தோல் காய வைத்தது - 25
    பாசிப்பருப்பு - கால் கிலோ
    மரிக்கொழுந்து - 20 குச்சிகள்
    மல்லிகை பூ காய வைத்தது - 200 கிராம்
    கரிசலாங்கண்ணி இலை - 3 கப் அளவு.

    செய்முறை

    மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது. இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.

    சீயக்காய் பலநூறு ஆண்டுகளாக இயற்கை ஷாம்பூவாக பாரம்பரிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனுடைய குறைந்த காரத்தன்மை முடியின் இயல்பான எண்ணெய் தன்மையை தக்கவைக்க உதவுகிறது. இதனுடைய கிருமிநாசினித் தன்மையானது பொடுகு போன்ற பரவுநோய்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் சாப்போனின், லேக்டோன், அராபினோஸ், ராம்னோஸ் எனும் மூலக்கூறுகள் முடிக்கு போஷாக்களித்து முடி உதிர்வதிலிருந்து காக்கிறது.

    செம்பருத்திப்பூவில் காணப்படும் ஃப்ளேவனாய்ட்கள் மேலும் தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்றவற்றை குணமாக்குகிறது.பூலாங்கிழங்கில் உள்ள ஆர்கானிக் அமிலம், ரெசின், க்ளுக்கோசைட், அல்புமின், சைட்டோஸ்டிரொலென்ட், ஃபுரோனாய்ட், 7- ஹைட்ராக்சிகேட்சைனொன் போன்ற பொருட்கள் முடிக்கு வலு சேர்க்கிறது.

    எலுமிச்சைத்தோலில் அதன் சாற்றினை விட 5 முதல் 10 சதவிகிதம் அதிகமான கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை முடிக்கு நன்மையையும் உறுதியையும் வழங்குகிறது.பாசிப்பயறில் உள்ள செழுமையான வைட்டமின் A, C மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை முடி பிளத்தல், முடி உதிர்தல் ஆகியவற்றை தடுக்க உதவும்.

    மரிக்கொழுந்தில் உள்ள ஏராளமான நறுமண எண்ணெய் முடிக்கு வளமை தருகிறது. மல்லிகைப்பூவில் உள்ள இண்டோல், E-E-  ஃபெர்மிசென், Z-3-ஹ்க்செனைல் பென்சோவேட், லினலால் போன்ற வேதிப்பொருட்கள் முடி உதிர்தலைத் தடுத்து பேனை ஒழிக்கிறது.

    கரிசாலை, பிருங்கராஜ் என அழைக்கப்படும் இதில் உள்ள ஆல்கலாய்டு, ஃப்ளேவனாய்டு, கிளக்கோசைட், பாலி அசிட்டலீன், ட்ரைடெர்பினாய்ட் போன்றவை முடி, முடியின் வேர்ப்பகுதி இவற்றை நன்கு வளர்க்கிறது.
    ‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.
    ‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.

    ஒரு நாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்கு பதிலாக வெறும் பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடுவது அல்லது காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதுதான் ‘டீடாக்ஸ் டயட்’.

    இந்த முறை உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் போது காய்கறிகள், பழங்களில் இருக்கும் சத்துகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறைந்து ஒல்லியாக முடிவதால் ‘டீடாக்ஸ் டயட்டை’ பலரும் விரும்புகிறார்கள். இது நல்லதுதான் என்றாலும், 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.

    குழந்தைகளிடத்தில் இந்த உணவு கட்டுப்பாட்டை பழக்கப்படுத்த நினைப்பதும், முயற்சிப்பதும் தவறு. இதனால் அவர்களுக்கு மற்ற அத்தியாவசிய சத்துகள் கிடைக்காமல் தடைபடும். குழந்தைகளின் உயரம் மற்றும் எடையை சோதிக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 5 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே உடல் பருமனான குழந்தையாக கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தகுதிவாய்ந்த மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

    உயரத்துக்கேற்ற எடையும், நேர்த்தியான உடலமைப்பும் கொண்ட குழந்தைகளைப்பற்றி கவலை கொள்ள தேவையில்லை. சிலர் ஒல்லியாக இருந்தாலும் தொப்பை வெளியே தள்ளி இருக்கும். இவர்களின் உணவுப்பழக்கத்தைத்தான் கவனிக்க வேண்டும். தேவைக்கும் அதிகமான கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதாலேயே இதுபோன்ற உடல் அமைப்பு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு புரத உணவுகளை அதிகமாக கொடுத்து பழக்க வேண்டும். மனிதனின் உடல் கட்டமைப்புக்கு புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுடன் உயரமாக வளர்வதற்கும் புரதம் அவசியமானது.

    எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு புரதம், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

    இது அவர்களின் உடல்பருமனை குறைத்து ஆரோக்கியமாக வளர உதவும். பெரியவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் பழங்கள், காய்கறிகள் அல்லது ஜூஸ் போன்ற ‘டீடாக்ஸ்‘ உணவுகளை மட்டுமே கொடுக்கக்கூடாது. இது, குழந்தைகளின் மூளை ஆற்றலை குறைப்பதோடு, கவனக்குறைவையும் ஏற்படுத்தும். மேலும் ஓடி ஆடி விளையாடும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடையவும் வாய்ப்பு உள்ளது.

    பெரியவர்களை போல சமநிலைப்படுத்திக் கொள்ளத் தெரியாது. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகை பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தைகளின் எடை குறைய உணவுக்கட்டுப்பாட்டு மட்டுமே சரியான வழி அல்ல. அவர்களை ஓடி ஆடி விளையாட விடவும் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் அவசியம்.
    கும்பகோணத்தில் இரண்டு விஷயங்கள் பேமஸ். ஒன்று டிகிரி காபி. மற்றொன்று கும்பகோண கொஸ்துவின் சுவை. இன்று இந்த கொஸ்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப் பருப்பு - 1 கப்
    பச்சைப் பயறு - 2 கரண்டி
    நிலக்கடலை - 2 கரண்டி
    கொள்ளு - 2 கரண்டி
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 4
    பச்சை கத்தரிக்காய் - 2
    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிதளவு
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    சாம்பார் பொடி, உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இந்த பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    வெந்த பருப்புடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் போட்டு இறக்கவும்.

    வெந்த கலவையை மத்தால் மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து  கொஸ்துவில் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.

    இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கணவரின் விசித்திர குணங்களை புரிந்து கொண்டு, சில பழக்கங்கள் மோசமானவையாக இருந்தால், மாற்ற முயலுங்கள்..! இல்லற வாழ்க்கையை இனிதாய் மாற்றுங்கள்..
    ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த இருபாலினரும் உடலளவில் மட்டும் வேறுபட்டவரல்ல; அவர்களின் குணங்களும் செய்கைகளும் விருப்பங்களும் அதிகம் வேறுபட்டவை. திருமணம் என்ற பந்தத்தால், இவ்விரு வேறுபட்ட மனிதர்கள் இணையும் போது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடிவதில்லை.  
     
    உங்கள் கணவர் பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையில், உங்களுக்கு உங்கள் கணவர் பற்றிய தெளிவை உருவாக்கவே இந்த பதிப்பு.. படித்து, கணவரை புரிந்து கொள்ளுங்கள்..காதலுடன் வாழுங்கள்..!

    1. ஆண்கள் பெரும்பாலும் விளையாடுவதில், விளையாட்டு சேனல்கள் பார்ப்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பர்; இது அவர்களின் அடிப்படை குணாதிசயம். இதை யாராலும் மாற்ற இயலாது என்ற உண்மையை மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்..

    2. பெரும்பாலான ஆண்கள் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காது, குப்பை போல் போட்டுவிடக் கூடிய இயல்பு கொண்டவர்கள். பெண்களுக்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்பது பிறப்பிலும் வளர்ப்பிலும் அவர்களின் உதிரத்தில் கலந்து விட்டிருக்கும். ஆகையால் பெண்களே! நீங்களே உங்களது கணவன்மார்களை திருத்த வேண்டும் அல்லது அவர்களை புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

    3. பெரும்பாலான கணவர்கள் வீட்டின் நிதி நிலையை மேம்படுத்த வேலை! வேலை! என்று உழைத்துக் கொட்டி, சம்பாதிக்க முயல்வர்; மனைவியான நீங்களே அவரின் மனநிலையை மாற்றி, அளவான சம்பாத்தியம் போதும்; நிகழ்கால வாழ்க்கையை இழக்காமல், மகிழ்ச்சியாக வாழ பழகுங்கள் என்று எடுத்துரைக்க வேண்டும்.

