என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகள் கீரை என்றால் சாப்பிட அடம் பிடிப்பார்கள். கீரையை இவ்வாறு கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுகீரை - அரை கட்டு
    வெங்காயம் - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - அரை அங்குலம் அளவு
    உருளைக்கிழங்கு - 25 கிராம்
    பிரெட் - 25 கிராம்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன்
    ரஸ்க் பவுடர் - 50 கிராம்
    மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பிரெட்டை தண்ணீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து விட்டு மசித்து வைக்கவும்.

    கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

    பிறகு, இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து கட்லெட்டுகளாக செய்து வைக்கவும்.

    மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்லெட் மேல் தெளிக்கவும்.

    அதன் மேல் ரஸ்க் பவுடரை தூவவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ண்ணெயைத் தடவி, கட்லெட்டை போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சிறுகீரை கட்லெட் ரெடி.

    இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.
    சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர உங்களுக்கு எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.

    தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும். உங்களுக்கு கடினமான நகங்கள் இருந்தால், ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி விட்டால் மென்மையாக மாறிவிடும்.

    கால் விரல்களில் சிலருக்கு சொத்தை ஏற்படும். கைகளில் கூட உண்டாகும். இதற்கு சிறந்த தீர்வு ரோஸ் வாட்டரை நகங்களுக்கு தடவி வாருங்கள். சொத்தை நகம் கீழே விழுந்து, புதிய நகம் முளைக்கும். இது தவிர நகங்கல் உடையாமலிருக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்துங்கள்.

    தேவையானவை :

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்
    லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெய் - சில துளிகள்



    பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

    உங்கள் நகங்கள் ஆரோக்கியத்தின் குறியீடு. நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும். ஆகவே அடிக்கடி நெயில் பாலிஷ் போடாமல் நகத்தின் இடுக்களை சுவாசிக்க விடுங்கள். இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும்.
    இந்த ஆசனம் செய்து வந்தால் இடுப்பின் எலும்புகள், தசைகள், நரம்புகள் வலுப்பெறும். பெண்களின் இடுப்பெலும்பு நன்கு வளர்ச்சியடைய உதவுகிறது இந்த ஆசனம்.
    பெயர் விளக்கம்:- ‘சசாங்க’ என்றால் சந்திரன் என்று பொருள். இந்த ஆசனம் வளர்பிறை சந்திரன் போல இருப்பதால் சசாங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை:- வஜ்ராசனத்தில் உட்காரவும். மூச்சை உள்ளுக்குள் இழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும். முதுகு, தலை, கைகள் நேராக இருக்கட்டும். மூச்சை வெளியே விட்டு இடுப்பிலிருந்து முன் குனிந்து உள்ளங்கைகளை தரையில் வைத்து சிறிது முன் நகர்த்தி முழங்கால்களுக்கு முன்பு தலையை கொண்டு வந்து நெற்றியை தரையில் பதிக்கவும். முழங்கைகளிலிருந்து கை விரல் வரைக்கும் உள்ள உடல் பகுதி தரையில் பதிந்திருக்கட்டும். மார்பு, வயிறு தொடைகளின் மேல் படிந்திருக்கட்டும்.

    இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 10 முதல் 30 வினாடி நிலைத் திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கைகளை உயர்த்தி கைகளை கீழே இறக்கி வஜ்ராசனம் செய்யவும். இது சசாங்கா சனத்தின் ஒரு சுற்று பயிற்சியாகிறது. மேல்கண்ட முறைப்படி 3 முதல் 5 சுற்று பயிற்சி செய்யலாம்.



    கவனம் செலுத்த வேண்டிய இடம்:- அடிவயிறு, தொடை மற்றும் மூச்சின் மீதும், சுவாதிஷ்டானம் அல்லது விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு:- தொந்தி வயிறு உள்ளவர்கள் இந்த பயிற்சியில் முன் வளையும் போது நெற்றி தரையை தொடாது. அப்படி தொட முயலும்போது பிருஷ்டபாகம் மேலே எழும் பிருஷ்ட பாகத்தை மேலே தூக்கி இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. பிருஷ்ட பாகம் குதிகால்கள் மேலே இருக்கும் நிலையிலேயே முடிந்த அளவு முன் வளைந்து பயிற்சி செய்ய வேண்டும்.

    தடைகுறிப்பு:- உயர் ரத்த அழுத்தம், இடம் பெயர்ந்த முதுகு டிஸ்க், தலை சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள்:- இடுப்பின் எலும்புகள், தசைகள், நரம்புகள் வலுப்பெறும். அட்ரீனல் சுரப்பி நன்கு செயல்படும். கோபம் கட்டுப்பாட்டில் இருக்கும். மலச்சிக்கல் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைகளை நீக்கி ஆரோக்கியமாக இருக்கச் செய்கிறது. வயிற்றிலுள்ள உறுப்புக்களும், சுரப்பிகளும் சீராக இயங்க ஊக்குவிக்கிறது. பெண்களின் இடுப்பெலும்பு நன்கு வளர்ச்சியடைய உதவுகிறது. சுவாச கோளாறுகளுக்கு பயனுள்ளது.