    4. தற்கால தொழில்நுட்பங்கள் உங்கள் கணவருக்கு, ஏற்கனவே இருக்கும் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம் பல புதிய கேம்களை அறிமுகப்படுத்துகிறது. நீங்கள் தொழில்நுட்பத்தை குறை கூற முடியாது; உங்கள் கணவர் அளவாக கேம் விளையாடினால், அது அவரின் உடல் நலத்திற்கு நல்லது; அளவு மீறாமல், அவரை குறை கூறாமல் இந்த பழக்கத்தை மாற்ற முயலுங்கள்..

    5. கணவர்கள் விதவிதமான வாகனங்கள் வாங்குவதிலும், அதை பழுது பார்ப்பது, புது வாகனங்கள் பற்றிய தகவல்கள் அறிவது என இதுமாதிரியான விஷயங்களில் அவர்களின் ஈடுபாடு அதிகம் இருக்கும். இதை மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    6. கழிவறையில் என்னதான் இருக்குமோ தெரியாது., இந்த ஆண்மக்கள் உள்ளே சென்றால், வெளியே வர மணிக்கணக்காக்குவர்; அங்கே உட்கார்ந்து செய்தித்தாள் படிப்பது, அலைபேசியில் கேம் விளையாடுவது என எதையாவது செய்து கொண்டிருப்பர். இந்த விசித்திர பழக்கத்தையும் நீங்கள் சகித்து தான் ஆக வேண்டும் பெண்களே..!

    இத்தகைய கணவரின் விசித்திர குணங்களை புரிந்து கொண்டு, சில பழக்கங்கள் மோசமானவையாக இருந்தால், மாற்ற முயலுங்கள்..! இல்லற வாழ்க்கையை இனிதாய் மாற்றுங்கள்..
    பொதுவாகவே, குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்க்கும். இது ஒரு சாதாரண விஷயமே! குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கான காரணங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாகவே, குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்க்கும். தலையில் அதிகம் வியர்த்தால், குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, பெரும்பாலான பெற்றோர்கள் உடனே மருத்துவரிடம் சென்று நிற்பர்; ஆனால், இது ஒரு சாதாரண விஷயமே! தலை வியர்ப்பது என்பது, தலை போகிற விஷயமல்ல. குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கான காரணங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * குழந்தை பருவத்தில் தான் அனைத்து வகை வளர்ச்சிகளும் நிகழும். அந்த வகையில், இனிப்பு மொட்டுக்கள் முதலில் தலையில் தான் உருவாகும்; வளர வளர அது உடல் பாகங்களுக்கு மாற்றப்படும். வளர்ந்த பின் சில வருடங்களில், இனிப்பு மொட்டுக்களின் உருவாக்கம் நிறைவுபெறும். இவை தலையில் இருப்பதால், அதிகம் வியர்க்கிறது. குழந்தைகளின் தலை வியர்ப்பது, மூளையின் வளர்ச்சியையும் குறிக்கும்; குழந்தையின் தலையில் வியர்க்கவில்லை எனில், மூளையின் செயல்பாடு சரியானதாக இல்லை என்று பொருள்.

    * குழந்தைகளின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 130 துடிப்புகளாக இருக்கும்; பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70-90 துடிப்புகள் இருக்கும். குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கும். இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாகும். அதிகம் வியர்த்தால், வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளிக்க வைக்கவும்; குளித்தபின், தலையை நன்றாக துவட்டவும்; ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து விடவும்.

    * குழந்தைகளை தூங்க வைக்கும் போது, உடல், தலை என அனைத்து உடல் பாகங்களையும் போர்வையால், மூடிவிடக்கூடாது. எப்பொழுதுமே தலையை மூடாமல், குழந்தை தூங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும், வெளிச்சமாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.