    துக்கம், வேதனை, கோபம், இழப்பு, சண்டை இவை அனைத்தும் நல்ல ஆரோக்கியமான உடலையும் பாதித்து விடும். சமீபத்திய ஆய்வுகள் அதனை மேலும் உறுதி செய்துள்ளன.
    மருத்துவர்கள் தாங்கள் படிக்கும்போது கற்கும் ஒரு முக்கிய வாசகம் அநேக உடல் நல பாதிப்புகள், மன நல பாதிப்புகளாலேயே ஏற்படுகின்றன என்பதுதான். துக்கம், வேதனை, கோபம், இழப்பு, சண்டை இவை அனைத்தும் நல்ல ஆரோக்கியமான உடலையும் பாதித்து விடும். சமீபத்திய ஆய்வுகள் அதனை மேலும் உறுதி செய்துள்ளன.

    கணவன்-மனைவிக்கு இடையே மிக கோபமான வாழ்க்கை முறை, சண்டை, வாக்குவாதம், அடிதடி, பேச்சுவார்த்தை இன்மை, பிரிவு போன்றவை நிகழும்போது அது அவர்களின் உடல் நலத்தினை வெகுவாக பாதித்து விடுகின்றன. குறிப்பாக குடலினை அதிகம் பாதிக்கின்றதாம். குடலினுள் உள்ள அதன் மெல்லிய ஜவ்வு-நச்சுகள் மற்றும் கிருமிகள் உடலினுள் ஊடுருவுவதைத் தடுக்கின்றது. இதனால் நச்சுக்களும், கிருமிகளும் ரத்தத்தினுள் கலப்பது தடுக்கப்படுகின்றது.

    அநேக வகை கெட்ட பாக்டீரியாக்கள் இருந்தாலும் ‘நட்பு பாக்டீரியா’ எனப்படும் இந்த பாக்டீரியாக்கள் மற்றும் பிரிவுகள் உடலுக்குள் நன்மையை செய்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றன. இவை பாதிக்கப்படும்போது வயிறு, குடல் சார்ந்தநோய்கள், வீக்கம், எடை கூடுதல், புற்று நோய், படபடப்பு, மனச்சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன.

    குடும்ப உறவுகளில் மாமியார், மருமகன், கணவன், மனைவி, மாமனார் என்ற நெருங்கிய உறவுகளில் பணமும், மாமனார், மாமியாரும் பிரச்சினைகளுக்கு முதல் காரணமாகக் காணப்பட்டனர். அவர்கள் சண்டையிடும்போது ஏற்படும் ஆவேசம், கண்ணீர், கொந்தளிப்பு, ஒருவரை ஒருவர் மட்டப்படுத்தி பேசுதல் இவைகளை பதிவு செய்தனர் ஆய்வாளர்கள். இவர்களது ரத்தத்தினை தொடர்ந்து பரிசோதித்தபோது இந்த கோப, வேகங்கள் அன்றாடம் ஏற்படும்போது ஏற்படும் மன அழுத்தத்தால் இவர்களது உடலும் அன்றாடம் பாதிப்பிற்கு உள்ளானது கண்டு பிடிக்கப்பட்டது.

    குடல் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது என்பதனைக் காட்டும் அறிகுறிகள்:

    ஜீரண கோளாறுகள்

    வயிறு உப்பிசம், அதிக காற்று, நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், குடல் வீக்கம் இவைகளின் பாதிப்பு இருந்தால் உங்கள் குடலில் கெட்ட உயிரினங்கள் அதிகரித்து உள்ளதா? என பரிசோதித்துக் கொள்ளவும். சில மனநல பாதிப்புகளுக்கு குடலில் அதிக தீய பாக்டீரியாக்கள் அதிகரிப்பதே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. சில வைட்டமின் குறைபாடுகள் ஏற்படலாம்.

    வைட்டமின் டி, கே., பி12, பி17 மற்றும் மக்னீசிய குறைபாடுகள் இருக்கலாம். ஆன்டிபயாடிக் உபயோகம் கூடும்போது நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து விடும் வாய்ப்புகள் மிக அதிகம். இதனை மருத்துவ உதவியுடன் உடனே சரி செய்து கொள்ள வேண்டும். ஸ்டிரெஸ் ஒருவருக்கு படபடப்பு, மன உளைச்சல், உயர் ரத்த அழுத்தம் இவற்றினைத் தரும். இது சில மாதங்கள் நீடித்தாலே உடல் பாதிப்பு ஏற்படும்.

    சரும பாதிப்புகள் இருக்கின்றதா?
    பரு, எக்ஸிமா, சொரியாஸிஸ் பாதிப்புகள் இருக்கின்றதா?
    உங்கள் குடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துங்கள்.

    நல்ல குடல் ஆரோக்கியத்தினைப் பெற :

    ஆரோக்கியமில்லாத எண்ணெய், சர்க்கரை, ஆரோக்கியமில்லாத உணவுகள் இவற்றினைத் தவிருங்கள். பழங்கள், காய்கறிகள், அதிக கொழுப்பில்லாத தயிர், சீஸ் இவற்றினை உணவில் சேருங்கள். 8 மணி நேர தூக்கம் அவசியம். ஸ்டிரெஸ்ஸினைத் தவிர்க்க தியானம் பழகுங்கள்.

    பருப்பு வகைகள், பீன்ஸ், கொண்டை கடலை, ஓட்ஸ், வாழைப்பழம், பூண்டு, வெங்காயம், கொட்டை வகைகள் இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    மது, புகை இவற்றினை அடியோடு விட்டு விடுங்கள். முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    ஆரோக்கிய கொழுப்பு, ஓமேகா-3 இவற்றினை உணவில் சேருங்கள். தேவையான அளவு நீர் குடியுங்கள். உணவினை மெதுவாய் மென்று உண்ணுங்கள். கல்லீரல் பாதிப்பினை காட்டும் சில அறிகுறிகள் குடல் பாதிப்பினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளா என்பதனை மருத்துவ பரிசோதனை மூலம் அறிய வேண்டும்.தாவர வகை உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.

    பெண்கள், குழந்தைகளுக்கு, தாய் பால் ஒரு வருடம் வரையிலாவது அவசியம் கொடுங்கள். முதல் 6 மாதம் தாய்பால் மட்டுமே கொடுங்கள். கோகோ, அடர்ந்த சாக்லேட், க்ரீன் டீ, பாதாம், வெங்காயம், ப்ரோகலி போன்றவை வீக்கம், ரத்த கொதிப்பு, கொலஸ்டிரால் இவற்றினை குறைத்து குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும்.

    குடலில் உள்ள நல்ல பாக்டீரியா பி4 (பயோடிக்) பி12, வைட்டமின்களையும் உற்பத்தி செய்கின்றது. இந்த நல்ல பாக்டீரியா பாதிப்பு ஏற்படும்போது சர்க்கரை நோய், எடை கூடுதல், முடி கொட்டுதல், எக்ஸிமா, ரத்த சோகை, பல்லில் ரத்த கசிவு, புண், வாதம், புற்று நோய், முடக்கு வாதம் என எண்ணற்ற பாதிப்புகள் குடலில் ஏற்படுகின்றன.

    எனவே இவற்றினை கவனத்தோடு சரி செய்தாலே அநேக நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். 
    இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் - காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    விருப்பமான காய்கறிகள் - 200 கிராம்
    இறால் - 100 கிராம்
    வெள்ளை வெங்காயம் - 1
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
    வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    கார்ன் ஃபிளார் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    வெங்காயத்தாள் - சிறிதளவு



    செய்முறை :

    இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள்.

    கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

    வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள்.

    வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.

    இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவி இறக்குங்கள்.

    சத்து நிறைந்த இறால் - காய்கறி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல உள்ளன. இதில் தவிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல. ‘வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்… இதோ பதில் விரிவாக!

    தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்… அவர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும்.

    போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் ‘வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

    பிரச்சனைகளைத் தவிர்க்க, ‘வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ‘லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம்.

    நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ‘ப்ளாக்’ (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்… போயே போச்!

    தெரிந்தவர்களோடு மட்டும் ‘வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.
    சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம்.
    சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம்.

    * 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய வேண்டும்.

    * 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

    * 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    * 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி சருமத்தை பொலிவாக்கும்.

    * ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக அகலும்.

    – இந்த இயற்கை வழிமுறைகளை தவறாமல் தினமும் செய்து வந்தால் உங்கள் சருமத்தினை பொலிவாக்கலாம்.
    பிறந்த குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து உரம் விழலாம். பிறந்த குழந்தையை சரியாக தூக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
    தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது.

    பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும்.

    திரும்பவும் இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்குங்கள். பஞ்சு போல் மென்மையாகக் கையாளுவதன்மூலம் பிஞ்சு உடலுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கும்.

    பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
    காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பரங்கிக்காய் - சிறிய துண்டு
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

    தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் தீர என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்சனை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.

    நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை. 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.

    கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.



    தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது.

    சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்சனைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
    மார்ஜாரி ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, நீங்கும். கழுத்து, தோள்கள், முதுகு ஆரோக்கியமாக இருக்கும்.
    பெயர் விளக்கம்:- மார்ஜாரி என்றால் பூனை என்று பொருள். இந்த ஆசனத்தில் பூனையைப் போல முதுகை மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் வளைப்பதால் மார்ஜாரி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை:- வஜ்ராசனம் செய்யவும் (மண்டியிட்டு அமரவும்) பிருஷ்டத்தை தூக்கி முழங்கால்களில் நிற்கவும். முன் வளைந்து தோள்களுக்கு நேராக உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். கைகளை நேராக்கவும். முழங்கால்களை கை மணிக்கட்டுகளுக்கு நேராக இருக்கும்படி அகற்றி வைக்கவும். உடல் முன்னோக்கியோ பின்னோக்கியோ போகாதபடி இடுப்பிலிருந்து புஜம் வரைக்கும் உள்ள உடல் பாகம் சமமாக இருக்கட்டும்.

    இது மார்ஜாரி ஆசனத்தின் முதல் நிலை. மூச்சை உள்ளுக்கு இழுத்து தலையை மேலே உயர்த்தவும். அதே சமயம் முதுகை கீழ் நோக்கி நன்றாக வளைக்கவும்.

    இந்த நிலையில் 3-5 வினாடி மூச்சை அடக்கி வைக்கவும். மூச்சை வெளியே விட்டு தலையை இருகைகளுக்கு இடையில் உள் நோக்கி வளைத்து முதுகை மேலே தூக்கவும். இந்த நிலையில் மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுக்காமல் 3-5 வினாடி அப்படியே இருக்கவும். இது மார்ஜாரி ஆசனத்தில் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யலாம்.



    கவனம் செலுத்த வேண்டிய இடம்:- முதுகு, இடுப்பு, கழுத்து, மூச்சு மற்றும் சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு:- இந்த ஆசனத்தில் மூச்சை அடக்காமல் நிலை 30-ல் நிதானமாக மூச்சை உள்ளுக்கு இழுத்தும் நிலை 31-ல் நிதானமாக மூச்சை வெளியே விட்டும் தொடர்ந்து 10 முதல் 20 முறை பயிற்சி செய்யலாம்.

    பயன்கள்:- நுரையீரல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது. கழுத்து, தோள்கள், முதுகு ஆரோக்கியமாக இருக்கும். கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, நீங்கும்.

    குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு, அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்பி விடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
    நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான முடிவை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான்.

    நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது உரிய நேரத்தில் ஹார்மோன்களை சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே நம்மை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும்.

    அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு, அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்பி விடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே போல், எந்த நிர்பந்தமும் இல்லாமல் படுக்கைக்குப் போகும் நபர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதே இல்லையாம்.

    உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால் விடிந்ததுமே நீங்கள் எழுந்திருக்க முடியும். அதாவது, காலையில் விடிந்ததும் சூரியன் உதயமாகும் போது, அதன் ஒளி அல்லது விடியும் போது அந்த வெளிச்சம் உங்கள் அறைக்குள் வந்தால், உங்களது உறக்கம் கலைந்து உங்களால் எளிதாக எழும்ப முடியும். அதற்கும் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் தான் காரணம்.

    தினமும் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்காக 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தால், 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று தினமும் ஒரே நேரத்தில் எழுந்தால் அது வேலைக்கு ஆகாது. எனவே, தினமும் காலை 6 மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால் உங்களுக்கு எந்த அலாரமும் தேவைப்படாது. உங்கள் உடல் இயக்கமே 6 மணிக்கு உங்களை எழுப்பிவிடும்.

    அதே சமயம் வார இறுதி நாளில் கும்பகர்ணனோடு போட்டி போடுவதால் உடல் இயக்கம் பாதிக்கப்படும். இதனால் மீண்டும் நீங்கள் உங்கள் அலாரத்தை தூசி தட்டி பேட்டரி போட வேண்டி இருக்கும்.

    அலாரம்தான் ஒரே வழி என்று சொல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். பொதுவாகவே அலாரத்தின் ஒலி மிகவும் முக்கியம். உறங்கிக் கொண்டிருப்பவர்களை மெதுவாக தட்டி எழுப்பும் வகையில்தான் அலாரத்தின் ஒலி இருக்க வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதை போல் இருக்கக் கூடாது. அலாரத்தின் ஒலியைக் கேட்டு மெதுவாக எழுந்து அதனை அணைக்கும் போது உறக்கம் கலைவதுதான் நல்ல வழி.

    இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால் காலையில் விரைவாக எழுந்திருக்க முடியும். இல்லை என்றால், இரவு முழுவதும் சரியான உறக்கமின்றி, காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்படுவோம். எனவே, காலையில் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை விட முன்கூட்டியே எழுந்து, அன்றாடப் பணிகளை அழகாக செய்துவிட்டு பள்ளி, கல்லூரி, வேலைகளுக்கு விரைவாக செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் மேற்கண்ட ஏதேனும் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்.

    ×