    * முன்பே கூறியது போல், இனிப்பு மொட்டுக்களால் குழந்தையின் தலையில் அதிகம் வியர்வை ஏற்படும். ஆகையால், மாதத்திற்கு ஒருமுறை குழந்தையின் முடியை வெட்டிவிடவும் அல்லது மொட்டையடித்து விடவும். இது குழந்தைக்கு, காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

    அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் புழுக்கமான சூழ்நிலை இல்லாமல், மேற்கூறிய காரணங்கள் அன்றி குழந்தைக்கு அதிகம் வியர்த்தால், குழந்தைக்கு இருதய பாதிப்பாக இருக்கலாம். ஆகையால், உடனே மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. 
    உங்கள் சரும அழகை பாதுகாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி வந்தால் என்றும் இளமையோடும் பொலிவோடும் இருக்கலாம்.
    * தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கவும். மேக்கப்புடன் தூங்க செல்ல கூடாது. இது சருமத்தை பாதிப்படையச்செய்யும்.

    * தினமும் ஆலிவ் எண்ணெய் பூசி முகத்தை சுத்தப்படுத்தலாம்.

    * வெயிலில் சென்றால் சன்ஸ் கிரீம் போட்டு கொள்ளவும். சூரியனில் இருந்து வரும் கதிர் முகத்தை காயப்படுத்தும். இதனாலே பல முக பிரச்சனை வருகிறது. சன்ஸ் கிரிம் தேர்வும் முக்கியம். இதனை அருகில் உள்ள மருத்துவரை கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதரின் தோல் ஏற்ப இது மாறலாம்.

    * நீங்கள் உண்ணும் உணவே உங்கள் அழகை தீர்மானிக்கும். எனவே பழங்கள், வைட்டமின் சி, சர்க்கரை அளவு கம்மியாக உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.

    * தினமும் ஏதேனும் செய்து உடலில் இருந்து வேர்வை வெளியேற்றுவது அவசியம். இதற்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யலாம். இதனால் சருமம் பொலிவடையும்

    * எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கத்தின் பாதியில் சிறுநீர் கழிக்க கூட எழுந்திரிக்க கூடாது. முழுமையாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், சருமத்தில் தேனைப் பூசி கொண்டால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்

    * குறைந்தது ஒரு நாளுக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். ஆரஞ்சு, தர்ப்பூசணி சாப்பிடவும். இது சருமத்தை குளுமையாக வைத்திருக்கும்.

    * தினமும் முகத்தை மூன்று முறையாவது வெந்நீரால் மசாஜ் செய்து கொள்ளவும் இதனால் முகத்தில் உள்ள ஆசிட் வகைகள் நீக்கப்பட்டு சருமம் பளபளக்கும்

    * மாதம் ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ ஸ்பா சென்று மசாஜ்கள் செய்து கொள்ளலாம்

    * மன உளைச்சல் அறவே கூடாது. மன உளைச்சல் சருமத்துக்கு கேடு. அகமே புறம். புறமே அகம் என்பதை நினைவில் கொள்ளவும்.
    ஆலிவ், காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கியம் நிறைந்தது. பசியை போக்கி உடலுக்கு கலோரிகளை கொடுக்கிறது. இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆலிவ் - 1/2 கப்
    சிவப்பு குடைமிளகாய் - 1
    பச்சை குடைமிளகாய் - 2
    வெள்ளரிக்காய் - 1
    எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    பூண்டு - 10 பல்
    உப்பு - சுவைக்க
    ஆலிவ் ஆயில் - சிறிதளவு
    மிளகு - சுவைக்க



    செய்முறை :

    வெள்ளரிக்காய், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    ஒரு தட்டில் வட்டமான வெட்டிய குடைமிளகாயை வைத்து கொள்ளவும்.

    அதன் மேலே வெள்ளரியையும் அதே போல வைக்கவும்.

    அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும்.

    அதன்மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.

    பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த ஆலிவ் கலவையை சேர்த்து பரிமாறவும்.

    அருமையான ஆலிவ் குடைமிளகாய் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×